திங்கள், 29 டிசம்பர், 2014


அன்புள்ளங்களே, உங்களை சோதிடம் கற்க வரவேற்கிறேன்..


நீங்களும் சோதிடராகலாம். சோதிடம் கற்றுக்கொள்ளுங்கள்

சோதிடம் என்றால என்ன?

ஜ்யோதிஷம் என்ற வடமொழி (சம்ஸ்கிருத) சொல்லின் தமிழ் வடிவமே சோதிடம். ஜ்யோதிஷம் என்ற வடமொழி சொல்லை ஜ்யோதி + இஷம் என்று பிரிக்கலாம். ஜ்யோதி என்ற சொல்லுக்கு ஒளி (அ) கதிர் என்றும், இஷம் என்ற சொல்லுக்கு இயல் என்றும் பொருள். இயல் என்றால், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், கணக்கியல், அறிவியல் போன்ற சொற்களில் இறுதியாக வரும் இயல் என்ற சொல்லின் பொருள் என்னவோ அதே பொருள்தான் ஆக சோதிடம் என்பது, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிர்கள் மனித வாழ்வை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பற்றிய அறிவியலே சோதிடம்.

இனி சோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்துக்ள்ளலாம்.

அத்தியாயம் 1.

1.1 வாய்பாடுகள்

1 நாள் = 60 நாழிகை = 24 மணி
1 நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடம்
1 விநாழிகை = 60 தற்பரை = 24 வினாடி

ராசி மண்டலம் = 360 பாகைகள் = 12 ராசிகள்
1 ராசி = 30 பாகைகள்= 2 ¼ நட்சத்திரங்கள்
1 நட்சத்திரம் = 13 பாகை 20 கலை = 4 பாதங்கள்
1 பாதம் = 3 பாகை 20 கலை

1 பாகை = 60 கலை
1 கலை = 60 விகலை

1.2 கிரகங்கள் 9

1. சூரியன்
2 சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது


1.3 ராசிகள் 12

1. மேஷம் 
2. ரிஷபம்
3. மிதுனம்
4. கடகம்
5. சிம்மம்
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

1.4 நட்சத்திரங்கள் 27

1 அசுவனி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி 
5. மிருகசீரிஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்த்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி.


1.5 ராசிகளும் அவற்றின் அதிபதிகளும்

Image

மேஷத்தின் அதிபதி செவ்வாய்
ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்
மிதுனத்தின் அதிபதி புதன்
கடகத்தின் அதிபதி சந்திரன்
சிம்மத்தின் அதிபதி சூரியன்
கன்னியின் அதிபதி புதன்
துலாத்தின் அதிபதி சுக்கிரன்
விருசிகத்தின் அதிபதி செவ்வாய்
தனுசுவின் அதிபதி குரு
மகரம் மற்றும் கும்பத்தின் அதிபதி சனி
மீனத்தின் அதிபதி குரு.


1.6. கிரகங்களும் அவற்றின் நட்சத்திரங்களும்

Image

1.7. நட்சத்திரத்தின் உட்பிரிவு

ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வரு பாகத்தையும் “பாதம்” என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப்பிரிக்கப் பட்டிருக்கிறது.

அதாவது அசுவனியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் அசுவனி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் அசுவனி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் அசுவனி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் அசுவனி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதாவது பரணியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் பரணி முதல் பாதம் என்றும், இரண்டாம் பாகம் பரணி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம் பரணி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் பரணி நான்காம் பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதே போல மற்ற நட்சத்திரங்களுக்கும் தெரிந்து கொள்க.

1.8 ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும்

ஒரு ராசிக்கு ௨ ¼ நட்சத்திரங்கள் என்று முன்னமே தலைப்பு 1.1 – ல் பார்த்ததை நினைவு கொள்ளவும். அதாவது ஒரு ராசிக்கு (2 x 4) + 1 = 9 பாதங்கள்

Image

மேஷ ராசியில் அசுவனியின் 4 பாதங்களும், பரணியின் 4 பாதங்களும், கார்திகையின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

ரிஷப ராசியில் கார்த்திகையின் மீதம் 3 பாதங்களும், ரோகினியின் 4 பாதங்களும், மிருகசீரிடத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

மிதுன ராசியில் மிருகசீரிடத்தின் கடைசி 2 பாதங்களும், திருவாதிரையின் 4 பாதங்களும், புனர்பூசதின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

கடக ராசியில் புனபூசத்தின் கடைசி 1 பாதமும், பூசத்தின் 4 பாதங்களும், ஆயில்யத்தின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

