புதன், 31 டிசம்பர், 2014

அலியாக பிறப்பதற்கு ஜோதிட ரீதியான காரணம்


படைப்புகளில் மானுட வர்க்கத்தில் ஆண், பெண் என இரண்டு ஜாதிகள் உண்டு.
இதையல்லாது ஆணும் பெண்ணும் அல்லாத இரண்டும் கலந்த குணாதிசயம்,
செயல்படுகளையுடைய பிறப்பு என கூறப்படுவது அலி பிறப்பாகும். இவர்களின்
செயல்பாடுகள் செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தும் பெண்மையின் சுபாவத்தை ஒத்து போகும். இத்தகைய பிறப்புகளுக்கு ஜோதிட
ரீதியான கிரக அமைப்புகளும் உள்ளன சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டால் அந்த ஜாதகன் அலியாக பிறப்பான்.
சனியும் புதனும் இணைந்து இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து
கொண்டாலும் அவன் அலியின் குணாதிசயங்களை ஒத்து இருப்பான் செவ்வாய்
சூரியனுடன் சேர்ந்து ரிஷபம் துலாம் போன்ற ராசிகளின் தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது சந்திரனின் அம்சம் பெற்றாலும் அந்த ஜாதகன்
அலியாவான். மேலும் புதனுடைய வீடுகளாகிய , மிதுனம், கன்னி இந்த இரு வீடுகளில் ஒன்று லக்னமாகி  புதன் லக்னத்துக்கு ஆறாம்
வீட்டில் இருக்க அந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதி லக்கினத்தில் இருக்க அந்த ஜாதகன் ஆண்மைக்குறைவு உடையவனாக அல்லது அலியாக
 இருப்பான் இதை அல்லாது ஆன்மீக சான்றோர்களும் ரிஷிகளும் பிறக்கும் வாரிசுகள் அலியாக பிறப்பதற்கு ஒரு சில விளக்கங்களை
கொடுத்துள்ளனர். தாம்பத்ய உறவில் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இணையும் வேளையில் ஆணை விட பெண் அதிக
வலிமையுடையவளாக இருந்தால் அவளுக்கு பிறக்கும் குழந்தை பெண்குழந்தையாகவும் பெண்ணைவிட ஆண் வலிமையுடையவனாக
இருந்தால் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாகவும் ஆண் பெண் இருவருமே சம வலிமையுடையவர்களாக இருந்தால் அந்த சமயத்தில்
உருவாகும் கரு அலி தன்மை உடையதாக பிறக்கும் என்று சொல்லி உள்ளனர்.

ராகு -கேது பரிகாரங்கள் பலன்கள்



ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகுகேதுப் பெயர்ச்சி இம்முறை வாக்கியப் பஞ்சாங்கப்படி, நாளை 21-6-2014 சனிக்கிழமை அன்றும், திருக்கணிதப்படி அடுத்த மாதம் 12-7-2014ம் தேதியும் நடக்க இருக்கிறது. 

இம்முறை ராகுகேதுக்களின் மாற்றம் துலாம், மேஷ ராசியில் இருந்து கன்னி, மீனம் ராசிக்கு நடக்க இருக்கிறது. 

பொதுவாகவே உபய ராசிகள் எனப்படும் குரு, புதனின் வீடுகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளில் அமரும் ராகுகேதுக்கள் கெடுபலன்களைச் செய்வது இல்லை. 

அதிலும் “ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி” என்று துவங்கும் பழம்பெரும் பாடலின்படி கன்னி, ராகுவிற்கு மிகவும் பிடித்த வீடு என்பதாலும், கேதுவிற்கு மீனம் நட்புவீடு என்பதாலும் இம்முறை ராகுகேதுக்களினால் நன்மைகளே நடக்கும். தீமைகள் பெரிதாக இருக்காது. 

குறிப்பாக நமது மூலநூல்களில் பாபக்கிரகங்கள் 3, 6, 11 ல் மட்டுமே பலன் தரும் என்று கூறப்பட்டிருந்தாலும், அனுபவத்தில் 12 ம் வீட்டில் அமரும் ராகுகேதுக்களும் தீமை செய்வதில்லை என்பதால் இம்முறை மேஷம், கடகம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு ராகுவும், ரிஷபம், மகரம் ஆகிய ராசிகளுக்கு கேதுவும் நன்மைகளைச் செய்வார்கள். 

இவை தவிர்த்த மற்ற ராசிகளுக்கு கெடுதல்கள் நடக்குமா என்றால் நிச்சயம் கெடுதல்கள் நடக்காது. 

இரண்டு நாட்களுக்கு முன் “மாலைமலர்” நாளிதழில் நான் எழுதி இணைப்பாக வெளிவந்த ராகுகேதுப்பெயர்ச்சி பலன்களில் கூறப்பட்டுள்ள முறையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் மற்ற ராசியினர் கெடுதல்கள் நடைபெறாமால் காத்துக் கொள்ளலாம். 

நவக்கிரகங்களில் ராகுகேதுக்கள் மட்டுமே வித்தியாசமான கிரகங்கள் ஆகும். ஒன்பது கிரகங்களில் சூரியனும், சந்திரனும் ஒளிக்கிரகங்கள் எனவும் குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியோர் பஞ்சபூதக்கிரகங்கள் எனவும் ராகுகேதுக்கள் சாயாக்கிரகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. சாயா என்ற வார்த்தைக்கு நிழல் என்று அர்த்தம். 

ஏனெனில் மற்ற கிரகங்களைப் போல கல், மண்ணாகவோ அல்லது திரவ, வாயு ரூபமாகவோ ஆன நம் கண்களுக்குத் தெரியும் கிரகங்கள் அல்ல ராகு கேதுக்கள். 

