திங்கள், 5 ஜனவரி, 2015

ஆவணியில் புத்தாண்டா?




அறிவன் என்று அழைக்கப்பட்ட ஜோதிடன்,
நான்கு திசைகளையும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி கவனித்து,
மழை வரவு குறித்த விவரங்களை முன் கூட்டியே
தெரிவிக்க வேண்டியது அவனது முக்கியத் தொழில்.

சரியான காலத்தில்சரியான அளவில் மழை பெய்தால்
அது அரசனது நல்லாட்சிக்குச் சாட்சி.
நான்கு திசைகளிலும் மழை மேகம் சூழ்ந்து மழை பெய்தால்,
அந்த அரசன் மட்டுமல்ல,
அவன் முன்னோர்க்ளும்,
சிறப்பான அரசாட்சி என்னும் ‘திகிரியைச் (அரசச் சக்கரம்)
செலுத்தினார்கள் என்பது பொருள் என்கிறது பத்துப்பாட்டு 69.

மழை வரவு, மழையின் அளவு என்பவற்றின் அடிப்படையில்
நாட்டு வளம் இருக்கவே,
மழை வருமா அல்லது பொய்க்குமா என்பதை
சாமானிய மக்களும் அறிந்திருந்தார்கள் என்று நினைக்கும்படி,
சில விவரங்கள் மீண்டும் மீண்டும் சங்க நூல்களில் வருகின்றன.

அவற்றில் முக்கியமானவைசுக்கிரன் கிரகம் அமைந்த நிலையாகும்.
சுக்கிரன் தென் திசையில் சஞ்சரித்தால் அந்த வருடம் மழை பொய்க்கும்,
செவ்வாய் இருக்கும் ராசியில்சுக்கிரனும் இருந்தால் மழை பெய்யாது.
மழை தரக்கூடிய நாள் நக்ஷத்திரத்தில் சுக்கிரன் நிற்க வேண்டும்.
நாள் நக்ஷத்திரம் என்பது சந்திரன் இருக்கும் நக்ஷத்திரம்.
சந்திரன் ஆயில்யம்மகம்திரிவோணம்அவிட்டம்
ஆகிய நக்ஷத்திரங்களைக் கடக்கும் போது
மழை பெய்யும் என்பது மரபு.
அந்த நக்ஷத்திரங்களில் சுக்கிரன் நின்றால்
கண்டிப்பாக மழை பெய்யும்
என்ற எண்ணம் இருந்தது.
முந்தின பகுதியில் சந்திரன் அவிட்டத்தில்
இருந்த அமைப்பைக் கண்டோம்.
அப்படிப்பட்ட அமைப்பில் மழை பெய்யும்.

இவை எல்லாம் மூட நம்பிக்கை அல்ல.
காலம் காலமாக அறிவர்கள் இயற்கையை உன்னிப்பாக நோக்கி,
மழை வரக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கண்டுதெளிந்து
அவற்றை விதிமுறைகளாக எழுதி வந்துள்ளனர்.

மழையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு
எந்த நூலின் ஆரம்பத்திலும் மழையைப் போற்றினார்கள்.
கொடிநிலைகந்துழிவள்ளி என்னும்
தொல்காப்பிய சூத்திரம் (புறத்திணை இயல் 27)
இந்த வழக்கத்தைக் குறிக்கிறது.
தொல்காப்பிய இலக்கணமே இவ்வாறு இருக்க,
அந்தத் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் ஆரம்பத்தில்
நிலம்கருப் பொருள் என்று விவரிக்க ஆரம்பிக்கையில்,
தொல்காப்பியரும்
மழையிலிருந்துதானே ஆரம்பிக்க  வேண்டும்?

அதைதான் அவர் செய்தார்.
காரும் மாலையும் முல்லை’ (பொரு- 6)
என்று மழைக் காலத்திலிருந்துதான்
தொல்காப்பியர் ஆரம்பிக்கிறார்.
ஆனால் இந்த சூத்திரத்தைக் கொண்டு,
ஒரு சாரார்,
மழைக் காலம் ஆரம்பிக்கும் ஆவணி மாதமே
தமிழர்களது வருட ஆரம்பமாக இருந்திருக்க வேண்டும்.
பழங்காலத் தமிழன் ஆவணியில்தான்
புத்தாண்டு ஆரம்பித்தான் என்கின்றனர்.

