வெள்ளி, 30 மே, 2014


பஞ்சாங்க வகைகள்
பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமிநவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.
1.வாக்கிய பஞ்சாங்கம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.
தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம்,ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம்,சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம்,திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்.
இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
2. திருக்கணித பஞ்சாங்கம்
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு. திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கள்: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கனிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும்.
3.கே.பி பஞ்சாங்கம்
ஆளும் கிரகங்கள் (New Ruling Planets) யுக்தியை பயன்படுத்தி நேரம் நிர்ணயம் மிகத்துல்லியமாக கணக்கிடலாம்
இப்பஞ்சங்கம் மிக துல்லியமான முறையில் கே.பி. அயனாம்சம் மூலம்.{நியூ கோம்ப். REFINED } கணிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு அருமருந்து

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ! பிரேசில் நாட்டு முறை
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

சிலர் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கிவிடும்.
இதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே பாரக்க முடியாது.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி 


தயாரிப்பு முறை:
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்:
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும் . சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

-----------------------------------

செவ்வாய், 27 மே, 2014

இந்தியாவின் நாஸ்டர்தாம்ஸ்




நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர்காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர். 

அவர் எழுதிவைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.

சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு. ஆந்திர நாட்டைச் சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர். மணவாழ்வு மேற்கொண்டு மனைவியுடனும் குழந்தை களுடனும் வாழ்ந்தவர். "காலக் ஞானம்' என்ற அரிய நூலை எழுதியவர். அந்த நூலிலில் எதிர்காலத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நடக்குமென்று தெளிவாக எழுதப்படுள்ளதுதான் ஆச்சரியம். 

பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரண ஆசாரி, பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீர பிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்துவிட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்தஅவள், தான் வாழவிரும்பாமல் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். 

முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையேபோல,அவரைத் தேடிவந்தார்கள் இருவர். வீர போஜர், வீர பாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதிகூறி வாங்கிச் சென்றார்கள்.  

வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போதுதான் அந்த சங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகிவிட்டார். 

பிறந்தபோதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது, இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம், தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப்போவதாகக் கூறி, பிரியாவிடை பெற்று வீட்டைவிட்டு வெளியேறினார். 

கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை.

ஒருநாள் இரவு... நடந்து நடந்து கால்கள் வலிலித்தன. வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கே அச்சம்மா என்ப வளின் வீட்டுத் திண்ணை காலிலியாக இருந்தது. அதில் படுத்து ஆனந்தமாக உறங்கினார். 

காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங் கும்போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன்மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது. 

அவன் எழுந்ததும் "யாரப்பா நீ' என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும், ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். "எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. கண்ட இடங்களில் சுற்றுவானேன்? 

இனி இங்கேயே இரு!' என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லிலி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார். 

வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்துவிடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல்மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் காலக் ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதிவந்தார் அவர்.

இப்படியாகக் காலம் போய்க்கொண் டிருந்தபோது, ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலிலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மம் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலிலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது. 

இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள். 

அன்று வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும், அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போதுதான் அறிந்ததாகவும், அவரை மாடுமேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் கண்ணீர் உகுத்தாள். 

"ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழவேண்டியதுதான். கண்ணனே மாடு மேய்த்தவன்தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல!' என்றுகூறி அவளை சமாதானப்படுத்தினார் வீரபிரம்மேந்திரர். 

அச்சம்மா அவர் எழுதிவரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதிவருவதாக அவர் தெரிவித்தார். "எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா' என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மம் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில:

"புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம்பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும். இந்தியா இரண்டாகவும் பின்னர் மூன்றாகவும் பிரியும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்ததுபோக,  சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல், ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.'

இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே  தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள். 

வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள்மேல் உள்ள ஆசையை விட்டுவிட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 

அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளைவிட்டு விலகத்தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள். 

அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடைபெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார். 

போலேரம்மா என்ற புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆந்திரத்தில் உண்டு. அந்தக் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா தொடர்பான புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுபவரா பிரம்மேந்திரர்? அவர் நகைத்துக் கொண்டார். "இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன்' என்றார். 

பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம். அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளேசந்நிதியை உற்றுப்பார்த் தார். "போலேரம்மா, என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு' என்று கேட்டார். மறுநிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது! அவரது சுருட்டைக் கொளுத்தியது! "சரி சரி நெருப்பு போதும்' என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந் தது அந்தத் தணல்!

இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள். 

அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள்தோறும் பெருகத்தொடங்கியது. 

காலப்போக்கில் அவர் தமது பொற் கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார். இல்லறம், துறவறம் இரண்டும் சம மதிப்புடையவைதான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார். 

தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும் பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். "யாக்கை நிலையற்றது; இதன் மேல் பற்று வைக்காதீர் கள்' என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். "எனக்கு இறப்பில்லை என்பதால், என் மனைவி தன் சுமங்கலிலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை' என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகைபோட்டு சமாதி மூடப்பட்டது. 

பத்து மாதங்கள் சுழன்றோடின. "இன்னுமா அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிலிக் கோலம்?' என்று சிலர் விமர்சித்தனர். இத்தகைய விமர்சனங்கள் அந்தக் காலத்தில் எழுவது சகஜம்தானே? 

மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். "மக்களுக்கு அறிவில்லை. அவர் களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்துவருகிறேன்' என்றார் தாயார். 

மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை. 

அவன் ஆக்ரோஷத்தோடு ஒரு கடப்பாரையை எடுத்துவந்து சமாதியை இடித்துத்திறந்துபார்த்தான். என்ன ஆச்சரியம்! அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெலவெலத்தன. 

அவனை கண்திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர், சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லிலி, மீண்டும் சமாதியை மூடச் சொன்னார். 

இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீரபிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவி யையும் பக்தியோடு கும்பிடத் தொடங்கினார்கள். 

ஆந்திராவில் கடப்பை ரயில் நிலையத்திலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி. இன்றும் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு அவர் சூட்சும உருவில் அருள்புரிந்து வருகிறார். நாள்தோறும் அந்த இடத்திற்குச் செல்வோர் எண்ணிக்கை பெருகிவருகிறது

சனி, 17 மே, 2014

சித்திர ஆதிசங்கரர்-28

                                                                                                                    

காரியம் முடிந்துவிட்டது!காரியமற்ற பிரம்மத்தில் இரண்டறங்கலந்து அத்வைதம் ஆகிவிட ஆர்வம் கொண்டார். பிரம்மத்தின் சக்தியான காமாட்சியிடம் சென்றார். திரிபுரசுந்தரி வேதபாதஸ்தவம் என்ற பாடலால் அவளைத் துதித்தார். துதி முடியும்போது, துதிக்கத்தக்க அவரது பெருவாழ்வும் முடிந்தது. பராசக்தியோடு இரண்டறக் கலந்து விட்டார் நம் பரமாசாரியார் சங்கரர்.
இன்றும் காமாட்சி ஆலயத்தில் விக்கிரக வடிவில் வாழ்கிறார் நமது ஆச்சாரிய சங்கரர். அவருடைய சமாதி காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்குப் பின்புறத்தில் விளங்கிக் கொண்டுள்ளது. அதோடு அவர் பூஜித்த அதே திருபுரசுந்தரி-சந்திரமௌலீசுவரரை இன்னும் பூஜிக்கும் காஞ்சிப் பெரியவர்களாகவும், புதுப்பெரியவர்களாகவும் பாலப் பெரியவர்களாகவும் தம் அருளை வெளியிடுகிறார்.                                                                                                                    


வியாழன், 15 மே, 2014

சித்திர ஆதிசங்கரர் -27


                                                           
  
காஞ்சியில் பிற மதத்தவர்களும் இருந்தனர். மற்றும் பாரதத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மகாபண்டிதர்கள் நம் ஆசாரியருடன் வாதிட வந்தனர். அவ்வாறு வந்திருந்த பலரில் தாம்பரபரணி தீரமான
பிரம்மதேசத்தில் இருந்து வந்த ஏழு வயது சிறுவன் ஒருவனும் இருந்தான். அவன் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆசாரியருடன் வாதிட்டான். அவனது கேள்விகளுக்கு விடையளித்து இருதியில் ஆசாரியரே வெற்றி பெற்றார். அந்தச் சிருவனின் அறிவுத்திறமையை வியந்து பாராட்டிய சங்கரர், அவனுக்கு சர்வக்ஞஆத்ம முனி என்று திருநாமம் சூட்டித் துறவ்யாக்கினார். தமது பீடத்தின் முதல் சிஷ்யனாக நியமித்துக் கொண்டார்.
அனைவரையும் அத்வைதத்தால் வென்று அப்பீடத்தில் அறிவுச்சக்கரவர்த்தியாக ஆரோகனிந்தார் சங்கரர். அப்போது நாடாளும் சக்கரவர்த்திகளும் அவருக்குச் சாமரம் வீசினர்.
பண்டித ரத்தினங்கள், துறவி, வேந்தர்கள் அனைவரும் அப்போது அவரது அடிபணிந்தனர்.
"ஜய ஜய சங்கரா"என்று போற்றிப் புகழிந்து பணிந்தனர்.
வேதவாழ்வை மீண்டும் ஆழ வேரூன்றச் செய்துவிட்டார் நமது சங்கரபகவத்பாதர். அத்வைத ஞான வழியே சத்தியமான தத்துவம் என்பதை உலகம் ஒப்பச் செய்துவிட்டார்.
பிறமதங்கள் எழுபத்தி இரண்டையும் இருந்த இடம் தெரியாமல் விரட்டிவிட்டார். எதற்காக அவதரித்தாரோ அப்பணிமுடிந்தது. இப்போது அவருக்கு வயது முப்பத்திரண்டேதான். முப்பத்தி இரண்டு யுகத்தில் செய்யமுடியாத சாதனையை அவர் தனிமனிதராகவே இருந்து முப்பத்திரண்டு ஆண்டுகளில் சாதித்து விட்டார்.
ஆனால் "நான் சாதித்தேன்"என்ற அகங்காரம் அவருக்கு எள்ளளவும் இல்லை. பராசக்தியான காமாட்சியின் அருள்சக்தி எள்ளளவு தம்மீது தெளித்ததாலேயே இவ்வளவும் செய்ய முடிந்தது என்று கருதினார்
நன்றி:காஞ்சி பீடம்