சிம்ம ராசியில் மகத்தின் 4 பாதங்களும், பூரத்தின் 4 பாதங்களும், உத்திரத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

கன்னி ராசியில் உத்திரத்தின் மீதம் 3 பாதங்களும், அஸ்தத்தின் 4 பாதங்களும், சித்திரையின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

துலா ராசியில் சித்திரையின் கடைசி 2 பாதங்களும், சுவாதியின் 4 பாதங்களும், விசாகத்தின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

விருச்சிக ராசியில் விசாகத்தின் கடைசி 3 பாதங்களும், அனுஷத்தின் 4 பாதங்களும், கேட்டையின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

தனுசு ராசியில் மூலத்தின் 4 பாதங்களும், பூராடத்தின் 4 பாதங்களும், உத்திராடத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

மகர ராசியில் உத்திராடத்தின் கடைசி 3 பாதங்களும், திருவோனத்தின் 4 பாதங்களும், அவிட்டத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

கும்ப ராசியில் அவிட்டத்தின் கடைசி 2 பாதங்களும், சதயத்தின் 4 பாதங்களும், பூரட்டாதியின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

மீன ராசியில் பூரட்டாதியின் கடைசி 3 பாதங்களும், உத்திரட்டாதியின் 4 பாதங்களும், ரேவதியின் 4 பாதங்களும்ம் அடங்கும். (1 + 4 + 4 = 9)

1.9 ராசிகளின் வகைகள்

1.9.1. சரம், ஸ்திரம், உபயம் என்ற அடிப்படையில் மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், கடகம், துலாம், மகரம் இந்நான்கும் சர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்பம் இந்நான்கும் ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு மீனம் இந்நான்கும் உபய ராசிகள்.


1.9.2 & 3. ஒற்றை (ஆண்) ராசி, இரட்டை (பெண்) ராசி என்ற அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ஆறு ராசிகளும் ஆண் ராசிகள் அல்லது ஒற்றை ராசிகள்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஆறு ராசிகளும் பெண் ராசிகள் அல்லது இரட்டை ராசிகள்.

1.9.4 & 5 மேலும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற அடிப்படையிலும், கிழக்கு, மேற்கு வடக்கு தெற்கு என்ற அடிப்படையிலும் நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள்

மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்றும் கிழக்கு ராசிகள், நெருப்பு ராசிகள்.
ரிஷபம், கன்னி, மகரம், இம்மூன்றும் தெற்கு ராசிகள், நிலம் ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் மேற்கு ராசிகள், காற்று ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்றும் வடக்கு ராசிகள், நீர் ராசிகள்

Image


1.10. ராசிகளில் கிரக பலம்.

1.10.1. உச்சம், நீச்சம்

சூரியன் மேஷத்தில் உச்சம், துலாத்தில் நீச்சம்
சந்திரன் ரிஷபத்தில் உச்சம், விருச்சிகத்தில் நீச்சம்
செவ்வாய் மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்சம்
புதன் கண்ணியில் உச்சம், மீனத்தில் நீச்சம்
குரு கடகத்தில் உச்சம், மகரத்தில் நீச்சம்
சுக்கிரன் மீனத்தில் உச்சம், கண்ணியில் நீச்சம்
சனி துலாதில் உச்சம், மேஷத்தில் நீச்சம்

Image


1.10.2. ராசிகளில் பகை பெரும் கிரகங்கள் (புலிப்பாணி ஜோதிடத்தின்படி)

Image

மேஷத்தில் சந்திரன் பகை
ரிஷபத்தில் சூரியன் பகை
மிதுனத்தில் சூரியன், சந்திரன் பகை
கடகத்தில் சூரியன், புதன், சனி பகை
சிம்மத்தில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி பகை
கண்ணியில் சூரியன் பகை
துலாத்தில் சந்திரன், செவ்வாய் பகை
விருச்சிகத்தில் சூரியன், குரு, சுக்கிரன், சனி பகை
தனுசுவில் இல்லை
மகரத்தில் சூரியன், சந்திரன் பகை
கும்பத்தில் சூரியன், சந்திரன் பகை
மீனத்தில் இல்லை
வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்.


கடந்த இரண்டு பதிவில்.....

பதிவு 1-ல்...
வாய்பாடுகள், கிரகங்கள் 9, ராசிகள் 12, நட்சத்திரங்கள் 27, ராசிகளும் அவற்றின் அதிபதிகளும், கிரகங்களும் அவற்றின் நட்சத்திரங்களும், நட்சத்திரங்களின் உட்பிரிவு, ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும், ஆகியவற்றையும்,

பதிவு 2-ல்...
ராசிகளின் வகைகள், ராசிகில் கிரகபலம், ராசிகளில் பகை பெறும் கிரகங்கள், ஆகியவற்றையும் பற்றி தெரிந்து கொண்டோம்.