அண்டை மாநிலமான கேரளத்தில் ஆவணியில் புத்தாண்டு ஆரம்பிக்கிறது.
அந்தப் பகுதி மூவேந்தர் ஆட்சிக் காலத்தில்
சேர மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.
இதனால் தமிழ் பேசும் மக்கள்
ஒரு காலத்தில் ஆவணியில் புத்தாண்டை ஆரம்பித்தனர்
என்று ஒரு வாதம் இருக்கிறது.

இந்த வாதத்தைக் கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது.
எவனை ‘இவன் திணித்தான்திணித்தான்
என்று திட்டுகிறார்களோ,
அவன் பின்பற்றியதை,
தாங்களாகவே சுவீகரித்துக் கொள்ள விரும்புகிறார்கள்!
ஆவணியில் புது வருடம் என்பது,
பார்ப்பனர்களது கல்வியாண்டு தொடங்கும் நேரமாகும்.

இன்றைக்குக் கல்வியாண்டு என்பது
ஜூன் மாதம் தொடங்குகிறது.
கோடைக் காலத்தில் நீண்ட விடுமுறை கொடுத்துவிட்டு,
வெயில் தணிந்தபின் புதிய கல்வியாண்டை ஆரம்பிக்கிறோம்.
இப்படிதட்ப வெப்பம், வசதி
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முறைகள் எழுந்துள்ளன.

பார்ப்பனனைப் பொருத்த வரையில்
உத்தராயணத்தில் அவனுக்கு
கோவில்திருவிழா என வெளி வேலைகள் அதிகம்.
அவன் படிப்பதற்கோ,
மற்றவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கோ
நேரம் இருக்காது.

ஆனால் ஆவணி தொடங்கி மழைக்காலம் ஆரம்பித்து விடும்.
அப்பொழுது வெளியே செல்ல முடியாது.
அந்த நேரத்தை வேதம் மற்றும் வேதாங்கம் பயில
(பயிற்றுவிக்கப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஆவணி துவங்கி வளர்பிறைக் காலத்தில் வேத அத்தியயனமும்,
தேய்பிறைக் காலத்தில் வேதாங்க அத்தியயனமும் செய்து,
வேதக் கல்வியைக் கற்றார்கள்.
இந்தக் கல்வி மார்கழி வரை தொடரும்.
அதற்குப் பிறகு உத்தராயணம் ஆரம்பிக்கவே,
கோவில்திருவிழா வேலைகள் என்று மீண்டும் ஆரம்பிக்கும்.
அப்படியும்,
தை என்னும் புஷ்ய மாதத்தில் சுப காரியங்கள் செய்ய மாட்டார்கள்.
அயனம் ஆரம்பித்த முதல் மாதத்தில் தெய்வ காரியம்தான் செய்வார்கள்.
அதன் படி உத்தராயண முதல் மாதமான தை (புஷ்ய மாதம்),
தக்ஷிணாயன முதல் மாதமான ஆடி
ஆகிய இவ்விரண்டு மாதங்களிலும்,
தெய்வ வழிபாட்டுச் செயல்கள் இருக்கும்.


உத்தராயணம் முழுவதும் அவர்களுக்குப் படிக்க நேரம் இருக்காது.
மீண்டும் தக்ஷிணாயனம் ஆரம்பித்த பிறகு,
ஆவணியில் வேதம் பயிலுதல் தொடங்கும்.
இதற்கு ஆதாரம் மனு ஸ்ம்ருதி 4-95.
இந்த வேதக் கல்வியாண்டை பிரம்ம சூத்திர உரையிலும்
ராமானுஜர் எழுதியுள்ளார்.

இடையிலும் மாதாமாதம் அனத்தியயன நாட்கள் என்று,
படிப்பு சொல்லிக் கொடுக்காத நாட்கள் வரும்.
அமாவாசை போன்ற நாட்கள் படிப்பு சொல்லிக் கொடுக்காத நாட்கள்.
அந்த நாட்களில் அவர்களுக்கு பித்ரு ஹோமம்
போன்ற வேலைகள் இருப்பதால்
அப்பொழுதெல்லாம் படிப்புக்கு லீவு நாட்கள்.
இப்படி பிராம்மணர்களுக்கு அமைந்த கல்வியாண்டை,
ஸரஸ்வதி பிராம்மணார்கள் குடியேறிய பகுதியான
கேரளக் கரையோரப் பகுதிகளில்
அந்தக் குடிகளுடன் தொடர்பு கொண்ட
ஒரு மன்னன் ஆரம்பித்து வைத்ததே
கொல்லம் ஆண்டுகள் என்னும்
ஆவணியில் ஆரம்பிக்கும் ஆண்டுகள்.


