சனி, 7 மார்ச், 2015

தேனுபுரீஸ்வரர் கோவில், பட்டீச்சரம்



தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பட்டீச்சரம் (தற்போது பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்தேனுபுரீஸ்வரர்
இறைவி பெயர்ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீபல்வளைநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவதுகும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மி. தொலைவில் பட்டீஸ்வரம் இருக்கிறது. சுவாமிமலை முருகன் கோவிலில் இருந்து 3 கி.மி. தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் ஆலயத்திற்கு அருகில் திருசத்திமுற்றம்என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை யடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்
பட்டீஸ்வரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612703

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் எனபட்டது. திருமலைராயனாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்திலுள்ள சிவாலயம் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிரகாரங்களும் உடையது. பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன. கோவிலின் முதல் பிரகாரத்தில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சந்நிதி இருக்கிறது. வெளியில் சோமச்கந்தரும், சுற்றிலும் சப்த கன்னிகைகள், மகாலிங்கம், இராமலிங்கம், லக்ஷ்மி, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள் முதலானோர் சந்நிதிகள் உள்ளன. வடபுறத்தில் அம்மன் ஞானாம்பிகை சந்நிதி இருக்கிறது. அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது. இம்மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் மேலே கல்லாலான ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லாலான சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலையம்சம் பொருந்திய பல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.
தலத்தின் மற்ற சிறப்புகள்: 
  • பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம்.
  • விசுவாமித்திர முனிவர் காயத்திரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது.
  • வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.
  • மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான்.
  • இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியேயுள்ளன. திருவலஞ்சுழி, பழையாறை மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய தலங்களிலுள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து அதன் குடை நிழலில் சம்பந்தர் தன்னை தரிசிக்க வரும்போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியெம் பெருமானை விலகி இருக்கச் சொல்லி அருளிய சிறப்புடையது.
  • வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர். துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள்.காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது.அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.
கோவில் திருவிழாக்கள்: 
  • விசாக விழா: வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் காலையில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் ஊர்வலமாகப் புறப்பட்டு திருமலைராஜன் ஆற்றிற்குச் சென்று தீர்த்தங் கொடுத்து அங்கிருந்து இரவில் மூர்த்திகள் விமானங்களில் புறப்பட்டுக் காட்சி கொடுத்து ஆலயத்திற்கு வந்து சேரும்.
  • முத்துப் பந்தல் விழா: ஆனி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும். இத்தலத்தின் சிறப்புவிழா இதுவேயாகும்.
  • மார்கழி விழா: மார்கழி அமாவாசை நாளில் பஞ்ச மூர்த்திகள் பல வாகனங்களில் புறப்பட்டு வீதிவலம் வந்து கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும். இராமருக்கு ஏற்பட்ட சாயஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஐதீகத்தின் காரணமாக இவ்விழா நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் முதல் பாடலில் "மாட மழபாடியுறை பட்டிசர மேயகடி கட்டர வினார்" என்று குறிப்பிட்டதால் இத்தலத்திற்குப் பண்டைநாளில் மழபாடி என்ற பெயர் இருந்ததாகத் தெரிகின்றது.சம்பந்தர் இப்பாடலில் இவ்வாலயத்து இறைவனை நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில், மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில், திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் என்று குறிப்பிடுகிறார்..
பாடன்மறை சூடன்மதி பல்வளையோர் பாகமதில் மூன்றோர்கணையாற்
கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாட மழபாடியுறை பட்டிசர மேயகடி கட்டர வினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே.

நீரின்மலி புன்சடையர் நீளரவு கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது ஏந்தியுடை கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள் காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர மேத்தவினை பற்றழியுமே.

காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமணம் நாறுபழை யாறைமழ பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போற்பெருகி விண்ணுலகம் ஆளுமவரே.

கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட னாதலது மேவலெளிதே.

மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கஅரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை அஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை யாரையடை யாவினைகளே.

மறையின்ஒலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர்
பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல் தோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே.

பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்
துறவியெனும் உள்ளமுடை யார்கள்கொடி வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவவரே.

நேசமிகு தோள்வலவ னாகியிறை வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலின் நண்ணலெளி தாம்அமரர் விண்ணுலகமே.

தூயமல ரானும்நெடி யானும்அறி யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி வாரணிகொள் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தஎளி தாகுநல மேலுலகமே.

தடுக்கினையி டுக்கிமட வார்களிடு பிண்டமது வுண்டுழல்தருங்
கடுப்பொடியு டற்கயவர் கத்துமொழி காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல்வ யல்கொள்மழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர மேத்தவினை பற்றறுதலே.

மந்தமலி சோலைமழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி ஞானசம் பந்தன்அணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல தொண்டர்வினை நிற்பதிலவே.

வெள்ளி, 6 மார்ச், 2015

சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்



Post by Amritha Varshini on Apr 26, 2014 at 6:22am

Surutapalli-1.jpg


துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரனுக்கு பதவி                           
பறிபோகிறது. அப்பதவியை பெற அமுதத்தை உண்டு பலம் பெற வேண்டும். அதற்கு பாற்கடலை கடைந்து அதைப் பெறுமாறு தேவகுரு பிரகஸ்பதி ஆணையிடுகிறார். தேவர்களும், அசுரர்களும் மந்தரகிரியை மத்தாகவும், வாசுகி என்ற பாம்மை கயிறாகவும், கொண்டு பாற்கடலை கடைந்தனர். 

பல நாட்கள், கயிறாக விளங்கிய வாசுகி பாம்பு கொடிய வியத்தை கக்க... அந்த விஷம் கடலோடு கலந்து காலகூட விஷமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் பயங்கரமாக துரத்தியது. பயந்து நடுங்கிய தேவர்களும், அசுரர்களும் தங்களை காக்க வேண்டி கைலாச நாதரான ஸ்ரீபரமேஸ்வரனின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்து தஞ்சம் அடைந்தனர். 

பரமேஸ்வரரின் ஆணைப்படி நந்தி தேவரும், சுந்தரரரும் எடுத்து வர ஒரு நாவல் பழம் போல அந்த காலகூட விஷத்தை உருட்டி ஈசன் உட்கொண்டார். பரமேஸ்வரன் அதை உட்கொண்டால் அவன் உள்ளே இருக்கும் பல கோடி உயிர்களும் அழிந்து விடும் என்பதை உணர்ந்த அன்னை பராசக்தி தன் தளிர்க் கரங்களினால் ஈசனின் கண்டத்தைப் பற்றி விஷத்தை அங்கேயே தங்கச் செய்கிறாள். 
விஷம் உண்ட கழுத்தை உடைய ஈசன் திருநீலகண்டரானார். நீலகண்டரான பரமேஸ்வரன் விஷத்தை உண்டதால் ஏற்பட்ட சிரமத்தைத் தணித்து கொள்வதற்காக, சற்று சயனிக்க விரும்பி அமைதியான இடத்தை தேடி சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை அடைந்தார். 
அமைதி சூழ்ந்த, மரங்கள் நிறைந்த, புங்கை மரங்களும், பூஞ்செடிகளும் நிறைந்த சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை தேர்வு செய்து அன்னை சர்வ மங்களம்பிகையின் மடியில் தலை வைத்து படுத்து களைப்பாடுகிறார். 
சுருட்டப்பள்ளி பெயர்க்காரணம்: 

சர்வேஸ்வரன் சயனித்த ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரராக, திருக்கோல காட்சி தரும் புண்ணியம் பெற்ற ஸ்தலம் தான் சுருட்டப்பள்ளி. விஷத்தை சாப்பிட்ட பகவான் சுருண்டு மயக்க நிலையில் படுத்ததால்தான் சுருட்டப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தேவர்கள் வாசம் செய்யும் ஊர் ஆகையால் சுருளு பள்ளி, சுருளு: தேவர்கள் பள்ளி, ஊர் என பெயர் பெற்றதாக கூறலாம். 
மகாவிஷ்ணு நிற்பார்-இருப்பார்-கிடப்பார் என்பதை பல தலங்களில் பார்ப்போம். அவர் சயன திருக்கோலத்தை இருபத்தி ஏழு புண்ணிய தலங்களில் காணலாம். ஆனால் சயனித்த கோலத்தில், சிவபெருமான் பள்ளி கொண்ட ஈஸ்வரராக காட்சி அளிப்பது உலகத்திலேயே சுருட்டப்பள்ளி ஷேத்திரத்தில்தான். 

கைலாயத்தில் கூட இக்காட்சியை காண தேவர்கள் பரமனை தரிசிக்க இக்கோவிலுக்கு ஓடோடி வருகின்றனர். தர்மத்தின் ரூபமான நத்தி தேவர் அவர்களை எதிர்நோக்கி அவசரப்படாதீர்கள் பரமசிவன் மயக்கத்தில் இருக்கிறார். மயக்கம் தெளிந்ததும் நீங்கள் தரிசிக்கலாம் என்று தடுத்து நிறுத்துகிறார். 

சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்தவுடன் தேவர்களை அழைத்து சிவதரிசனம் செய்ய அனுமதிக்கிறார். மகாவிஷ்ணு, பிரம்மதேவர், தேவாதி தேவர்கள், சந்திரன், சூர்யர், நாரதர், தும்புரு, குபேரன், சப்த ரிஷிக்கள் சேர்ந்து தரிசித்து பரமனை வணங்குகிறார்கள். எல்லோரையும் பார்த்த சிவபெருமான் ஆனந்தத்துடன் அன்று மாலை கூத்தாடுகிறார். அதுதான் ஆனந்த தாண்டவம். இப்படி தரிசித்த அனைவரையும் ஆசீர்வதித்த நன்நாள் கிருஷ்ணபட்ச திரியோதசி ஸ்திரவாரம் (சனிக்கிழமை) இதுதான் மகாபிரதோஷம். அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷம் கொண்டாடுவதற்கு இதுவே காரணம். (ஆதாரம் ஸ்கந்த புராணம் உத்திரகாண்ட ரகசியம்). 
ஆலய அமைப்பு: 

கிழக்கு நோக்கிய சிறிய கோபுரம். மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடன் ஆலய நுழைவு வாயில் அமைந்துள்ளது. ஐந்து கலசங்களும் இறைவனின் திருமந்திரமான ஐந்து எழுத்துக்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன. உள்ளே நுழைந்ததும் எதிரில் முதன் முதலின் நாம் காண்பது அம்பிகையின் சன்னதி. இங்கு ஈஸ்வரனும், அம்பிகையும், ஒரே கோவிலில் தனித்தனியான சன்னதிகளில் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளனர். பள்ளிகொண்டீஸ்வரரின் சன்னதி தனித்த திருக்கோவிலாக அமைந்துள்ளது. 

அம்பிகையின் சன்னதிக்கு முன் முகப்பு மண்டபத்தில் குபேரனின் செல்வங்களான சங்க நிதியும், பதும நிதியும் துவார பாலகர்களாக, திருஉருவங்களை காணலாம். இத்தலத்திற்கு வந்து இறைவன், இறைவியை வணங்குபவர்களுக்கு அம்மையப்பர், அன்னமும், சொர்ணமும் அளித்து வாழ்வை வளமாக்குவார் என்பது இதன் தத்துவம். அம்பிகை இறைவனுக்கு வலது புறத்தில் கோவில் கொண்டுள்ளது தனி சிறப்பு அநேக கோவில்கள் அம்பிகை இறைவனுக்கு இடது புறத்தில் கோவில் கொண்டுள்ளதை காணலாம். வலது புறத்தில் அம்மன் கோவில் கொண்டுள்ளதால் இத்தலத்தை திருக்கல்யாண ஷேத்திரம் என கூறுவர். திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது இதன் பொருள். அம்பிகையின் கருவறைக்குள் கேட்டதை எல்லாம் வாரிக் கொடுக்கக்கூடிய, நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்க கூடிய காமதேனுவும், கற்பக விருட்சமும் தன்னகத்தே கொண்டு அருள்பாலிக்கிறார். 
பள்ளிகொண்டீஸ்வர தரிசனம்:

சிவ பெருமான் சயன கோலத்தில் இருக்கும் பள்ளிகொண்டேஸ்வரரின் கருவறை அமைப்பு வித்தியாசமானது. ஆலகால விஷத்தை உண்டு அசதியில் உறங்கும் பரமேஸ்வரனையும், அவருடைய தலைமாட்டில் வீற்றிருக்கும் பரமேஸ்வரியான சர்வமங்களாம்பிகையும் தரிசிக்கலாம். 
அவர்களை சூழ்ந்து நின்றிருக்கும் சந்திரன், சூரியன், நாரதர், தும்புரு, குபேரன், பிரம்மா, விஷ்ணு மற்றும் சப்த ரிஷிகளையும் கண்டு வணங்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். நீண்ட செவ்வக வடிவில் அமைந்திருக்கும் மூலக்கருவறையில் தெற்கே தலை வைத்து மல்லாந்த வண்ணம் நெடுந்துயில் கொண்டிருக்கிறார் பள்ளிகொண்டீஸ்வரர். 

இரண்டரை உயர பீடத்தில் பதினாறு அடி நீளத்திற்கு படுத்த வண்ணம் ஈசுவரர் காட்சி அளிக்கிறார். ஈசனின் தலைமாட்டில் அன்னை சர்வமங்களாம்பிகை புன்னகை பூத்தபடி வீற்றிருக்கிறாள். அன்னையின் குளிர்ந்த திருவடி ஈசனின் திருமேனியை சற்றே தொடுகிற மாதிரி அம்பாள் வீற்றிருக்கிறாள். இப்பொழுது தான் அன்னைக்கு பரம திருப்தி. ஏனென்றால், உயிர்கள் எல்லாம் அயர்ந்து உறங்குகின்ற வேளையில், உலகம் முழுவதும் ஒழுங்காக இயங்க சதாசர்வ காலமும் நடனமாடிக்கொண்டு இருந்தவருக்கு சற்ற ஓய்வு கிடைத்ததே என மகிழ்ந்தாள். பள்ளி கொண்டீஸ்வரரை வணங்கும் போது, அவன் திருவடி தரிசனத்தை மனத்தின் உள்ளே நிறுத்தி வைத்து தியானிக்க வேண்டும். அவனை உட்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் பலன் கிடைக்கும். இந்த ஒரே எண்ணத்தோடு பள்ளி கொண்டீஸ்வர பெருமானின் திருவடி தாமரைகளை போற்றி பணிந்து வணங்கி, அவன் திருமுக தரிசனத்தை நம்முள் வாங்கிக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாண் கிடையாக படுத்திருக்கும் மூலவருக்கு சாம்பிராணி தைலக்காப்பு மட்டும் தான் உண்டு. மற்ற அபிஷேகங்கள் கிடையாது. இந்த சன்னதிக்குள் இன்னொரு விசேஷம் உண்டு. சிவன் என்பதால் வழக்கமான விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் சன்னதியை போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான். பெருமாளின் திருவடி நிலைக்கு தான் சடாரி என்று சொல்லுவார்கள். அந்த பெருமானே நம் தலையில் திருவடி வைத்து ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம். 
தாம்பத்திய தட்சணாமூர்த்தி:
SRI DHANBATHYA DAKSHINAMURTHY SURUTAPALLI.jpg

தேவ்யாலிங்கித வாமாங்கம் பாதோதபஸ் மூர்திம் சிவம்! நந்தி வாஹன மீஸானம் ஸ்ரீதாம்பத்ய தட்சணாமூர்த்தியே நமஹ!! 

வால்மீகிஸ்வரனின் தெற்கு மாடத்தில் அமைந்துள்ள தாம்பத்திய தட்சணாமூர்த்தி திருவுருவம் எங்கும் பார்க்க முடியாதபடி அமைந்துள்ளது இக்கோவில் விசேஷம். எல்லா ஆலயங்களிலும் இருப்பது போல இங்கு தட்சணாமூர்த்தி சனகாதிகள் சூழ கல்லால் மரத்தில் அடியில் அமர்ந்து காட்சி தரவில்லை. அதற்கு மாறாக பதஞ்சலி, வியாகர பாதர்களுடன், ரிஷபாரூடராய் தேவியை அனைத்த வண்ணம் சின்முத்திரையுடனும், ஞான சக்தியுடனும் காட்சியளிக்கிறார். அம்பிகையின் பெயர் கவுரி. 
சுருட்டப்பள்ளி - 25 

