வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மறைவு ஸ்தானம் தரும் யோக பலன்கள் !




அண்ணே,

       

எனது கேள்விக்காகத் தாங்கள் நீண்ட ஒரு விளக்கம் தந்த மேன்மைக்கு நன்றி!. இது போல் ஒரு வலைப்பூவில் பாதகஸ்தானம் பற்றிக் கேள்வியெழுப்பியிருந்தேன். அதற்கு அந்த நண்பர் நீங்கள் சொல்வது போல் பாதகஸ்தானம்,பாதகஸ்தான அதிபதி என்பது பற்றியெல்லாம் புரதான ஜோதிட நூல்களில் கூட விளக்கம் இல்லை. நீங்கள் தேவையில்லாத விஷயத்தைப் பற்றிக் குழப்பிக்கொள்ள வேண்டாம் எனக் கூறியிருந்தார்.அவர் சொன்னது மறைவு ஸ்தானங்களை(6,8,12) மட்டும் பார்த்தால் போதும் இது ஒன்றும் அத்தனை முக்கியத்துவமில்லாதது என்று கூறியிருந்தார்.அதனால் தான் நான் தங்களிடம் என் மனதில் தோன்றிய ஐயத்தைக் குறித்து வினவினேன். நான் என் நண்பன் ஜாதகத்திலும்,என் தாயார் ஜாதகத்திலும் பாதகாதிபதிகளின் திசை நடந்த போது அவர்கள்பட்ட மனவேதனையை கேட்டும்,கண்டும் இருந்ததால் இதன் பாதகம் நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து அறியலானேன்.தங்களின் விளக்கத்தால் தெளிவும் அடைந்தேன். 
பல இளம் ஜோதிட ஆராதகர்கள் மறைவு ஸ்தானத்தைப் பற்றிக்கொண்டு 
இறங்க மறுக்கின்றனர்.பாதகஸ்தானமா? என்று எதிர்கேள்வி கேட்டு நமது மண்டையைக்காய வைக்கின்றனர்,அவர்களுக்கும் இந்தப் பதிவு பயன்படும்.
நன்றிகள் பல!!!



சந்தோசம் தம்பி இந்த இடத்தில் சிறு விளக்கம் தர கடமைப்பட்டு இருக்கிறேன் பாதக ஸ்தானத்தை பற்றி விளக்கம் சில பழமையான ஜோதிட நூல்களில் இருக்கிறது ஆனால் அதைபற்றி பல ஜோதிடர்களுக்கு நிச்சயம் தெரியாது காரணம் தனக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணமும் சரியான புரிதல் இல்லாதது மட்டுமே  மேலும் பொதுவான ஜோதிட பலன்களை படித்து விட்டு ஜோதிடம் சொல்லும் நபர்களுக்கு இதை பற்றிய ஆராய்ச்சியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை அதை பற்றி நமக்கு என்ன கவலை அவர்கள் அனைவரும் தனக்கு ஒரு வருமானம் தரும் தொழிலாக மட்டுமே ஜோதிடத்தை பார்க்கின்றனர் ஆனால் நாமோ ஜோதிடகலையை இறையருள் நமக்கு தந்த ஒரு பொக்கிஷமாக பார்க்கிறோம் , இந்த பொக்கிஷத்தை சரியாக பயன்படுத்தினால் மனிதகுலம் நிச்சயம் வாழ்க்கையில் பல நன்மைகளை பெரும் என்பதே உண்மை, தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சரியான வாழ்க்கை பாதையினை ஜோதிட கணிதம் கொண்டு தெளிவாக தெரிந்து உள்ளது உள்ள படி சொன்னாலே மக்கள் அதன் படி தெளிவாக புரிதலுடன் வாழ்க்கையை சிறப்பாக நடத்துவார்கள் என்பது முற்றியும் சாத்திய படும் ஒரு விஷயமே .

பொதுவாக ஒரு ஜாதக அமைப்பில் மறைவு ஸ்தானம் என குறிப்பிட படும் , ஆறு ,எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவக வழியில் இருந்து கெடுதல் மட்டுமே நடக்கும் என்பது பாரம்பரிய ஜோதிட முறையில் சொல்லப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது, மேலும் இந்த பாவகத்திர்க்கு உட்பட்ட அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் நடந்தால் தீமையை மட்டுமே செய்யும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது , உண்மையில் மறைவு ஸ்தானம் என குறிப்பிட படும் , ஆறு ,எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவகத்திர்க்கும் , லக்கினம் முதல் 12 பாவகத்திர்க்கும் இரண்டு வித குணம் உண்டு , சுய ஜாதகத்தில் மேற்கண்ட மறைவு ஸ்தானங்கள் மற்றும் மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதிகளின் திசைகள்  நல்ல பாவகங்களுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தினால் நன்மையை தரும் என்று எத்தனை ஜோதிடர்களுக்கு தெரியும் , அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் மேலும் மறைவு ஸ்தனங்களும் ஒரு ஜாதகனுக்கு நன்மையை தரும் எனும் உண்மை எத்தனை ஜோதிடர்கள் ஜோதிட கணிதம் கொண்டு அறிந்திருக்க கூடும் , மறைவு ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருந்து இதன் அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களை பற்றி இனி பார்ப்போம் .

ஆறாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :

திசை முழுவது சிறு சிறு அதிர்ஷ்டங்களை ஜாதகர் பெற்று கொண்டே இருப்பார் , உடலில் ஏற்ப்படும் உடல் நல குறைவுகள் , விரைவான குணம் பெரும் தன்மையை தரும் , கடன் பெறுவதாலும் , கொடுப்பதாலும் ஜாதகர் நன்மை பெறுவார் , எதிரிகளின் சொத்து ஜாதகருக்கு கிடைக்கும் , எதிரிகள் கூட நண்பர்கள் ஆகும் சூழ்நிலை உண்டாகும் , எதிரிகளின் செயல் ஜாதகருக்கு சாதகமாக மாறிவிடும் , ஜாதகரை எதிர்ப்பவர்கள் தோல்வியை தழுவ வேண்டி வரும், தொழில் முன்னேற்றம் என்பது மிக விரைவானதாக இருக்கும் , ஜாதகரின் வளர்ச்சி என்பது எவராலும் அறிந்து கொள்ள இயலாத அளவில் இருக்கும், மேலும் ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றி பெரும் , தனது தாய் மாமன் வழியில் இருந்து அதிக நன்மை பெரும் யோகம் உண்டாகும் , கோர்ட் கேசு ஆகியவற்றில் ஜாதகருக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும், சுய ஜாதகத்தில் ஆறாம் வீடு வலிமை பெற்றால் மேற்கண்ட நன்மைகள் ஜாதகர் அனுபவிக்கும் யோகம் உண்டாகும் .

எட்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :

திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஜாதகருக்கு குபேர சம்பத்து உண்டாகும், லாட்டரி , புதையல் போன்ற அதிர்ஷ்டங்கள் கிடைக்க பெறுவார் , குறிப்பாக ஆயுள் காப்பீடு மற்றும் இன்சுரன்ஸ் துறைகளில் ஜாதகர் கொடி கட்டி பறக்கும் அளவிற்கு  வருமான வாய்ப்புகளை பெறுவார் , மேலும் திடீர் பொருள் வரவும் சொத்து சுக சேர்க்கையும் , எதிர்பாராத பண வரவும் , நிலபுலன் சேர்க்கையும் நிச்சயம் ஏற்ப்படும் , சுய ஜாதகத்தில் எட்டம் வீடு நல்ல நிலையில் இருந்து இந்த வீட்டின் பலன் நடந்தால் மேற்கண்ட நன்மையான பலன்கள் எல்லாம் குறுகிய காலத்தில் நிச்சயம் நடைபெறும் .

பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :

ஜாதகர் செய்த சிறு முதலீடு மூலம் மிகப்பெரிய வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் , தொழில் மற்றும் நிலம் நகை வண்டி வாகனம் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் அபரிவிதமான செல்வாக்கு மற்றும் பண வரவு , ஆன்மீக வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றி , இறை நிலை பற்றிய தெளிவு தன்னை பற்றி தெரிந்து கொள்ளும் ஆற்றல் , மற்றவர்களின் மன நிலையை தெளிவாக தெரிந்து கொள்ளும் சிறப்பு தகுதிகள் , மன தத்துவ நிபுணர் ஆகும் யோகம் , ஜாதகர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மன எண்ண ஆற்றல் மூலம் உலகில் நடப்பவைகளை தெரிந்து கொள்ளும் ஆற்றல் , முன்ஜென்ம நினைவுகள் , கர்ம வினை பதிவின் தன்மைகள் , கருமையத்தின் தன்மை , இறை நிலைக்கும் ஜாதகருக்கும் உள்ள தொடர்பு , போன்ற விஷயங்களும் , இதனால் கிடைக்கும் நன்மைகளையும் ஜாதகர் பெறுவது பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி  நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் யோகம் உண்டாகும் .

இதுவே ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டு மற்றும் அதன் அதிபதியின் திசை நடக்கும் பொழுது , பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானதுடன் சம்பந்த பெற்று இருந்தால் , ஜாதகரை பூர்வீகத்தை விட்டே வெகு தொலைவு சென்று பரதேஷ ஜீவனம் செய்ய வைத்து விடும் எனவே  ஒவ்வொரு பாவகதிர்க்கும் நன்மை தீமை செய்யும் பலம் உண்டு என்பது இதன் மூலம் தெளிவாகிறது .

வியாழன், 19 பிப்ரவரி, 2015

ராஜயோகம் என்றால் என்ன..?

கடந்த சில மாதங்களாக முக்கியமான சில யோகங்களைப் பற்றி நான் உங்களுக்கு விரிவாக விளக்கி வந்த நிலையில் அந்த ராஜயோகங்கள் முறையாக அமைந்து அவற்றால் மேம்பட்ட ஒரு உதாரண புருஷரை தற்போது பார்க்கலாம் வாருங்கள்......

சாதாரண யோகங்கள் ஆயிரக்கணக்கான ஜாதகங்களில் இருக்கக் கூடும். ஆனால் தர்மகர்மாதிபதி யோகம் போன்ற ராஜயோகங்கள் சிறிதும் பழுதின்றி எந்த வித பங்கமும் அடையாமல் கோடியில் ஒருவருக்குத்தான் அமைகின்றன.

‘ராஜயோகம்’ என்றால் ‘அரசனுக்குரிய அமைப்பு’ என்று அர்த்தம். எனவே இங்கு நான் அதற்கு உதாரணமாக ஒரு அரசனின் ஜாதகத்தைத்தான் சொல்ல முடியும்..

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்திய ஜோதிடத்தின் ஆணிவேர்களான தெய்வாம்சம் பொருந்திய நமது ஞானிகள் ஒரு அரசனின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதிய விதிகளை மெய்ப்பிக்கும் விதமான ஜாதகத்தினைக் கொண்டு பிறந்த இந்த இன்றைய ‘முன்னாள் அரசர்’ ஜோதிடத்தை நம்பாதவர்.....!

அது மட்டுமல்லாது உலகின் அனைத்து புனித மார்க்கங்களும் “என்னை நம்பு... இல்லையெனில் வெளியேறு” என்று சொல்லும் நிலையில் தனது சிறப்பம்சங்களில் ஒன்றாக தன்னை நம்பாதவனையும் ‘நாத்திகன்’ என்று பெயரிட்டு அழைத்து அவனுக்கும் விளக்கங்கள் சொல்லி அணைத்துக் கொள்ளும் எனது மேலான இந்து மதத்தை நம்பாத நாத்திகர்....! 

எந்த பின்னணியும் இல்லாத ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, பரம்பொருளின் அருளாலும், தனது திறமைகளாலும், யாராலும் மறுக்க முடியாத தன் அயராத உழைப்பாலும் அரசனாகி இன்று தொண்ணூறு வயதை நெருங்கி நிறைவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் (2012ல் எழுதப்பட்டது) இந்த முதுபெருங்கிழவரின் ஜாதகம் பல்வேறு ஜோதிடர்களால் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப் பட்டதுதான்.

ஆனால் எனது கோணத்தில் முற்றிலும் வேறுவிதமாக இந்த ஜாதகத்தை இதுவரை யாரும் விளக்காத ஒரு பார்வையில் இப்போது சொல்லுகிறேன் வாருங்கள்....

“அரச ஜாதகம்”


புத
சூ, சந்
சுக்
கேது
3-6-1924
லக்
செவ்
ராகு
குரு(வ)
சனி(வ)

முதலில் இந்த ஜாதகத்தின் சிறப்புகளைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். பின்னர் விரிவாக ஆராயலாம்.

இவர் பிறந்த நேரத்தில் கிரகங்கள் அனைத்தும் ஒரு ‘ஸ்பைரல் காலக்ஸி’ போல பரந்து விரிந்து அமர்ந்துள்ளன.

இந்த ஜாதகத்தில் எந்த கிரகமும் அஸ்தங்கதம் அடையவில்லை என்பதோடு எந்தக் கிரகமும் பகை, நீசத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (ராகு கேதுக்களின் நிலை வேறு.)

சூரியனுக்கு ரிஷபம் பகைவீடுதான் என்றாலும் அவர் அங்கே பலம் பெற்ற லக்னாதிபதியுடன் இணைந்திருப்பதால் தோஷம் நீங்குகிறது.

முக்கியமாக ராஜ லக்னங்கள் எனப்படும் சர லக்னங்களில் முதன்மை சர ராசியான கடக லக்னத்தில் இந்த ஜாதகர் பிறந்திருக்கிறார்.

சர ராசிகளான மேஷம் கடகம் துலாம் மகரம் ஆகிய நான்கில் கடகத்திற்கு மட்டும் என்ன தனிச் சிறப்பு என்று கேட்பீர்களே ஆனால் மற்ற மூன்று ராசிகளின் அதிபதிகளும் இரு ஆதிபத்தியம் பெற்று இன்னொரு கெட்ட வீட்டிற்கும் அதிபதி ஆகும் நிலையில் சந்திரன் மட்டும் தூய லக்னாதிபதி எனும் நிலையை மட்டும் அடைவதால் சர ராசிகளில் கடகம் மட்டும் தனித்துவம் பெற்றது மற்றும் உயர்வானது என்பது ஒரு சூட்சுமம்.

இந்த ஜாதகத்தில் அமைந்துள்ள முக்கியமான யோகங்கள் என்னவென்று பார்த்தால்....

1. லக்ன மற்றும் லக்னாதிபதி வலு யோகம்

2. தர்மகர்மாதிபதி யோகம்

3. கிரகங்களின் சஷ்டாஷ்டக யோகம்

4. நட்புக் கிரகங்களின் பார்வை பலன் யோகம்

5. கஜகேசரி யோகம்

6. பங்கமடைந்த சச யோகம்

7. ருசக யோகம்

8. ஜெயமினி மகரிஷி சித்தாந்தப்படி பதா லக்னத்திற்கு 3,6,8,12 ல் 

     பாவக்கிரகங்கள் அமைந்த யோகம்.

