Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!
Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!
Lesson on Numerology
Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!
--------------------------------------------------------
நேற்று அகண்டவரிசை இணைய இனைப்பு படுத்திவிட்டது.
அதனால்தான் வகுப்பிற்கு வரமுடியவில்லை. நேற்று இரவுதான்
சரியானது. இதை உங்கள் தகவலுக்காகச் சொல்கிறேன்.
--------------------------------------------------------
இன்றையத் தேதிக்கு, அதாவது 10 அக்டோபர் 2014ற்கு ஒரு சிறப்பு
இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெரியாதவர்களுக்குப்
பிறகு நான் சொல்கிறேன்
---------------------------------------------------------
எதுவுமே நமக்கு உறுதுணையாக இருந்தால்தான், வாழ்க்கை
சுவைக்கும், மகிழ்ச்சியாக இருக்கும்!
பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால்தான் இளம் வயது வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும்!
வாத்தியார் உறுதுணையாக இருந்து சொல்லிக்கொடுத்தால்தான்
பாடங்கள் மண்டையில் ஏறும்!
மனைவி உறுதுணையாக இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!
வேலைபார்க்கும் இடத்தில், மேலதிரிகாரி உறுதுணையாக
இருந்தால்தான் வேலை செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும்!!
நண்பன் உறுதுணையாக இருந்தால்தான் நட்பு நன்மையைக்
கொடுக்கும். அல்லது மேன்மையைக் கொடுக்கும்
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!
அதுபோல நீங்கள் இருக்கும் அதாவது வசிக்கும் ஊர் உங்களுக்கு உறுதுணையாக இருந்தால்தான் வாழ்க்கை வளம் உடையதாக
இருக்கும், மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று எண்கணிதம்
சொல்கிறது.
வேலை வாய்ப்பின் காரணமாக நீங்கள் எந்த ஊரில் வேண்டு
மென்றாலும் வசிக்க நேரலாம். அல்லது தொழில் காரணமாக
அந்தத் தொழில் நடக்கக்கூடிய ஊரில் வசிக்க நேரலாம். ஊரை
எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டிற்கு என்ன
செய்வது? அல்லது வாழ்க்கையில் வளம் பெறுவதற்கு என்ன
செய்வது? வெளிநாட்டில் பணி செய்ய நேர்ந்தால் என்ன செய்வது?
பருத்தி வியாபாரம் செய்பவன் தேனி, ராஜபாளையம், மதுரை
அல்லது கோயமுத்தூரில் இருந்தால்தான் அந்த வியாபாரத்தைச்
சிறப்பாகச் செய்ய முடியும். அதை விட்டுவிட்டு அறந்தாங்கி,
புதுக்கோட்டை, பேராவூரணி, அல்லது தஞ்சாவூரில் இருந்து
கொண்டு அந்தத் தொழிலை எப்படிச் சிறப்பாகச் செய்ய முடியும்?
கணினி தொழில்நுட்பத்தில் பட்டம் வாங்கியவன், சென்னை,
பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் வேலை கிடைத்தால்
வேண்டாம் என்று சொல்லி, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரத்தில்
வேலை தாருங்கள் என்று அந்த நிறுவனங்களில் கேட்க முடியுமா?
Microsoft,IBM, Oracle. HP, Symantec போன்ற மிகப் பெரிய
நிறுவனங்களில் வேலை கிடைத்தால், இந்த ஊரில் வேலை
போட்டுத் தாருங்கள் என்று கேட்க முடியுமா? ஒரு தட்டுத் தட்டி
அனுப்பிவிட மாட்டார்களா? அது Delhi, Singapore, Washington,
New Jersey அல்லது Boston என்று எந்த ஊராக இருந்தாலும்,
எந்த நாடாக இருந்தாலும் சென்று, அந்த வேலையில் சேர
வேண்டுமல்லவா? நம் விருப்பத்தை எல்லாம் கேட்க
அங்கே யார் இருக்கிறார்கள்? நம் மாமா இருக்கிறாரா அல்லது
மாமனார் இருக்கிறாரா?
அதற்கு எண் கணிதம் ஒரு நல்ல பதிலைச் சொல்கிறது. அதைப்
பின்னால் பார்ப்போம். முதலில் எந்த ஊர் உங்களுக்குச் சரிப்படும்
என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.
முதலில் நீங்கள் பிறந்த ஊர் எப்படி என்று பார்ப்போம்! பிறந்த ஊரே சரிப்பட்டதுதானா என்று பார்ப்போம். “பார்த்து என்ன ஆகப் போகிறது? இப்போது அதை மாற்ற முடியுமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். பாடத்தை மட்டும் படியுங்கள். மற்ற விருப்பங்கள் உங்கள் சாய்ஸ்!