1. சென்னையில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும் சுருட்டப்பள்ளி உள்ளது. 
2. ராவணனை கொன்று சீதையை மீட்டபிறகு ராமர் அயோத்தி செல்லும் வழியில் இங்கு வந்து லிங்க வழிபாடு செய்தார். அவர் வணங்கிய லிங்கம் ராமலிங்கேஸ்வரர் என்ற பெயரில் உள்ளது. 
3. வால்மீகி முனிவர் வழிபட்ட லிங்கம் வால்மீகேஸ்வரர் என்ற பெயரில் இருக்கிறது. 
4. சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலை விஜயநகரை ஆட்சி செய்த ஹரிஹர புக்கா என்ற அரசர் கட்டினார். 
5. காஞ்சிப் பெரியவர் இங்கு 10 நாட்கள் தங்கி இருந்து அற்புதம் செய்தார். அவர் நினைவாக இங்கு ஒரு தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 
6. பள்ளி கொண்டேஸ்வரர் சன்னதி போலவே காசியிலும் ஒரு கருவறை உள்ளது. எனவே காசிக்கு செல்ல விரும்புபவர்கள் சுருட்டப்பள்ளிக்கு சென்று வழிபட்டாலே காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்று காஞ்சி பெரியவர் கூறி உள்ளார். 
7. சுருட்டப்பள்ளி கோவிலில் கடைசியாக 2002-ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
8. சுருட்டப்பள்ளி கோவிலில் நடை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும். 
9. பிரதோச நாளில் கோவில் நடை நாள் முழுக்க திறந்து இருக்கும். அன்று சுமார் 20 ஆயிரம் பேர் வழிபாடு செய்வார்கள். 
10. மகாசிவராத்திரி தினத்தன்று சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
11. பார்வதி மடியில் சிவபெருமான் தலை வைத்து படுத்து இருப்பது போன்ற சயனகோலம் உலகில் சுருட்டப்பள்ளியில் மட்டுமே உள்ளது. 
12. கோவிலில் நுழைந்ததும், இடது பக்கத்தில் வால்மீகேஸ்வரர் மற்றும் பார்வதியின் அவதாரமான மரகதாம்பிகை சன்னதிகளை காணலாம். முதலில் இந்த இரண்டு சன்னதிகளிலும் வழிபாடு செய்த பிறகே, வலது பக்கத்தில் உள்ள பள்ளிகொண்டேஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். 
13. கர்ப்பகிரக வாசலில் சங்கநிதி, பதுமநிதியுடன் குபேரர் காவலராக உள்ளார். 
14. வால்மீகி, ராமாயணம் எழுதுவதற்கு முன்பு இங்குள்ள லிங்கத்தை வழிபாடு செய்த பிறகே எழுத்துப் பணியை தொடங்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 
15. 1976-ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவர் இந்த கோவிலில் தங்கி இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இடத்தை தோண்ட சொன்னார். அந்த இடத்தில் நிறைய கால்தடங்களுடன் ஒரு கல் கிடைத்தது. அந்த கல்லில் உள்ள கால் தட பதிவுகள், ராமபிரானின் இரட்டை குழந்தைகளான லவ-குசாவினுடையது என்று மகாபெரியவர் அருளினார். 
16. சுருட்டப்பள்ளியில் உள்ள தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்பவர்களுக்கு மனஅமைதி ஏற்படும் என்பது ஐதீகம். 
17. பள்ளிகொண்டீஸ்வரர்சிலை அமைப்பு 6 அடி நீளத்தில் உள்ளது. 
18. பார்வதி இருபுறமும் சூரிய, சந்திரர்கள் நிற்க, விஷ்ணு, பிரம்மா, லட்சுமி, மார்க்கண்டேயர், அகஸ்தியர், வால்மீகி, இந்திரன், நாரதர், முருகர், விநாயகர் ஆகியோரும் இந்த கோவிலில் உள்ளனர். இத்தகைய அம்சத்தை வேறு எந்த சிவாலயங்களிலும் காண இயலாது. 
19. சுருட்டப்பள்ளி சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டு. அதுபோல இங்குள்ள பார்வதி அமுதாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். 
20. ராமரின் மகன்கள் லவ, குசா இருவரும் தங்கள் பாவத்தை பள்ளிகொண்டேஸ்வரரை வழிபட்டு நிவர்த்தி பெற்றனர் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 
21. பிரதோச வழிபாடு முதன் முதலாக இந்த கோவிலில்தான் தோன்றியது. 
22. சிவாலயங்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக விபூதி கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயத்தில் விபூதிக்கு பதில் பிரசாதமாக தீர்த்தம் வழங்கப்படுகிறது. 
23. சுருட்டப்பள்ளி கோவில் ஆந்திர மாநிலத்துக்குள் உள்ள போதிலும் அறிவிப்பு மற்றும் ஸ்தல புராண வரலாறு தமிழிலும் வைக்கப்பட்டுள்ளது. 
24. சுருட்டப்பள்ளி கோவில் ராமாயண நிகழ்வுகளுக்கும் முற்பட்ட மிக, மிக பழமையான கோவிலாகும். காஞ்சி மகா பெரியவர் இங்கு அடிக்கடி தியானம் செய்து, இந்த வரலாற்று ஆதாரத்தை கண்டுபிடித்து வெளிப்படுத்தினார். 
25. சிவபெருமான், இந்த தலத்தில் நடத்திய ஆனந்த தாண்டவம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 
காஞ்சி பெரியவரின் ஆசி:

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் 1977-ம் ஆண்டு காஞ்சி பெரியவர் விஜயம் செய்து அருளாசி வழங்கினார். பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும், தாம் கண்டகண் கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும் என்றும் அனுக்கிரகம் பண்ணினார். காஞ்சி பெரியவரின் பாதங்கள் பட்டவுடன் சுருட்டப்பள்ளி என்னும் இத்திருத்தலம் வெளிஉலகிற்குத் தெரியவர ஆரம்பித்தது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அத்தருணத்தில் வெளிவந்த ஆலகால விஷத்தை உண்டகளைப்பால் சற்றே அயர்ந்து சயனக்கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம், எனவே இத்தலத்தில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. 
மகாசிவராத்திரி சிறப்பு பூஜைகள்:

இவ்வாலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 5 மணி வரை நான்கு கால விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. 
நடை திறக்கும் நேரம்:

சுருட்டப்பள்ளி கோவிலில் நடை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும்.பிரதோச நாளில் கோவில் நடை நாள் முழுக்க திறந்து இருக்கும். பள்ளிகொண்ட பரமேஸ்வரனை வெள்ளி அங்கியில் அன்று தரிசனம் செய்யலாம். சுருட்டப்பள்ளி சிவன் ஆலயத்தில் 1979-ம் வருடம் நடந்த கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பல்வேறு திருப்பணி வேலைகள் சுமார் 1 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றன. புதியதாக பிரதோஷ மண்டபம், ராஜகோபுரத்வார மண்டபம், மூன்று நிலை ராஜகோபுரத்திற்கான சிற்பங்கள், கருங்கல் ஆலய மதிற்சுவர், இந்திர நந்தி பிரதிஷ்டை போன்ற வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த அன்பர்கள் பல்வேறு திருப்பணி வேலைகளில் பங்கேற்றுள்ளனர். 
5 ஆலயங்களில் ஒன்று:

தமிழக-ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி கிராமம். மலைகள், மரங்கள் சூழ்ந்த இக்கிராமத்தை ஒட்டி ஆரணி ஆற்றங்கரையில் இயற்கையின் எழிலுடன் திகழும் இந்த ஊரில் பள்ளிக்கொண்ட சிவனாரின் ஆலயம் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்று இந்த சிறிய ஊரில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி. வால்மீகி முனிவர் இங்கு ஓர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு ஒரு லிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இத்தலத்தில் லிங்க மூர்த்தி புற்றுருவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 

ராமபிரானின் மகன்கள் லவ, குசா இருவரும் இங்கு விளையாடியதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் தேவர்களும், ரிஷிகளும் யாகம் செய்ய உத்தேசித்து அரணியை கடைந்தார்களாம். அச்சமயம் கலைமகள் யாகத்திற்கு உதவியாக அரணியில் இருந்து நதியால் தோன்றினாளாம். 
அந்த நதியே அருணா நதி என்று அழைக்கப்பட்டு இன்றும் ஆலயத்தின் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அருணா நதி மரகதாம்பிகையின் பாதகமங்களை வருடிக்கொண்டு ஓடுகிறது. நதி ஓடுவதை நாம் சன்னதியின் பிரகாரத்தில் இன்றும் காணலாம். 
எல்லாம் சக்திமயம்:

சுருட்டப் பள்ளி கோவிலில் அம்பிகை சன்னதிக்கு வலதுபுறத்தில் சிவப்பு கல் கணபதியை காணலாம். உருவம் கிடையாது. சோனபத்திர விநாயகரை சாளக்கிராம விநாயகர் என்றும் கூறுவர். சன்னதிக்கு இடது புறத்தில் வள்ளி தெய்வானை சகிதம் சுப்பிரமணியர் காட்சி அளிக்கிறார். கருவறையில் அம்பிகை, ஒயிலாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அம்பிகை மரகதாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். மரகதாம்பிகையை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வரலாம். அம்பிகை அங்கு மகா சக்தி வாய்ந்தவள். 

அன்னை ஸ்ரீசக்திநாயகி என்னும் உண்மைக்கேற்ப கருவறையை சுற்றிலும், மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, மாதங்கி, அன்னபூரணி ஆகிய சக்திகள் சூழ்ந்து இருக்கின்றனர். மரகதாம்பிகையின் தெற்கு சுவர் மாடத்தில் ராஜராஜேஸ்வரியின் நின்ற திருக்கோலம் உள்ளது. இந்த காட்சியைக் காண்பது மிக அரிது. அடுத்து `ஏகபாத திருமூர்த்தியின்' அற்புத சிற்பத்தை காணலாம். 

இது போன்ற திருஉருவங்கள் திருவொற்றியூர், திருவானைக்கா கோவில்களிலும் உள்ளன. இச்சிற்பம் சிவவிஷ்ணு பேதமற்ற உண்மையை விளக்குகிறது. மூல கணபதியான சித்தி கணபதியையும், கபால ஹஸ்த மகாவிஷ்ணு ஆகியோர்களை காணலாம். வடமேற்கில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. அடுத்துள்ள ராஜா மாதங்கியின் சிலை வெகு அழகாகவும், சிற்ப நுட்பங்களுடனும் உள்ளது. 
இங்குள்ள சப்த மாதர்களை வணங்கி விட்டு இறைவன் சன்னதிக்கு செல்லலாம். கருவறையில் அற்புதமாக லிங்க மூர்த்தி சேவை செய்கிறார். இந்த லிங்க மூர்த்திக்கு வால்மீகேஸ்வரர் என பெயர். வால்மீகி முனிவரால் பூஜை செய்யப்பட்டவர் புற்று உருவில் காட்சியளிக்கிறார். 
வால்மீகி மகரிஷியின் தவம் கண்டு மகிழ்ந்து இறைவன் மரகதாம்பிகையுடன் ஒன்றாக முனிவருக்கு காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. 
ஆணவத்தை அழித்த லிங்கோத்பவர்:

சுருட்டப்பள்ளி கோவில் கருவறையின் மேற்கு சுவர் மாடத்தில் `லிங்கோத்பவ' மூர்த்தியின் சிற்பம் காணப்படுகிறது. பிரம்மதேவருக்கும், விஷ்ணு பகவானுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதுகுறித்து சிவபெருமானிடம் கேட்பதற்கு சென்ற போது அவர் எனது தலையையும், பாதத்தையும் யார் ஒருவர் முதலில் பார்த்து விட்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர் எனக்கூறினார். 
அதன்படி ஒருவர் முடியைத் தேடியும், ஒருவர் பாதத்தைத் தேடியும் சென்றனர். இருவரும் முடிவைக் காண முடியாமல் திரும்பி வந்தனர். பின்னர் இருவரின் ஆணவமும் அழிந்தது. வடப்புற சுவரில் பிரம்ம தேவர் கைகூப்பிய வண்ணம் காட்சியளிக்கிறார். அடுத்த மாடத்தில் விஷ்ணுதுர்க்கையின் சிற்பம் உள்ளது. 