9. வீடு கொடுத்தவர்களின் வலிமை யோகம்

இவை தவிர்த்து அமலா யோகம், கமலா யோகம், குஷ்பு யோகம், சிம்ரன் யோகம் என்று பழைய கிரந்தங்களின்படி சில ஜோதிடர்கள் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

என்னுடைய அனுபவ எழுத்துக்களைப் படிப்பவர்கள் ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

நமது மூல நூல்களிலும் அவற்றின் விளக்க நூல்களிலும் சொல்லப் பட்டிருக்கும் ஏராளமான யோகங்கள் சில தனி மனிதர்களின் ஜாதகங்களில் மட்டுமே இருந்த சில அமைப்புகள் மட்டும் தான். அந்த யோகங்களில் பல அதே நிலைகளில் இன்னொரு மனிதனுக்கு அமையப் போவதே இல்லை.

ஆகவே அந்த யோகம், இந்த யோகம் என்று மனக்கோட்டை கட்டுவதை விட்டு விட்டு அனைவருக்கும் பொருந்தி வரும்படியான முக்கியமான சில அமைப்புகளை மட்டும் ஒருவருடைய ஜாதகத்தில் கவனித்தாலே போதுமானது.

இனி மேலே சொன்ன யோகங்களை விரிவாக விளக்குகிறேன்....



லக்ன மற்றும் லக்னாதிபதி வலு யோகம்.

எந்த ஒரு ஜாதகத்திலும் யோகங்களை எடுத்துச் செய்ய அதாவது ஜாதகரை வழி நடத்த லக்னமோ, லக்னாதிபதியோ வலுவான நிலையில் இருக்க வேண்டும். லக்னாதிபதி பாவக்கிரகமாயிருந்தால் சூட்சும வலுப்பெற வேண்டும். லக்ன நாயகன் வலுவிழந்தால் ஜாதகத்தில் இருக்கும் எந்த யோகமும் வேலை செய்யாது.

இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் வளர்பிறை மதியாகி சுபர் எனும் நிலை பெற்று மூலத்திரிகோண பலத்துடன் தனக்கு ஒளி வழங்கும் நாயகன் சூரியனுடன் அமாவாசை யோகத்தில் இணைந்துள்ளார்.

அமாவாசை யோகம் முழுமை பெற சூரிய சந்திரர்கள் இருவரில் ஒருவர் கண்டிப்பாக வலுவாக இருக்க வேண்டும் என்ற விதியும் இங்கே பொருந்துகிறது.

அதோடு இந்த ஜாதகத்தின் யோகாதிபதியும் தனது நண்பரும் உச்சபலம் பெற்றிருப்பவருமான செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். லக்னாதிபதி அமர்ந்த சாரநாதன் வலுப்பெறுவது வெகு சிறப்பு.

மேலும் எந்த ஒரு யோக ஜாதகத்திலும் லக்னத்திற்கோ லக்னாதிபதிக்கோ குறைந்த பட்சம் ராசிக்கோ இயற்கைச் சுபர்களின் பார்வையோ அல்லது லக்ன சுபர்களின் பார்வையோ இருந்தே தீரும்.

அந்த வகையில் இங்கே லக்னத்தையும் லக்னாதிபதியான சந்திரனையும் இயற்கைச் சுபரும் பாக்யாதிபதியுமான குருபகவான் வலுப் பெற்றுப் பார்க்கிறார். மேலும் கடகத்தின் பூரண யோகாதிபதி செவ்வாயும் உச்சம் பெற்ற நிலையில் லக்னத்தைப் பார்த்து வலுவூட்டுகிறார்.

நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருப்பதைப் போல கடக லக்னத்தைப் பொறுத்தவரையில் குருவின் மூலத்திரிகோண ஸ்தானமான தனுசு ஆறாமிடம் ஆவதால் இந்த லக்னத்திற்கு குருபகவான் பாவி எனும் நிலைதான் பெறுவார்.

ஆனால் இந்த ஜாதகத்தில் குருபகவான் தன் ஆறாமிடத்திற்கு பனிரெண்டில் மறைந்து சுபத்துவம் பெறுவதாலும், இயற்கைச் சுபர்கள் திரிகோண ஸ்தானத்தில் மிக வலுவான நிலையை அடைவார்கள் என்பதாலும் இங்கே குருவின் பார்வை இன்னும் சுப பலம் பெற்றது.

மேலும் லக்ன பாவரும் அஷ்டமாதிபதியுமான சனியின் பார்வையும் லக்னத்திற்கு இருந்தாலும் அவர் உச்ச பங்கம் பெற்ற நிலையில் நீச நிலையை அடைந்ததால் அவர் பார்வை முற்றிலும் வலிமை இழந்தது.

மீதி யோகங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்...... 

பாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்...?



எந்த ஒரு ஜாதகத்திலும், இயற்கைப் பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது (சூரியன் அரைப் பாவர்தான். முழுமையான பாபக் கிரகம் அல்ல.) நேர்வலுவிழந்து, கெட்டு ஸ்தானபலம் இழந்திருந்தால்தான் அந்த கிரகங்கள் லக்ன யோகராகவே இருந்தால் கூட  அந்த ஜாதகர் ராஜயோகம் அனுபவிக்க இயலும்.
எனினும் சூட்சும விதியாக அந்த பாபக்கோள் வேறு வகையில் பலம் (சூட்சும வலு) பெற்றிருக்க வேண்டும். 

இயற்கைப் பாபக் கிரகம் என்று ஒரு கிரகத்தை எதற்காகச் சொல்கிறோம்? அதன் காரகத்துவங்கள் (செயல்பாடுகள்) கடுமையானதாக, மனிதனுக்கு துன்பம் விளைவிப்பதாக, கெட்டதாக இருப்பதினால்தான்.

உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் சனி பலம் பெற்று அவரது தசை நடைபெறுமானால் அந்த நபர் உடல் உழைப்பை பிரதானமாக கொண்டுள்ள கடினமான தொழில்களில் உடலை வருத்தி சம்பாதிப்பவராக இருப்பார் (மெக்கானிக், மூட்டை தூக்குபவர், கூலித் தொழிலாளிகள், ஆலை உழைப்பாளிகள், கீழ்நிலைப் பணியாளர் போன்றவை)

அப்படியானால் ஒரு கோடீஸ்வரனுக்கு சனி யோகராக இருந்து அந்த சனி தசை வருமானால் அவன் உடலை வருத்தும் வேலைகளில் ஈடுபடுவானா..?

பாபக் கிரகங்கள் ஜாதகத்தில் வலுப் பெற்ற நிலையில் இருந்தாலே ஒருவன் சுகவாசியாக இருக்க முடியாது. லக்ன யோகராகவே இயற்கைப் பாவக் கிரகங்கள் அமைந்தாலும் அவை முற்றிலும் நேர்வலு பெறக் கூடாது. 

அதற்குப் பதிலாக அக்கிரகங்கள் ஒருவகையில் கெட்டு வேறு வகையில் சூட்சும வலுப்பெற வேண்டும். மறைவு பெறலாம், நீசம் பெறலாம். அதனால் ஜாதகர் சுகவாசியாக ராஜயோகங்களை அனுபவிப்பார்.

அதே நேரத்தில் இன்னொரு விளைவாக அந்த வலுவிழந்த கிரகத்தின் ஆதிபத்தியங்கள் குறைவுபடும். 

அதாவது ஜாதகர் ராஜயோகத்தினை அனுபவிக்கும் அதே வேளையில் அந்த கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியதோ அந்த ஆதிபத்தியங்கள் மூலமாக அவர் வேதனைகளை அனுபவிப்பார்.