புதன், 14 மே, 2014

சித்திர ஆதிசங்கரர் -26



                                                                  
காமாட்சியிடம் எல்லையற்ற பக்தி கொண்டனர் ஆசாரியர். அவள் வாழும் ஆலயத்தில் 'காமகோடிபீடம்'என்ற மகத்தான சக்திபீடம் உண்டு. காஞ்சிபுரத்தில் தமக்கெனமையமான மடத்தை ஏற்படுத்திக்கொண்ட சங்கரர், அந்த இடத்திற்கு காமாட்சி அம்மனின் பீடத்தின் பெயரான காமகோடிபீடம் என்பதையே தமது மடத்திற்கும் வைத்துக்கொண்டார்.
பஞ்சலிங்கங்களில் எஞ்சிய யோகலிங்கத்தை தனது பீடத்தின் பூஜைக்கென வைத்துக்கொண்டார். இன்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸ்வாமிகளும் பூஜை செய்யும் சந்திர மௌலீசுவ ஸ்படிகலிங்கமே இந்த யோகலிங்கமாகும்.
காஞ்சி மடத்தில் ஜகத்குரு ஸ்ரீ சங்கரபகவத்பாதர்கள் ஞான ஆட்சி நடத்தி, காமாட்சியை வழிபட்டு வாழ்ந்து வந்தார்.
வேத மதத்தில் பல தெய்வங்களை வழிபடுகின்றோம். ஆனால் இவை முற்றிலும் வேறு வேறானவை அல்ல. ஒரே பரமாத்மாதான் இப்படிப் பல தெய்வங்களாகி இருக்கிறார்
                           எனவே தெய்வங்களுக்குள் ஒன்று உயர்ந்தது. இன்னென்று தாழ்ந்தது என்று ஏற்றத்தாழ்வு பேசுவது அறிவின்மையாகும்.
ஸ்ரீசங்கரர் இவ்விதம் தம்தம் தெய்வத்தையே உயர்த்திப் பேசுபவர்களை எல்லாம் வாதத்தில் வென்று, எல்லா தெய்வங்களுக்கும் ஒன்றே என்பதை நாட்டினார்.
இருந்தாலும் ஒவ்வொறுவரும் தங்கள் மனப்பான்மைக்கு ஏற்றப்படி ஒரு தெய்வத்திடம் விஷேசமாக பக்தி செலுத்துவதை அவர் ஒப்புக்கொண்டார். இது இஷ்ட தெய்வ வழிபாடு எனப்படும். இவ்வாறு இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் மற்ற தெய்வங்களைத் தாழ்வாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே "பஞ்சாபதான பூஜை"என்பதற்க்குப் புத்துயிர் தந்தார் நம் ஆசாரியர். இதன்படி ஒவ்வொறுவரும் சிவன், அம்பிகை, திருமாள், வினாயகர், சூரியன் ஆகிய ஐவரையும் ஒரே பரம்பொருளின் வடிவங்களாகக் கொண்டு பூஜிக்க வேண்டும்.
இதில் ஐந்தில் ஒன்றை இஷ்டதெய்வமாக மத்தியில் வைத்து, மற்ற நான்கை அதைச்சுற்றி வைத்துப்பூஜிக்க வேண்டும். மேற்படி ஐந்து தெய்வங்களோடு முருகனையும் சேர்த்தால் ஆறாகிறது. இத்தெய்வம் ஒவ்வொன்றையும் முக்கியமாகக் கருதி ஆறு வழிபாட்டு முறைகள் உண்டு. இவை ஹண்மதம் எனப்படும். அனைவரும் பிறதெய்வ நிந்தனை இல்லாமலே தம் இஷ்டதெய்வத்தை வழிபட உதவிபுரிய வேண்டும் எனக்கருணை கொண்டார் சங்கரர். எனவே தாம் காஞ்சியில் இருந்தபோது ஆறு சீடர்களை நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பிவைத்து, ஷண்மதங்களில் ஒவ்வொன்றையும் வேதவழிப்படி நிலைலிருத்தி வரச்செய்தார். அவர்களும் தமது பணியை வெற்றிகரமாகச் சாதித்துவிட்டு ஆசாரியரிடம் திரும்பினார்கள்.
இதனால் ஸ்ரீசங்கரர் "ஷண்மதாசாரியர்"என்ற புகழைப்பெற்றார்.
இருதியாக ஒருமுறை பண்டிதர் அனைவரையும் வென்று அத்வைதத்தை நிலை நாட்டிவிட்டு, உடலை நீத்துவிட வேண்டும் என முடிவுசெய்தார். சங்கரர் இதன் பொருட்டு காஞ்சியிலேயே ஸர்வக்ஞபீடம் அமைத்தார்
நன்றி:காஞ்சி பீடம்

செவ்வாய், 13 மே, 2014

சித்திர ஆதிசங்கரர் -25


                                                                  
              
இவ்விதமான பல ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து, பின்னர் கங்கா நதி பாயும் சமவெளியை அடைந்தார். அங்கே தம் சிஷ்யர்களுக்குப் பாடம் நடத்தினார். அவர்களுக்கு உபதேசத்தின் மூலம் பல அரிய தத்துவங்களை விளக்கினார். பிற மதவாதிகளுடன் வாதம் செய்து அவற்களை வென்று வேதாந்தக் கருத்துக்களை வேரூன்றச் செய்தார் நம் ஆசாரியர். பாரத தேசமெங்கும் சுற்றி அத்வைதத்தைப் பரப்பிய ஸ்ரீசங்கரர், வடகோடியிலிருந்து தெற்கே வந்து சிதம்பரத்தை அடைந்தார். அங்கே பஞ்சலிங்கங்களில் ஒருவரான மோட்சலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.
மீண்டும் சிருங்ககிரிக்கு எழுந்தருளினார் நம் ஜகத்குரு சங்கராச்சாரியார். பரமசிவன் அளித்த பஞ்சலிங்கங்களில் போகலிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார்.
பிறகு தமது உலக வாழ்வை நிறைவு செய்யத் திருஉள்ளம்கொண்டு, ஏழு மோட்ச ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சியம்பதிக்கு விரைந்தார்.
காஞ்சி எல்லையிலேயே மன்னன் ராஜசேனன் ஆசாரியரைப் பணிந்து வரவேற்றான். சர்வ தீர்த்த கரையிலுள்ள விசுவேசுவரர் ஆலயத்தில் தங்கினார் நம் ஆசாரியர்
    பராசக்தியான காமாட்சியின் அருள் பொங்கும் நகரம் அது எனக்கண்டார் ஸ்ரீசங்கரர். அவளது இருப்பிடமான ஸ்ரீசக்ரத்தைப் போலவே அந்நகரைப் மாற்றியமைத்தால் அங்கு அம்பிகையின் அருட்பொலிவு முன்னிலையிலும் அதிகமாகும் எனக்கண்டார். ஆசாரியரின் கட்டளைப்படி மன்னன் நகர சாலைகளை ஸ்ரீசக்ர வடிவில் மாற்றி அமைத்தான். அதன் மத்தியில் அம்பிகை எழுந்தருளும் இடமாக அமைந்தது ஸ்ரீகாமாட்சியின் ஆலயமான காமகோட்டம்.

அக்காலத்தில் கலிகால மக்களால் தாங்க முடியாத அளவுக்குக் காமாட்சியின் சக்தி உக்கிரமான வெளிப்பட்டு வந்தது. அவளை அணுகவே அனைவரும் அஞ்சினர். ஆனால் ஆசாரியரோ அன்புத்தாயிடம் செல்லும் அருமை மகனாக ஆனந்தத்துடன் காமாட்சியை அடைந்தார். அவளுக்கு முன் ஸ்ரீசக்ரம் வரைந்து அதில் அவளது அதிகப்படி சக்தியை எல்லாம் இழுத்து அடைத்துவிட்டார். இந்தபின் காமாட்சியின் உக்கிரம் நீக்கி, அவள் கருணையின் எல்லையில் உள்ள பேரழகு மூர்த்தியாக ஆகிவிட்டாள். இன்றும் காஞ்சி காமாட்சியின் இந்த அருள்பொலிவை பக்தர்கள் அனுபவித்து மகிழலாம்
நன்றி:காஞ்சி பீடம்

திங்கள், 12 மே, 2014

சித்திர ஆதிசங்கரர் -24


                                                             
          