இங்கு லவகுசர்களின் பிஞ்சு கால்கள் பதிந்த பாதை வைக்கப்பட்டுள்ளது. அடுத்து கால பைரவரின் திருஉருவம் உள்ளது. இதன் விசேஷம் பைரவமூர்த்தியை உற்சவ வாகனத்துடன் காணலாம். இங்கு பைரவர் தனியாகவும், அவருக்கு முன் அடுத்த கால பைரவர் பார்த்த வண்ணம் நிற்கும் இந்த சிற்பத்தை இத்தலத்தில் மட்டுமே காணலாம். 

இரண்டாவது ராமேஸ்வரம் சுருட்டப்பள்ளி கோவிலில் வால்மீகேஸ்வரரின் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்துள்ளது ஸ்ரீராம லிங்கேஸ்வரரின் சன்னதி. மிகப் பெரிய மூர்த்தம். இந்த சிலை நர்மதையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. 
இந்த மூர்த்தி ராமபிரானால், இங்கு தங்கி சீதை, லட்சுமணன், பரதன், சத்ருக்னன், அனுஷன் இவர்களுடன் இந்த ராமலிங்கேஸ்வரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சன்னதிக்குள் ராமர், லட்சுமணன், சீதை, பரதன், சத்ருக்னன், அனுமன் முதலியவர்கள் இருப்பதை காணலாம். இது இரண்டாவது ராமேஸ்வரம் (அபர ராமேஸ்வரம்) என வழங்கப்படுகிறது. 
காஞ்சி முனிவர் வருகை:

சுருட்டப்பள்ளி கோவிலில் ஒரு தடவை மகா பெரியவர் பதினைந்து நாட்கள் தங்கி தவம் இருந்தார். பள்ளி கொண்டீஸ்வர பெருமானை தரிசித்த சுவாமிகள் அப்போதே கற்கண்டு கவிதை ஒன்றை இயற்றி அர்ப்பணம் செய்தார். அந்த கவிதை வருமாறு:- 
தேவ்யூரு ஸயனம் தேவம்
ஸ்ரீபாணம் ஸ்வார்ந்த விக்ரஹம்
ப்ருக்வாதி வந்திதம் தேவம்
லோகஷேமார்த்த மாஸ்ரயே 

இந்த கவிதையின் பொருள் வருமாறு:- விஷத்தை உண்ட களைப்பில் அம்பாளின் மடியில் ஈஸ்வரன் பள்ளி கொண்டிருக்கிறார். உலக நன்மைக்காக விஷம் உண்ட சிவனை காண தேவரும், பிருகு முதலிய ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். சயனத்தில் உள்ள ஈசுவரனை வணங்கி பயன் பெறுவோம். -இதுவே இந்த கவிதையின் அர்த்தமாகும். 
பிரதோஷ தொடக்கம்:

இந்த ஆலயத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும் என்பது காஞ்சி முனிவரின் விருப்பம். பிரதோஷ தரிசனம், பிரதோஷ திருவிழா ஆகியவை உண்டானதற்கு முக்கிய காரணமாக, உயர்ந்த மரியாதையுடன் பக்தர்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாக அமைந்த ஒரே தலம் சுருட்டப்பள்ளி தான். விஷத்தை உண்டு சயன நாயகராக படுத்திருக்கும் சிவபெருமானைக் காண அனைத்துலக மூர்த்திகள், தேவர்கள், மகரிஷிகள் தேடி வந்து தரிசனம் பெற்ற புண்ணிய ஸ்தலம் சுருட்டப்பள்ளி. இந்த ஆலயத்தில் பிரதோஷ தரிசனம் செய்வது அசுவமேத யாகம் செய்த பலனைத் தரக்கூடியது என்றெல்லாம் காஞ்சிப் பெரியவர் சுருட்டப்பள்ளி தலத்தை பற்றி மேன்மையாக கூறியுள்ளார். பிரதோஷ காலத்திலும், கார்த்திகை திங்கட்கிழமைகளிலும், சித்ரா பவுர்ணமி நாட்களிலும் வழிபடுவது மிக விசேஷம். கார்த்திகை பவுர்ணமியில் தீபம் ஏற்றுவது மிக மிக விஷேசம். ஸ்ரீகாமகோடி ஆச்சார்யா இங்கு ஒரு கார்த்திகை பவுர்ணமியில் தங்கி இருந்து லட்ச தீபம் ஏற்றச் சொல்லி வீணா, வேணு, வயலின் இசை விழாவையும் நடத்தினார்கள். இவ்வளவு பெருமை கொண்ட இத்தலத்தின் முக்கியத்துவம் உணர்ந்து பூரண பயபக்தியுடன் நாம் எல்லாரும் அடிக்கடி அங்கு விஜயம் செய்து அருளைப் பெறுவோம். 
போக்குவரத்துக்கு வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.ஊத்துக்கோட்டையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. 

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கோவிலுக்கு செல்லும்.

நன்றி:amrithavarshini.proboards.com

வியாழன், 5 மார்ச், 2015

ஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...


!


ஏழரைச்சனி உங்களைப் பிடிக்கப் போகிறது என்றாலே அதைக் கேட்பவருக்கு சர்வ அங்கமும் ஆடிப் போய்விடும்.

சனி பகவான் சிவபெருமானை அணுகி “பரமேஸ்வரா.. தங்களை ஏழரை நிமிடம் பிடிக்க வந்திருக்கிறேன்” என்றதும் (நமக்கு ஒரு வருடம் என்பது தெய்வங்களுக்கு ஒரு நிமிடம்) அவர் “உன்னையும், சர்வ உலகத்தையும் படைத்த என்னை நீ பிடிக்க முடியுமா? ” என்றதற்கு “எவரும் எனக்கு விதிவிலக்கல்ல” என்று சனிபகவான் கூற..

சனி கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஈசன் பூமிக்கு வந்து ஒரு சாக்கடையின் அடியில் ஏழரை நிமிடம் ஒளிந்து கொண்டு, பிறகு வெளிவந்து எகத்தாளமாய் “பார்த்தாயா...என்னை உன்னால் பிடிக்க முடியவில்லை” என்றதும்,

சனி பகவான் பணிவுடன் “என்னையும், சர்வ உலகங்களையும் படைத்த நீர் எதற்காக கேவலம் பூமியில் ஒரு சாக்கடையின் கீழ் ஒளிய வேண்டும்? அந்த ஏழரை நிமிடமே நான் உம்மைப் பிடித்தேன்” என்ற கூறியதாய் ஒரு கதை இருக்கிறது.

சரி... அனைவரும் இவ்வளவு பயப்படுமளவிற்கு ஏழரைச் சனிக்காலம் அவ்வளவு கொடியதா? சனி பகவான் கொடுமைப் படுத்துவதையே குணமாகக் கொண்டவரா? என்றால் பதில் வேறாக இருக்கும்.


தவறு செய்த ஒருவனை காவல்துறை கைது செய்து நீதிபதியின் முன் நிறுத்துகிறது. அவன் செய்த தவறினுக்கேற்ப நீதிபதி அவனுக்கு தண்டனை விதிக்கிறார். அதாவது அவன் திருந்துவதற்கு, செய்த தவறைப் பற்றி சிந்திப்பதற்கு தண்டனை என்ற வாய்ப்பினை அளிக்கிறார். அதற்காக நீங்கள் நீதிபதியின் பேரில் குறை சொல்வீர்களா?

அதேபோல் தான் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு ஏழரைச்சனி எனும் தலை சிறந்த நீதிபதியினை குறை கூறுவது என்பது!

ஏழரைச்சனி ஒருவருடைய வாழ்வில் முதல் முறை வரும் போது அவர் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் இருப்பார். (சிலருக்கு பிறக்கும் போதே ஏழரை இருக்கும். அவர்களுக்கு முப்பது வயதுகளில் இரண்டாம் சனியாக வரும். ஆனால், அதுவும் முதல் சனி கணக்குத்தான்.)

அச்சமயத்தில் படிப்பில் கவனம் குறையும். படித்தது பரீட்சை ஹாலுக்குள் போனதும் மறந்து போகும். சோம்பல் வரும்.எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.

கூடா நட்பு கேடாய் முடியும். உயிர் நண்பனுக்கு உதவுகிறேன் என்று சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். காதல் வந்து மற்ற எல்லாவற்றையும் மறக்கச்செய்து கடைசியில் தோல்வியில் முடியும். படிப்பை முடிக்க முடியாமல் அரியர்ஸ் வரும். பணம் இன்றி திண்டாடுவீர்கள்.