உதாரணமாக...,

துலா லக்னத்திற்கு சனி 4, 5 க்குடையவர் என்பதால், சனி ஸ்தான பலம் இழந்து கெட்டால் ஜாதகருக்கு உயர்கல்வி இருக்காது. தாயாரால் பயன் இருக்காது. குழந்தைகள் மூலம் வேதனை வரும்.

ஆனால் சனியின் காரகத்துவங்களான கடன், ஆரோக்கிய குறைவு, உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருத்தல், கடுமையான உடல் உழைப்பு, அடிமைத்தனம், இளமையில் முதுமை, கருப்பு போன்றவை அனைத்தும் ஜாதகரை நெருங்காது.

எடுத்துக் காட்டாக கீழே உள்ள ஜாதகத்தை பாருங்கள்.

இந்த ஜாதகம் ஒரு இந்தியப் பெரும் கோடீஸ்வரருடையது. இவர் தனது குரு தசையில் சூதாட்டத் தொழிலின் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்தார். சனி தசையில் மதுபான தொழிற்சாலைகள் பக்கம் திரும்பிவிட்டார்.

ராகு
சனி
சூ,புத,
சுக்,
செவ்
குரு
சந்,
கேது
(சனி, செவ்வாய், குரு வர்கோத்தமம்)

இந்த ஜாதகத்தில் துலா லக்ன பாவியான குருபகவான் ஆறாமிடத்திற்கு உரியவராகி அதற்கு ஆறான பதினோராமிடத்தில் அமர்ந்து சுபரானார். துலாம் லக்னத்திற்கு வேறு எந்த இடத்தில் குரு அமர்ந்தாலும் சுபராக மாட்டார். 

எந்த ஒரு லக்னத்திற்கும் லக்ன பாபிகள் உபஜெய ஸ்தானமான 3,6,10,11 ல் நட்பு பெற்று அமருவதே நல்லது. கேந்திர கோணம் கூடாது. அதன்படியே பார்த்தாலும் துலா லக்னத்திற்கு குரு 3,6 ல் ஆட்சி, 10 ல் உச்சம் பெற்று வலுவாவது நல்லதல்ல. 

சாதாரண நிலையில் இருந்த இவரை குரு தசை மகா கோடீஸ்வரனாக்கியது. சனி தசையோ உச்சத்தில் கொண்டு போய் வைத்து விட்டது.

நீச சனியாக அவர் கெட்டாலும் சனி ஏழாமிடத்தில் திக்பலம் பெற்றும், சுபரான குருவின் பார்வையைப் பெற்றும் சூட்சும வலு அடைந்தார்.

துலா லக்னமாகவே இருந்தாலும் ராஜயோகாதிபதியான இயற்கைப் பாவி சனி நேர்வலுவடைந்தால் அவரது தீய காரகத்துவங்கள் தான் நடக்கும். ஜாதகர் சாதாரண வாழ்க்கைதான் வாழ்வார். 

 சனி நேர்வலு இழந்தால்தான் அந்த ஜாதகர் சுகவாசியாக இருப்பார். சனியின் கூலிவேலை, கடுமையான உடல் உழைப்பு தற்குறித்தனம், மந்தம், சோம்பல் போன்ற காரகத்துவங்கள் ஜாதகரை அணுகாது.

ஆனால் யோகாதிபதி கெட்டால் ஒருவன் எப்படி கோடீசுவரனாக ஆக முடியும்?

கெடக் கூடாது.

அதற்கு பதிலாகவே சனி திக்பலம் பெறுகிறார். குருவின் பார்வை பெறுகிறார். (துலாத்திற்கு குரு பாவியேதான். அவர் பதினோராமிடத்தை தவிர்த்து வேறு எங்கிருந்து பார்த்தாலும் கெடுதல்தான். இந்த ஜாதகத்தில் பதினோராமிடத்தில் அவர் சுபராகி வர்க்கோத்தமம் பெற்று வலுவானார்.)

சரி ...

இயற்கை பாபக் கிரகங்கள் கெட்டால் வேறு என்ன செய்யும்?

சனி கெட்டதால் அது இந்த ஜாதகரின் 4, 5 ஆம் பாவங்களையும், சனி அமர்ந்த 7 ஆம் பாவத்தையும் பாதிக்கும்.

ஜாதகர் யோகசாலியாக இருப்பார். ஆனால் 4, 5, 7 ம் பாவங்களின் மூலமாக அவர் மனவேதனைகளை அனுபவிப்பார்.

துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் சனி உச்சம் பெற்ற அனேக ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் உயரம் குறைந்தவர்களாக, பிடிவாதக் காரர்களாக, ஆலைகளில் உழைப்பாளிகளாக, அல்லது கையில் ஸ்பானரை பிடித்து வேலை செய்யும் மெக்கானிக்குகளாக, தன்னைச் சுற்றி உள்ள உலகத்தாரோடு ஒத்துப் போகாமல் வீண் சண்டையிடும் சாதாரண மானவர்களாகவே உள்ளனர்.

 உச்ச சனி தசையில் அவர்கள் சாதாரண அடிமை வாழ்வே வாழ்கின்றனர். 

இயற்கைப் பாபிகள் லக்னாதிபதியாகவே வந்தாலும் உச்சம், ஆட்சி போன்று நேர்வலுப் பெறுவது நல்லதல்ல. மறைவிடங்களில் வலுப் பெறுவது நல்லது. நேரிடையாக வலுப்பெற்றால் ஜாதகர் கொடூரமானவராக இருப்பார். அது வெளியில் தெரியும்படி நடந்து கொள்வார்.

எந்த ஒரு யோக ஜாதகத்திலும் இயற்கைப் பாவக் கிரகங்கள் கண்டிப்பாக பலவீனம் அடைந்தே பலம் பெற்றிருக்கும். அல்லது பலம் அடைந்திருந்தாலும், வேறுவகையில் பலவீனமாயிருக்கும். 

(ஆகஸ்ட் 3-9 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது

புதன், 18 பிப்ரவரி, 2015

பாபக் கிரகங்களின் சூட்சும வலு...


!

இயற்கைப் பாபக்கிரகங்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படும் சனியும், செவ்வாயும் எந்த ஒரு ஜாதகத்திலும் நேரிடையாக உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் வலுவடைவது அவர்களது தசையில் அதிர்ஷ்டத்தைத் தருவது இல்லை.

வேதஜோதிடம் சொல்லும் கிரகங்களின் ஆறுவிதமான பலங்களில் முதன்மை பலமான ஸ்தானபலத்தை பாபக்கிரகங்கள் கேந்திர கோணங்களில் அடையவே கூடாது.

அதாவது பாபக்கிரகங்களான சனியும் செவ்வாயும் ஒருவரின் ஜாதகத்தில் நேரிடையாக வலுப்பெறக் கூடாது.

லக்னாதிபதியாகவே இந்த இரு கிரகங்கள் அமைந்தாலும் அவை ஆட்சி உச்சம் என ஸ்தானபலம் பெற்று நேரிடையாக வலுப்பெறுவது நன்மைகளைத் தராது.
அதைவிட சனியும், செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் ஸ்தானபலம் இழந்து (ஆட்சி உச்சம் பெறாமல்) திக்பலமோ, சுபர்களின் பார்வை மற்றும்  சேர்க்கை பலமோ,  மறைவிடங்களில் ஸ்தானபலமோ பெறுவது மிகச்சிறந்த யோகத்தையும், ஜாதகருக்கு நல்ல குணங்களையும் தரும்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலான  எனது ஜோதிட ஆய்வில் நான் கண்டுணர்ந்த இதையே “பாபக் கிரகங்களின் சூட்சும வலுத் தியரி ” என நான் குறிப்பிடுகிறேன்.