மகாவிஷ்ணு பூஜைக்குறிய சாளக்ராமம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியிலேயே கிடைப்பது. சிவபெருமான் உகந்து அணியும் ருத்ராக்ஷமும் அங்குதான் நிறைய காய்க்கிறது. பசுபதி நாதர் கோயில் முழுவதையும் சிவராத்திரியன்று ருத்திராட்சங்களால் அலங்கரித்து, விசேஷ பூஜை புரிவார்கள்.
இத்தனை சிறப்புகள் பொருத்திய பசுபதிநாதத்திற்கு ஸ்ரீசங்கரர் விஜயம் செய்து, ஸ்வாமி தரிசனம் செய்து பேரின்பம் எய்தினார். அங்கு ஆலய வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்தித் தந்தார். சிவபெருமானிடமிருந்து பெற்ற ஜந்து ஸ்படிகலிங்கங்களுள் ஒன்றான முக்திலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீசங்கரர்.
அம்பிகைக்கு விசேஷமான ஐம்பத்தியரு சக்தி பீடங்களில் குஹ்யேச்வரி என்பது பசுபதிநாதத்தில் இருக்கிறது. அங்கும் சங்கரர் தரிசனம் செய்து மகிழ்ந்தார். ஸ்ரீசங்கரர்.
அம்பிகைக்கு விசேஷமான ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில் குஹ்யேச்வரி என்பது பசுபதிநாதத்தில் இருக்கிறது. அங்கும் சங்கரர் தரிசனம் செய்து மகிழ்ந்தார். ஸ்ரீசங்கரர். கேதாரிநாதம் என்ற மகா க்ஷேத்திரத்தை அடைந்தார். இமாலயத்தில் உள்ள இந்த சிவஸ்தலம், திருமாளுக்குரிய பதரிநாதத்தோடு எப்போதும் சேர்ந்தே பேசப்படும் பெருமை வாய்ந்தது.
பரமசிவனிடமிருந்து பெற்ற ஐந்து பங்கு லிங்கங்களுள் மற்றொன்றான முக்திலிங்கத்தை கேதாரிநாதத்தில் ஸ்ரீ சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
பாரததேசத்தின் நான்கு திசைகளிலுமாக மொத்தம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. இவற்றில் ஒன்று கேதார்நாத்தில் உள்ளது. ஸ்ரீசங்கரர் இயற்றிய "துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திர"த்தில் கேதாரிநாதனைக் குறிப்பிட்டு வந்தனம் தெரிவிக்கிறார்.
நன்றி:காஞ்சி பீடம்

ஞாயிறு, 11 மே, 2014

சித்திர ஆதிசங்கரர்-23


                                                            
    
கயிலையில் உமையன்னையுடன் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டு களிகொண்டு வணங்கினார் ஸ்ரீசங்கரர். சிவ பெருமானின் அடியிலிருந்து முடிவரை வர்னித்துப்பாடினார். அதில் திருப்தி உண்டாகாமல் மீண்டும் முடியிலிருந்து அடி வரையில் வர்ணணை செய்து இன்னொரு துதி செய்தார். இவை "சிவ பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம்"எனவும் சிவ கேசாதி பாதாந்த ஸ்தோத்திரம் எனவும் வழங்குகின்றன.
சிவபெருமான் தனது அவதாரமான சங்கரர் செய்துவரும் அரும் பணியைப் பாராட்டினார். "பஞ்ச லிங்கங்கள்"ஐந்து ஸ்படிக லிங்கங்களை சங்கரருக்குத் தந்தார். அவருக்கு அருகே இருந்த சக்தியை துதிப்பதற்கு முடியாமல் சங்கரர் பிரம்மித்து நின்றார். உடனே பரமசிவன் தாமே அம்பிகையை துதித்துச் செய்திருந்த "ஸெளந்தர்யலஹரி"என்ற நூல் சுவடியையும் சங்கரருக்கு வழங்கினார்.
இவற்றைப் பெற்று மிகுந்த பூரிப்போடு சங்கரர் கையிலையிலிருந்து வெளிவந்தார். காவலில் இருந்த நந்திதேவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பாதிசுலோகங்களை அவருக்குக் கொடுத்துவிட்டார். "ஸெளந்தர்யலகரி"யின் முதல் நாற்பத்தியரு சுலோகங்கள் மட்டும்சங்கரர் கையில் தங்கின. மீதமுள்ள ஐம்பத்தொன்பது சுலொகச்சுவடிகளை நந்திதேவர் பெற்றுக்கொண்டார்.
கையிலையைவிட்டு வெளிவந்த நம் ஆசாரியருக்கு இப்போது அம்பிகையைக் குறித்த பிரம்மிப்பு நீங்கிவிட்டது. அவளது அருளால் அவரே புதிதாக ஐம்பத்தொன்பது அற்புதமான சுலோகங்களை இயற்றி, நூலைப் பூர்த்திசெய்து விட்டார். ஆசாரியரின் பல துதிகளுக்குள் இலக்கியச் சுவையில் சிகரமாக விளங்குவது "ஸெளந்தர்யலகரி"யே ஆகும். அதைப் பாராயணம் செய்வதால் பலவிதமான உபகர நலன்களும் கைகூடும். பசுபதிநாதர் என்ற ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தின் சிறப்புகளுக்கெல்லாம் சிறப்பாக உள்ளது லிங்கத்தின் நான்கு புறங்களில் திசைக்கொன்றாக ஒவ்வொறு முகம் லிங்கத்தின் உச்சியில் அம்பிகையின் வடிவான ஸ்ரீசக்ரம் எழுதிப் பூஜிப்பது இன்னொரு முகத்துக்குச் சமானம்.
நன்றி:காஞ்சி பீடம்

சனி, 10 மே, 2014

சித்திர ஆதிசங்கரர்-22


                                                                
    
சங்கரரின் தலையை வெட்டுவதற்காக கபாலிகன் வாளை ஓங்கிவிட்டான். அதே சமயத்தில் எங்கோ இருந்த பத்பநாதரின் மீது உக்கிரநரசிம்மரின் ஆவேசம் உண்டாயிற்று. அவர் தம்மையும் மீறிய அச்சக்தியின் தூன்டுதலில் ஹாடகேசுவரத்திற்கு ஒரே நெடியில் வந்துவிட்டார். சங்கரரின் தலையை வெட்ட இருந்த கிரகசனை நரசிம்மர் போலவே நகத்தால் கிழித்துப்போட்டுவிட்டார். கொள்ள வந்தவன் கொலையுண்டான்!பத்மபாதரிடம் இருந்து நரசிம்மரின் ஆவேசமும் அகன்றது!
ஸ்ரீசங்கரர் நரசிம்மரை துதித்துவிட்டு, நரசிம்ம க்ஷேத்திரமான அஹோபிலத்துக்குத் சென்று வழிபட்டார். தலம் தலமாகச்சென்று பரதகண்டத்தின் வடக்கேயுள்ள இமாலயப் பகுதிகளிலே சஞ்சாரம் செய்து பதரீவனம் பதரிகாசிரமம் என்றெல்லாம்என்றெல்லாம் அழைக்கப்படும் பத்ரிநாத்தை
அடைந்தார். அங்கு ஒருநாள் மகாவிஷ்ணு அவருக்கு தரிசனம்தந்து, இங்கே அலகநந்தா நதிப்படுக்கையில் என் பூரண சாந்நித்தியம் கொண்ட விக்கிரகம் ஒன்று புதைந்துள்ளது. அதை எடுத்து பிரதிஷ்டை செய்வாயாக என்று உத்திரவிட்டார்.
அவ்விதமே சங்கரர் அலகநந்தா படுகையில் தோண்றியவுடன் திவ்வியமான விக்ரஹம் கிடைத்தது. அதை சங்கரர், ஆலையத்தில் பிரதிஷ்டை செய்தார். பத்ரி நாராயணன் என்று இன்றளவும் உலகமெல்லாம் கோண்டாடும் மூர்த்தி இதுவேயாகும்.
இவ்விதமாக புனிதயாத்திரையை மேற்கொண்டு கேதார்நாத்திற்கு வந்து சேர்ந்தார் சங்கரர். அங்கு தமது பூதவுடலைக் கிடத்திவிட்டு, யோகசக்தியின் மூலம் சூட்சம சரீரத்தோடு கைலாயம் சென்றார். ஸ்ரீசங்கரர் தமது பூதவுடலைவிட்டு பஞ்சலிங்கங்களைப் பெற வேண்டியே கைலாயம் சென்றார் என்பதை ஆதாரப்பூர்வமாக அறியாத சிலர் ஆசாரியர் தமது பூத உடலையே கேதாரிநாத்தில் நீத்து முக்தி அடைந்தார் என்று தவராகக்கருதி கொண்டுள்ளனர்.
நன்றி:காஞ்சி பீடம்