ஏழரைச்சனி காலத்தில் படிப்பில் கவனம் குறைவது என்பது பிற்பாடு நீங்கள் அதை உணர்ந்து, படிப்பு முடிந்ததும் சேரும் வேலையில் திறம்பட செயல்பட்டு பெயர்வாங்க வேண்டும் என்பதற்காகவே. காதல் தோல்வி என்பது எதிர் பாலினத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு அந்த அனுபவத்தைக் கொண்டு திருமண வாழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

கூடா நட்பும் அப்படித்தான். பணத் திண்டாட்டம் வருவது எதற்காக என்றால், பிற்பாடு நீங்கள் ஏராளமாய் சம்பாதிக்க போகும் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சனி பகவான் ஏழரைச்சனி காலத்தில் உங்களை திண்டாடச் செய்கிறார்.

சுருக்கமாய்ச் சொல்லப் போனால் அந்த ஏழரை ஆண்டு காலம் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு அடுத்த முப்பது ஆண்டு காலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்திச் செல்வதற்காகவே சனி பகவான் உங்களுக்கு இந்த படிப்பினைகளைத் தருகிறார்.

ஏழரைச்சனிக்காலத்தில் முதலில் பனிரெண்டாமிடத்தில் விரயச் சனியாக வரும் சனி பகவான் தன ஸ்தானத்தையும், பாக்ய ஸ்தானத்தையும், ருண ஸ்தானத்தையும் பார்வையிட்டு பணத்தால் பிரச்சனைகளையும், அலைச்சல்களையும் உண்டு பண்ணுவார்.

அடுத்து ஜென்மத்தில் அமர்பவர் ஜாதகரின் மனதை ஆளுவார். மன உளைச்சல் தந்து தடுமாற வைப்பார். துவள வைப்பார். வாய் விட்டு கதற வைப்பார். (அதிலும் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் போது மிகவும் கஷ்டப்படுத்துவார். கடுமையான பலன்களைத் தருவார்.)

ஏழாமிடம் என்பது எதிர்பாலினத்தின் இடம் (கணவன் – மனைவி). வாழ்க்கைத் துணை பற்றிய இடம். ஜென்மத்தில் இருக்கும் போது ஏழாமிடத்தைப் பார்வையிட்டு காதலின் இன்னொரு பரிமாணத்தை உணர வைப்பார்.

அதாவது காதலிப்பவரின் உண்மையான முகத்தைப் புரிய வைப்பார். பத்தாமிடத்தையும் பார்வையிட்டு தொழிலில் அல்லது வேலையில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவார். அல்லது வேலையை விட்டு நீக்குவார்.

இறுதியாக இரண்டாமிடத்தில் அமருபவர் எட்டாமிடத்தையும், நான்காமிடத்தையும் பார்வையிட்டு இதுவரை கொடுத்த அனுபவங்களின் கடுமையைக் சற்று குறைப்பார்.

எட்டாமிடத்தை தனது பார்வையால் கெடுத்து இதுவரை இருந்து வந்த தலைகுனிவை தடுத்து நிறுத்துவார். மீண்டும் மனிதனாக மாறத் துணை புரிவார். பறிபோன கௌரவத்தையும் அந்தஸ்தையும் ஏழரைச்சனி முடிவில் திரும்பக் கிடைக்கச் செய்வார்.

சனி பகவானை சனீஸ்வரன் என்று மற்ற எட்டு கிரகத்திற்கும் இல்லாத ‘ஈஸ்வர’ பட்டம் சிலர் அளிக்கிறார்கள். அது தவறு. ‘சனைச்சர’ என்றால் சம்ஸ்கிருதத்தில் ‘மெதுவாக நகர்பவர்’ என்று பொருள். அதுவே மருவி சனீஸ்வரர் ஆகியுள்ளது.

சனி பகவானுக்கு சூரிய சந்திரர்கள் என்றாலே ஆகாது. ஏழரைச் சனி நடப்பில் இருக்கும் போது சூரிய திசையோ, சந்திர திசையோ நடக்குமானால் சனியின் கடுமை இன்னும் அதிகமாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும். ராகுதசை நடக்கும் போதும் ஏழரைச் சனி நடைபெற்றால் சற்று மோசமான பலன்களே நடைபெறுகின்றன.

வேதனைகளைத் தரும் சனி பகவானை எப்படி சாந்தப் படுத்தலாம்?

• திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூர் போன்ற சனி பகவானின் திருத்தலங்களுக்குச் சென்று சனிபகவானுக்குரிய பரிகாரங்களைச் செய்யலாம்.

• இரவில் படுக்கும் போது கைப்பிடி அளவு எள்ளை தலைக்கு கீழே வைத்து படுத்து உறங்கி காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். (ஒன்பது சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.)

• சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.

• சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். (எள் தீபம் கூடாது.எள்ளை எரிப்பது தோஷம். எரிக்கக் கூடாது)

• சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.

• பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்

ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே. அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி பகவான். அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன் பின்வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனிபகவான் அருளுகிறார்.

அனுபவங்களைப் பற்றிய கவியரசு கண்ணதாசனின் கவிதை இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான்
                             
                                                                       - கண்ணதாசன் 

[ஜூலை 13-19, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.]

புதன், 4 மார்ச், 2015

மந்திரம் யந்திரம்

ஒலி அறிவியலும், மந்திரங்களும், எந்திரங்களும்... The science in Yanthras - Part 1

பல்லாயிரம் ஆண்டுகளாக, பலவாறு வரையப்பட்ட செம்பு தகடுகளை நாம் வழக்கத்தில் காண்கிறோம். கோவில் சிலை பிரதிஷ்ட்டை செய்யும்போது, அதனடியில் மந்திரங்கள் ஒலித்து பூஜிக்கப்பட்ட செப்பு எந்திர தகடு வைக்கப்படும். அவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மந்திரங்களின் மாற்றாக கருதப்படும். அதைப்பற்றி அடுத்த பதிவில்...

இங்கே தகடுகளின் மீது வரையப்பட்ட படத்தில் என்ன ஆச்சர்யம்? ஹான்ஸ் ஜென்னி என்ற அறிவியல் மேதை தான் கண்டுபிடித்த கருவியன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஒலியின் அதிர்வுகளைக்கொண்டு அதை ஒரு இரு பரிமாண வடிவமாக மாற்றினார். அப்போது நமது ஓம் மந்திரத்தை ஒலித்து சோதித்தபோது அது செப்பு தகடுகளில் வரையப்பட்டுள வடிவத்தை ஒத்து வந்தது.

அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட மந்திரத்திற்கும் தனித்தனியாக வரையப்படும் எந்திரங்களின் வடிவமும் அதன் ஒரு பரிமாண வடிவமே. TONOSCOPE என்ற கருவி இல்லாமலே மந்திர ஒலிகளின் வடிவத்தை நம் முனோர்கள் கண்டது எப்படி !!!

விடை தேடுவோம். முடிந்தவரை எல்லாரும் இப்பதிவை பகிர்ந்து எல்லோருக்கும் நமது வழிபாட்டு முறைகளின் அறிவியலை உணர்த்தி பயன்பெறுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....