பொதுவாக சனியும், செவ்வாயும் குணக்கேடுகளுக்கு காரணமானவர்கள். தனித்து வலிமை பெற்ற செவ்வாயால் ஒரு முரட்டுத்தனமான முன்கோபக்காரனையும், சனியால் முட்டாள்தனமான பிடிவாதக்காரனையும் மட்டுமே உருவாக்க முடியும்.

கிரகங்கள் பாபக்கிரகங்கள், சுபக்கிரகங்கள் என்று நமது ஞானிகளால் ஏன் பிரிக்கப்பட்டன?
மனித வாழ்விற்குத் தேவையான, மனிதனை நல்லவழியில் செல்ல வைக்கக் கூடிய செயல்பாடுகளைத் (காரகத்துவங்கள்) தரும் கிரங்கள் சுபக்கிரகங்கள் எனவும்,

தேவையற்ற குணங்களையும், பிறருக்கு துன்பம் தரும் செயல்களையும், அடுத்தவரோடு ஒத்துப்போகாத, தீயவழிகளைத் தரும் கிரகங்கள் பாபக் கிரகங்கள் என்றும் வகுக்கப் பட்டன.

இதில் சுபக்கிரகமானாலும், பாபக்கிரகமானாலும் முக்கிய பலமான ஸ்தானபலத்தை (ஆட்சி, உச்சம்) அடைந்தால் தங்களின் காரகத்துவங்களை (செயல்பாடுகளை) ஜாதகருக்கு முழுமையாகச் செய்வார்கள்.

இதற்கு நேரிடையான அர்த்தம் என்னவெனில்.....

குருபகவான் லக்னாதிபதியாகி ஸ்தானபலம் பெற்றால், அல்லது லக்னத்தோடு சம்பந்தப்பட்டால் ஜாதகர் கருணை, பெருந்தன்மை, ஒழுக்கம் போன்ற குணங்களோடும், புதன் வலுப்பெறின் மிகச் சிறந்த அறிவாளியாகவும், நிபுணத்துவம் உடையவராகவும், செவ்வாய் வலுப்பெற்றால், கோபக்காரனாகவும், அசட்டுத்துணிச்சல் கொண்டவனாகவும், சனியானால் பிடிவாதக்காரனாகவும் தன்னைத்தானே புத்திசாலி என நினைத்துக் கொள்ளும் முட்டாளாகவும், குறுக்குவழி எண்ணங்கள் கொண்டவராகவும் இருப்பார்.

நமது கிரந்தங்கள் அனைத்து மூல விஷயங்களையும் மறைபொருளாகவே சொல்லக் கூடியவை. ஞானிகள் நமக்கு எந்த ஒரு முக்கிய சூட்சுமத்தையும் நேரிடையாகச் சொல்வது இல்லை. சொல்லவும் மாட்டார்கள்.

ஏனெனில் அவர்கள் அந்த ரகசியங்களை நேரிடையாகவே நமக்குப் போதித்தாலும் அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் தகுதியும் நமக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான்.

எனவேதான் நமது மூலநூல்களில் காணப்படும் உயர்ந்த கருத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும் பின்னால் சொல்லப்படாத உன்னதங்கள் மறைந்திருக்கின்றன. 

அவற்றைப் புரிந்து கொள்ளத் தகுதிநிலை வரும்போது மட்டுமே புரிந்து கொள்ளும்படி ஜோதிட சூட்சுமங்களை ஞானிகள் அமைத்திருக்கிறார்கள் என்று நான் அடிக்கடி எழுதி வருகிறேன்.

அனைத்து சூட்சுமங்களும் நமது ஜோதிட சாஸ்திரத்தில் மறைபொருளாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.

இயற்கைச் சுபக்கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் வலுப்பெற வேண்டும் என்று சொல்லப்படும்போது, இயற்கைப் பாபக் கிரகங்கள் வலுவடையக் கூடாது என்ற தத்துவம் அங்கே மறைந்திருக்கிறது.

இயற்கைச் சுபக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாக அமையக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கைப் பாபக்கிரகங்கள் திரிகோணங்களுக்கு அதிபதியாக வரக்கூடாது என்ற எதிர்பொருள் ஒளிந்து கொண்டு இருக்கிறது. இதுவே பாதகாதிபதிகள் பற்றிய சூட்சுமம், பாதகாதிபதிகளின் தத்துவம் என்பதையும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

இந்த ஆண்டு கோட்சார ரீதியாக சனிபகவான் துலாம் ராசியில் உச்சம் அடைந்திருக்கிறார். இதைப் பற்றி குறிப்பிடும் போது ஒரு சிலர் சனிபகவான் உச்சம் பெறுவது மிகச்சிறந்த யோகம் என்று எழுதுகிறார்கள்.

ஏறத்தாழ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதகங்களை அலசிய என்னுடைய நீண்ட ஜோதிட ஆய்வில் சனி, செவ்வாய் உச்சம் பெற்ற எந்த ஒரு ஜாதகருமே அவர்களுடைய தசையில் மேன்மையான பலன்களை அடைந்தது இல்லை.

சனி உச்சபங்கம் அடைந்திருந்தாலோ, அல்லது குருவின் பார்வையையோ, சுபர்களின் தொடர்பையோ பெற்றிருந்தாலோ அல்லது வேறுவழிகளில் சூட்சும வலு அடைந்திருந்தால் மட்டுமே சுக வாழ்வை அளிப்பார். செவ்வாயும் அப்படித்தான்.

மற்ற சுபக்கிரகங்களைப் போல தனித்து அதிர்ஷ்டம் தரும் வல்லமை பாபக்கிரகங்களான சனிக்கும், செவ்வாய்க்கும் கிடையாது.

துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் தனித்து உச்சம் பெற்று சுபர் பார்வையோ,தொடர்பையோ பெறாத சனி, சாதாரண அடிமை வாழ்வையே அளிப்பார். உச்சம் பெற்ற சனிதசையில் ஏதாவது ஒரு ஆலையில் ஐந்தாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இரும்பு ஸ்பானரை கொண்டு கனரக இயந்திரங்களை முடுக்கிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஜாதகர்களை நான் பார்த்திருக்கிறேன்.

லக்னத்தோடு சம்பந்தப்பட்டு வலிமை பெறும் சனி, உயரம் குறைந்த தன்மையையும், பிடிவாத குணத்தையும், சுற்றி உள்ளவர்களோடு ஒத்துப் போகாமல் குதர்க்கவாதம் பேசுபவர்களையும், ஒன்றுமில்லாத தன்னைப் பற்றி பெரிதாக நினைப்பவர்களையும், அதிர்ஷ்டக் குறைவானவர்களையுமே உருவாக்குவார்.

அதேபோல செவ்வாய் உச்ச பலமோ, ஆட்சி பலமோ பெற்று லக்னத்தோடு சம்பந்தப்பட்டால் அந்த நபர் வீரம் என்ற பெயரில் குற்றச்செயல்களை செய்பவராக இருப்பார். ஆயுதங்களை கையாள்வதில் விருப்பம் உள்ளவராகவும், முன்யோசனையில்லாமல் அசட்டுத் துணிச்சலுடன் கூடிய செயல்களைச் செய்பவராகவும், கடுமையான கோபக்காரனாகவும், முரடனாகவும் இருப்பார்.