வெள்ளி, 9 மே, 2014

சித்திர ஆதிசங்கரர்-21

                                                       
ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர் கோவில் கொண்ட இடத்திற்குச் சற்று தூரத்தில் உள்ள ஹாடகேசுவரம் என்னும் மனித சஞ்சாரமற்ற பகுதியில் ஆசாரியர் பல நாட்கள் தன்னந்தனியாகத் தவம் இருந்து வந்தார்.
இச்சமயத்தில் தன்னுடைய கொடூர எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முற்பட்டான் கிரகசன் என்ற பயங்கரமான கபாலிகன். கபாலம் எனப்படும் மண்டைஒட்டை ஏந்தும் சிவனே கபாலி. உக்கிரமான முறையில் சுடுகாட்டில் வசித்து, கபால மாலைகளைப் பூண்டு, நரபலியும் மிருகபலியும் தந்து கபாலியை வழிபடுவோறே கபாலிகர் எனப்பவர்.
அக்காலத்தில் கபாலிகர்களின் தலைவன் கிரகசன். இவர்களுக்கு சங்கரரே பெரிய விரோதி. இறைவனை அன்பு வழியிலேயே பூஜிக்க வேண்டும், உக்கிரகம் கூடாதுஎன்று சங்கரர் போதித்து வந்ததால், அவரை இவர்கள் எதிரியாகக் கருதினர்.
நமது ஆச்சாரியார் "தமது எலும்பும் பிறர்குரிய"தியாக சிகாமணி என்று கிரகசன் அறிந்தான். எனவே அவனுக்கு ஒர் துர்எண்ணம் எழுந்தது. "சங்கரரிடமே சென்று உங்களைக் கபாலிக்குப் பலி கொடுக்க சம்மதம் தாருங்கள்"என்று கேட்டுவிடுவோமே!தியாகமே உறுவான அவர் இணங்கிவிடுவார். உடனே அவர் தலையை வெட்டுப்பறித்து விடலாம். இதனால் விரோதி தோலைவது மட்டுமில்லை. உத்தமத் துறவியைப் பலி பெற்றதால் மகிழ்ந்து கபாலியே நேரில் வந்து விரும்பிய வரம் அளிப்பார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று குதூகளித்தது பாவியின் உள்ளம்.
வெட்கமில்லாமல் ஆசாரியரிடம் சென்று தன் வேண்டுதலை வெளியிட்டான் கபாலிகத்தலைவன். தியாகியான சங்கரரும் மகிழ்ச்சி நிறைந்து சம்மதம் தந்தார் என் தலைதானே வேண்டும்?வெட்டி எடுத்துக்கொள்!இந்த உடலால் எந்தப் பயனும் இல்லை என்று எண்ணினேன். இதைக்கொண்டு ஏதோ பயன் பெறுவதாக c செல்வதில் மிகவும் நன்றி என்று அன்பொழுகக்கூறினார் ஆசாரியர், தம் உயிரைப் பறிக்க வந்த பாதகனிடம்,
நன்றி:காஞ்சி பீடம்

வியாழன், 8 மே, 2014

திருச்சிற்றம்பலம்


முன்னுரை :
தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்கள், திருக்குறள், சைவ சமய சாத்திரங்கள், தோத்திரங்கள், புராணங்கள் அனைத்திலும் வேதத்தைப் பற்றிய செய்திகள் உள்ளன. வேதத்தை மறுத்த செய்தி ஏதும் இல்லை. சைவ சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள், அதன் வழிவரும் ஆதீனம், திருமடங்களும் வேதாகமங்களை ஏற்றுப் போற்றுகின்றன. சிலர் தமிழிலும், திருமுறைகளிலும் இல்லாததை இருப்பது போல் "தமிழ் நெறி", "திருமுறை நெறி" என்று சொல்லி, "சலத்தாற் பொருள் செய்து ஏமார்த்தல்" செய்து வருகின்றனர். அது கூடாதென்பதை, 5, 6, 7-02-2010-இல் தில்லையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாவது உலகச் சைவ மாநாட்டின் நிறைவு நாளில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட செய்தியை, காசிமடம் வெளியிட்ட "வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறை விளங்க!" என்ற நூலின் முன்னுரையின் முதலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. வேதத்தை 'உலகத்தார் உண்டு' என்று ஏற்பதையும் காட்டி உள்ளோம். 'எத்திறத்தானும் தேறார்' என்ற நிலையில் இதுதான் அது, அதுதான் இது என்பதுபோல் பேசியும் எழுதியும் வருகின்றனர். தெளிவுபெற விரும்புபவர்களுக்கு பயன்படும் என்று கருதி இது எழுதப்பெறுகிறது.

ஏத்தல் - வழிபாடாகுமா?

 ஏத்து - ஏத்து! என்னும் ஏவல் - துதி.
 ஏத்தல் - துதித்தல், வணங்குதல்.
 ஏத்துதல் - துதித்தல், வணங்குதல்.
    (வெள்ளி விழா - தமிழ்ப் பேரகராதி - 1, பக்.264)
இம்மூன்று சொற்கள் பூசை செய்தலைக் குறிக்காது. தோத்தரித்தல், அட்டாங்க, பஞ்சாங்க வணக்கங்கள், கைகூப்பு ஆகியவற்றைக் குறிக்கும்.
இறைவனை எம் மொழியிலும் துதிக்கலாம். பதினெட்டு மொழிகளில் ஏத்தலாம் என்பது சரியே. மேலும், அறிந்த மொழி எதுவாயினும் அவ்வம் மொழியும் துதிப்பதற்கு உரியதே. இல்லுறை தெய்வத்தைத் தீட்சை பெற்றவர்கள், குரு உபதேசித்தபடியும், ஏனையோர் அறிந்த மொழிகளிலும் தோத்தரிக்கலாம். சித்தாந்த சைவர்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடித் துதிப்பதே சிறப்பு. பாடும் வாய்ப்பு இல்லாதவர்கள் வந்தவணம் ஏத்தலாம்.
கோயில்களின் பூசனை என்பது வேறு. அதனை வேதாகம நெறிப்படி, சிவாசாரியர் செய்ய வேண்டும். வழிபட வரும் பக்தர்கள் அரன் சிந்தனையே கொண்டு பிற சிந்தனைகளை மறந்து திருமுறைகளைப் பாடுதல் - சொல்லுதல் வேண்டும்; அல்லது அரன் நாமங்களைச் சொல்லுதல் வேண்டும்.
சிவாசாரியர்கள் மட்டுமின்றித் துறவியரும் வேதாகம நெறிப்படி இறைவைப் பூசித்தற்கு உரியவரேயாவர்.
 "தென்னாடுடைய சிவனே போற்றி
 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
     - (திருவா. போற்றி.164, 165)
என்ற தொடர்களை மகுடமாகச் சொல்கிறோம். தென்னாட்டவர் துதிக்க உரிய சிவன் எந்நாட்டவரும் உரிய இறைவனாவார். தென்னாட்டவர் தென் மொழியிலும், அவ்வந் நாட்டவர் அவ்வம் மொழிகளிலும் துதிசெய்ய - தோத்தரிக்க ஆகமத்தில் விதியுள்ளது. எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவன் என்பதால், எந்நாட்டவர்க்கும் பொது மொழியாக நம் சமயம் விதித்துள்ள - இறைமொழியில் வழிபாட்டுக் கிரியைகளைச் செய்ய வேண்டும். 'ஆகமம் ஆகி என்று அண்ணிப்பான் தாள் வாழ்க' என்ற திருவாசகத் தொடரை உரக்க முழக்கம் செய்துவிட்டு அவ்வாகம விதிக்கெதிரான சதிசெய்பவர்களை என்னவென்று சொல்வது.
தமிழ் வேதங்கள் இருந்தன. அவை மறைந்தன. மறைந்தவற்றிலிருந்து தோன்றியவை வடமொழி வேதங்கள் என்றெல்லாம் எழுதப்பெறுவன கற்பனை வாதங்கள். பல நல்லறிஞர்களால் பலமுறை மறுக்கப்பட்ட பின்பும், மறுப்பைக் காணாமல் கேளாமல் மீண்டும் மீண்டும் சொன்னவற்றையே சொல்லுவது நன்றன்று. எந்தவொரு சமயமும் தன் மூல முதல் நூலை எந்த நிலையிலும் இழக்காது. எத்தகைய நிர்ப்பந்தத்தாலும் இழப்பை ஏற்படுத்த முடியாது. வேதமே மறைந்திருந்தால் - மொழி மாற்றப்பட்டிருந்தால் உலக வரலாற்றில் குறிக்கத்தக்க அவ்வளவு பெரிய அசாதாரண நிகழ்ச்சியைப் பின்னர் வந்த கவிஞர்கள் கதறிக் கதறிப் பதிவு செய்திருப்பார்களே!? நடக்காத கதையைச் சொல்லி நம்மை நாமே ஏன் தாழ்த்திக்கொள்ள வேண்டும்?
காலில் முள் குத்தினால் காலுக்கு மட்டும் துன்பம் என்பதில்லை. கண்களில் நீர் வரும்; ஒட்டுமொத்த உடம்பையுமே அசௌகரியப்படுத்திவிடும். திருமுறைகள் காட்டிய மறைவழியைத் திருமுறைகளைக் கொண்டே கிரியைகள் செய்து கொச்சைப்படுத்தும் செயல்களை, எங்கோ சிலர்தானே செய்கிறார்கள்; அதைப் பொருட்படுத்த வேண்டாமே எனச் சிலர் கருதக்கூடும். பேருருவுடைய நம் உயிர்ச் சைவ சமயத்தின் பேரால் செய்யப்படும் அந்த, மரபுப் பிறழ்ச்சி முள் குத்துவது போன்றது. சைவ சமயப் பேருருவில் அங்கங்களான சைவர்கள் அனைவரையுமே அத்தீச்செயல் அசௌகரியப்படுத்திவிடும். ஆகவே அந்த முட்களை தூக்கித் தூர எறிந்து, திருமுறைப் பெருமைகளை நாம் காத்தாக வேண்டும்.
'காத்தாள்பவர் காவல் இகந்தால்' சமயம் கறைபட்டுப்போகும். சைவத்திற்குக் காத்தாள்பவர் உள்ளனர். பதினெட்டு ஆதீனங்கள், சைவம் காக்கத் தோன்றியவை. அவ்வாதீனங்களில் சிலவற்றுக்குத் தக்க வாரிசுகள் கிடைக்காத நிலையும் உள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தண்டல்காரர்கள் புறப்படுகின்றனர். இறைவனின் திருவருளால், பதினெண் ஆதீனங்களில் சிலபல ஆதீனகர்த்தர்களாகிய காத்தாள்பவர்கள், பிறர் பிறர் செய்யும் மரபுப் பிறழ்ச்சிகளை அனுமதிக்காமல் வேத நெறிச் சைவத்தைக் காத்தாளும் கடமையைச் செய்து கொண்டுதான் உள்ளனர். ஆசாரிய பீடங்களில் உள்ள அவர்களை மதியாமல் ஒதுக்கினால், தத்தம் பிழைகளைப் - பிழைப்புகளைக் கூச்சமின்றிச் செயற்படுத்தலாம் என்று மரபுப் பிறழ்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
திருமுறைகளைக் கும்பாபிஷேகக் கிரியைகளுக்கும், திருக்கோயில் வழிபாட்டுக் கிரியைகளுக்கும், திருமணம் முதலிய வாழ்வியல் கிரியைகட்கும் பயன்படுத்துபவர்கள் திர்முறைகளின் உயர் தரத்தைக் குறைப்பவர்களே ஆவர். அவர்களிடம் திருக்கோயில்களில் குடமுழுக்கு, இல்லறத்தில் திருமணம் போன்ற கிரியைகள் செய்ய வேண்டுமென்று விதிக்கும் விதிநூல் உண்டா? திருமுறைகளால் கிரியைகள் செய்வதற்கு, ஆட்சி உண்டா? ஆவணம் உண்டா? முன்னோர்களாகிய சான்றோர்களின் சாட்சி உண்டா? என்ற நம் வினாக்களுக்குப் பதிலில்லாமையால், சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் எத்திறத்தாலும் திருந்தாதவர்களாக உள்ளனர். சென்ற நூற்றாண்டில் தோன்றிய வேத மறுப்புச் செய்திகள் மறுக்கப்பட்டவை. திருமுறைச் சடங்குகளுக்கு அவைகள் விடைகள் ஆகா என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை.
சமயம், சமயச் சடங்குகளில் நம்பிக்கை என்பதே சமயியின் முதல் தகுதி. வேதாகம முறைப்படியே திருக்கோயில் பூசனைகள், நடைபெற வேண்டும்; அவ்வாறே தொன்றுதொட்டு நடந்தன. படைப்புக் காலம் தொட்டுச் சைவத்தின் கோட்பாடுகளும், நியதியும், நடைமுறையும் இவையே என்பதற்கான மிகப்பல ஆட்சிகள், ஆவணங்கள், சமயாசாரியர், சந்தானாச்சாரியர்கள், சமயச் சான்றோர்களின் திருவாக்குகள் ஆகியவற்றை காசிமடம் எழுதிய நூல்களில் தந்துள்ளார்கள். தொடர்ந்து நம் ஸ்ரீகுமரகுருபர திங்களிதழில் மெய்யுரை, வைதிகச் சைவம் ஆகிய தொடர்களில் தெரிவித்து வருகிறார்கள். அவற்றைக் கற்றுத் தெளிந்து மிகப் பலர், திருமுறைகள் போற்றும் நான்மறைச் சைவச் செந்நெறியில் பிடிப்புக்கொண்டுள்ளமை பரம்பொருளின் கருணையினாலேயே ஆகும்.
  "........................ - வீழ்த்த 
  புறநெறி ஆற்றாது அறநெறி போற்றி 
  நெறிநின்று ஒழுகுதிர் மன்ற 
  துறை அறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே"