ஞாயிறு, 1 மார்ச், 2015

ஜாதகம் கணிக்கும் வழி


ஜாதகம் கணிக்கும் வழி



லக்னம் என்றால் என்ன?
லக்னம் என்பது ஒரு குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பெயர். அதைச் சற்று விளக்குவோம்.
ராசி என்பது 12 சம பாகமாகப் பிரிக்கப்பட்ட பூமண்டலத்தின் பாகம். சூரியனும் மற்ற கிரகங்களும் கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சுற்றுகின்றன. அதே சமயத்தில் மேஷாதி 12 ராசிகளைச் சம பாகமாகக் கொண்ட பூமண்டலமானது மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாகச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்பொழுது பூமண்டலத்தின் எந்தப் பாகம் கிழக்கில் நமக்கு நேராக வருகிறதோ அந்தராசிக்கு லக்னம் என்று பெயர்.
அதாவதுஅந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த ராசியை லக்கினமென்றுசொல்வார்கள். மற்றும் அப்பொழுது கிரஹங்கள் எந்த எந்த ராசியில்இருக்கின்றனவோஅதையும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இதேல்லாம்சேர்ந்ததற்கே ஜாதகச் சக்கரம் அல்லது ராசிச் சக்கரம் என்று பெயர்.
இனி லக்னம்கிரஹநிலைதசாபுக்தி ஆகியவற்றைக் கணிக்கும் வழியை ஓர் உதாரணம் மூலமாக விளக்குவோம்உதாரண ஜாதகம்
விகாரி வருடம் தை மாதம் 9-ம் தேதி வெள்ளிக்கழிமைசுவாதி நக்ஷத்திரம் 29-27மறுநாள் விசாகம் 25-42 (23-1-1960 @ 5-40 A.M...) இரவு மணி 5.40க்கு (சனிக்கிழமை விடியற்காலை) சென்னையில் ஓர் ஆண் குழந்தை பிறந்ததை வைத்துக்கொண்டுஅதற்கு ஜாதகம் கணிக்கும் விதத்தையும் கிரகங்களை அமைக்கும்வழியையும் தசா புக்திகள் கணிக்கும் விதத்தையும் கீழே விளக்குவோம்.
ஒரு ஜாதகம் கணிக்குமுன் கீழ்க்கண்ட அம்சங்களை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் :
1. 
குழந்தை எத்தனையாவது அட்சாம்சத்தில் உள்ள ஊரில் பிறந்தது?
2. 
அந்த அட்சாம்ச ரேகைக்குத் தக்கபடி மேஷாதி ராசிப் பிரமாணங்கள் என்ன?
3. 
குழந்தை ஜனனமான தேதியில் அது பிறந்த ஊரில் சூரிய உதயம்எத்தனை மணிஎத்தனை நிமிஷத்துக்கு நிகழ்ந்தது?
4. 
சூரியோதயம் முதல் குழந்தை பிறந்தது வரையில் எத்தனை நாழிகை எத்தனை விநாடிகள் சென்றன?
5. 
சிசு பிறந்த நட்சத்திரத்தின் மொத்த நாழிகை என்ன?
     இவற்றைப் பஞ்சாங்கத்தின் உதவியால் முக்கியமாகக் குறித்து வைத்துக் கொண்டால் சுலபமாக ஜாதகம் கணித்துவிடலாம்.
  1. சூரிய உதயம்
இந்தக் குழந்தை சென்னையில் பிறந்தது.
சென்னையில் அட்சாம்சம் 13. சென்னையில் அன்றைக்குரிய உதயம் 6-39.தை மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. குழந்தை விடியற்காலை மணி5-40க்குப் பிறந்தது. அதாவது சனிக்கிழமை உதயத்துக்கு முன் 0-59நிமிஷங்களுக்கு முன்னதாகப் பிறந்துள்ளது. நம் நாட்டு வழக்கப்படி சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையில் ஒரு நாள் என்று கணக்கிடப்படும்.
  1. உதயாதி ஜனன நாழிகை
வெள்ளிக்கிழமை சூரிய உதயம் முதல் குழந்தை பிறந்த நாழிகை விநாடிகள் வரையில் கணக்கிட வேண்டும. அது முதல் சனிக்கிழமை விடியற்காலை 5.40 வரையில் 23 மணி நிமிஷம் ஆகும். மணி ஒன்றுக்கு2 ½ நாழிகை வீதம் கணக்கிட, 57 நாழிகை 33 விநாடிகள் வரும். ஆகையால்,வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி நாழிகை 57-33-க்கு அந்தக் குழந்தையின் ஜனனம் என்று  அறிய வேண்டும்.  குறிப்பு : சூரிய உதயம் ஒவ்வொரு நாளும் காலை 6-00 மணிக்கேநிகழ்வதில்லை. காலை 5-39 முதல் 6-39க்கு இடையிலான காலத்தில் நாளுக்கு நாள் வித்தியாசமாக சூரியோதயம் ஆகிக்கொண்டிருக்கும். அதேபோல் இடத்திற்கு இடம் சூரியோதய காலம் மாறுபடும். உதாரணமாகசென்னையில் காலை 6-01க்குச் சூரியோதயமென்றால்,ராமேசுவரத்தில் அதே தினத்தில் 6-09க்குச் சூரியோதயம் ஆகும். ஆகவேஒரு குறிப்பிட்ட ஜாதகத்தைக் கணிப்பதற்கு முன்அந்தக் குழந்தை பிறந்த ஊரில் சூரியோதயம் எப்பொழுது நிகழ்ந்தது என்பதைப்பஞ்சாங்கங்கள் மூலம் துல்லியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
அட்சாம்சங்களும் ராசிப் பிரமாணமும்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளை 360 சம பாகங்களாக (அதாவது ராசி ஒன்றுக்கு 30 பாகைகள் வீதம்) பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்கு அட்சாம்சம் (Latitude) என்று பெயர். பூமி முழுவதும் இந்த அட்சாம்ச ரேகைகளின் மீதே இருக்கிறது. அந்த அந்தஅட்சாம்சங்களிலுள்ள பட்டணங்களுக்கு வெவ்வேறு ராசிமான சங்கியைகள் (அதாவது ராசியளவு நாழிகைவிநாடிகள்) ஏற்பட்டுள்ளன.
இந்த அட்சாம்சங்களை அநுசரித்தே மேஷாதி ராசிகளின் கால அளவை அறிய வேண்டும். உதாரணமாகசென்னையும்அதைச் சுற்றி சுமார் 100மைல்களுக்கு உட்பட்ட பிரதேசங்களும் 13-ஆவது அட்சாம்சத்தில் இருக்கின்றன. ஆகையால்இந்த 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்தஇடங்களுக்கு மேஷ ராசிப் பிரமாணம் நாழிகை 29 விநாடிகள் என்றால்,இதே மேஷ ராசிக்கு 9-ஆவது அட்சாம்சத்தில் இருக்கும் ராமேசுவரத்துக்கு4-37 விநாடியாகும். அதாவது சென்னையைக் காட்டிலும் விநாடி குறைவு. (45-வது பக்கம் அட்டவணை 2-ஐ கவனிக்க).
இம்மாதிரிஇடத்துக்கு இடம் மேஷாதி ராசிப் பிரமாணங்கள் மாறுபடும்.ஆகையால்ஒரு குழந்தை பிறந்த இடம் எந்த அட்சாம்சத்தைச் சேர்ந்ததோ அந்த அட்சாம்சத்துக்குரிய மேஷாதி ராசிப் பிரமாணங்களைச் சூரியோதயம் தொடங்கிகுழந்தையின் ஜனன காலம் வரையில் கூட்டிலக்கினத்தை அறிய வேண்டும். இதைக் கவனிக்காவிட்டால் சரியான ஜாதகம் கணிக்க இயலாது.
  1. உதய லக்ன சேஷம்
சூரியன் உதய காலத்தில் எந்த ராசியில் இருக்கிறானோஅதுவே உதய லக்னம் என்று கூறப்படும். மேற்படி உதய லக்ன நாழிகை ஒவ்வொரு நாளும் சூரியோதய காலத்தில் குறைந்துகொண்டே வரும். அதாவதுதமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் தேதியன்று சூரிய உதய காலத்தில் மேஷ ராசியில் இருப்பு 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்த சென்னைக்கு 4-29என்றால் 2-ஆம் தேதி மேஷத்தின் இருப்பு 4-20. இம்மாதிரி ஒவ்வொரு தேதிக்கும் சூரிய உதய காலத்தில் 0-9 விநாடி வீதம் கழித்துக்கொண்டே போக வேண்டும்.  இது பஞ்சாங்கத்தில் ராசி இருப்பு என்ற தலைப்பில் இருக்கும்.
அப்படிக் கழித்தது போக மீதி நாழிகை விநாடியே உதய லக்ன சேஷமாகும்.
  1. ஜந்ம லக்னம்
பிறகு ஜனன கால நாழிகை விநாடிகள் வரும்வரை ஒவ்வொரு ராசியாகக் கூட்டிக்கொண்டே போனால்எந்த ராசிப் பிரமாணத்தில் ஜனன கால நாழிகை அடங்குமோ அதுவே அந்தக் குழந்தையின் ஜன்ம லக்னம் என்று அறிய வேண்டும்.
லக்னம் கணிக்கும் வழி
இந்தக் குழந்தை பிறந்தது தை மாதம் 9-ஆம் தேதி இரவு. ஆகையால் தை மாதம் 9-ஆம் தேதிக்குச் சரியாக (தை மாதத்திற்குரிய) மகர ராசியின் சேஷத்தைப் பஞ்சாங்கத்தில் உள்ளபடி குறித்துக் கொள்ளவேண்டும். அதன் கீழ் கும்பம் தொடங்கி ஜனன கால நாழிகை வரும் வரையில் ராசிமான சங்கியைகளை எழுதிக் கூட்டிக் கொள்ள வேண்டும். அதாவது: தை9-ஆம் தேதி சூரிய உதயத்தில்-
(உதய லக்னம்)                                நா-வி
மகர சேஷம்
--
3-32
கும்பம்
--
4-17
மீனம்
--
4-11
மேஷம்
--
4-29
ரிஷபம்
--
5-04
மிதுனம்
--
5-27
கடகம்
--
5-22
சிம்மம்
--
5-08
கன்னி
--
5-04
துலாம்
--
5-16
விருச்சிகம்
--
5-28
தனுசு ஆரம்ப நாழிகை
--
53-18
தனுசு – 5-19 சேர்த்து
--
58-37

ஜனன கால நாழிகையான 57-33, மேற்கண்ட தனுசு ராசி வரையிலுள்ள 58-37க்கு உட்பட்டிருப்பதால்இந்தக் குழந்தை தனுர் லக்னத்தில் பிறந்ததாகும். அதாவது குழந்தையின் ஜன்ம லக்னம் தனுசு என்று அறிய வேண்டும். இனி அந்தக் குழந்தையின் ஜன்ன காலத்தில் கிரகங்கள் எந்த பாதசாரத்தில் இருந்தன என்பதைக் கவனிப்போம்:
பஞ்சாங்கத்தில் கிரகபாதசாரங்கள் என்னும் அட்டவணையில் கண்டபடி,தை மாதம் 9-ஆம் தேதி கிரகங்கள் கீழ்க்கண்ட வகையில் நக்ஷத்திரபாதங்களில் சஞ்சரிக்கின்றன:
கிரகம்
நக்ஷத்திரம்
பாதம்
ராசி
நவாம்சம்
சூரியன்
உத்திராடம்
4
மகரம்
மீனம்
சந்திரன்
விசாகம்
2
துலாம்
ரிஷபம்
செவ்வாய்
மூலம்
4
தனுசு
கடகம்
புதன்
உத்திராடம்
3
மகரம்
கும்பம்
குரு
மூலம்
1
தனுசு
மேஷம்
சுக்கிரன்
மூலம்
1
தனுசு
மேஷம்
சனி
பூராடம்
2
தனுசு
கன்னி
ராகு
உத்திரம்
3
கன்னி
கும்பம்
கேது
உத்திரட்டாதி
1
மீனம்
சிம்ஹம்