பூமி சூரியனைச் சுற்றிவரும் சூரியப்பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் விரிவுபடுத்தப்பட்ட சந்திரப்பாதையும் வெட்டிக்கொள்ளும் பூமி மற்றும் சந்திரனின் நிழல்களான இரண்டு புள்ளிகளே ராகுகேதுக்கள் எனப்படுகின்றன. 

இந்த இரண்டு நிழல்களையும் துல்லியமாக அறிந்து இவைகளை கிரகங்களாக ஆக்கியதிலும், குறிப்பிட்ட இடங்களில் நாகநாத சுவாமி என இவைகளுக்கான பரிகாரக்கோவில்களை அமைத்ததிலும் நமது மேலான இந்துமத ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஞானிகளின் ஆழ்ந்த மெய்ஞானம் வெளிப்படுகிறது. 

மேலைநாட்டு ஜோதிடத்தில் இவைகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் மகரிஷி பராசரர் மனிதவாழ்வில் ராகுகேதுக்களின் தாக்கத்தை உணர்ந்து இவைகளுக்கு மற்ற கிரகங்களைப் போல தசை வருடங்களையும் அமைத்துள்ளார். இந்திய ஜோதிடத்தில் அவரால் ராகுவிற்கு பதினெட்டு வருடங்களும், கேதுவிற்கு ஏழு வருடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 

தசாபுக்தி அமைப்பில் உள்ள ஒரு சூட்சுமத்தை சொல்கிறேன்.. தெரிந்து கொள்ளுங்கள். 

சுபக்கிரகங்களான குருதசைக்கு முன் ராகுதசையும், சுக்கிரதசைக்கு முன் கேதுதசையும் வரும். அது ஏனெனில் வாழ்க்கையில் ஒரு மனிதனுக்குத் தேவையான பணம், புகழ், அந்தஸ்து, வீடு, வாசல், மனைவி, குழந்தைகள், வாகனம் போன்ற அனைத்து சுகங்களையும் அளிப்பவை குருவும் சுக்கிரனும். 

இந்த இரு சுபக்கிரகங்களும் ஒரு மனிதனுக்கு யோகம் அளிப்பதற்கான முன்னேற்பாடுகளை, அடிப்படை அஸ்திவாரங்களை ராகுகேதுக்கள்தான் முன்னரே எடுத்துச் செய்வார்கள். 

அதாவது அந்த மனிதன் பிற்காலத்தில் யோகமுடன், புகழுடன் எந்தத் துறையில் சிறந்து விளங்கப் போகிறானோ அந்த இடத்திற்கு அவனை நகர்த்தும் அமைப்பை ராகுகேதுக்கள் செய்வார்கள். இராகுகேதுக்களின் தசையில்தான் அவை நடக்கும். 

இந்த அமைப்பை தம் துறைகளில் உச்சத்திற்குச் சென்ற கலைஞர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்களின் ஜாதகங்களில் காணலாம். 

நம் சித்தர்களும் ஞானிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து அமைத்த அனைத்துக் கோவில்களுக்கும் பின்னால் மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து உன்னத அம்சங்களும் உள்ளன. 

அக்கோவில்களில் முறைப்படி வழிபடுவதன் மூலமும், அந்தத் திருக் கோவில்களுக்குள் ஒரு நாழிகைக்கும் (24 நிமிடங்கள்) குறையாமல் இருந்து அர்ச்சனை அபிஷேகம் போன்றவைகளைச் செய்வதன் மூலமும் நமது வாழ்க்கைக்குத் தேவையான கிரக வலுவைப் பெற்று நாம் மேம்பட முடியும். கிரக தோஷங்களைப் போக்கிக் கொள்ள முடியும். 

குறிப்பிட்ட கோவில்களுக்கு ஏற்றபடி நாம் கிரகவலுவைப் பெறுவதற்காக ஒரு நாழிகை, ஒரு ஜாமம், ஒரு இரவு என அந்த திருத்தலங்களுக்குள் நாம் இருப்பதற்கான காலவரையறையையும் நம் ஞானிகள் வகுத்திருக்கிறார்கள். ஸ்ரீ காளஹஸ்தி போன்ற புனித இடங்களில் நாம் ஓர் இரவு தங்கி பரிகாரம் செய்வது இந்தக் காரணத்திற்காகத்தான். 

 அதன்படி நாகநாதசுவாமி என்ற பெயரில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்துத் திருக்கோவில்களும், நாகதேவதைகளாக உள்ள அம்மன் கோவில்களும், சில புகழ்பெற்ற சுயம்புவான புற்றுக்கோவில்களும் ராகுகேதுக்களுக்கான பரிகாரக் கோவில்கள்தான். 

அந்த அந்தக் கோவில்களுக்கென உள்ள பரிகார முறைகளை நாம் செய்வதன் மூலம் ராகுகேது தோஷங்கள் நீங்கப் பெற்று நம் வாழ்வில் எல்லா நன்மைகளையும் நாம் அடையலாம். 

குறிப்பாக தொண்டை மண்டலம் எனப்படும் சென்னையைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஸ்ரீகாளஹஸ்தி மிகச்சிறந்த பரிகாரஸ்தலம். கேதுபகவானுக்கென உள்ள கண்கண்ட பரிகார ஸ்தலம் காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள அருள்மிகு சித்திரகுப்தன் ஆலயம். கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தன் என்பதால் கேது தோஷங்களைப் போக்கும் வல்லமை இத்திருக்கோவிலுக்கு உண்டு. 

தென்மாவட்டத்தவர்களுக்கு சோழப்பேரரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள ராகுபகவான் திருத்தலமும், கீழ்ப்பெரும் பள்ளத்தில் அமைந்திருக்கும் கேதுபகவான் திருக்கோவிலும் இந்த நிழல் கிரகங்களின் தோஷம் போக்குபவை. 

சோழர்களின் முதன்மை மந்திரியாக இருந்த குன்றத்தூர் சிற்றரசர் சேக்கிழார் பெருமான் வயதான காலத்தில் ரதத்தில் சென்று வழிபட முடியவில்லை என்ற காரணத்தினால் முறைப்படி அமைத்த தொண்டை மண்டல நவகிரகதலங்களில் ஒன்றான வடதிருநாகேஸ்வரம் எனப்படும் குன்றத்தூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவிலும், போரூர் அருகில் உள்ள வட கீழ்ப்பெரும்பள்ளம் எனப்படும் கெருகம்பாக்கம் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் ஆலயமும் நாகதோஷம் போக்கும் ஸ்தலங்கள். 

ஒரு மனிதனின் ஜாதகத்தில் அவனுடைய வாழ்க்கையின் அத்தியாவசிய அமைப்புக்களான கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள் ஆகியவற்றைத் தடுக்கும் தோஷங்களான களத்திரதோஷம், புத்திரதோஷம் ஆகியவை பெரும்பாலும் இந்த சர்ப்பக் கிரகங்களால்தான் உண்டாகின்றன. 

ஒரு நல்ல அனுபவமுள்ள ஜோதிடருக்கு இந்த தோஷங்களை முழுமையாகக் கணிக்கும் திறமை வேண்டும். எல்லா ஜோதிடராலும் இது முடிவதில்லை. 

அதேபோல எல்லாவகையான களத்திரதோஷங்களுக்கும் சில ஜோதிடர்கள் ஸ்ரீகாளஹஸ்தியில் சர்ப்பசாந்தி பூஜையை மட்டுமே தீர்வாகச் சொல்லுவார்கள். இது தவறு. 

சாதாரண காய்ச்சல் என்றால் மெடிக்கல்ஷாப்பில் ஒரு குரோசின் மாத்திரை வாங்கி சாப்பிட்டால் காய்ச்சல் போய் விடும். டைபாய்டு காய்ச்சலுக்கு அதே குரோசின் மாத்திரை சாப்பிட்டால் நோய் தீருமா? 

ராகுவால் உண்டாகும் சில குறிப்பிட்ட அதீத களத்திர தோஷங்களுக்கு சர்ப்பசாந்தி பூஜையை விட ஸ்ரீகாளஹஸ்தியில் ருத்ராபிஷேகப்பூஜை செய்வதே சிறந்த பரிகாரமாக அமையும். 

ஏனெனில் ருத்ராபிஷேகப்பூஜை என்பது, எல்லாம் வல்ல இறைவி, அம்மை ஞானப்பிரசுன்னாம்பிகை முன்பும், அடுத்து நம்மைக் காத்தருளும் ஸ்ரீ காளத்திநாதனின் முன்பும் நம்மை இருக்கச் செய்து செய்யப்படுவது. அது ஒன்றே ராகுவின் தடையை நீக்கச் செய்து நமக்கான இன்பத்தை இவ்வாழ்வில் நமக்கு கிடைக்கச் செய்கிறது. 

நம் மேலான இந்து மதத்தில் நம் சித்தர்களும் ஞானிகளும் சொல்லியுள்ள முறையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் கிரகதோஷங்களும், ராகுகேதுப் பெயர்ச்சி போன்ற கிரகமாற்றங்களில் நடக்கும் தங்களது ராசிக்கான கெடுபலன்களும் நீங்கப் பெற்று சுகவாழ்வு வாழமுடியும் என்பது நிச்சயம்.

( 20-6-2014 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)

செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஜோதிடம்

அன்புள்ளங்களே, உங்களை சோதிடம் கற்க வரவேற்கிறேன்..


நீங்களும் சோதிடராகலாம். சோதிடம் கற்றுக்கொள்ளுங்கள்

சோதிடம் என்றால என்ன?

ஜ்யோதிஷம் என்ற வடமொழி (சம்ஸ்கிருத) சொல்லின் தமிழ் வடிவமே சோதிடம். ஜ்யோதிஷம் என்ற வடமொழி சொல்லை ஜ்யோதி + இஷம் என்று பிரிக்கலாம். ஜ்யோதி என்ற சொல்லுக்கு ஒளி (அ) கதிர் என்றும், இஷம் என்ற சொல்லுக்கு இயல் என்றும் பொருள். இயல் என்றால், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், கணக்கியல், அறிவியல் போன்ற சொற்களில் இறுதியாக வரும் இயல் என்ற சொல்லின் பொருள் என்னவோ அதே பொருள்தான் ஆக சோதிடம் என்பது, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிர்கள் மனித வாழ்வை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பற்றிய அறிவியலே சோதிடம்.

இனி சோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்துக்ள்ளலாம்.

அத்தியாயம் 1.

1.1 வாய்பாடுகள்

1 நாள் = 60 நாழிகை = 24 மணி
1 நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடம்
1 விநாழிகை = 60 தற்பரை = 24 வினாடி

ராசி மண்டலம் = 360 பாகைகள் = 12 ராசிகள்
1 ராசி = 30 பாகைகள்= 2 ¼ நட்சத்திரங்கள்
1 நட்சத்திரம் = 13 பாகை 20 கலை = 4 பாதங்கள்
1 பாதம் = 3 பாகை 20 கலை

1 பாகை = 60 கலை
1 கலை = 60 விகலை

1.2 கிரகங்கள் 9

1. சூரியன்
2 சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது


1.3 ராசிகள் 12

1. மேஷம் 
2. ரிஷபம்
3. மிதுனம்
4. கடகம்
5. சிம்மம்
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

1.4 நட்சத்திரங்கள் 27

1 அசுவனி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி 
5. மிருகசீரிஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்த்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி.


1.5 ராசிகளும் அவற்றின் அதிபதிகளும்

Image

மேஷத்தின் அதிபதி செவ்வாய்
ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்
மிதுனத்தின் அதிபதி புதன்
கடகத்தின் அதிபதி சந்திரன்
சிம்மத்தின் அதிபதி சூரியன்
கன்னியின் அதிபதி புதன்
துலாத்தின் அதிபதி சுக்கிரன்
விருசிகத்தின் அதிபதி செவ்வாய்
தனுசுவின் அதிபதி குரு
மகரம் மற்றும் கும்பத்தின் அதிபதி சனி
மீனத்தின் அதிபதி குரு.


1.6. கிரகங்களும் அவற்றின் நட்சத்திரங்களும்

Image

1.7. நட்சத்திரத்தின் உட்பிரிவு

ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வரு பாகத்தையும் “பாதம்” என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப்பிரிக்கப் பட்டிருக்கிறது.

அதாவது அசுவனியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் அசுவனி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் அசுவனி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் அசுவனி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் அசுவனி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதாவது பரணியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் பரணி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் பரணி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் பரணி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் பரணி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதே போல மற்ற நட்சத்திரங்களுக்கும் தெரிந்து கொள்க.

1.8 ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும்

ஒரு ராசிக்கு ௨ ¼ நட்சத்திரங்கள் என்று முன்னமே தலைப்பு 1.1 – ல் பார்த்ததை நினைவு கொள்ளவும். அதாவது ஒரு ராசிக்கு (2 x 4) + 1 = 9 பாதங்கள்

Image

மேஷ ராசியில் அசுவனியின் 4 பாதங்களும், பரணியின் 4 பாதங்களும், கார்திகையின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

ரிஷப ராசியில் கார்த்திகையின் மீதம் 3 பாதங்களும், ரோகினியின் 4 பாதங்களும், மிருகசீரிடத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

மிதுன ராசியில் மிருகசீரிடத்தின் கடைசி 2 பாதங்களும், திருவாதிரையின் 4 பாதங்களும், புனர்பூசதின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

கடக ராசியில் புனபூசத்தின் கடைசி 1 பாதமும், பூசத்தின் 4 பாதங்களும், ஆயில்யத்தின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

சிம்ம ராசியில் மகத்தின் 4 பாதங்களும், பூரத்தின் 4 பாதங்களும், உத்திரத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

கன்னி ராசியில் உத்திரத்தின் மீதம் 3 பாதங்களும், அஸ்தத்தின் 4 பாதங்களும், சித்திரையின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

துலா ராசியில் சித்திரையின் கடைசி 2 பாதங்களும், சுவாதியின் 4 பாதங்களும், விசாகத்தின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

விருச்சிக ராசியில் விசாகத்தின் கடைசி 3 பாதங்களும், அனுஷத்தின் 4 பாதங்களும், கேட்டையின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

தனுசு ராசியில் மூலத்தின் 4 பாதங்களும், பூராடத்தின் 4 பாதங்களும், உத்திராடத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

மகர ராசியில் உத்திராடத்தின் கடைசி 3 பாதங்களும், திருவோனத்தின் 4 பாதங்களும், அவிட்டத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

கும்ப ராசியில் அவிட்டத்தின் கடைசி 2 பாதங்களும், சதயத்தின் 4 பாதங்களும், பூரட்டாதியின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

மீன ராசியில் பூரட்டாதியின் கடைசி 3 பாதங்களும், உத்திரட்டாதியின் 4 பாதங்களும், ரேவதியின் 4 பாதங்களும்ம் அடங்கும். (1 + 4 + 4 = 9)



1.9 ராசிகளின் வகைகள்

1.9.1. சரம், ஸ்திரம், உபயம் என்ற அடிப்படையில் மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், கடகம், துலாம், மகரம் இந்நான்கும் சர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்பம் இந்நான்கும் ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு மீனம் இந்நான்கும் உபய ராசிகள்.


1.9.2 & 3. ஒற்றை (ஆண்) ராசி, இரட்டை (பெண்) ராசி என்ற அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ஆறு ராசிகளும் ஆண் ராசிகள் அல்லது ஒற்றை ராசிகள்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஆறு ராசிகளும் பெண் ராசிகள் அல்லது இரட்டை ராசிகள்.

1.9.4 & 5 மேலும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற அடிப்படையிலும், கிழக்கு, மேற்கு வடக்கு தெற்கு என்ற அடிப்படையிலும் நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள்

மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்றும் கிழக்கு ராசிகள், நெருப்பு ராசிகள்.
ரிஷபம், கன்னி, மகரம், இம்மூன்றும் தெற்கு ராசிகள், நிலம் ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் மேற்கு ராசிகள், காற்று ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்றும் வடக்கு ராசிகள், நீர் ராசிகள்

Image


1.10. ராசிகளில் கிரக பலம்.

1.10.1. உச்சம், நீச்சம்

சூரியன் மேஷத்தில் உச்சம், துலாத்தில் நீச்சம்
சந்திரன் ரிஷபத்தில் உச்சம், விருச்சிகத்தில் நீச்சம்
செவ்வாய் மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்சம்
புதன் கண்ணியில் உச்சம், மீனத்தில் நீச்சம்
குரு கடகத்தில் உச்சம், மகரத்தில் நீச்சம்
சுக்கிரன் மீனத்தில் உச்சம், கண்ணியில் நீச்சம்
சனி துலாதில் உச்சம், மேஷத்தில் நீச்சம்

Image


1.10.2. ராசிகளில் பகை பெரும் கிரகங்கள் (புலிப்பாணி ஜோதிடத்தின்படி)

Image

மேஷத்தில் சந்திரன் பகை
ரிஷபத்தில் சூரியன் பகை
மிதுனத்தில் சூரியன், சந்திரன் பகை
கடகத்தில் சூரியன், புதன், சனி பகை
சிம்மத்தில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி பகை
கண்ணியில் சூரியன் பகை
துலாத்தில் சந்திரன், செவ்வாய் பகை
விருச்சிகத்தில் சூரியன், குரு, சுக்கிரன், சனி பகை
தனுசுவில் இல்லை
மகரத்தில் சூரியன், சந்திரன் பகை
கும்பத்தில் சூரியன், சந்திரன் பகை
மீனத்தில் இல்லை
வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்.


கடந்த இரண்டு பதிவில்.....

பதிவு 1-ல்...
வாய்பாடுகள், கிரகங்கள் 9, ராசிகள் 12, நட்சத்திரங்கள் 27, ராசிகளும் அவற்றின் அதிபதிகளும், கிரகங்களும் அவற்றின் நட்சத்திரங்களும், நட்சத்திரங்களின் உட்பிரிவு, ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும், ஆகியவற்றையும்,

பதிவு 2-ல்...
ராசிகளின் வகைகள், ராசிகில் கிரகபலம், ராசிகளில் பகை பெறும் கிரகங்கள், ஆகியவற்றையும் பற்றி தெரிந்து கொண்டோம்.

நீங்கள் மேற்படி விஷயங்களை நன்கு மனப்பாடம் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மனப்பாடம் செய்யவில்லை என்றால் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.

இனி இந்த பதிவில் மேலும் சில விஷயங்களை பார்ப்போம்.

1.11 கிரகங்களுக்கிடையேயான உறவு.
(பகைமை மட்டும்)

சூரியனுக்கு சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த நான்கு கிரகங்களும் பகை.
சந்திரனுக்கு புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த ஐந்து கிரகங்களும் பகை.
செவ்வாய்க்கு புதன், சனி, ராகு, கேது இந்த மூன்று கிரகங்களும் பகை.
புதனுக்கு சந்திரன், செவ்வாய், குரு, கேது இந்நான்கும் பகை
குருவுக்கு புதனும், சுக்கிரனும் பகை.
சுக்கிரனுக்கு சூரியனும் சந்திரனும் குருவும் பகை.
சனிக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், கேது இந்த நான்கும் பகை.
ராகுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும் பகை.
கேதுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் இந்த நான்கும் பகை.


1.12 கிரககாரத்துவங்கள்

சூரியன்: தந்தை, மகன், வலது கண், அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ், கீர்த்தி, மாநகரம், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர், சிவன், அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல், சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம், மண், அணுத் தொழில், அறுவை சிகிச்சை நிபுணர், துப்பறிதல், தந்தையின் தொழில்.
தன்னம்பிக்கை, சுயமரியாதை, நிர்வாகத்திறமை, தெய்வபக்தி, தராளமனப்பான்மை, இரக்கம்(கருணை, மனிதநேயம்), தியாக மனப்பான்மை, முன்கோபம், பிடிவாதம்(வைராக்கியம்), தைரியம்.

சந்திரன்: மனம், ஆழம், அறிவு, புகழ், தாய், மாமியார், திரவப் பொருள், பயணம், உணவுப்பொருள், இடது கண், இடமாற்றம், கற்பனை, பால், நதி, கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல், துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன் மனைவி, சோதிடம், அரிசி வியாபாரம், பழ வியாபாரம், கவிதை, ஓவியம், நீர் தொடர்பான தொழில், பார்வதி.
கற்பனை, சலன புத்தி, அமைதி, சகிப்புத்தன்மை

செவ்வாய்: சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை, காவல்துறை, இராணுவம், வெட்டுக் காயம், வீரம், பூமி, ரத்தம், பல், முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம், அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை, செங்கல் சூளை, தாதுப் பொருட்கள், பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை.
முன்கோபம், ஆத்திரம், அவசரம், அகங்காரம், வீரம், ஆணவம், கர்வம், வீன்சண்டை, வாக்குவாதம், ஆதிக்க உணர்வு.

புதன்: கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி, புலனாய்வுத் துறை, தரகு, மஹாவிஷ்ணு, தூதரகப்பணி. பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை, வ்சீகரத்தன்மை, அறிவாற்றல், தந்திரம், கலகலப்பானவர், கோழைத்தனம்

குரு: ஜீவன், வேதம், பக்தி, ஞானம், ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர், நீதிபதி, உயர்குலம், ஆசிரியர் கௌரவம், சாந்த குணம், தெற்கு, சதை, தொடை, பூஜை அறை, பசு, அமைச்சர், நிர்வாகி, மூக்கு, கரும்பு, வாழை, சோதிடம், நீதித்துறை, தட்சணாமூர்த்தி.
சாந்தம், பொறுமை, தெய்வ நம்பிக்கை, உலக அறிவு (பொது அறிவு), மதிப்பு, மரியாதை, பண்பாடு, கண்ணியம்.