என்றருளிய நம் ஆதி முன்னவராகிய ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளின் அறவுரை முழுமையாக வென்றே
நன்றி:சிவம்.org

ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2



தொடர்ச்சி..
கோயிலொழுகு ஏழாம் பாகம் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் சில முக்கியமான கருத்துக்களை, நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகமாக இங்கு தருகிறேன்.
கோயிலொழுகு என்ற பெயரில் பரம்பரை பரம்பரையாக ஸ்ரீரங்கம் கோயிலில் தொடர்ச்சியாக எழுதப் பட்டு, பாதுகாக்கபட்டு வரும் சுவடிகளின் அடிப்படையிலான வரலாற்று நூலைத் தான்கிருஷ்ணமாசாரியர் சுவாமி அவர்கள் எழுத ஆரம்பித்திருந்திருக்கிறார். அது முதல் இரண்டு பாகங்களில் முடிந்து விட்டது. பிறகு இக்கோயில் தொடர்பான ஏராளமான மற்ற விஷயங்களையும் சேர்த்து எழுதி, அது இப்போதுள்ள பிரம்மாண்டமான வடிவத்தை அடைந்திருக்கிறது. திருவரங்கம் கோயிலுடன் தொடர்புடைய அனைத்து வைஷ்ணவ ஆசாரியார்களின் வரலாறுகள், ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம், மன்னர்கள் மற்றும் நிர்வாகிகள், கோயிலில் நடைபெற்ற உத்சவங்கள், அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், கோயில் நிர்வாகம் தொடர்பான ஏராளமான செய்திகள், போர்கள், நீதிமன்ற வழக்குகள், கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள், ஸ்ரீரங்கம் தொடர்பான பல சம்ஸ்கிருத, தமிழ் பாசுரங்களுக்கான விளக்கங்கள், கோயில் கட்டிடக் கலை, சிற்ப சித்திரக் கலைகள் – இப்படி பல விஷயங்கள் சேர்ந்து இது ஒரு என்சைக்ளோபீடியாவாக, ஸ்ரீரங்கம் பற்றிய ஒரு முழு கலைக்களஞ்சியமாக ஆகிவிட்டிருக்கிறது. ஆசிரியரே தனது உரையில் சொன்னது போல, புத்தகத்தின் அனைத்து பாகங்களையும் முழுதாகப் படிப்பது பொது வாசகர்களுக்கு அசாத்தியமான விஷயம். அவரவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களையே தேடிப் படிக்கக் கூடும்.
srirangam-koyilozhugu-books-2
History என்றால் வரலாறு. Historiography என்பதை வரலாற்று வரைவியல் என்று சொல்லலாம். வரலாறு எப்படி, எந்தெந்த பார்வைகளில், எந்தெந்த விஷயஙக்ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப் படுறது என்பதைப் பற்றிப் புரிந்து கொள்வது வரலாற்று வரைவியலின் ஒரு அம்சமாகும். உதாரணமாக, முன்பு வரலாறு என்றால் அரச வம்சங்கள், அது தொடர்பான விவகாரங்கள், போர்கள் ஆகியவற்றைப் பற்றியே மையமாகப் பேசப் பட்டது. ஆனால் தற்போது அதை விட முக்கியமாக, பல்வேறு விதமான மக்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களது பழக்க வழக்கங்கள் எப்படியிருந்தன, வாணிகம் எப்படியிருந்தது, பெண்கள் நிலை, கல்வி, கலைகள் போன்ற பல விஷயங்களையும் பற்றியசமூக வரலாறு (social history) முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இந்த அடிப்படையில் கோயிலொழுகு ஒரு முக்கியமான வரலாற்று வரைவியல் ஆவணமாகவும் சிறப்பிடம் பெறுகிறது.
கோயிலொழுகு ஏழாம் பாகம் முதல் பகுதியிலிருந்து ஒரு உதாரணம். தேவர்கள் எல்லாரும் பார்த்திருக்க, நாணமின்றி பெரியபிராட்டி பெருமாளின் திருமார்பின் மேலேறிக் கொண்டாளே, அது சரியா என்று ஒரு சீடர் கேட்க, ஆசாரியார் விளக்கம் சொல்கிறார் – ”அந்தப்புரத்திலே கூனன், பேடு, கிழவன் போன்றோர் இருக்கையிலே, மகாராணி நீராடப் போகும் சமயம், அவர்களும் தாதிமார்களுடன் சேர்ந்து சேவகம் செய்வார்களாகையாலே, மகாராணிக்கு நாணம் ஏற்படுமோ?அது போல, சகல தேவகணங்களும் எம்பெருமானுடைய பரிசாரகர்கள் போன்று ஆகையினாலே, பெரிய பிராட்டி அனைவரும் பார்த்திருக்க பெருமாள் திருமார்பில் ஏறி அமர்ந்தாள்” என்கிறார். இதன்மூலம் அந்தக் காலகட்டத்திய அந்தப்புர நடைமுறை பற்றியும், ஆசாரியர்கள் சம்பாஷணைகளின் போது எப்படி எந்தவிதமான மனத்தடைகளும் இன்றி உரையாடினார்கள் என்பதும் தெரியவருகிறது.
இலக்கியம், தத்துவம், வரலாறு இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தையே எடுத்துக் கொண்டால், முதலில் ஆழ்வார்களின் பாசுரங்கள். அவற்றை நாதமுனிகள் தொகுக்கிறார். பிறகு ஸ்ரீராமானுஜர் ஆழ்வார்களின் பக்தி அனுபவத்தை மையப் பொருளாக வைத்து வேதாந்த நூல்களுக்கு பாஷ்யம் எழுதுகிறார். பிறகு வருகிற ஆச்சாரியார்கள் இவை இரண்டையும் ஒன்றிணைத்து அற்புதமான வியாக்கியனங்களையும், பல்வேறு தனி நூல்களையும் அருளிச் செய்கிறார்கள். திருவாய்மொழி ஒன்றுக்கே பல்வேறு வியாக்கியானங்கள் தொடர்ந்து எழுதப் பட்டு வந்திருக்கின்றன. தத்துவத்தை கட்டமைக்கும் போது உருவாகும் முரண்பாடுகளையும், கருத்து வேற்றுமைகளையும் ஒவ்வொரு கட்டத்திலும் சமன்செய்து தெளிவு ஏற்படுத்துவதற்காகவே ஒரே நூலுக்கு இத்தனை உரைகள் எழுந்திருக்கலாம் என்று நூலாசிரியரிடம் கூறினேன். தனக்கும் அது ஏற்புடையதே என்று அவர் சொன்னார். இப்படி பல காலகட்டங்களின் ஊடாக ஸ்ரீவைஷ்ணவம் ஒரு உறுதியான கட்டமைப்பு மிக்க சித்தாந்தமாக பரிணாம வளர்ச்சி பெறுவது பற்றிய ஒரு அழகிய சித்திரமும் கோயிலொழுகில் நமக்குக் கிடைக்கிறது.
srirangam-jeeyars-who-sacrificed-themselvesஇன்னொரு விஷயம் hagiography. பிரபலான பெரும் ஆளுமைகளின் வரலாற்றுக் குறிப்புகளை எழுதுவது பற்றிய துறை இது. ஆங்கிலத்தில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது,அந்த குறிப்பிட்ட ஆளுமைகள் பற்றிப் போற்றிப் புகழ்ந்து எழுதப் பட்ட மிகைச்சித்திரங்களையே அவை பெரும்பாலும் குறிக்கின்றன. அரசவைக் கவிஞர்களின் பாடல்கள், பாபர் நாமா, அயினி அக்பரி போன்ற அரசவை நாட்குறிப்புக்கள் ஆகியவையும் இதில் வரும். இந்தக் கண்ணோட்டத்தில் கோயிலொழுகை நாம் பார்க்கும்போது, ஒரு விஷயம் தென்படுகிறது. இது அடிப்படையில் மக்களால் எழுதப் பட்ட ஒரு உண்மையான மக்கள் வரலாறு. ஒரு அரசு அதிகாரத்தின், ஆட்சியின் ஆவணம் அல்ல இது. மாறாக, பல்வேறுபட்ட குரல்களின் தொகுப்பு என்று இதைக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். மன்னர்கள் மற்றும் நிர்வாகிகளைப் பற்றிய புகழுரைகள் மட்டுமல்ல, கண்டனங்களும், எதிர்ப்புக் குரல்களும், விமர்சனங்களும் கூட இதில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஒரு கொடுங்கோல் மன்னன் காலத்தில் (கோனேரி ராஜன்??) அவனை நல்வழிப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய, தங்கள் மரணமாவது அவனைத் திருத்தக் கூடும் என்ற எண்ணத்தில் இரண்டு ஜீயர்கள் கோபுரத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்தக் கோபுர வாசலில் அவர்களது உருவங்களும் சிறிய அளவில் செதுக்கப் பட்டிருக்கின்றன. கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மாண்டவர்களின் நினைவுச் சின்னம் இங்கே பதிவாகியிருக்கிறது, எந்தப் புரட்சி கோஷங்களும் இல்லாமல்.
மாபெரும் கல்விக் கூடங்களும், ஆய்வு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய வேண்டிய பணியை கிருஷ்ணமாசாரியார் அவர்கள் தனியொருவராக நின்று செய்திருக்கிறார். கண்ணன் தன் சிறுவிரலால் மலையைத் தூக்கியற்கொப்பான காரியம். தனது ஐம்பது வயது வரை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, ஓய்வுவாங்கிக் கொண்டு இந்தக் கோயிலைப் பற்றி ஆய்வு செய்வதற்காகவே ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்யத் தொடங்கியிருக்கிறார். இந்த மாபெரும் பணிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காகவே அதற்கு முன்பு தமிழ், சமூகவியல், பொது நிர்வாகம் ஆகியவற்றில் தொலைவழிக் கல்வி மூலம் படித்து முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். கல்வெட்டுகளைப் படித்து, பொருளறியக் கற்றுக் கொண்டிருக்கிறார். சம்பிரதாயமான பார்வையுடனேயே வைஷ்ணவ நூல்களை நன்கு கற்றறிந்தவர். ஆயினும், இந்த நூலை பெருமளவுக்கு அறிவியல் பூர்வமாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலும், தெளிவான் வரலாற்று உணர்வுடனும் எழுதியிருக்கிறார். இது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். வேறு துறைகளில் பணிபுரிந்தாலும் வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர்கள் தங்கள் இடையறாத உழைப்பு மூலம் பல விஷயங்களைக் கற்றறிந்து செறிவான பங்களிப்புகளை நல்க முடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகவே அவர் திகழ்கிறார் என்று சொல்வேன்.