  1. நவாம்ச லக்னம்
நவாம்ச லக்னம் என்பது ஜன்ம லக்னத்தில் 9-ல் ஒரு பங்கு என்று பொருள். அதாவது ஜன்ம லக்னம் தனுசுஅதன் நிராயன ராசிமானம்சென்னைக்கு நாழி 19 விநாடி அல்லது 319 விநாடி. இதை 9-ஆல் வகுக்க ஒரு பாகம் 35 4/9. குழந்தை பிறந்த நேரம் 57 நாழி 33 விநாடி. தனுர் லக்னம் ஆரம்பம். 53 நாழி 18 விநாடி. தனுர் லக்னம் பிறப்பு வரை சென்றது 57 நாழி 33 விநாடி – 53 நாழி 18 விநாடி (57-33—53-18) 4 நாழி 15விநாடி அல்லது 255 விநாடி. இதை 35 4/9-ஆல் வகுக்க 8-வது பாகத்தில் அமையும். ஆக நவாம்ச லக்னம்-மேஷம் முதல் கணக்கிட விருச்சிக லக்னம் வரும்.
35) 255 (7
      245
     ------
      10
     ------ 
மற்ற லக்னங்களுக்கு நவாம்ச லக்னம் போடுவது எப்படி என்பதைக் கீழே விளக்கியுள்ளோம்.
மேஷம்சிம்மம்,தனுசு
--
ஜன்ம லக்னமானால் - மேஷம் முதல்கணக்கிட வேண்டும்
ரிஷபம்கன்னி,மகம்
--
ஜன்ம லக்னமானால் - மகம் முதல்கணக்கிட வேண்டும்
மிதுனம்துலாம்,கும்பம்
--
ஜன்ம லக்னமானால் - துலாம் முதல்கணக்கிட வேண்டும்
கடகம்விருச்சிகம்,மீனம்
--
ஜன்ம லக்னமானால் - கடகம் முதல்கணக்கிட வேண்டும்
  1. ஜந்மநக்ஷத்திரம் ஆத்யந்தம்
இனி ஜன்ம நட்சத்திரத்தின் ஆதியந்த நாழிகைகளையும் ஜனனகால தசாசேஷத்தையும் கணிப்போமாக : மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூரியோதயத்திலிருந்து 29-27நாழிகை வரை சுவாதி நக்ஷத்திரம் இருக்கிறது. பிறகு விசாக நக்ஷத்திரம் ஆரம்பம். ஜாதகன் சூரிய உதயாதி 57 நாழிகை 33 விநாடிகளுக்குப்பிறந்திருப்பதால் சுவாதி கழிந்து விசாக நக்ஷத்திரத்தில் ஜனனம் என்று தெரிகிறது. இனி விசாக நக்ஷத்திரத்தின் ஆத்யந்த பரம நாழிகை அதாவது மொத்த நாழிகை என்ன என்று தெரிந்தால் தசாசேஷம் கணிக்கலாம். ஒரு தினத்துக்கு 60-00 நாழிகைகள். அதில் 9-ஆம் தேதி சுவாதி இருப்பு 29-27 போகஅன்றைய தினம்-
விசாக நக்ஷத்திரம் 30-33.
     மறுநாள் தை 10-ஆம் தேதி விசாகம் (பஞ்சாங்கத்தில் உள்ளபடி) 25-42.ஆகையால்இவைகள் இரண்டையும் கூட்ட விசாகம் மொத்த நாழிகை36-15 ஆகும்.
ஜனன நாழிகை
57-33
அன்று சுவாதி செல்லு
29-27
9-ஆம் தேதி விசாகத்தில் செல்லு
28-06
விசாகம் மொத்தம் (அ) ஆத்யந்த பரம நாழிகை
56-15ல்
28-06ஐக் கழிக்க
ஜனன காலத்தில் விசாகம் இருப்பு
28-09

  1. ஜனனகால தசாசேஷம்
ஆகையால்மேற்கண்ட விசாக நக்ஷத்திரத்தின் சேஷம் 28 நாழிகை, 9விநாடிகளுக்கு தசாசேஷம் கணிக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டபடி விசாக நட்சத்திரத்துக்கு குருதசை ஆரம்பம். குருதசை 16 வருஷங்கள். விசாக நட்சத்திரம் மொத்தம் நாழிகை 56-15க்கு 16வருஷங்களானால் விசாகத்தில் மீதியுள்ள 28-09க்குத் தசாசேஷம் என்ன என்பதைக் கீழ்க்கண்ட விதமாகக்  கணிக்கலாம்.
அதாவது,
1.
விசாகம் மொத்த நாழிகை
56-15 X 60


3360 விநாடிகள்
15
மொத்தம்
3375 விநாடிகள்
2.
விசாகம் செல்லு போக இருப்பு
28.09 X 60