உச்சபங்கம், மறைவு பெறுதல், அல்லது சுபர் பார்வை ஆகியவை மட்டுமே இந்த குணங்களை மாற்றும்.

உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களுமே நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் கிரகங்களை சுபர், அசுபர்கள் எனப் பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...!

தென்மாவட்டங்களைப் பற்றிய ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் கதாநாயகன் சரத்குமாரிடம் ஒரு வசனம் பேசுவார் “ நீ வெட்டுறதுக்கு முன்னால யோசிப்ப... நான் வெட்டுனதுக்கு அப்புறம்தான் யோசிப்பேன்” என்று.....

இந்த வில்லன்தான் நிஜமான செவ்வாய்...!

ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று நேர்வலிமை பெறுகிறது என்றால் அதன் செயல்பாடுகள் அதாவது  அந்தக் கிரகத்தின் காரகத்துவங்கள் வலிமை பெறுகின்றன என்று அர்த்தம்...

அந்த நிலையில் எந்த வித சுபகாரகத்துவங்களும் இல்லாமல் வெறுமனே வறுமை, பிணி, தரித்திரம், கடன், அடிமைவேலை, உடல் ஊனம் ஆகியவற்றை மட்டுமே தன் குணங்களாகக் கொண்ட சனிபகவான் வலுப்பெற்றால் உங்களுக்கு எதைத் தருவார்? அதைப்போலத்தானே செவ்வாயும்?

(சனியிடம் ஆயுள் பலம் இருக்கிறதே என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். அதுவும் தவறுதான். அதைப் பற்றிய விளக்கத்தை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். இங்கே அதை ஆரம்பித்தால் இந்தக் கட்டுரை இன்னும் நீளமாகும்.)

செவ்வாய் தனித்து வலிமை பெறும் நிலையில் அவரின் செயல்பாடுகளான முரட்டுத்தனம், ஆயுதங்களை கையாளுவதில் விருப்பம், வன்முறையில் நாட்டம், அடிமனதில் ரத்தம் பார்க்கும் ஆசை, அசட்டுத்துணிச்சல், இரக்கமற்ற அதிகாரம், கடினமனம், விவேகமற்ற வீரம், முன்யோசனையின்றி எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளுதல் போன்றவைகளே ஜாதகரிடம் இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு பத்தாமிடமான மகரத்தில் உச்சபலமும், திக்பலமும் அடைந்து எவ்வித சுபர்பார்வையும் சேர்க்கையும், இல்லாமல் தனித்திருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகர் கொடூரமனம் உள்ளவராக இருப்பார். கண்டிப்பு எனும் பெயரில் மூர்க்கத்தனம் இருக்கும். கருணையும், மனிதநேயக் குணங்களும் துளியும் இருக்க வாய்ப்பின்றி மகா கோபக்காரராக ஜாதகர் இருப்பார்.

செவ்வாய் வக்ரமடைந்து, வேறு வகையில் பலவீனம் அடைந்திருந்தால் மட்டுமே இந்த பலன்கள் மாறும்.

நமது ஜோதிட மூலநூல்கள் செவ்வாய் வலுப்பெற்றவனை சேனாதிபதி, மகாவீரன், யுத்தத்தில் எதிரிகளின் தலைகளை பந்தாடுபவன், கரடு முரடானவன், அதிகாரம் செய்பவன் என்றுதான் சொல்கின்றனவே தவிர, இவன் நல்லவன், இளகிய மனம் உடையவன், வசதி படைத்தவன், சொகுசு வாழ்க்கை வாழ்பவன், அன்பே வடிவானவன் என்று சொல்லவே இல்லையே...!

சனி ஸ்தானபலம் மட்டுமே பெற்று தனித்து உச்சம், ஆட்சியாக இருக்கும் நிலையில் மிகக் கொடுமையான பலன்களைச் செய்வார். அவரின் காரகத்துவங்களான வறுமை, தரித்திரம், நோய், அடிமை நிலை, கடன், உடல் ஊனம், அழுக்கான இடங்களில் வேலை, கருப்பு, இளமையில் முதுமை போன்ற பலன்களை ஜாதகருக்கு மிக வலுவாகத் தருவார்.

உச்சநிலையில் வக்ரம் பெறுவது, சுபர் சேர்க்கை, பார்வை போன்றவை மட்டுமே சனியின் மேற்கண்ட பலன்களை மாற்றும்.

உச்சத்தில் வக்ரம் என்பது நீச நிலையைக் குறிக்கும் என்பதால் சனியின் கொடிய பலன்கள் எதுவுமே இல்லாமல் அதற்கு நேர்மாறான நல்ல பலன்கள் இருக்கும்.

மேஷத்தில் நீசம் பெறும் சனி சுபர் சம்பந்தம் பெற்றால் மிகச் சிறந்த சொகுசு வாழ்க்கையை அளிப்பார். எவ்வித சுப சம்பந்தமின்றி தனித்து நீசம் பெற்றால் கூட தனது கொடிய காரகத்துவங்களை தரும் சக்தியின்றி அதற்கு நேர்மாறான கடனற்ற, வறுமையற்ற, நோயில்லாத வாழ்க்கையை சனி அளிப்பார்.

சரி..

சனியும் செவ்வாயும் ஆட்சி உச்சம் பெறுவது எதற்காக? அவர்கள் ஸ்தான பலம் மட்டும் பெற்றால் நல்ல பலன்களே இல்லையா என்று நீங்கள் கேட்பீர்களேயானால், ஜாதகத்தில் அவர்களுடைய ஆதிபத்திய இடங்கள் நிச்சயம் வலிமை பெறும்.

அவர்களுடைய தசையில் அவர்களுடைய கொடிய காரகத்துவங்கள் நடைபெறும் என்றாலும், ஜாதகரின் எந்த ஆதிபத்தியங்களுக்கு அவர்கள் உரியவர்களோ அந்த இடங்கள் மேம்படும்.

உதாரணமாக மேஷ லக்னத்திற்கு பத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் தசையில் நல்ல பலன்கள் கிடைக்காவிட்டாலும், அவர் லக்ன அஷ்டமாதிபதி என்பதால் உறுதியான உடலும்,  நீடித்த ஆயுளும் இருக்கும். தனித்த செவ்வாய் தசையில் அதிர்ஷ்டங்கள் எதுவும் நடக்காது. ஜாதகர் உடற்பயிற்சியில் விருப்பமாகி உடலைப் பேணுவதும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுபவராகவும் இருப்பார்.

அதுபோலவே துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்ற சனி தசையில் ஜாதகர் அதிர்ஷ்டங்களை அடைய மாட்டார். சனி 4, 5 ஆம் இடங்களுக்கு உரியவர் என்பதால் ஜாதகரின் சனி தசையில் அவரின் மக்கள் நன்றாக இருப்பார்கள். புத்திரர்கள் மூலமும், கல்வி, தாயார் வழியிலும் ஜாதகருக்கு நல்ல பலன்கள் இருக்கும். அவ்வளவே...!

இன்னுமொரு முக்கிய சூட்சுமமாக ஒரு ஜாதகத்தில் பாபக்கிரகங்கள் பலம் பெறுவது அந்த ஜாதகருக்கு எவ்வாறு நன்மை செய்யும் என்றால், நமது ஜோதிட விதிகளின்படி ஒரு தசை நன்மையான பலன்களைத் தர வேண்டும் எனில் அந்த தசாநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் வலிமை அடைய வேண்டும் என்பது முக்கியமானது. 