உதய மார்த்தாண்ட வர்மன் என்னும் அரசனால்
கொல்லம் என்னும் நகரில் ஆரம்பிக்கப்பட்டதால்,
அந்த வருட முறை
கொல்லம் ஆண்டு என்று வழங்கப்பட்டது.


இதைப் பார்த்து,
தாங்களும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தால்
அந்த அரசனைப் போல
ஆண்டுகளை மாற்றும்,
அல்லது உண்டாக்கும் உரிமையும்,
அதிகாரமும் வந்துவிடுகிறது என்று
திராவிடவாதிகள் நினைத்து விடுகிறார்கள்.


அரசர்கள் தங்கள் மனம் போன போக்கில்
மாற்றங்களைக் கொண்டு வந்ததில்லை.
கொடுங்கோல் அரசர்கள்தான் மனம் போன போக்கில்
மாற்றங்களைச் செய்வார்களே தவிர,
தமிழக மூவேந்தர்கள் அவ்வாறு செய்ததில்லை.


உதய மார்த்தாண்ட வர்மன் என்னும் அந்த அரசன்
அந்த மாற்றத்தைத் தன்னிசையாகச் செய்யவில்லை.
தன்னைச் சுற்றியுள்ள புலவர்கள் புகழ் பாடினார்கள்
என்று செய்யவில்லை.
பார்ப்பனர்கள் அவ்வாறு செய்யத் தூண்டினார்கள்
என்று செய்யவில்லை.
அவன் செய்த மாற்றம் மறைந்த ஒரு சாஸ்திரத்தை,
மறக்கப்பட்ட ஒரு வழக்கத்தை
வாழச் செய்வதற்காகச் செய்ததாகும்.


அது என்ன என்று பார்ப்பதற்கு முன்னால்,
கொல்லம் வருடம் கணக்கிடப்படும் முறையை
இந்த இணைப்பில் படிக்கவும்


இதில் வருடங்களின் எண்
கடபயாதி பததி என்னும் முறையில்
கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்
இது இன்று மறைந்து விட்ட வேதக் கணிதம் ஆகும்.
இந்த முறையில் சமஸ்க்ருத எழுத்துக்களுக்கு
எண் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த எண் மாத்திரையல்ல.
மாத்திரை என்பது ஒரு எழுத்தை ஒலிக்கும் கால அளவு.
ஆனால் இந்த எண்,
ஒரு எழுத்துக்கு உரித்தான ஒரு அளவு.


எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று
முன்னோர் சொன்னார்கள் அல்லவா?
அதுதான் இது.
எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களைப் போன்றவை.
ஒரு கண்ணும் மறு கண்ணும் இயைந்து வேலை செய்கின்றன.
அது போல எண்ணும், எழுத்தும் இயைந்து
ஒன்றாக வேலை செய்கின்றன.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் உண்டு.
அதனால் ஒரு எண்ணைப் பார்த்தே
அதன் எழுத்து என்னவென்று சொல்லி விடலாம்.


எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள்
என்று உள்ளன.
அப்படி ஏன் பெயர் வைத்தார்கள் என்று நாம் சிந்திப்பதே இல்லை.
உயிர் எழுத்துக்கு உயிர் உண்டு.
அவற்றுக்கென வீரியம் உள்ளது.
உயிர் கரை படியாதது.
உயிர் அழியாதது.     
அதனால் அப்படி.


ஆனால் மெய் அப்படிப்பட்டதல்ல.
அந்த மெய்யுடன் உயிர் சேர்ந்தால்தான் உபயோகமாகும்.
அப்படி உண்டாவது உயிர் மெய் எழுத்தாகும்.
அந்த உயிர் மெய் எழுத்தில் உள்ள உயிர்
தனக்கெனெவே வீரியம் கொண்டது.
அந்த வீரியம் அளவிட முடியாதது.
அந்த உயிர், மெய்யுடன் சேரும் போது,
அதன் காரணாமாக உண்டாகும் உயிர் மெய் எழுத்துக்கு
ஒரு வீரியம் கொடுக்கிறது.


அதை ஒரு எண்ணால் குறித்தார்கள்.
நாம் சர்வ சாதாரணமாக நினைக்கும்
எழுத்துக்குப் பின்னால் எத்தனை அர்த்தம் இருக்கிறது பாருங்கள்.
அப்படி எண்களால் குறிக்கப்படும் எழுத்துக்கள்
கடபயாதி பததி எனப்பட்டது.