srirangam-krishnamacharyar-speaking-at-the-function1
ஸ்ரீ கிருஷ்ணமாசாரியர் 18-3-2011 அன்று வெளியீட்டு விழாவில் உரையாற்றுகிறார். அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக) டாக்டர் கல்யாணராமன் – சரஸ்வதி நதி ஆய்வு மையம், ஜி.பி.ஸ்ரீனிவாசன், பெரியநம்பி சுந்தரராஜாசாரியார் சுவாமி. மேலும், பழங்காசு ப.ஸ்ரீனிவாசன் (நாணயவியல் ஆய்வாளர்), இரும்பாநாடு பத்மநாபன் (வைணவ அறிஞர்), அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு ஆகியோரும் உரையாற்றினர்.
இது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். அதே நேரம் மிகவும் வருத்தமளிக்கும் விஷயமும் கூட. ஏனென்றால், இத்தகையதொரு பணியை உண்மையில் செய்ய வேண்டியவை நமது கல்வி அமைப்புகள், கலாசார அமைப்புகள். என்ன செய்துகொண்டிருக்கின்றன அவை? வரலாறும் கலையும் இலக்கியமும் பண்பாடும் கொட்டிக் கிடக்கும் ஒரு பொக்கிஷம் இந்தக் கோயில். இதே போன்று சிதம்பரம், மதுரை, காஞ்சி என்று பல கோயில்கள் தமிழகமெங்கும் உள்ளன. இவற்றை முறையாக ஆய்வு செய்து, ஆவணப் படுத்தி, மக்களைக் கவரும் வகையில் கோயில் சிறப்புகளை எடுத்துச் செல்வது தமிழ்நாட்டு அரசின், அதன் பல்கலைக் கழகங்களின், நிறுவனங்களின் கடமையாகும். இது போன்றதொரு கலைச் செல்வம் மேலை நாடுகளில் இருக்குமேயானால் கோயில் இயல் என்றொரு துறையே அங்கு உருவாகி, பல பல்கலைக் கழகங்களில் இதில் நிஜ ஆர்வமுடைய கணிசமான அளவு மாணவர்கள் பயிலும் நிலை இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, இங்கே இருக்கும் கலைக் கல்வித் துறைகளாவது (humanities departments) இப்பணிகளைச் செய்யலாம். ஆனால் இத்திறக்கில் ஒன்றுமே நடப்பதாகத் தெரிவதில்லை.
இந்தப் புத்தகத்தை இது போன்ற பிற கோயில் வரலாற்று நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் தவிர்க்கவியலாதது. குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கும் ராஜராஜேஸ்வரம், அ.கா. பெருமாளின் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் வரலாறு ஆகிய நூல்கள் உடனடியாக நினைவு வருகின்றன. கோயிலொழுகும் அவைகளைப் போன்றே முழுமையான தரவுகளின் அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. ஆனால் அந்த நூல்களின் நடை, மொழி, கூறுமுறை ஆகியவை இன்றைய நவீனத் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாகவும், நேரடியாகப் பேசும் வகையிலும் உள்ளன. ஒப்பீட்டில் கோயிலொழுகில் வைஷ்ணவ பரிபாஷை மிக அதிகமாக உள்ளது. நிறைய இடங்களில் எளிய தமிழ் விளக்கங்கள் உள்ளன என்றாலும், மணிப்பிரவாள நடை ஓரளவு பரிச்சயம் இல்லாமல் இந்தப் புத்தகத்துள் நுழைவது கடினம் என்றே நினைக்கிறேன்.
வரலாறு எப்போதுமே கடந்த காலத்தின் பிரதிநிதி மட்டும் அல்ல. அதில் நிகழ்காலத்திற்கான பாடங்களும்,எதிரொலிகளும் கூட இருக்கக் கூடும். அதனால் தான் வரலாற்றைப் பயில்வது முக்கியமாகிறது.
ஒரு காட்சி. மறவர் குலத்தவரான பிள்ளையுறங்காவில்லி தாசரை முன்னிறுத்தி ”சாத்தாத முதலிகள்” விஷயமாக முதலியாண்டான் ஸ்ரீராமானுஜரிடம் கேட்கிறார். பூணூல் சாத்தாத, அதாவது பிராமணரல்லாத வைணவர்களை சாத்தாத முதலிகள் என்று கூறுவது வைஷ்ணவ பரிபாஷை மரபு. ”நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றத்தை அருளிச் செய்ய வேணும்” என்று கேட்கிறார் முதலியாண்டான். தன்னேற்றம் என்றால் மேன்மை, சிறப்பு என்று பொருள் கொள்ளலாம். இதற்குப் பதிலாக ஸ்ரீராமானுஜர்பத்து வார்தைகள் அருளிச் செய்கிறார் (வார்த்தை என்றால் கருத்து). இவை வார்த்தாமாலை என்ற நூலில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உதாரணங்கள் கொடுக்கிறார் -
அணுவுக்கும் மஹாமேருவுக்குமுள்ள தன்னேற்றம். எங்ஙனேயெனில், நாம் ஸம்பந்தமும் குடிகோத்ரமும் ஸூத்ரமுமாகப் பண்ணுவுதோம்.அவர்கள் ஸம்பந்த ஞானானுஷ்டமே (அதாவது தொண்டக் குலத்துக்குரிய ஜீவ பர சம்பந்தம் பற்றிய ஞானமும், அதன் அனுஷ்டானமும்) குடிகோத்ர ஸூத்ரமென்றிருப்பார்கள்.
கரும்புக்கும் கண்டுக்குமுள்ள (கல்கண்டு) தன்னேற்றம். எங்ஙனேயெனில், நாம் வேதமாகிற கரும்பைக் கடித்துப் பல்லு முறிவுதோம். அவர்கள் ஸாரத்வயமாகிற கண்டைக் கடித்து இன்புறுவர்கள்.
பதிவ்ரதைக்கும் பரநாரிக்குமுள்ள தன்னேற்றம். எங்ஙனமேயென்னில், நாம் ஆக்நேயாதிகளுக்கும் (அக்னி முதலான தேவதைகளுக்கும்) சேஷமாயிருப்புதோம். அவர்கள் அவனுக்கே சேஷமென்று அவனையொழிந்தவர்களுக்கு சேஷமன்றென்று அறுதியிட்டிருப்பார்கள்.
இது இருவர்களுக்குமுள்ள தன்னேற்றம்.
-  கோயிலொழுகு,  பாகம் 7 – பகுதி 1, பக்கம் 10-17.
இங்கு பிராமணர் – பிராமணரல்லாதார் பற்றிய ஒரு 11ம் நூற்றாண்டு உரையாடல் பதிவு செய்யப் பட்டுள்ளதைக் காண்கிறோம். நவீனகாலத்திற்கு முந்தைய மன்னராட்சிக் கால சமூகம் அது. சாதி வேறுபாடுகளை சட்டமாகக் கடைப்பிடித்தமாக சமூகச் சூழல்.அப்போது அக்காலகட்டத்தின் இரு மாபெரும் சமயத் தலைவர்கள், குருவும் சீடனாக உரையாடுகையில், எத்தகைய மனப்பாங்கு, எத்தகைய மொழி புழங்கிற்று என்பதற்கு ஒரு உதாரணம் இது. இருபதாம் நூற்றாண்டில் தமிழக அரசியலை ஆக்கிரமித்த ஒரு பிற்போக்கு இயக்கத்தினர் பிராமணர் – பிராமணரல்லாதார் பிரசினையை முன்வைத்து செய்த கடும் வெறுப்புணர்வு பிரசாரங்களையும், இனவாத திரிபுவாதங்களையும் இதனுடன் வரலாற்று ரீதியாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
srirangam-paramapada-vasalஇதே போன்று, பிள்ளைலோகாச்சாரியரின் சீடர்விளாஞ்சோலைப் பிள்ளை என்பவர் இருந்திருக்கிறார். இவர் புலையர் சமூகத்தைச் சேர்ந்தவர். தனது உற்ற சீடரான திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசம் செய்யுமாறு விளாஞ்சோலைப் பிள்ளையை லோகாசாரியர் பணிக்க, அவரும் குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார். விளாஞ்சோலைப் பிள்ளை பரமபதம் அடைந்ததும் அவரது ஈமக் கிரியைகளை அந்தணரான திருவாய்மொழிப் பிள்ளையே செய்தார். அதற்கும் முன்பு மாறநேரி நம்பிகள் என்ற பரம வைஷ்ணர் மறைந்த போதும் இதே போன்று பெரிய நம்பிகள் இறுதிக் கடன்கள் செய்திருக்கிறார். மாறனேரி நம்பிகளும் பிறப்பால் புலையர் சமூகத்தைச் சார்ந்தவரே.
பிற்காலத்தில், 17ம் நூற்றாண்டில் வந்த பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ற பெரும் கவிஞர் அஷ்டப் பிரபந்தம் என்று புகழ்பெற்ற எட்டு நூல்களை எழுதியிருக்கிறார். இதில் திருவரங்கக் கலம்பகம் என்ற நூலில், மறவர்குலப் பெண் திருவரங்கநாதன் மீது காதல் கொண்டதை அழகாக விவரித்துப் பாடியிருக்கிறார். அவளைப் பெண்கேட்டு அரச குலத்தினர் ஓலைகொடுத்து தூதர்களை அனுப்ப, அவர்களை நோக்கி அந்த சமூகத் தலைவன் இப்படிக் கூறுகிறான் -
பேசவந்த தூத! செல்லரித்த ஓலை செல்லுமோ?
பெருவரங்கள் அருளரங்கர் பின்னைகேள்வர் தாளிலே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து முன்னமே
பட்டமன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா!

ஆய்ச்சியர் குலத்து கோபிகைகளும், அப்படியே தன்னைக் கருதிக் கொண்ட ஆண்டாளும் மட்டுமல்ல, மறவர் குல மாதரசியும் அரங்கன் மீது அன்பு பூண்டவள். அதை முகாந்திரமாகக் கொண்டு அரசர்களது தூதர்களையே மிரட்டும் துணிவும் வீரமும் உடையோராக மறவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று இந்தப் பாடல் மூலம் தெரியவருகிறது.
நேற்று ஆந்திராவில் இருந்து தரிசனத்திற்கு வந்திருந்த பெரிய கூட்டம் ஒன்றைப் பார்த்தேன். சிவப்புத் தலைப்பாகை கட்டி முறுக்குமீசை வைத்த ஆண்கள். வண்ணச் சேலைகளும் விதவிதமான ஆபரணங்களும் அணிந்த பெண்கள். பயணத்தால் அலுத்து தூசிபடிந்த கரிய திருமேனிகள். செஞ்சுக்கள் என்று சொல்லப் படும் ஆந்திர வனவாசி சமூகத்தினர் இவர்கள் என்று பார்த்தாலே தெரிந்தது. அகோபிலம், ஸ்ரீசைலம் பகுதிகளின் வனப்பிரதேசங்களில் வசிப்பவர்கள். அங்கிருந்து அரங்கனை சேவிக்க வந்திருக்கிறார்கள்!
எனவே, ராமானுஜரின் வார்த்தைகள் அங்கேயே முடிந்து விட்ட உரையாடல் அல்ல. அதனைத் தொடர்ந்து பல்வேறு சாதி சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு சமூக இயக்கமாகவே அது பரிணமித்தது என்பதை நாம் அறிய முடிகிறது. சாத்தாத வைஷ்ணவர்களின் பெரும் சமூகத் தலைவராக பின்னாளில் கந்தாடை ராமானுச முனி என்பவர் இருந்திருக்கிறார். கோயிலைச் சுற்றியுள்ள வீதியொன்றில் அவர் பெயரில் சாத்தாத வைஷ்ணவர்களுக்கான மடம் இன்றும் இருக்கின்றது. அதில் உள்ளே ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னிதியும், பிள்ளையுறங்கா வில்லிதாசர், அவரது மனைவி பொன்னாய்ச்சியார் ஆகியோரது சித்திரத் திருவுருவங்களும் உள்ளன.
srirangam-saathaada-vaishnava-sabha
மற்ற அனைத்து மடங்களைப் போல இங்கும் பரம்பரையாக வரும் ஆச்சாரியர்கள் இருப்பார்களே என்று கேட்டேன். இல்லை என்பதே பதிலாகக் கிடைத்தது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இந்த மடத்திற்குத் தலைவர் இல்லையாம். அந்தப் பாரம்பரிய இழை அறுபட்டு விட்டிருக்கிறது, அதுவும் மிக சமீப காலத்தில். சமூக ரீதியாக மிக முக்கியமானதொரு காலகட்டத்தில்.
(ஆனால் இது ஒரு பெரும் இழப்பு என்ற உணர்வு கூட நான் பேசிய சில வைஷ்ணவப் பெரியவர்களுக்கு சிறிதும் இல்லை என்பதை எனது உரையினூடாக வருத்தத்துடன் குறிப்பிட்டேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில பெரியவர்கள் இதனை ஆமோதித்தனர். வில்லிதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை முதலான பெரியோர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிறு கோயில்கள் அமைக்க வேண்டும்.சாத்தாத வைணவர்களின் குரு பரம்பரையைத் தொடரச் செய்ய வேண்டும். இது உடனடியாகச் செய்யவேண்டிய பணி என்று வந்திருந்தவர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.)
கோயிலொழுகு நூலில் இது போன்று பற்பல அருமையான சம்பவங்களும், குறிப்புகளும் உள்ளன. இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கும், இளைய தலைமுறையினருக்கும் சென்று சேரும் வண்ணம் காமிக்ஸ் கதைப் புத்தகங்களாகவும், நேர்த்தியான ஆவணப் படங்களாகவும் உருவாக்க வேண்டும்.
வெள்ளையம்மாளின், பஞ்சுகொண்டானின் தியாகத்தின் சின்னங்களாக ஒரு பெரும் கோபுரமும், நுழைவாயிலும் இங்கு நின்று கொண்டிருக்கின்றன. ஆனால்தரிசனம் செய்ய வருபவர்களில் 90சதவீதத்தினருக்கு இந்த வரலாற்றுச் செய்தி தெரிவதில்லை. அவர்களுக்கு இத்தகவல் சென்று சேர வழியும் இல்லை. இந்தக் கோயிலைக் காப்பாற்றி நமக்களிக்க எப்பேர்ப்பட்ட மகத்தான தியாகங்கள் செய்யப் பட்டிருக்கின்றன என்ற தகவல் தெரிந்தால், ஒருவேளை பக்தர்களின் சுயநல பிரார்த்தனைகளின் பேரிரைச்சல்களில் எங்கோ ஒரு மூலையிலாவது அது கசிந்து கொண்டிருக்கும். இன்றும் திண்டுக்கல்லிலும், தென்காசியிலும், கன்யாகுமரியிலும் கோயில்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஏழை எளிய மக்கள் செய்யும் தியாகங்களை நினைவில் கொள்ளவும், மதிக்கவும் அது ஒரு உந்துதல் அளிக்கக் கூடும்.
ஒவ்வொரு கோயிலுக்கு அருகிலும் அதன் பல நூற்றாண்டு கால வரலாற்றைக் காட்சிப் படுத்தும் வகையில் அருங்காட்சியகங்கள் அமைய வேண்டும். கோயிலுக்கு உள்ளேயும் இந்த வரலாற்றுச் செய்திகளை அங்கங்கு மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் பலகைகள் வைக்கப் படவேண்டும். அப்போது தான் கோயிலைப் பற்றிய ஒரு கலாசார,பண்பாட்டு,வரலாற்று உணர்வும் மக்கள் மனதில் உண்டாகும். வழிபாட்டுணர்வுடன் கூட, அத்தகைய உணர்வும் இணைந்தால் தான் கோயில்களின் மீது மக்களுக்கு பிரக்ஞை பூர்வமான பற்றும் பிடிப்பும் உண்டாகும். இன்றைய சூழலில் அது தமிழகத்திற்கு மிக அவசியமாகத் தேவைப் படுகிறது. திருவரங்கம் கோயில் விஷயத்தில் அத்தகையதொரு உணர்வினை உண்டாக்குவதில் கோயிலொழுகு நூலின் பங்களிப்பு மகத்தானது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு) – ஏழு பகுதிகள்
ஆசிரியர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசாரியர்
மொத்தப் பக்கங்கள்: 6000+.
srirangam_koyil_ozhugu_book_set
வெளியிட்டோர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, 214, கீழை உத்தரவீதி, ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006.
தொலைபேசி: 0431-2434398, 98842-89887 , 90424-53934.
மின் அஞ்சல்: krishvasu19@gmail.com
அனைத்து பாகங்களும் சேர்த்து, விலை ரூ. 3000 (ஏப்ரல்-30, 2011 வரை சலுகை விலை ரூ. 2400).
ஏப்ரல்-30 வரை தனிப்பட்ட பாகங்கள் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
தபால் செலவுகள் தனி (பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்).
சென்னையில் கிடைக்குமிடம்:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, புதிய எண்: 36, நாயக்கமார் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33.
தொலைபேசி: 044 – 24715120
ஒவ்வொரு பகுதிகளும் பற்றிய சிறு குறிப்பு:
பகுதி 1 (2 பாகங்கள்): புராணக் குறிப்புகள் முதல் ஸ்ரீராமானுஜர் காலம் வரையிலான வரலாறு. மேலும் பராசர பட்டர் தொடங்கி கி.பி 1623 முத்துவீரப்ப நாயக்கன் காலம் வரையிலான வரலாறு.
பகுதி 2 (2 பாகங்கள்): கி.பி 1623 முதல் 1803, கோயில் நிர்வாகம் கிழக்கிந்தியக் கம்பெனி வசம் வரும் வரையிலான வரலாறு. கந்தாடை ராமானுஜ முனி உட்பட இக்காலகட்டத்தில் திருவரங்கத்தில் வாழ்ந்த ஆசாரியர்கள் வரலாறு.
பகுதி 3 (3 பாகங்கள்): கிபி. 1803 முதல் 2003 வரை கோயில் உரிமைகள் தொடர்பாக தென்கலையார் தொடுத்த நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள். சித்திரை முதல் பங்குனி வரை நடைபெறும் பல்வேறு விழாக்கள். ஒழிபியல் என்ற தலைப்பில் கோயில் பற்றிய பல துணுக்குச் செய்திகள்.
பகுதி 4 (2 பாகங்கள்): ஸ்ரீரங்கமஹாத்மியம் நூல் தரும் கோயில் விவரங்கள். பங்குனிப் பெருவிழா மற்றும் அதன் வரலாறு பற்றி விரிவான விவரணங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருவரங்கம் தொடர்பான 247 பாசுரங்களுக்கான விளக்கம், பூர்வாசாரியர்கள் உரையின்படி.
பகுதி 5 (2 பாகங்கள்): நாதமுனிகள் முதல் ஸ்ரீராமானுஜர் வரையிலான ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம். விஜயநகர, மதுரை மன்னர்கள், தஞ்சை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றிய முழுமையான விவரங்கள்.
பகுதி 6 (3 பாகங்கள்): கூரத்தாழ்வான் திருவரங்க வாழ்வும் பணியும். கூரேச வைபவம் என்ற நூல் கூறும் குறிப்புகள். ஆழ்வான் அருளிய 5 சம்ஸ்கிருத தோத்திர நூல்களின் மூலமும் உரையும்.
பகுதி 7 (2 பாகங்கள்): முதலியாண்டான் தொடங்கி மணமாள மாமுனிகள் வரை இராமானுஜருக்குப் பின்வந்த ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம். திருவரங்க கோயில் அமைப்பு. கோயிலின் அனைத்து பகுதிகள் (கோபுரங்கள், தூண்கள், மண்டபங்கள், சன்னிதிகள்..), சிற்பங்கள், சித்திரங்கள் பற்றிய விரிவான விவரணங்கள். சில வரலாற்றுப் புதிர்கள் குறித்த பிற்சேர்க்கை.
தனித்தனி பகுதிகளின் விலை & மற்ற விவரங்கள் அறிய பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.
(முற்றும்).
 

25 மறுமொழிகள் ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2

  1. T.Mayoorakiri sharma on April 9, 2011 at 10:34 am
    //அதனைத் தொடர்ந்து பல்வேறு சாதி சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு சமூக இயக்கமாகவே அது பரிணமித்தது என்பதை நாம் அறிய முடிகிறது.
    சாத்தாத வைஷ்ணவர்களின் பெரும் சமூகத் தலைவராக பின்னாளில் கந்தாடை ராமானுச முனி என்பவர் இருந்திருக்கிறார். கோயிலைச் சுற்றியுள்ள வீதியொன்றில் அவர் பெயரில் சாத்தாத வைஷ்ணவர்களுக்கான மடம் இன்றும் இருக்கின்றது. அதில் உள்ளே ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னிதியும், பிள்ளையுறங்கா வில்லிதாசர், அவரது மனைவி பொன்னாய்ச்சியார் ஆகியோரது சித்திரத் திருவுருவங்களும் உள்ளன.//
    நீங்கள் தந்திருக்கிறது மிகமுக்கியமான தரவு. ஆனாலும் சாத்தாத வைணவர்- சாத்திய வைணவர் என்று சந்நியாசிகளுள் பிரிவினை பார்க்கலாமா? சாத்தாத வைணவ சந்நியாசிகள் எப்படியிருப்பர்? என்பது குறித்தும் தங்களுக்குத் தெரிந்தால் எழுதுங்கள். சாத்தாத வைணவர்களுக்கு சந்நியாசம் வாங்கிக் கொள்ள தகுதி உண்டாகில் அவர்களும் அப்போதேனும் சாத்திக் கொள்ளவும் வழி ஒன்றை கட்டாயம் ராமானுஜாச்சார்யார் செய்திருக்கவில்லையா? (வைணவ சந்நியாசிகள் பூணூல் களைவதில்லை. அணிந்தே இருத்தலால் இதைக் கேட்கிறேன்)
    சைவ சமயிகளைப் பொறுத்த வரையில் பிறப்பினால் பிராமணரல்லா ஆதீனங்களில் வீற்றிருக்கும் மஹாசந்நிதானங்களை பிராமணர்கள் ஏற்றுக் கொளகிறார்கள். ஆக, வைணவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் நிலை இருக்கவில்லையா? இவை பற்றி தாங்கள் மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
  2. கிருட்டிணன் on April 9, 2011 at 11:20 am
    What is the price of each volumes, and what each volumes deal with?
  3. கந்தர்வன் on April 9, 2011 at 11:52 am
    திரு மயூரகிரி சர்மா அவர்களே,
    நீங்கள் கேட்டுள்ள விஷயத்தை இப்படி அணுகலாம் என்று நினைக்கிறேன்:
    (1) தற்காலத்தில் நாம் கருதுவதைப் போல பூணூல் என்பதை ஒரு பெருமைப்பட வேண்டிய சம்ஸ்காரம் என்றும் social empowerment செய்யும் சாதனம் என்றும் அக்காலத்தில் இராமானுஜர் கருதியிருப்பார் என்று தெரியவில்லை.
    (2) வைணவ ஜீயர்கள் பூணூலைக் கைவிடுவதில்லை என்று நீங்கள் எழுதியிருப்பது சரியே. பூணூல் அணிவதையும் நித்யகர்மா செய்வதையும் ஒரு பெருமைப்பட வேண்டிய சடங்குகலாகப் பார்க்காமல், அதை ஒரு ஸ்வதர்மமாகவும் கடமையாகவுமே அவர்கள் பார்த்தனர்.
    (3) பிராம்மண குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆகி விட்டால் அவருக்கு உபநயனம் செய்வது எந்த நன்மையையும் தராது என்பது பிரபலமான பெரியோர் வாக்கு.
    இப்படி இருக்க, ஒருவருக்குப் புதிதாகப் பூணூல் அணிவிப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் — அதாவது பூணூல் என்பதை மோக்ஷத்துக்கு உபாயமாக ராமானுஜர் கருதியிருப்பாரோ என்னும் possibility ஒன்று தான். ஆனால், இது பிரபன்ன லக்ஷணத்துக்குச் சற்றும் ஒத்து வராது. ‘எந்த தர்மத்தையும் உபாயமாகப் பற்றாமல் என்னையே சரணடைவாய்’ என்னும் சரம சுலோகம் (கீதை 18.66) ஸ்ரீவைஷ்ணவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது படி பார்த்தால் இந்த possibility-யும் அடி படுகிறது.
    கடைசியாக, சாத்தாத முதலிகளைப் பூணூல் அணிய வைத்திருந்தால் அவர் வைணவத்துவத்தை விட பிராம்மணீயத்துக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தார் என்பதாகி விடும்.
    என் கருத்தில் உண்மை இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  4. ஜடாயு on April 9,