அதன்படி சனி, செவ்வாயின் ராசிகளான மேஷம், விருச்சிகம், மகர, கும்பங்களில் அமர்ந்து தசை நடத்தும் ஒரு கிரகம் பூரணபலன் தர வேண்டும் என்றால் அந்தக் கிரகத்திற்கு வீடு கொடுத்த சனியும், செவ்வாயும் வலுப் பெற வேண்டும்.

உதாரணமாக  ராகு சில நேரங்களில் சர ராசிகளில் (மேஷம், மகரம்) மூன்று, பதினொன்றாமிடங்களில் இருக்கும் போது, ராகுதசை மறைமுகமான வழிகளில் மிகப் பெரிய பணவரவை அளிப்பதற்காக ராகு இருக்கும் வீட்டின் அதிபதிகள் வலுப்பெற வேண்டும் என்ற நிலையில் சனியும், செவ்வாயும், உச்ச வலுப்பெற்றே ஆக வேண்டும்.

அந்த நிலையில் கூட எனது தியரிப்படி அந்த ஜாதகத்தில் அவர்கள் எட்டு, பனிரெண்டாமிடங்களில் மறைந்துதான் உச்சம் பெறுவார்கள். அப்போதுதான் ராகுதசை முழுக்க மறைமுக நன்மை செய்யும்.

இந்த அமைப்பை நான் அரசியல்வாதிகள் அல்லது அவர்களை அண்டிப் பிழைப்போரின் ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன்.

அதாவது விருச்சிக லக்னத்திற்கு மூன்றாமிடமான மகரத்தில் (சர ராசி) ராகு அமர்ந்து ராகுவுக்கு வீடு கொடுத்த ராசிநாதன் சனி அவருக்கு கேந்திர ஸ்தானத்தில், அதாவது இன்னொரு சர ராசியான துலாத்தில் லக்னத்திற்கு பனிரெண்டில் மறைந்து உச்சம் பெற்றும்,

மிதுன லக்னத்திற்கு பதினொன்றான சரராசி மேஷத்தில் ராகு இருந்து, அவருக்கு இடமளித்த செவ்வாய், அவருக்கு கேந்திரமான மகரத்தில் எட்டில் மறைந்து உச்சம் பெறும் நிலையில் ராகுதசை மறைமுகமான மகா தனயோகத்தை அளிக்கும்.

இந்நிலையில் ராகு விருச்சிகத்திற்கு பாக்கியாதிபதியான சந்திரனின் சாரமும், மிதுன லக்னத்திற்கு ஐந்துக்குடைய சுக்கிரனின் சாரமும் பெற்றிருப்பார். ராகு யோகம் தரும் இடங்களாக நம் மூலநூல்களில்  சொல்லப்படும் ஆமேடம், எருது, சுறா, நண்டு, கன்னியும், 3, 11 ம் ஸ்தானங்களும் இதில் அடங்கும்.  

சனி, செவ்வாயின் உச்ச நிலைகள் இது போன்ற நிலைகளுக்குத்தான் பயன்படுமே தவிர அவர்கள் நேரிடையாக அதிர்ஷ்டம் தருவதற்கு அல்ல.   

புதன், 11 பிப்ரவரி, 2015

ராசிக்கற்களா? ராசிக்குக் கற்களா


?


தனது ராசிக்கேற்ற ராசிக்கற்களை மோதிரமாக அணிந்து கொள்வது ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளோரிடம் தற்போது வேகமாக பரவி வருகிறது.

காட்சி ஊடகங்களில் ஜோதிடர்களும், ஜோதிட(!) ஜுவல்லரிகாரர்களும் உங்கள் ராசி அதுவா? இந்தக் கல்லை மோதிரமாக அணியுங்கள்.. அந்த ராசியா?இந்தக் கல்தான் சரி, உங்களுக்கு புதன்தசை நடக்கிறதா? மரகதப்பச்சை மோதிரம் அணியுங்கள்.. குருதசையா? புஷ்பராகம் அணியுங்கள் என்று நீண்ட உரைகளை வாசித்து பொதுமக்களை ஊக்குவிக்கின்றனர்.

சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் “ஜோதிடகலாரத்னா” ஜுவல்லரி ஜோதிடர் ஒருவர் ‘சிம்மத்தில் இருக்கும் சூரியனைப் புதன் பார்த்தால் அவர் அரசாங்கத்தில் எழுத்தர் வேலையில் இருப்பார்’ என்று பலன் வாசித்துக் கொண்டிருந்தார்...!

நேரடி ஊடகங்கள் வந்தபின் இதுபோல இருக்கிறது ஜோதிடத்தின் நிலைமை....!

சரி...

தனது ராசிக்கேற்ற கல்லை மோதிரமாக அணிவது சரிதானா? நடக்கும் தசையின் படியும் ராசி மோதிரம் அணியலாமா? போட்டவுடனே அது நல்ல பலனைத் தந்து விடுமா?

ஜோதிட சாஸ்திரத்தில் நமது ஞானிகளும், மேதைகளும் இப்படித்தான் நவரத்தினங்களை உபயோகப்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறார்களா என்று யோசித்தால் நமக்கு மயக்கமே வந்து  விடும்.

ஜோதிட சாஸ்திரம் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்னங்கள் என்ன?

சூரியனுக்குமாணிக்கம்
சந்திரனுக்குமுத்து
செவ்வாய்க்குபவளம்
புதனுக்குமரகதம்
குருவிற்குபுஷ்பராகம்
சுக்கிரனுக்குவைரம்
சனிக்குநீலம்
ராகுவிற்குகோமேதகம்
கேதுவிற்கு
வைடூரியம்

ஆகியவைதான். 

இதில் ராசிப்படி மேற்கண்ட கிரகங்களுக்கான கற்களை ஒருவர் அணிவதாக வைத்துக் கொண்டால், தனக்கு கெடுதல் செய்யும் அஷ்டமாதிபதியை ராசிநாதனாக கொண்டவர் ராசிப்படி கல் அணியலாமா?

உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுனராசியில் பிறந்தவர் மரகதப் பச்சையை மோதிரமாகக் கொள்ளலாமா? கன்னி லக்னம் மேஷராசியில் பிறந்த ஒருவர் பவளத்தை அணியலாமா?

என்னிடம் ஒருவர் வந்தார். சுயமாக உழைத்து முன்னேறி கோடீசுவரராக ஆனவர். அவருக்கு கடக லக்னம். எட்டில் சனி. சனிதசை ஆரம்பித்த நான்கு வருடங்களில் தொழிலில் பெரும் சரிவு. மனைவி, குழந்தைகள் பிரிந்து போய் விட்டனர். அடிமேல் அடி. கையில் நீலக்கல் வைத்து மோதிரம் போட்டிருந்தார். 

“எதற்காக நீலக்கல்?” என்றதற்கு சனிதசையும் நன்மை செய்வதற்காக ஜுவல்லரிகாரர் போடச் சொன்னார் என்றார்.

எனக்கு குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்தது என்பதோடு அதே குதிரை மண்ணையும் போட்டு மூடியது என்றுதான் தோன்றியது.

அஷ்டமாதிபதியின் கல்லை அணியக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இன்று அறிவுரை சொல்பவர்களிடம் இல்லை.

நவரத்தினங்களில் எதை அணியலாம்? எதை அணியக் கூடாது?