சமஸ்க்ருத்த்தில் எண்- எழுத்து சேர்க்கையைக் கீழே காணலாம்.
(படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்)




இதில் ஞ,ன என்பவற்றுக்கு எண் இல்லை.
இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும்,
அவ்வவற்றின் வரிசையில் அமைந்துள்ள எழுத்துக்களுக்கும்
அதே எண்ணைக் கொடுக்கும்.
வரிசை என்பது (உ-ம்) க- வரிசை,  க, கா, கி, கீ என்பன.  

வரிசையாக எழுதப்பட்ட உயிர்மெய் எழுத்துக்களைப் பார்த்தால்,
முதல் எண்ணான 1-இல் அமையும் எழுத்துக்கள்
க, ட, ப, ய என்பன.
அதனால் இவற்றுக்கு ‘கடபயாதி பததி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த முறையில் ஆண்டின் எண் போன்றவற்றைக்
கொல்லம் ஆண்டில் பயன்படுத்தபடுத்துகிறார்கள்.

கொல்லம் ஆண்டு 1000 ஆண்டுகளுக்கு முன் உண்டானதால்
இந்த பத்தி ஏதோ சமீபத்திய கண்டுபிடிப்பு என்று நினைக்க வேண்டாம்.

இது சமஸ்க்ருத மொழியில் அனாதி காலம் தொட்டு வருவது.
இந்த முறையில்தான் நூல்களில் பல
மறை பொருட்களை வைத்தார்கள்.


உதாரணமாக மஹாபாரதம் என்னும் நூல் பெயரை
18 என்று குறிப்பார்கள்.
இதில் 1= ய, 8 = ஜ.
சமஸ்க்ருதத்தில் எண்களைப் படிக்கும் போது,
வலது பக்கம் தொடங்கி இடது பக்கம் நோக்கிப் படிக்க் வேண்டும்.
வலது பக்கத்திலிருந்து படிக்கும் போது 8, 1 என ஜய என்று படிப்பார்கள்.
மஹாபாரத்துக்கு வியாசர் வைத்த பெயர் ‘ஜய’ என்பதாகும்.


இதுவே எண் கணிதத்தின் அடிப்படையாகும்.
இதை நம் நாட்டவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு,
கீரோ (Cheiro)  என்பவர், நியூமராலஜி என்னும்
எண் கணித சாஸ்திரத்தை உருவாக்கினார்.




நம்மிடமிருந்து அவரிடம் போய்,
அவரிடமிருந்து நாம் இன்று வாங்கிக் கொண்டு
பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்!!


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்,
உயிர்மெய் எழுத்துக்கான இந்த எண்கள் வீரியம் வாய்ந்தவை.
இவற்றின் அடிப்படையில் ரிஷிகள் மந்திரங்களை உண்டாக்கினர்.
(கீரோவின் எண் கணிதத்தில் இந்த வீரியம் உண்டாக்கப்படவில்லை.)
ஆனால் ரிஷிகள் உண்டாக்கின மந்திரங்களில் உள்ள எழுத்துக்களுக்கு
இந்த வீரியம் உண்டு.
உயிராக அந்த ரிஷிகள் இருந்து,
அவர்கள் தவ வலிமையால்,
இந்த எண்களின் வீரியத்தைக் கூட்டி,
உபதேசித்தனர்.

இது ஸரஸ்வதி நதி தீரத்தில்
வைவஸ்வத மனு குடியேறின காலத்திருந்தே இருந்து வந்தது.
காலப்போக்கில் அழிந்து போனதை மீண்டும்
எடுத்துக் கொடுத்தவர் ஆரிய பட்டர்.
அவர் எழுதிய ஆரியபட்டீயம் என்னும் ஆரிய சித்தாந்தத்தின்
முதல் பகுதியான
‘கீதிக பதத்தில்’,
தஸகீதிக சூத்திரம்’ என்னும் பெயரில்
இந்தக் கடபயாதியையும்,
மேலும் சில எழுத்து – எண் கணக்குகளையும் எழுதி வைத்துள்ளார்.




இதைக் கணித்த்தில் பயன்படுத்தும் முறையையும் தந்துள்ளார்.
அதன்படி பெரிய எண்களை,
ஒரு சில எழுத்துக்கள் கொண்ட சிறிய சொல்லாக எழுத முடியும்.
காலம், கருத்து போன்றவற்றை எளிதாகச் சொல்ல
இது பயன் படும்.


உதாரணமாக ஒரு சதுர் மஹா யுகம் என்பது 43,20,000 வருடங்கள்.
அதை ‘க்யூக்ர்’ (khyu ghr)  என்று சமஸ்ருத்த்தில் எழுதலாம்.
அதாவது 7 ஸ்தானமுள்ள எண்ணை ஒரு சிறிய எழுத்தில் காட்ட முடியும்.
இதில்
khyu = khu + Yu
(khu = kha X U = 2 X10,000 = 20,000
Yu = ya X U = 30 X 10,000 = 3,00,000)
Ghr = gha X r = 4 X 10,00,000 = 40,00,000
Therefore
Khyu ghr = 20,000 + 3,00,000 + 40,00,000 =43,20,000

இது சதுர் யுகத்தின் கால அளவு.


இவரைப் போலவே 2-ஆம் ஆரிய பட்டர் என்பவரும்
தான் எழுதின ‘மஹா சித்தாந்தத்தில்’
கடபயாதி பத்தியைப் பயன் படுத்தும்
வேறு முறைகளையும் எழுதியுள்ளார்.
மறைந்து விட்ட ஒரு அறிவை,
1000 வருடங்களுக்கு முன்னால்
வெளிக் கொணர்ந்தவர்கள்
ஆரியபட்டர் -1 (ஆரியபட்டீயம் எழுதியவர்)
ஆரியபட்டர் -2 ஆகியோரே.
இந்தியாவின் முதல் செயற்கைக் கோள்
ஆரியபட்டரின் பெயரில் அமைந்துள்ளது என்பது
கணித்த்துக்கும், விஞ்ஞானத்துக்கும்
அவர் ஆற்றிய பங்கைப் பறை சாற்றுகிறது. 




ஆரியபட்டர் -1 பாடலிபுத்திரத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இவரது நூல்களுக்கு உரை எழுதியவர்கள்
இவர்கள் ‘அஸ்மாகம்” என்னும் இடத்தைச் சேர்ந்தவர்
என்று எழுதியுள்ளார்கள்.
அஸ்மாகம் என்பது திருவிதாங்கூர் எனப்படும் திருவனந்தபுரமாகும்.

முன்பே பகுதி 55 இல்
ஆரியம் என்ற ஒரு இடம் தென்னிந்தியாவில் இருந்தது
என்பதைக் கண்டோம்.
அங்கு வாழ்ந்த்தால் ஆரியபட்டர் என்ற பெயர் பெற்றிருக்கலாம்
என்றும் சொன்னோம்.
இவர்கள்
ஸரஸ்வதி பிராம்மணர்கள்.

பரசுராமர் காலத்திலேயே மேற்குக் கடற்கரை முழுவதும்,
சரஸ்வதி பிராம்மணர்கள் குடியேறினார்கள் என்று கண்டோம்.
பெரிய புராணத்திலும், பரசுராமர் அங்கு நிலம் மீட்ட விவரம் வந்துள்ளது
என்றும் கண்டோம்.
("பரசுபெறு மாதவ முனிவன் பரசுராமன் பெறு நாடு"
பெரிய புராணம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம் 
விறன்மிண்ட நாயனார் புராணத்தின் முதல் செய்யுள்)
 


அந்தப் பகுதியை ஆண்டவன்
உதய மார்த்தாண்ட வர்மன் என்றும்
அவன் காலத்தில் கி.பி. 824 இல்
கொல்லம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது என்றும்
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மார்த்தாண்டம் என்னும் குலப் பெயர்,
காஷ்மீரப் பகுதியுடன் தொடர்புடையது.

மார்த்தாண்டம் என்பது சூரியனது பெயர்.
ஒரு வருஷத்தில் வரும் 12 மாதங்களுக்கும்
சூரியனுக்கு ஒவ்வொருவித பெயர் உண்டு.
’அதிக மாதம்’ வரும் ஆண்டில்,
13 ஆவது மாதத்துக்கு மார்த்தாண்டம் என்று பெயர்.
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தில்
இந்தப் பெயர் வருவதைக் காணலாம்.
மார்த்தாண்டம் என்றால், பிரளயம் ஆன பிறகு
மீண்டும் புது உலகம் உண்டாகுதல் என்பதாகும்.

சூரியனுக்கு உரிய இந்தப் பெயரில்
சூரியன் கோவில் ஒன்று,
உச்சியில் சூரியன் என்றைக்குமே சஞ்சரிக்காத
காஷ்மீர் மாநிலத்தில் ஆனந்தநாக் என்னும்
இடத்துக்கு அருகே காணப்படுகிறது.




இந்தியாவில் உள்ள சூரியன் கோவில்களிலேயே இது பழமையானது.
இன்று இடிபாடுகளுடன் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும் ஒரு கருத்து உள்ளது.
கி.பி 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்றும் ஒரு கருத்து உள்ளது.
கட்டப்பட்ட காலத்தை ஒதுக்கி விட்டுப் பார்த்தால்,
பொதுவாக மார்த்தாண்டம் கோவில் என்பது,
பிரளயத்திலிருந்து தப்பிய மக்கள்
தங்கள் புனர் வாழ்வு ஆரம்பிக்கும் முன் வழிபடுவது.  
இது அமைந்த இடம்,
வெள்ளத்தில் தப்பிய மனு,
சரஸ்வதி நதியின் வழியாக இமய மலையில் நௌபந்தனம்
என்ற இடத்தை அடைந்தானே,
அதை நினைவு படுத்துகிறது.
பிரளயத்திலிருந்து தப்பிய மக்கள்,
மார்த்தாண்டம் ஆளும் 13 ஆம் மாதத்தில்
இறந்த பித்ருக்களுக்கு வழிபாடு செய்வார்கள்.


அந்த நினைவோடு இருப்பவர்கள்
அல்லது, அத்தகைய நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டவர்கள்,
மார்த்தாண்டம் என்னும்
பரம்பரைப் பெயரைக் கொண்டிருக்க முடியும்.


திருவாங்கூர் அரச பரம்பரையினர்
பரசுராமர் மீட்ட இடங்களில் குடியேறிய பரம்பரை என்பதால்,
அவர்களுக்கும் சரஸ்வதி பிராம்மணர்களுக்கும்
தொடர்பு இருக்க்க்கூடும்.
சரஸ்வதி நதி தீரத்தில் இருந்து வந்த வழக்கங்கள்
அவர்களிடமும் இருக்கக்கூடும்.  


பண்டைய சமஸ்க்ருத பததியான இந்த கடபயாதியை மீட்டு,
அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர
அவர்கள் விரும்பியிருப்பதில் சந்தேகமில்லை.
ஆரியம் என்ற ஒரு நாடு தென்னிந்தியாவில் இருந்தது என்பது
அவர்கள் ஆளுகைக்குள் இருந்த பகுதியாக இருக்கலாம்.
அங்கே ஆரியபட்டர் கடபயாதியை அளித்தார்.
அதை மார்த்தாண்ட வர்மன் வரவேற்று,
காலக் கணக்குக்குப் பயன் படுத்திக் கொண்டார்.


ஆரியம் என்ற இடமும்,
கடபயாதியை விவரித்த ஆரிய பட்டரும்,
அஸ்மாகம் என்னும் திருவாங்கூரும்,
அதன் அரசனான மார்த்தாண்ட வர்மனும்
அந்த ஒரு பூகோளப் பரப்புடன் சம்பந்தப் படவே,
கடபயாதியை அடிப்படையாகக் கொண்ட
கொல்லம் ஆண்டுக் கணக்கு தோன்ற
இவையும்,
ஆரியபட்டருக்கும், மார்த்தாண்ட வர்மனுக்கும்
இருந்த சரஸ்வதி தீரத் தொடர்பும்
அதனுடன் வரும் பழைய சமஸ்க்ருதப் பததிகளும்
ஒருங்கிணைது கொல்லம் வருடமாக
உருக்கொண்டது எனலாம்.

இந்த ஆண்டு வழக்கம் சமஸ்க்ருதப் பாடமும்,
வேதம் வளர்க்கவும் உறுதுணை செய்த
வேதக் கல்வி வழக்கமாகும்.

மார்த்தண்ட வர்மனுக்கு முன்பே,
சேரன் செங்குட்டுவன் (கண்ணகிக்குக் கோவில் எழுப்பியவன்)
வடக்கிலிருந்து சோம யாகம் செய்வோரை அழைத்து வந்து,
தன் நாட்டில் சோம யாகம் செய்வித்தான் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்” (நடுகல் காதை – வரி – 147, 148)

சதுக்க பூதம் என்பது நாளங்காடி பூதம் போன்றது.
இவை இந்திரன் வசம் இருப்பது.
உரையாசிரியரான அடியார்க்கு நல்லார்,
இந்திரனது அமராவதிக்குச் சென்று
இந்த சதுக்க பூதத்தைக் கொண்ர்ந்தது மட்டுமல்லாமல்,
சோம யாகத்தைச் செய்வித்தான் என்கிறார். 


எனவே பிராம்மணர்கள் அதிகமாக இருந்த சேரப் பகுதிகளில்
வேதக் கல்வியாண்டு அமைந்தது ஆச்சரியமில்லை.
அழியும் நிலையில் இருந்த கடபயாதிக்கு
மறு வாழ்வு கொடுத்து,
மனித குல சொத்தான அந்த அறிவைக்
காப்பாற்றிய பெருமை
ஆரியபட்ட்ருக்கும், மார்த்தாண்ட வர்மனுக்கும் உரியது.


தமிழிலும் வீரியம் மிகுந்த உயிர் மெய் எழுத்துக்கள் இல்லையா
என்று கேட்கத்தோன்றும்.

இருந்தன என்பதை
‘மந்திரம்’ குறித்த தொல்காப்பிய சூத்திரம் காட்டுகிறது. 

அதை அடுத்த கட்டுரையில் காண்போம். 


விதி 6 : ராகு, கேதுகளுக்கான விதி.

ராகு கேது இருவரும் ராசி சக்கரத்தில் அப்பிரதட்சனமகவே (எதிர் திசையில்) சுற்றி வருவார்கள், என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

எனவே இவ்விருவருக்கும் 2 மிடம் என்பது 12 மிடத்தைக் குறிக்கும்.

அதாவது ராகு அல்லது கேது மேஷத்தில் இருந்தால் மேஷத்திற்கு 12 மிடமாகிய மீனம், ராகு அல்லது கேதுவுக்கு 2 மிடமாகும் (இதை கவனமாக வைத்துக்கொள்ளவும்)

இனி விஷயத்திற்கு வருவோம்

ராகுவுக்கு (கேதுவுக்கு) 2 ல் ஏதேனும் கிரகம் இருந்தால் அந்த கிரகம் ராகு (கேது) வுடன் இணைவு பெற்று செயல்படும்.

கீழ்க்கண்ட உதாரண ஜாதகத்தைப் பாருங்கள்

Image

ராகுவுக்கு 2 ல் சனி இருக்கிறார். (சனிக்கு 2 ல் ராகு இருக்கிறார் என்றும் கூறலாம்) எனவே சனி ராகுவுடன் இணைவு பெற்று செயல் படுவார்.

மேலும்...

சனிக்கு 5 ல் உள்ள புதனுக்கும், 9 ல் உள்ள சந்திரனுக்கும் ராகு (சனி வழியாக) தனது தாக்கத்தை தருவர்.

ராகு (கேது)வுக்கு 5 ல் ஏதேனும் கிரகமிருந்தால் 6 ல் உள்ள கிரகத்திற்கும் 6 க்கு திரிகோணத்தில்(ராகுவுக்கு 10 ல்) உள்ள கிரகத்திற்கும் தனது தாக்கத்தை தருவார்.

கீழ்க்கண்ட கட்டத்தைப் பாருங்கள்.

Image

ராகுவுக்கு 5 ல் சனி இருக்கிறாரா? ராகுவுக்கு 6 ல் (சனிக்கு 12 ல்) செவ்வாயும், செவ்வாய்க்கு திரிகொனத்தில் (ராகுவுக்கு 10 ல்) குருவும் இருக்கிறார்களா?

ராகு சனியின் வழியாக செவ்வாய்க்கும் குருவுக்கும் தனது தாக்கத்தை தருவார்.

மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன் " ராகு கேதுக்கள் ராசி சக்கரத்தில் எதிர் திசையில் சுற்றிவருவார்கள்.

ராகு கேது இவர்கள் குறித்த பலன்களை ஆய்வு செய்யும்போது மிக கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். சிறிது கவனச்சிதறல் ஏற்பட்டாலும் பலன் மாறிவிடும். இவர்களுக்கு மட்டுமல்ல மற்ற கிரகங்களுக்கும் இப்படித்தான். நாடி முறை மிக மிக எளிமையானது. அதேசமயத்தில் புரிந்துகொள்ளும் வரை சற்று கடினமானதும் கூட.

வக்கிரம் பெற்ற கிரகங்களுக்கும் மேற்படி ராகு கேதுக்களுக்கான விதிகள் அப்படியே பொருந்தும்.

வக்கிர கிரகங்களுக்கும் ராகு கேதுக்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

வக்கிர கிரகங்களை ஆய்வு செய்யும்போது, வக்கிரம் என்பதை தற்காலிகமாக மறந்துவிட்டு 2, 3, 4, 5 ம் விதிகளின்படியும்,

வக்கிரம் என்ற நிலையில் மேற்படி ராகு கேதுக்க்ளின் விதிகளின்படியும் ஆய்வு செய்து இரண்டு பலன்களையும் கலந்து சொல்லவேண்டும் 


அடுத்தப் பதிவில் பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கான விதிகளை பார்க்கலாம்.

அன்புடன்...

ஞாயிறு, 4 ஜனவரி, 2015


விதி 4 : ஒரு கிரகம் நின்ற ராசிக்கு எதிர் திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும் (3,7,11 - ல் உள்ள கிரகன்களோடு இணைவு பெறும்)

உதாரணமாக முதல் பதிவில் உள்ள உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறார்கள்.

மேஷம் கிழக்கு ராசி. கிழக்குக்கு எதிர் திசை மேற்கு. மேற்கு ராசிகள் மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை ஆகும்.

மிதுனத்தில் குரு இருக்கிறார். துலாத்திலும் கும்பத்திலும் கிரகங்கள் ஏதும் இல்லை. எனவே சூரியன் சுக்கிரன் இருவரும் குருவுடன் இணைவு பெற்று செயல் படுவார்கள்.

வடக்கு ராசிகளாகிய கடகத்தில் செவ்வாயும், மீனத்தில் புதன் கேது இருவரும் இருக்கிறார்கள்.விருச்சிகத்தில் யாரும் இல்லை.

வடக்குக்கு எதிர் திசையாகிய தெற்கு ராசிகளாகிய ரிஷபத்திலும் மகரத்திலும் கிரகங்கள் இல்லை. கண்ணியில் மட்டும் சந்திரன் ராகு இருவரும் இருக்கிறார்கள்.

எனவே செவ்வாய், புதன் கேது மூவரும் சந்திரன் ராகு வுடன் இணைவு பெற்று செயல் படுவார்கள்.

விதி 5 : கிரகம் நின்ற ராசிக்கு முன் பின் ராசிகளில் உள்ள கிரகங்களோடும் இணைவு பெற்று செயல்படும். அதாவது 2, 12 - ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும்.

கடகத்தில் உள்ள செவ்வாய், மிதுனத்தில் உள்ள குரு, சிம்மத்தில் உள்ள சனி இருவரோடும் இனைந்து செயல் படுவார்.

சிம்மத்தில் உள்ள சனி, கடகத்தில் உள்ள செவ்வாய், கண்ணியில் உள்ள சந்திரன் ரகு உடன் இணைந்து செயல் படுவார்.

குறிப்பு: இதுவரை நாம் பார்த்த 5 விதிகளின் சுருக்கம்.

1. கிரகங்களை பாதசார அடிப்படையில் வரிசைப் படுத்திக் கொள்ளவேண்டும்

2. ஒரே ராசியில் உள்ள கிரகங்கள் இனைந்து செயல்படும்.

3. ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இணைவுபெற்று செயல்படும்.
அதாவது ஒரு கிரகம் தனக்கு 5,9 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும்

4. எதிர் திசை ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்.
அதாவது 3,7,11 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்

5. முன்பின் ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும் 
அதாவது 2,12 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்.

சிறப்பு குறிப்பு: 

1) ஒரு கிரகத்தோடு சேர்ந்து நின்ற கிரகங்களும், 5,9 ல் உள்ள கிரகங்களும் சேர்ந்து செயல்படும்போது 100 சதவீதம் பாதிப்பை தரும். (பாதிப்பு என்பது நல்லவிதமாகவும் இருக்கலாம், தீய விதமாகவும் இருக்கலாம். நன்மை தீமையை நிர்ணயம் செவது பற்றி பிறகு பார்க்கலாம்)

2) 7 மிடத்து கிரகம் 80 சதவீதமும் 3,11 மிட கிரகங்கள் 50 சதவீதமும் செயல்படும்

3) 2 மிடத்து கிரகம் 100 சதவீதமும் 12 மிடத்து கிரகம் 40சதவீதமும் செயல் படும்


மேலும் சில சிறப்பு விதிகளை அடுத்தடுத்த பதிவுகளில்....


நன்றி


அன்புடன்......