1680
     9
1689 விநாடிகள்

     விசாகம் குருவின் நக்ஷத்திரம். ஜனன காலதசை குருதசை. ஆகவே,மேற்கண்ட இருப்பு விநாடிகளைக் குரு தசா வருஷமான 16ஆல் பெருக்க வேண்டும். அந்த மொத்தத்தை விசாகம் மொத்த விநாடிகளால் வகுக்க தசாசேஷ வருடங்கள் வரும். மீதியை 12-ஆல் பெருக்கி மொத்த விநாடிகளால் வகுத்தது மாதம். 30-ஆல் பெருக்கி வகுத்தது நாட்கள். இவ்விதமாக தசா சேஷம் வரும்.
           1689 X16
          ------------
3375)   27024     (8 
வருடம்
            27000
            ---------------
                  24 X 12 / 3375 = 0 
மாதம்
                  ----------
                   288 X 30
          -------------------
3375)   8640  ( 2 + 1 =3 
நா.
            6750
            ------
            1890 
பாதிக்குமேல் இருப்பதால் ஆகச் சேர்த்துக் கொள்ளலாம்.
            --------- 
ஆகஜனன காலத்தில் குருதசை சேஷம் வருடம்  0 மாதம் நா. அதாவது இந்தக் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே விசாக நட்சத்திரத்தில் பாதி பாகம் கழிந்துவிட்டபடியால்அதற்கு உரிய குருதசை16 வருஷத்தில் சுமார் பாதி கழிந்து வருஷம் நாட்கள் மாத்திரமே பாக்கி இருக்கின்றன.
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?
இப்படி பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்ல நாமும்  கொஞ்சம் கற்றுக் கொள்வோமே!
சில அடிப்படைத் தகவல்கள்:
ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில் அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர்.
வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டு விளங்குகிறது. நாம் முக்கியமானவை என்று கொண்டுள்ள 27 நக்ஷத்திரங்களும் இப்பாதையில் அமைந்துள்ளன. இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும் சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள் ளன. எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் வான் பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது.
ஒருமுறை சுற்றிவர 365 நாள் மணி நேரம் ஆகிறது.
குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். சனி மாதத்துக்கு ஒருபாகை நகரும். எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 12வருடங்கள் ஆகின்றன. சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30வருடங்கள் ஆகின்றன.
சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல் வருடம்.இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.
ஆண்டுகள் 60
1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.ப்ரமோதூத
ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி 
14.விக்கிரம
15.விஷு
16.சித்ரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துர்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.ப்லவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விசுவாவசு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.சௌமிய
44.சாதாரண
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய
தமிழ்மாதங்கள்
சௌரமான ஆண்டுக் கணக்கீட்டில் மாதம் என்பது ஸூர்யன் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் 30 நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஸூர்யன் எந்த ராசியில் என்று பிரவேசிக்கிறானோ அதுவே மாதத்தின் தொடக்க நாளாகவும் அந்த ராசியின் பெயரே மாதத்தின் பெயராகவும் உள்ளது.
ஸங்கல்பத்தில் நாம் மாதத்தின் பெயரைக் கூறும்போது இந்தப் பெயர்களையேபயன்படுத்துகிறோம். ஆனால் நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள்-அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தன்று பௌர்ணமி திதி வருகிறதோ அந்தநக்ஷத்திரத்தின் பெயரையே கொண்டதாக அமைந்துள்ளது.
மாதங்களின் பெயர்கள்
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது
சித்திரை - மேஷ மாசம்
வைகாசி - ரிஷப மாசம்
ஆனி -  மிதுன மாசம்
ஆடி - கடக மாசம்
ஆவணி -  சிம்ம மாசம்
புரட்டாசி - கன்னி மாசம்
ஐப்பசி - துலா மாசம்
கார்த்திகை -விருச்சிக மாசம்
மார்கழி - தனுர் மாசம்
தை -மகர மாசம்
மாசி - கும்ப மாசம்
பங்குனி - மீன மாசம்
எந்த மாசத்தில் பூர்ணிமைஅமாவாஸ்யை இல்லையோ அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.
எந்த மாசத்தில் இரண்டு பூர்ணிமையோஇரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.
விஷ மாசத்திலும்மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.
ஆனால் சித்திரைவைகாசிமாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.
அயனங்கள்
ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸூர்யன் மகரராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில்பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது.
தைமாதம் தொடங்கி ஆனி ஈறாக மாதங்கள் உத்தராயன காலமாகும்.இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம்,க்ரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம்.
ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும்.இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.
ருதுக்கள் - 6
ஒரு வருடம் ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சித்திரைவைகாசி - வஸந்த ருது
ஆனிஆடி, - க்ரீஷ்ம ருது
ஆவணிபுரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசிகார்த்திகை - சரத் ருது
மார்கழிதை - ஹேமந்த ருது
மாசிபங்குனி - சிசிர ருது
கிழமைகள் - 7
ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும்.
சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது.
ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது
ஞாயிறு - பானு வாஸரம்
திங்கள் - இந்து வாஸரம்
செவ்வாய் -  பௌம வாஸரம்
புதன் -  ஸௌம்ய வாஸரம்
வியாழன் - குரு வாஸரம்
வெள்ளி - ப்ருகு வாஸரம்
சனி - ஸ்திர வாஸரம்
திதிகள் - 15
ஸூர்யன் இருக்குமிடம் முதல் 12 பாகைகள் சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.
1. ப்ரதமை
 2. த்விதியை
 3. த்ருதியை
 4. சதுர்த்தி
 5. பஞ்சமி,
6. ஷஷ்டி
 7. ஸப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. த்ரயோதசி
14. சதுர்த்தி
15. பூர்ணிமா (அல்லது) அமாவாஸ்யை
மாதம் என்பது இருபக்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அமாவாஸ்யை அடுத்தபிரதமை முதல் பௌர்ணமி வரை சுக்லபக்ஷம் என்றும் பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபக்ஷம் என்றும் வழங்கப்படுகிறது.
தமிழில் இதனை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.
திதிவாரம்நக்ஷத்திரம்யோகம். கரணம் என்பவையே பஞ்சாகத்திள்ள ஐந்து அங்கங்களாகும்.
இவற்றில் திதிவாரம், (வாஸரம்) ஆகிய இரண்டினைப் பற்றியும் மேலே கண்டோ ம். இனி மற்ற மூன்றினையும் அறிவோம்.
நக்ஷத்திரங்கள் - 27
வான் வட்டப்பதையில் உள்ள நக்ஷத்திரங்கள் இருபத்தேழும் பன்னிரண்டு ராசிகளுக்குப் பங்கிடப்பட்டிருக்கின்றன.
நக்ஷத்திரங்கள் 27 - ம் வருமாறு:
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது
அஸ்வதி - அஸ்வினி
பரணி -அபபரணீ
கார்த்திகை - க்ருத்திகா
ரோகிணி - ரோகிணீ
மிருகசீர்ஷம் - ம்ருகசிரோ
திருவாதிரை - ஆர்த்ரா
புனர்பூசம் - புனர்வஸூ
பூசம் - புஷ்யம்
ஆயில்யம் -  ஆஸ்லேஷா
மகம்  -  மகா
பூரம் - பூர்வபல்குனி
உத்திரம் - உத்ரபல்குனி
ஹஸ்தம் - ஹஸ்த
சித்திரை - சித்ரா
சுவாதி - ஸ்வாதீ
விசாகம் - விசாகா
அனுஷம் - அனுராதா
கேட்டை - ஜ்யேஷ்டா
மூலம்  மூலா
பூராடம் - பூர்வ ஆஷாடா
உத்திராடம் - உத்ர ஆஷாடா
திருவோணம் - ச்ரவண
அவிட்டம் - ஸ்ரவிஷ்டா
சதயம் - சதபிஷக்
பூரட்டாதி - பூர்வப்ரோஷ்டபதா
உத்திரட்டாதி - உத்ரப்ரோஷ்டபதா
ரேவதி - ரேவதி
ராசிகள் - 12
1. மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி
7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்
மேலே சொன்ன நக்ஷத்திரங்கள் இருபத்தி ஏழும் ஒவ்வொரு ராசிக்கும் 2 1/4நக்ஷத்திரம் விதம் பங்கிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. ஆகவேஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் அல்லது 2 1/4 நக்ஷத்திரங்கள் உண்டு.
யோகங்கள் - 27
1. விஷ்கம்பம் 2. ப்ரீதி 3. ஆயுமான்
4. சௌபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம்
7. சுகர்மம் 8. த்ருதி 9. சூலம்
10. கண்டம் 11. வ்ருத்தி 12. துருவம்
13. வியாகாதம் 14. ஹர்ஷணம் 15. வஜ்ரம்
16. ஸித்தி 17. வ்யதீபாதம் 18. வரியான்
19. பரீகம் 20. சிவம் 21. ஸித்தம்
22. ஸாத்தியம் 23. சுபம் 24. சுப்ரம்
25. பராம்யம் 26. மாஹேந்த்ரம் 27. வைத்ருதி
கரணங்கள் - 11
1. பவம் - சிங்கம்
2. பாலவம் - புலி
3. கௌலவம் - பன்றி
4. தைதிலம் - கழுகு
5. கரம் - யானை
6. வணிஜை - எருது
7. பத்ரம் - கோழி
8. சகுனி - காக்கை
9. சதுஷ்பாதம் - நாய்
0. நாகவம் - பாம்பு
11. கிமுஸ்துக்னம் - புழு
இராகு காலம்
ஒவ்வொரு கிழமையிலும் இராகு காலம் எப்போது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வரிப்பாட்டு ஒன்று சொல்லுவார்கள். அதனை மனதில் கொண்டு கணக்கிட்டுச் சொல்லலாம்.
திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?
கிழமை = இராகு காலம்
ஞாயிறு = 04.30 - 06.00
திங்கள் = 7.30 - 9.00
செவ்வாய் =  03.00 - 04.30
புதன்  = 12.00 - 01.30
வியாழன் =  01.30 - 03.00
வெள்ளி = 10.30 - 12.00
சனி = 09.00 - 10.30
எமகண்டம்
இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.
விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே
கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்
ஞாயிறு : 12.00 - 01.30
திங்கள் : 10.30 - 12.00
செவ்வாய் : 09.00 - 10.30
புதன் : 07.30 - 09.00
வியாழன் : 06.00 - 07.30
வெள்ளி : 03.00 - 04.30
சனி : 01.30 - 03.00

கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு : 06.00 - 07.30
திங்கள் : 03.00 - 04.30
செவ்வாய் : 1.30 - 03.00
புதன் : 12.00 - 01.30
வியாழன் : 10.30 - 12.00
வெள்ளி : 09.00 - 10.30
சனி : 07.30 - 09.00
இராகு காலம்எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.

குளிகை
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் =  09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30


கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் =  01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00

ராசிகள் - Tamil Signs
நட்சத்திரங்கள் - Tamil Stars
மேஷம் - Aries
அசுவினிபரணிகிருத்திகை 1ஆம் பாதம் முடிய - Aswinini, Barani, upto 1st phase of Krithikai
ரிஷபம் - Taurus
கிருத்திகை 2ஆம் பாதம் முதல்ரோகிணிமிருகசிரீஷம் 2ஆம் பாதம் முடிய - From Krithikai II phase, Rohini and upto Mirukasheerisham II phase.
மிதுனம் - Gemini
மிருகசிரீஷம் 3ஆம் பாதம் முதல்திருவாதிரைபுனர்பூசம்3ஆம் பாதம் முடிய - From Mirugasheerisham III phase
கடகம் - Cancer
புனர்பூசம் 4ஆம் பாதம் முதல்பூசம்ஆயில்யம் முடிய - From Punarpoosam 4th Phase, Poosam, and upto Ayilyam
சிம்மம் - Leo
மகம்பூரம்உத்திரம் 1ஆம் பாதம் முடிய - Makam, Pooram, and upto Uthiram I phase
கன்னி - Virgo
உத்திரம் 2ஆம் பாதம் முதல்அஸ்தம்சித்திரை 2ஆம் பாதம் முடிய - From Uthiram II phase, Astham, and upto Chithirai II phase
துலாம் - Libra
சித்திரை 3ஆம் பாதம் முதல்சுவாதிவிசாகம் 3ஆம் பாதம் முடிய - From Chithirai 3rd phase, Swathi, and upto Vishaakam 3rd phase
விருச்சிகம் -Scorpio
விசாகம் 4ஆம் பாதம் முதல்அனுஷம்கேட்டை முடிய -From Vishaakam 4th phase, Anushyam, and upto Keattai
தனுசு - Sagittarius
முலம்பூராடம்உத்திராடம் 1ஆம் பாதம் முடிய - From Moolam, Pooradam and upto Uthiraadam 1st Phase
மகரம் - Capricorn
உத்திராடம் 2ஆம் பாதம் முதல்திருவோணம்அவிட்டம்2ஆம் பாதம் முடிய - From Uthiraadam 2nd phse, Thiruvonam and upto Avittam 2nd phase
கும்பம் - Aquarius
அவிட்டம் 3ஆம் பாதம் முதல்சதயம்பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய - From Avittam 3rd phase, Sathayam and upto Poorattathi 3rd phase
மீனம் - Pisces
பூரட்டாதி 4ஆம் பாதம் முதல்உத்திரட்டாதிரேவதி முடிய -From Poorattathi 4th phase, Uthiraadam and upto Revathi.