--------------------------------------------------------------------------------------------
நாம் பிறந்த எண்தான் நமக்கு அதிர்ஷ்ட எண். முதலில் உங்கள்
பிறந்த தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். 1 முதல் 9 வரை அதைச்
சுருக்கி ஒற்றைப் படை எண்ணாக மாற்றிக்கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு:
1, 10, 19, 28ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 1.
2, 11, 20, 29ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 2
3, 12, 21, 30ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 3
4, 13, 22. 31ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 4.
5, 14, 23ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 5.
6, 15, 24ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 6
7, 16, 25ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 7.
8, 17, 26ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 8
9, 18, 27ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 9.
நீங்கள் பிறந்த ஊர் சேலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எண்:
SALEM = 3+1+3+5+4 = 16 = 7 அந்த ஊருக்கான எண் 7. அந்த ஊரில் பிறந்த ஒருவருடைய தேதியும் 7 என்று வைத்துக்கொள்ளுங்கள் (ஒரு பேச்சிற்குத்தான் சாமிகளா) அவருக்கு மதுரையும், கோயமுத்தூரும்
சரிப்பட்டு வராது.
ஏன்? ஒன்றும், ஒன்பதும் ஏழாம் எண்ணிற்கு உடன்படாத எண்கள்
Madurai = 4+1+4+6+2+1+1= 19 = 1
Coimbatore = 3+7+1+4+2+1+4+7+2+5 = 36 = 9
நமது மாநிலத்தின் தலைநகரம் ஆரம்ப காலத்தில் சென்னப்ப நாயக்கர்
என்ற தனிமனிதருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆமாம் மொத்த
இடமும் சொந்தமானதாக இருந்தது.
The name Chennai is a shortened form of Chennaipattanam, the name of the
town that grew around Fort St. George, which was built by the English in 1639. Chennapattanam was named after the Telugu ruler Damarla Chennappa
Nayakudu, Nayaka of Kalahasthi and Vandavasi, father of Damarla Venkatadri
Nayakudu, from whom the English acquired the town in 1639. The first official
use of the name Chennai is said to be in a sale deed, dated 8 August 1639,
to Francis Day of the East India Company.
The city's colonial name, Madras, is believed to have been derived from
Madraspattinam, a fishing village north of Fort St. George. However,
it is uncertain whether the name 'Madraspattinam' was in use before
European influence.
After the British gained possession of the area in the 17th century,
the two towns, Madraspattinam and Chennapattinam, were merged, and
the British referred to the united town as Madrasapattinam. The state
government officially changed the name to Chennai in 1996, at a time when
many Indian cities were being renamed. However, the name Madras
continues to be occasionally used for the city as well as for places
named after the city, such as the University of Madras and The Indian
Institute of Technology, Madras. (தகவல்: விக்கி மஹாராஜா)
1996ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் என்ற பெயர்தான் நிலவியது.
MADRAS = 4+1+4+2+1+3 = 15 = 6
CHENNAI = 3+5+5+5+5+1+1 = 25 = 7
ஆறு என்ன எண் சுக்கிரனின் எண். அந்த ஆறு எண்ணில் பெயர்
இருந்தவரை சென்னை கலைத்துறையில் கொடி கட்டிப் பறந்தது.
7 என்று மாறிய பிறகு அதே கொடி பறந்து கொண்டிருக்கிறதா
என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
இரண்டு பெயர்கள் உள்ளதே? இரண்டு எண்கள் உள்ளதே எதை எடுத்துக்கொள்வது? இரண்டு பெண்டாட்டிக்காரன்கதைதான்.
1996ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் மூத்த தாரத்தின்
பிள்ளைகள். அவர்கள் MADRAS என்பதையே எடுத்துக்கொள்ளலாம்!:-)))
----------------------------------------------------------------------------------------------
எண்ணிற்கு உரிய ஆங்கில எழுத்துக்கள்:
1 = A, I, J, Y, Q
2 = B, K, R
3 = C, G, L, S
4 = D, M, T
5 = E, H, N, X
6 = U, V, W
7 = O, Z
8 = F, P
----------------------
ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள்
A = 1, B = 2, C = 3, D = 4, E = 5
F = 8 G = 3, H = 5, I = 1, J = 1
K = 2, L = 3, M = 4, N = 5, O = 7
P = 8, Q = 1, R = 2, S = 3 T = 4
U = 6. V = 6, W = 6, X = 5, Y = 1, Z = 7
------------------------------------------------
1. நீங்கள் முதலில் உங்கள் பிறந்த ஊருக்கும் உங்களுக்கும் உள்ள பொருத்தத்தைப் பாருங்கள்.
2. அடுத்து வசிக்கும் ஊருக்குப் பாருங்கள்.
3. அது பொருந்தவில்லை என்றால், எண் கணிதம் மாற்று வழியைச் சொல்லியிருக்கிறது. அதைச் சொல்லித் தருகிறேன்.
4. அடுத்து ஜோதிடம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? அதையும் எழுதுகிறேன். பொறுத்திருங்கள்
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்