நீங்கள் மேற்படி விஷயங்களை நன்கு மனப்பாடம் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மனப்பாடம் செய்யவில்லை என்றால் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.

இனி இந்த பதிவில் மேலும் சில விஷயங்களை பார்ப்போம்.

1.11 கிரகங்களுக்கிடையேயான உறவு.
(பகைமை மட்டும்)

சூரியனுக்கு சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த நான்கு கிரகங்களும் பகை.
சந்திரனுக்கு புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த ஐந்து கிரகங்களும் பகை.
செவ்வாய்க்கு புதன், சனி, ராகு, கேது இந்த மூன்று கிரகங்களும் பகை.
புதனுக்கு சந்திரன், செவ்வாய், குரு, கேது இந்நான்கும் பகை
குருவுக்கு புதனும், சுக்கிரனும் பகை.
சுக்கிரனுக்கு சூரியனும் சந்திரனும் குருவும் பகை.
சனிக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், கேது இந்த நான்கும் பகை.
ராகுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும் பகை.
கேதுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் இந்த நான்கும் பகை.


1.12 கிரககாரத்துவங்கள்

சூரியன்: தந்தை, மகன், வலது கண், அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ், கீர்த்தி, மாநகரம், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர், சிவன், அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல், சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம், மண், அணுத் தொழில், அறுவை சிகிச்சை நிபுணர், துப்பறிதல், தந்தையின் தொழில்.
தன்னம்பிக்கை, சுயமரியாதை, நிர்வாகத்திறமை, தெய்வபக்தி, தராளமனப்பான்மை, இரக்கம்(கருணை, மனிதநேயம்), தியாக மனப்பான்மை, முன்கோபம், பிடிவாதம்(வைராக்கியம்), தைரியம். 

சந்திரன்: மனம், ஆழம், அறிவு, புகழ், தாய், மாமியார், திரவப் பொருள், பயணம், உணவுப்பொருள், இடது கண், இடமாற்றம், கற்பனை, பால், நதி, கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல், துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன் மனைவி, சோதிடம், அரிசி வியாபாரம், பழ வியாபாரம், கவிதை, ஓவியம், நீர் தொடர்பான தொழில், பார்வதி.
கற்பனை, சலன புத்தி, அமைதி, சகிப்புத்தன்மை

செவ்வாய்: சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை, காவல்துறை, இராணுவம், வெட்டுக் காயம், வீரம், பூமி, ரத்தம், பல், முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம், அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை, செங்கல் சூளை, தாதுப் பொருட்கள், பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை.
முன்கோபம், ஆத்திரம், அவசரம், அகங்காரம், வீரம், ஆணவம், கர்வம், வீன்சண்டை, வாக்குவாதம், ஆதிக்க உணர்வு.

புதன்: கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி, புலனாய்வுத் துறை, தரகு, மஹாவிஷ்ணு, தூதரகப்பணி. பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை, வ்சீகரத்தன்மை, அறிவாற்றல், தந்திரம், கலகலப்பானவர், கோழைத்தனம்

குரு: ஜீவன், வேதம், பக்தி, ஞானம், ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர், நீதிபதி, உயர்குலம், ஆசிரியர் கௌரவம், சாந்த குணம், தெற்கு, சதை, தொடை, பூஜை அறை, பசு, அமைச்சர், நிர்வாகி, மூக்கு, கரும்பு, வாழை, சோதிடம், நீதித்துறை, தட்சணாமூர்த்தி.
சாந்தம், பொறுமை, தெய்வ நம்பிக்கை, உலக அறிவு (பொது அறிவு), மதிப்பு, மரியாதை, பண்பாடு, கண்ணியம்.

சுக்கிரன்: மனைவி, சகோதரி, காமம், காதல், பாடகன், நடிகன், வீடு சுகம், வாசனைத் திரவியங்கள், கருப்பை, கன்னம், வட்டித் தொழில், மது பானம், ஆடை ஆபரணங்கள், மலர், வேசி, திருமணம், பிந்து, பணம், இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா, மஹாலட்சுமி, மூத்த சகோதரி, மூத்த மரு மகள். கலை ஆர்வம, ஆடம்பர பிரியம்,

சனி: மூத்த சகோதரன், சேவகன், கழுதை, எருமை, தொழில்காரகன், தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண உறுப்பு, சேமிப்பு அறை, சாப்பாட்டு அறை, சாலை, வாயு சம்பந்தமான நோய், நிலக்கரி, சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல், தொழிற்சாலையில் எடுபிடி வேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும் வேலை, பழைய பொருள் விற்பனை, துப்புறவுத் தொழில், கால்நடை வளர்த்தல், லட்சுமி, பரமசிவன், கர்மா, அரசு தூதுவர்.