நமது மேலான ஜோதிட சாஸ்திரம் இதைப்பற்றி தெளிவாகச் சொல்வது என்ன?
  • ராசிப்படி ஒருவர் ராசிக்கல் அணிவது முற்றிலும் தவறு.ராசிநாதன் அவரது லக்னப்படி பாதகாதிபதியாகவோ, ஜாதகருக்கு லக்னப்படி தீமை செய்யும் பகைக்கிரகமாகவோ இருந்தால் கற்கள் அணிந்தவுடன் கெடுதல்கள் நடக்கும். சிலர் இந்த மோதிரம் போட்டதிலிருந்து எனக்கு தலை வலிக்கிறது. அன்றே வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டேன் என்று சொல்லுவது இதனால்தான்.
  • ஒருவரின் பிறந்த ஜாதகம் ஒரு முழுமையான ஜோதிடரால் தீர்க்கமாக ஆராயப்பட்டு லக்னமோ, லக்னாதிபதியோ பலவீனம் அடைந்திருந்தால் லக்னாதிபதியை வலுவாக்கும் விதமாக அந்தக் கிரகத்தின் வலுவைக் கூட்டும் விதமாக லக்னாதிபதியின் ரத்தினத்தை வாழ்நாள் முழுவதும் வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும்.
  • (நமது ஞானிகள் ராசிக்கல் அணியச் சொன்னதன் நோக்கம், அதன் உண்மையான தத்துவம் இதுதான். ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு ராசிக்கல் வியாபாரிகளுக்கு ஏது நேரம்..? சுருக்கமான வழி உன் ராசியைச் சொல்.. நான் கல்லைத் தருகிறேன் என்றாகி விட்டது. தொலைக்காட்சி போன்ற நேரடி ஊடகங்களின் வருகையும் இதற்கு வசதியாகி விட்டது.)
  • லக்னாதிபதிக்கு ஆறு, எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால் லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத்திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்க வேண்டும்
  • ஒருவருக்கு நன்மை தரும் கிரகம் பலவீனம் அடைந்து (5,9 போன்ற யோகாதிபதிகள்) அவர்களுடைய தசையும் நடக்குமானால் அந்தக்கிரகத்தின் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள அந்தக் கிரகத்திற்குரிய ரத்தினத்தை வலதுகை ஆட்காட்டி விரலில் அணியலாம்.
  • தீமை தரும் கிரகத்தின் ராசிக்கல்லை எந்தக் காரணம் கொண்டும் அணியக்கூடாது. ராசிக்கல் என்பது ஒரு கிரகத்தின் வலிமையை அதிகப்படுத்துவதற்காக மட்டுமே. கெடுதல் செய்ய விதிக்கப்பட்ட கிரகக் கல்லை அணிந்தால் அந்தக் கிரகத்தின் வலிமை அதிகமாகி இன்னும் அதிகமான தீமைகளைச் செய்யும். கல்லை அணிவதால் கெட்டகிரகம் நன்மை செய்யும் என்பது தவறு.
  • அதேபோல நவரத்னங்கள் ஒன்பதுதான். ஆனால் அவற்றுள் ஏராளமான வகைகள் உள்ளன. உதாரணமாக புஷ்பராகத்தில் பத்மபுஷ்பராகம், நீலத்தில் இந்திர நீலம் என நிறைய வகைகள் உண்டு. ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் மட்டுமே இவர் நீலம் அணியலாமா அல்லது இந்திரநீலம் வேண்டுமா என துல்லியமாக கணிக்க முடியும்.
  • 6,8க்குடையவர்களின் ராசிக்கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. பாதகாதிபதியின் ராசிக்கல்லும் அப்படியே... (பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும்அணியக் கூடாது)
  • ராகுகேதுக்களின் தசை நடக்கும் போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி லக்னசுபராகி அவர் வலிமை குறைந்திருந்தால், அந்த ராகு,கேதுக்கள் இருக்கும் ராசிக்கு அதிபதியின் கல்லை அணியலாம்.
  • ராகு,கேதுக்கள் 3,11ல் இருந்தால் மட்டுமே அவர்களின் ராசிக்கற்களை இடது கையில் அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.
  • கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற அதாவது கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்ற குருவும், புதனும் எந்த பாபர் பார்வையும், சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும் நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. (லக்னம் கேந்திரத்திற்கும், திரிகோணத்திற்கும் பொதுவானது. லக்னத்தில் இவர்கள் இருந்தால் தோஷம் இல்லை.)
  • மிதுன, கன்னி, ரிஷபம், துலாம், மகரம், கும்பம்லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணிய வேண்டும். கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்சலோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்னக்காரர்கள் பஞ்சலோகம் மற்றும் தங்கத்தில் அணியலாம்.
சில அனுபவமற்ற ஜோதிடர்கள் ஒரே மோதிரத்தில் ராகுவிற்குரிய கோமேதகம் மற்றும் கேதுவிற்குரிய வைடூரியத்தையும் சேர்த்து அணியச் சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

ராகுவும் கேதுவும் வடதுருவம் தென்துருவம் போன்றவை. ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் நேர்எதிராகச் சுற்றி வருபவை. ராகுகேதுக்களில் ஒன்று நன்மை தரும் அமைப்பில் இருந்தால் இன்னொன்று அதற்கு எதிரான நிலையில் இருக்கும். ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோதான் தோஷம் தரும். இரண்டும் சேர்ந்து அல்ல. இணையவே முடியாத இரு துருவங்களை அருகருகே வைத்து இணைத்து ஒரே மோதிரத்தில் அணிவது மகாதோஷம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது.

ரத்தினங்களை கடையில் வாங்கி அப்படியே அணியக் கூடாது.

அவைகளை அணியப் போகிறவரின் பெயர், ராசி, நட்சத்திரப்படியும் என்ன நோக்கத்திற்காக அவர் அணியப் போகிறாரோ அதன்படியும் உச்சாடனம் செய்து உருவேற்றிய பின்பே அது மோதிரமாக அணியப்பட வேண்டும். குறைந்தது ஒரு லட்சத்து எட்டு முறை உச்சாடனம் செய்வது நல்லது. 

கற்களுக்குள் தெய்வசக்தியைப் புகுத்தி அவற்றைத் தெய்வங்களாக மாற்றி நாம் வணங்கி அருள் பெறும்உன்னத முறைகளைக் கொண்ட மேலான மதம் நமது இந்துமதம். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நமது புனிதத் திருக்கோவில்களின் வெளியே வாசலில் படிகளாக பதிக்கப்பட்டிருக்கும் கற்களும், உள்ளே இருக்கும் நமது தெய்வங்களும் ஒரே கல்லில் செய்யப்பட்டவைதான். இன்னும் சொல்லப்போனால் வாசல்படிக்கல்லும் தெய்வச்சிலையும் ஒரே பாறையில் இருந்து செதுக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம்.

ஆனால் நாம் தெய்வங்களாக வணங்கும் நமது சிலைகள் அனைத்தும் அந்த தெய்வங்களின் பெயர், ராசி, நட்சத்திரங்களின்படி ஒரு கோடியே எட்டு தடவைகளுக்கும் மேலாக மந்திர உச்சாடனம் செய்துஉருவேற்றப்பட்டு, பலப்பல ஆகமமுறைகளின்படி சக்தியூட்டப்பட்ட பின்னரே பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

அதன் பிறகும் இந்தியாவின் புனித நதிகள் அனைத்திலிருந்தும் நீர் கொண்டு வரப்பட்டு அபிஷேகம், கைபடாத நீரான இளநீர், பசுவின் பஞ்சகாவ்யம் போன்றவைகளாலும் புனிதப்படுத்தப்பட்டு, நிறைவாக மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்ட பிறகே முழுசக்தி அடைந்து நமக்கு அருள்புரிகின்றன.

அதைப்போலவே ராசிக்கற்களும் முறைப்படி வலிமைப் படுத்தப்பட்டால்தான் நமக்கு பூரண நன்மை செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...