சுக்கிரன்: மனைவி, சகோதரி, காமம், காதல், பாடகன், நடிகன், வீடு சுகம், வாசனைத் திரவியங்கள், கருப்பை, கன்னம், வட்டித் தொழில், மது பானம், ஆடை ஆபரணங்கள், மலர், வேசி, திருமணம், பிந்து, பணம், இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா, மஹாலட்சுமி, மூத்த சகோதரி, மூத்த மரு மகள். கலை ஆர்வம, ஆடம்பர பிரியம்,

சனி: மூத்த சகோதரன், சேவகன், கழுதை, எருமை, தொழில்காரகன், தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண உறுப்பு, சேமிப்பு அறை, சாப்பாட்டு அறை, சாலை, வாயு சம்பந்தமான நோய், நிலக்கரி, சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல், தொழிற்சாலையில் எடுபிடி வேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும் வேலை, பழைய பொருள் விற்பனை, துப்புறவுத் தொழில், கால்நடை வளர்த்தல், லட்சுமி, பரமசிவன், கர்மா, அரசு தூதுவர்.

ராகு: வாய், உதடு, காது, முஸ்லீம், கோபுரம், அகலமான வீதி, தகப்பன் வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை, குடை, பாம்பின் தலை, கடத்தல் தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக், இரசாயனம், மொட்டை மாடி, சேமிப்புக் கிடங்கு, விதவை, தொழுநோய், மருத்துவம், வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம் செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத் தொழில், போகக்காரகன், வஞ்சகம், சூது,பொய், களவு,

கேது: சாயா கிரகம், மோட்ச காரகன், ஞானம, தியானம், தவம, மௌனம, கயிறு, நூல், கூந்தல், மூலிகை, பாம்பின் வால், குறுகிய சந்து, மருத்துவம், சோதிடம், ஆன்மீகம், சட்டத்துறை, சந்நியாசம், துறவறம், தாய்வழிப் பாட்டன், நரம்பு, குளியல் அறை, ஞானம், தவம், மனவெறுப்பு, கொலை செய்தல்,


மீண்டும் அடுத்த பதிவில்.....
சென்ற பதிவில் கிரக காரகத்துவங்களை பார்த்தோம்.

இந்தப் பதிவில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் காரகத்துவங்களைப் பற்றி பார்ப்போம்.

1.13 ராசிகளின் காரகத்துவங்கள்

மேஷம் : கோபம், பெருமை, போட்டி மனப்பான்மை, சக்தி, செயல்திறன்,

ரிஷபம் : நிதி, கலை, ஆடம்பரம், நல்ல வேலைக்காரர்கள், எஜமானராய் இருத்தல், உணர்ச்சி வசப்படுதல், சுகங்களை விரும்புதல்.

மிதுனம் : காமம், புத்திசாலித்தனம், கல்வி, தகவல் தொடர்பு, கவர்ச்சி, ரகசியத் தொடர்பு, போட்டி, இணக்கமாக இருத்தல்.

கடகம் : கவர்ச்சி, பயணம், மாற்றங்கள், செயலாக்கம், பிரதிபலித்தல், சுற்றுப்புறம், மறைந்துபோதல், விமர்சனம், கேலி செய்தல்.

சிம்மம் : அதிகாரம், சக்தி, பணிசெய்தல், பொறுமை, பெருமை, இரகசியம், அந்தஸ்து, கௌரவம், கபம்.

கண்ணி : வியாபாரம், கவனித்தல், நுண்ணறிவு, கவர்ச்சி, நட்புடன் இருத்தல், எதையும் கணக்கிட்டு கொள்வது, பெருந்தன்மை, ஒத்துபோதல்.

துலாம் : அமைதி, சொத்துக்கள், வியாபாரம், அழகுபடுத்துதல், அலங்காரப் பொருட்கள், எதையும் சீர்தூக்கிப் பார்த்தல், ஒப்பீடு செய்தல், சமன் செய்தல்.

விருச்சிகம் : ஆதிக்கம், கோபம், சண்டை, தொண்டாற்றுதல், சீருடை அணிதல், இறையுனர்வுடன் இருத்தல், குறுக்கீடு செய்தல், பெறும் அழிவு, குறைபாடு.

தனுசு : அமைதி, வியாபாரம், கௌரவம், பெருந்தன்மை, குறிக்கோள், தயக்கம், ஆயுதம்.

மகரம் : செயல் படுபவர்கள், சோம்பேறித்தனம், மந்தகதி, கடின உழைப்பு, உற்பத்தி செய்தல், கட்டுமானம்.

கும்பம் : ஆராய்ச்சி, அடிமை வேலை, பாலம், கொள்முதல் செய்தல்.

மீனம் : ஆலோசனை வழங்குதல், தெய்வீகத்தன்மை, மத குருமார்கள், தலைமறைவாதல், அழிவு, அமைதி, கிளர்ச்சியூட்டக் கூடிய, இனிய உணர்வு, தூண்டுதல் உணர்வுடைய.



அடுத்த பதிவில் 12 பாவங்களின் (வீடுகளின்) காரகத்துவங்களை பார்க்கலாம்.

இந்தப் பதிவில் 12 பாவங்களின் காரகத்துவங்களை பார்ப்போம்.



ராசிகள் என்பது வேறு, பாவங்கள் (வீடுகள்) என்பது வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ராசி மண்டலத்தின் ராசிகள் மேஷம் முதலாக மீனம் வரை குறிப்பிடப்படும்.

ஆனால் பாவம் என்பது ஒரு ஜாதகத்தில் லக்கினம் எந்த ராசியில் அமைந்துள்ளதோ அந்த ராசியே முதல் பாவம் அல்லது முதல் வீடு அல்லது லக்கின பாவம் என்று அழைக்கப்படும்.

உதாரணமாக ஒருவருடைய லக்கினம் மிதுன ராசியில் அமைவதாக வைத்துக்கொள்வோம்.

Image

இவருடைய முதல் பாவம் (அ) லக்கின பாவம் என்பது மிதுனம். லக்கினாதிபதி புதன்
இரண்டாம் பாவம் கடகம். இரண்டாம் அதிபதி சந்திரன்.
மூன்றாம் பாவம் சிம்மம். மூன்றாம் அதிபதி சூரியன்.
நான்காம் பாவம் கண்ணி. நான்காம் அதிபதி புதன்.
ஐந்தாம் பாவம் துலாம். ஐந்தாம் அதிபதி சுக்கிரன்.
ஆறாம் பாவம் விருச்சிகம். ஆறாம் அதிபதி செவ்வாய்.
ஏழாம் பாவம் தனுசு. ஏழாம் அதிபதி குரு.
எட்டாம் பாவம் மகரம். எட்டாம் அதிபதி சனி.
ஒன்பதாம் பாவம் கும்பம். ஒன்பதாம் அதிபதி சனி.
பத்தாம் பாவம் மீனம். பத்தாம் அதிபதி குரு.
பதினொன்றாம் பாவம் மேஷம் பதினொன்றாம் அதிபதி செவ்வாய்.
பனிரெண்டாம் பாவம் ரிஷபம். பனிரெண்டாம் அதிபதி சுக்கிரன்.

என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதே போல மற்ற ராசிகளுக்கும் லக்கினம் முதல் 12 பாவங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இனி 12 பாவங்களின் காரகத்துவங்களில் முதல் 4 பாவங்களின் காரகத்துவங்களைப் பற்றி பார்க்கலாம்.

1.14. பாவங்களின் காரகத்துவங்கள்

லக்கின பாவம் :

என்ஜான் உடலுக்கு சிரசே பிராதானம் என்பது போல ஒரு ஜாதகத்திற்கு லகினமே பிராதானம்.
லக்கின பாவத்தை தனு பாவம் என்றும், ஜென்ம லக்கினம் என்றும் அழைக்கப்படும். லக்கினம் நின்ற ராசியின் அதிபதியே லக்கினாதிபதி (அ) ஜென்மாதிபதி (அ) ஜென்ம லக்கினாதிபதி என்று அழைக்கப் படுவார்.

இந்த லக்கினத்தைக் கொண்டு, ஜாதகரின் உடல் தோற்றம், நிறம், அழகு, குணவியல்புகள், தலை, புகழ், ஆயுள், உன்னதநிலை ஆகியவற்றை அறியலாம்.


இரண்டாம் பாவம் :

இந்த இரண்டாம் பாவத்தை - தன பாவகம், வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம், நேத்திர ஸ்தானம் என்று வேறு பெயர்களால் அழைக்கப்படும். இந்த இரண்டாம் பாவம் அமைந்துள்ள ராசியின் அதிபதியை தனாதிபதி (அ) குடும்பாதிபதி (அ) இரண்டாமதிபதி என்று அழைக்கப் படுவார்.

இந்த இரண்டாம் பாவத்தைக்கொண்டு, அதிர்ஷ்டம் (அ) தன விருத்தி (செல்வவிருத்தி), குடும்பம், வலதுகண், கல்வி (1 முதல் 5 ம் வகுப்புவரை உள்ள ஆரம்பக்கல்வி), பெருஞ்செல்வம், வாக்குவன்மை, சாஸ்த்திர கேள்வி, முகம், நாக்கு, உணவு முறை ஆகியவற்றை அறியலாம்.


மூன்றாம் பாவகம் :

இந்த மூன்றாம் பாவகத்தை ஜெயஸ்தானம், வீரியஸ்தானம், சகோதிர ஸ்தானம், என்று வேறு பெயர்களால் அழைக்கப்படும். இந்த மூன்றாம் பாவம் அமைந்துள்ள ராசியின் அதிபதியை சகோதிர ஸ்தானாதிபதி, ஜெயாதிபதி, (அ) மூன்றாமதிபதி என்று அழைக்கப் படுவார்.

இந்த மூன்றாமிடத்தைக் கொண்டு இளைய சகோதிரம், வேலையாட்கள், தைரியம், வெற்றி, எண்வகை யோகம், கழுத்து, தோள்பட்டை, தொழில் விருத்தி, சங்கீதம், எழுத்தாற்றல், நூல்பதிப்பு, தொலை தொடர்பு, தகவல் தொடர்பு, குறுகிய பயணம் ஆகியவற்றை அறியலாம்.


நான்காம் பாவம் :

இந்த நான்காம் பாவத்தை மாத்ரு (தாய்) ஸ்தானம், சுகஸ்தானம், கல்வி (வித்தை) ஸ்தானம், என்று வேறு பெயர்களால் அழைக்கப்படும். இந்த நான்காம் பாவம் அமைந்த ராசி அதிபதியை சுகாதிபதி, மாத்ரு ஸ்தானாதிபதி, நான்காம் அதிபதி என்று அழைக்கப் படுவார்.

இந்த நான்காமிடத்தைக் கொண்டு தாய், கல்வி (6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மற்றும் டிப்ளமோ படிப்பு), வீடு வாகனம், சுகம், கால்நடை, பால் பாக்கியம், கனவு ஆகியவற்றை அறியலாம்.




ஐந்து முதல் எட்டாம் பாவம் வரை அடுத்த பதிவில்....



அன்புடன்..
இந்த பதிவில் ஐந்து முதல் எட்டாம் பாவம் வரை உள்ள காரகத்துவங்களை பார்ப்போம்.


ஐந்தாம் பாவம்.

இந்த ஐந்தாம் பாவம் புத்திர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம், புத்தி ஸ்தானம் என்று வெவேறு பெயர்களால் அழைக்கபடுகிறது. இந்த ஐந்தாம் பாவம் அமைந்த ராசி அதிபதி பூர்வ புன்னியாதிபதி, புத்திரஸ்தானாதிபதி, என்று அழைக்கப் படுவார்.

இந்த ஐந்தாம் பாவத்தைக் கொண்டு, புத்திர விருத்தி, பூர்வீக சொத்துக்கள், புத்தி, (B.A., B.Sc., B.Cm., M.A., M.Sc., M.Com., B.E., M.E., M.B.B.S போன்ற) பட்டக்கல்வி, புத்திரர்களால் ஏற்படும் சுக துக்கங்கள், மந்திர உபதேசம், தந்தையின் தந்தை ஆகியவற்றை அறியலாம்.

ஆறாம் பாவம்.

இந்த ஆறாம் பாவம் சத்ரு ஸ்தானம், ரோக ஸ்தானம், என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறாம் பாவம் அமைந்த ராசியதிபதி சத்ரு ஸ்தானாதிபதி என்று அழைக்கப் படுவார்.

இந்த ஆறாம் பாவத்தைக் கொண்டு நோய், கடன், பகைவர், அம்மான்(தாய்மாமன்), வம்பு வழக்கு, தாயாதிகள் ஆகியவற்றை அறியலாம்.

எழாம் பாவம்.

இந்த ஏழாம் பாவம் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப் படும். இந்த எழாமிடம் அமைந்த ராசி அதிபதி களத்திர ஸ்தானாதிபதி என்று அழைக்கப் படுவார்.

இந்த ஏழாம் பாவத்தைக் கொண்டு, ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணையை (ஜாதகர் ஆணாக இருந்தால் மனைவியையும், பெண்ணாக இருந்தால் கணவனையும்) பற்றி அறிந்து கொள்ளலாம், கூட்டு வியாபாரம், கூட்டாளிகள், உறவினர்கள், திருமண வாழ்க்கை, ஆகியவற்றை அறியலாம்.

எட்டாம் பாவம்

இந்த எட்டாம் பாவம், ஆயுள் ஸ்தானம், அஷ்டம ஸ்தானம் என்று அழைக்கப்படும். இந்த எட்டாமிடம் அமைந்த ராசி அதிபதியை அஷ்டமாதிபதி என்றும், ஆயுள் ஸ்தானாதிபதி என்றும் அழைக்கப் படுவார்.

இந்த எட்டாம் பாவத்தைக் கொண்டு ஜாதகரின் ஆயுள் பலம், உயில, இன்சியுரன்ஸ், ஜாதகரின் வாழ்க்கைத்துணையின் செல்வநிலை ஆகியவற்றை அறியலாம்.


ஒன்பது முதல் பனிரெண்டாம் பாவம் வரை அடுத்தப் பதிவில்.

அன்புடன்
வாழ்க வளமுடன்.

இந்தப் பதிவில் 9 முதல் 12 ம் பாவகம் வரை உள்ள காரகத்துவங்களைப் பார்ப்போம்.

ஒன்பதாம் பாவம்

இந்த ஒன்பதாம் பாவத்தை பிதா(தகப்பனார்) ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், என்று சிறப்புடன் அழைக்கப்படும். இந்த ஒன்பதாம் பாவம் அமைந்த ராசியதிபதி பக்கியாதிபதி என்று அழைக்கப்படுவார்.

ஒன்பதாம் பாவகத்தைக் கொண்டு ஞானோபதேசம் பெறுதலும் இன்பம் வாய்த்தலும் நீர் வளப்பெருக்கும் ஆடையாபரணச் சேர்க்கையும் இன்னும், வாகனம், பரி முதலானவையும், மிகுந்த தனலாபம் தன்னலம் கருதாத தானதர்மங்கள் வாய்த்தலும் வெகு தனம் வாய்த்தலும் நேரும். மேலும் தான தர்மம் செய்யும் குணம், திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், அவைகளை புணருத்தாரணம் செய்தல், கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம், ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு, அங்கு பெறும் பணி,தொழில்கள், அவைகளால் பெறும் லாப-நஷ்டம், நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம்.

பத்தாம் பாவம்

இந்த பத்தாம் பாவத்தை ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், என்று சிறப்புடன் அழைக்கப்படும். இந்த பத்தாம் பாவம் அமைந்த ராசியதிபதி கர்மாதிபதி என்று அழைக்கப்படுவார்.

பத்தாம் பாவத்தைக் கொண்டு, பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், அதனால் பெறும் புகழ், உயர் பதவி, அரசாங்க கவுரவம், புகழ், பட்டம், பதவி, அரசியலில் ஈடுபாடு, அதில் பெறும் புகழ், அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவை, சுவையான உணவு கடிக்கும் தகுதி, இரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம்.

பதினோறாம் பாவம்

இந்த பதினோறாம் பாவத்தை லாப ஸ்தானம் என்று சிறப்புடன் அழைக்கப்படும். இந்த பதினோராம் பாவம் அமைந்த ராசியதிபதி லாபாதிபதி என்று அழைக்கப்படுவார்.

பதினோராம் பாவத்தக்கொண்டு மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்), செய் தொழிலில் கிடைக்கும் லாபம், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள், துயர்கள் தீர்ந்திடும் நிலை இவைகளையும் குறிக்கும்.

பன்னிரெண்டாம் பாவம்

இந்த பனிரெண்டாம் பாவத்தை விரைய ஸ்தானம் என்று சிறப்புடன் அழைக்கப்படும். இந்த பனிரெண்டாம் பாவம் அமைந்த ராசியதிபதி விரையாதிபதி என்று அழைக்கப்படுவார்.

அந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், செலவினங்கள், செலவு செய்வதால் ஏற்படும் சுகம், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அனவசிய செலவுகள், சிறைபடுதல், நிம்மதியான தூக்கம், தூக்கமின்மை, இல்லற சுகம், பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும்.