ராகு: வாய், உதடு, காது, முஸ்லீம், கோபுரம், அகலமான வீதி, தகப்பன் வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை, குடை, பாம்பின் தலை, கடத்தல் தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக், இரசாயனம், மொட்டை மாடி, சேமிப்புக் கிடங்கு, விதவை, தொழுநோய், மருத்துவம், வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம் செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத் தொழில், போகக்காரகன், வஞ்சகம், சூது,பொய், களவு,

கேது: சாயா கிரகம், மோட்ச காரகன், ஞானம, தியானம், தவம, மௌனம, கயிறு, நூல், கூந்தல், மூலிகை, பாம்பின் வால், குறுகிய சந்து, மருத்துவம், சோதிடம், ஆன்மீகம், சட்டத்துறை, சந்நியாசம், துறவறம், தாய்வழிப் பாட்டன், நரம்பு, குளியல் அறை, ஞானம், தவம், மனவெறுப்பு, கொலை செய்தல்,


மீண்டும் அடுத்த பதிவில்.....
சென்ற பதிவில் கிரக காரகத்துவங்களை பார்த்தோம்.

இந்தப் பதிவில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் காரகத்துவங்களைப் பற்றி பார்ப்போம்.

1.13 ராசிகளின் காரகத்துவங்கள்

மேஷம் : கோபம், பெருமை, போட்டி மனப்பான்மை, சக்தி, செயல்திறன், 

ரிஷபம் : நிதி, கலை, ஆடம்பரம், நல்ல வேலைக்காரர்கள், எஜமானராய் இருத்தல், உணர்ச்சி வசப்படுதல், சுகங்களை விரும்புதல்.

மிதுனம் : காமம், புத்திசாலித்தனம், கல்வி, தகவல் தொடர்பு, கவர்ச்சி, ரகசியத் தொடர்பு, போட்டி, இணக்கமாக இருத்தல்.

கடகம் : கவர்ச்சி, பயணம், மாற்றங்கள், செயலாக்கம், பிரதிபலித்தல், சுற்றுப்புறம், மறைந்துபோதல், விமர்சனம், கேலி செய்தல்.

சிம்மம் : அதிகாரம், சக்தி, பணிசெய்தல், பொறுமை, பெருமை, இரகசியம், அந்தஸ்து, கௌரவம், கபம்.

கண்ணி : வியாபாரம், கவனித்தல், நுண்ணறிவு, கவர்ச்சி, நட்புடன் இருத்தல், எதையும் கணக்கிட்டு கொள்வது, பெருந்தன்மை, ஒத்துபோதல்.

துலாம் : அமைதி, சொத்துக்கள், வியாபாரம், அழகுபடுத்துதல், அலங்காரப் பொருட்கள், எதையும் சீர்தூக்கிப் பார்த்தல், ஒப்பீடு செய்தல், சமன் செய்தல். 

விருச்சிகம் : ஆதிக்கம், கோபம், சண்டை, தொண்டாற்றுதல், சீருடை அணிதல், இறையுனர்வுடன் இருத்தல், குறுக்கீடு செய்தல், பெறும் அழிவு, குறைபாடு.

தனுசு : அமைதி, வியாபாரம், கௌரவம், பெருந்தன்மை, குறிக்கோள், தயக்கம், ஆயுதம்.

மகரம் : செயல் படுபவர்கள், சோம்பேறித்தனம், மந்தகதி, கடின உழைப்பு, உற்பத்தி செய்தல், கட்டுமானம்.

கும்பம் : ஆராய்ச்சி, அடிமை வேலை, பாலம், கொள்முதல் செய்தல்.

மீனம் : ஆலோசனை வழங்குதல், தெய்வீகத்தன்மை, மத குருமார்கள், தலைமறைவாதல், அழிவு, அமைதி, கிளர்ச்சியூட்டக் கூடிய, இனிய உணர்வு, தூண்டுதல் உணர்வுடைய.



அடுத்த பதிவில் 12 பாவங்களின் (வீடுகளின்) காரகத்துவங்களை பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக