ஞாயிறு, 4 ஜனவரி, 2015

சித்த தரிசனம்




இது 90 நாட்கள் தொடர்பயிற்சி...



தேவையானவை:
குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை
ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய தீபம் எரியும் கிண்ணம் அதாவது கிளிஞ்சட்டி
தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய் வேண்டாம்).ஒரு காசி சொம்பு,சுத்தமான நீர்.(வீட்டில் நிறைகுடத்திலிருந்து தினமும் தண்ணீர் முதலில் எடுக்கவும்).தினமும் சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும்.இரவு சரியாக மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும்.இரவு மணிக்கு முடித்துவிட வேண்டும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவர்.நந்தீசர்,திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,புலிப்பாணி,காகபுஜீண்டர் என பல ஆயிரம் சித்தர்கள் உள்ளனர்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அந்த சித்தரை-அவர் உருவம் நமக்கு தெரியாதல்லவாஎனவே அவரது பெயரை நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.
ஒம் சிங் ரங் அங் சிங்
இது தான் சித்தர்களை நேரில் வரவைக்கும் மந்திரம்.ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.
ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு மணிக்குள் 10 சதுர அடி உள்ள அறையில் ஒரு விரிப்பு அல்லது பலகையை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்கவும்.அதிலிருந்து 8அடி தூரத்தில் நமது கண்களுக்கு நேராக வருமாறு நெய்தீபம் தாமரைநூலில் எரியவேண்டும்.அந்த தீபத்தின் முன்பக்கம் காசிச்சொம்பில் சுத்தமான நீர் நிரப்ப வேண்டும்.அந்த காசிச்சொம்பின் முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.
இரவு மணியானதும் அந்த தீபத்தைப் பார்த்தவாறு நாம் விரும்பும் சித்தர் பெயரை நினைத்துக்கொண்டு மேலேக் கூறிய மந்திரத்தை உதடு அசையாமல் ஒருமணிநேரம் வரை ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும் ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள் ஜபித்துவர நமது சித்தர் நேரில் வருவார்.அவரை குருவாக ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழவும்.
மணியானதும் காசிச்சொம்பில் உள்ள நீரைப்பருகவும்.படையல் செய்த கனிகளைச் சாப்பிடவும்.இரவில் பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.உணவில் உப்பு,காரம்,புளி குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள் பூமியில் சித்தர்களை தரிசித்துள்ளனர்.இன்றும் தரிசித்து வருகின்றனர்.
ஜாதி,மதம்,மொழி கடந்து யாரும் சித்தர்களை தரிசிக்கலாம்.
18 
வயதுக்கு மேற்பட்ட யாரும் முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள் அருளால்!!!
குறிப்பு: இந்த முயற்சி,சித்தர் சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம் அடிக்கக் கூடாது.
உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும் ,வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில் இரவு 8மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.
--------------------------------
நீங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பழக்கம் இருந்தால்கிரிவலப் பாதையில் அகஸ்திய ஆசிரமம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அகஸ்திய விஜயம் என்ற மாத இதழை விற்பனை செய்கின்றனர். அவர்களின் நிறைய இதழ்கள் வெளியீடுகள் - ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு நல்ல தீனியாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் வாங்கிப் படித்துப் பாருங்கள். 
நீங்கள் நாடி ஜோதிடம் எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களாதமிழ் நாட்டில் இப்போது எத்தனையோ போலிகள் வந்து விட்டார்கள். அகஸ்தியர்வசிஷ்டர் என்று நிறைய நிறைய நாடி ஜோதிட நிலையங்கள் வந்துவிட்டன. ஆனால் உங்களுக்கான நாடி கிடைத்துவிட்டால்உங்கள் பெருவிரல் ரேகை மட்டுமே வைத்து உங்கள் பெயர்,அப்பாஅம்மா பெயர் பிறந்த நட்சத்திரம் வருடம் என்று ஜாதகமே கணித்துவிடுகிறார்கள். இது வரை ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் அதன் பிறகு.... எல்லோரும் ஒரே பார்முலா  தான். யாரவதுநல்ல பக்காவான நாடி ஜோதிடர்கள் உள்ளார்களா என்று நண்பர் வட்டாரத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபோதுதான் எதேச்சையாக ஒரு அகத்திய விஜயம் இதழ் கிடைத்தது.
உங்களுக்கு அகஸ்திய  தரிசனம்  வேண்டுமா?  கீழ்க்கண்ட முறையை பின்பற்றுங்கள் என்று... ... எனக்கு மிகவும் தெரிந்த நண்பர்ஒருவர் இதைச் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு அகஸ்திய தரிசனம் கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. அதைப் பற்றி கூற மறுத்துவிட்டார்.. ஆனால் அவரது ந
டவடிக்கையில் நிறையவே நல்ல மாற்றங்களை உணர முடிகிறது.  விருப்பம் உள்ள அன்பர்கள் பின்பற்றிப் பாருங்க

காரஹோ பாவ நாஸ்தியும் காதலைத் தூண்டும் ராகு,கேதுக்களும்!



ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடர்களுக்கு என்றென்றும் விவாதப் பொருளாகவும், விளங்காப் பொருளாகவும் இருப்பது நிழல் கிரகங்களான ராகு கேதுக்கள்தான்.

உண்மையில்,இவைகள் கிரகங்களே அல்ல. இவைகளுக்கு பருப்பொருளும், சக்தியும் கிடையாது.

சூரியப்பாதையும், விரிவு படுத்தப்பட்ட சந்திரப் பாதையும் சந்தித்துக் கொள்ளும் இரண்டு புள்ளிகளே ராகு,கேதுக்கள். 

உண்மையில் ராகு, கேதுக்கள் என்பது ஒரு நிழலாகிய இருட்டுக்கள்தான். சூரிய சந்திரர்களை மறைப்பதினால் மட்டுமே இவைகளை நம்மால் உணர முடியும்.


ராகு,கேதுக்களுக்கு 3,7,11 பார்வை உண்டு எனச் சிலர் கூறுகின்றனர்.

கிரகங்களின் பார்வை என்பதே அதன் ஒளிதான். ஒளியே இல்லாத,ஒளியைப் பிரதிபலிக்கவும் முடியாத நிழல்களுக்கு, அதாவது வெறும் இருளுக்கு பார்வை இருப்பது என்பது இயலாத ஒன்றாகத் தெரிகிறது. எனவே ராகு,கேதுக்களுக்கு பார்வை பலம் இல்லை என்பதே என் கருத்து.

ஆனால் ராகு,கேதுக்கள் ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் வலம் வருபவை என்பதால் ஒன்று, மற்றொன்றின் ஏழாம் பாவத்தில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். அதனை ஏழாம் பார்வை என்பது பொருத்தமற்றது.

சந்திரனால் உருவாகும் நிழல் கிரகங்கள் இவை என்பதால் ராகு ரிஷபத்தில் நீசம் எனவும் விருச்சிகத்தில் உச்சம் எனவும் கொள்ளலாம். இயற்கைப் பாவக் கிரகங்கள் கெட வேண்டும் என்ற கருத்துப்படி ரிஷப ராகு எவரையும் கெடுத்தது இல்லை. ரிஷபராகு தசையில் ஓஹோவென வாழ்ந்தவர்களை அறிந்துள்ளேன்.விருச்சிக ராகு தசையில் கெடுபலன்களே அதிகம் நடக்கின்றன.

ஒரு ஜாதகருக்கு ராகு,கேது தசைகள் நன்மையைச் செய்யுமா என்று கணிப்பது பெரும்பாலான ஜோதிடர்களுக்கு ஒரு சவால்தான். அதிலும் அவை சுயசாரத்தில் இருந்து விட்டால் தலை சுற்ற ஆரம்பித்து விடும்.

ரிஷப, மிதுன, கன்னி, துலாம், மகர, கும்ப லக்னக்காரர்களுக்கு ராகு கெடுதல் செய்யும் நிலையில் இருந்தாலும் தீய பலன்களை பெரும்பாலும் செய்வதில்லை.அதேபோல் மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம் லக்னக்காரர்களுக்கு கேது தீயபலன் செய்வது இல்லை.

தான் இருக்கும் வீட்டின் அதிபதியின் பலத்தையும், தன்னைப் பார்க்கும், மற்றும் தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் பலத்தையும் கவர்ந்து அவைகளின் நன்மை தீமைகளை தனது தசை, புக்திகளில் மிக வலுவாகச் செய்வன ராகு, கேதுக்கள். 

என்னைப் பொருத்தவரை சார பலம் கூட ராகு கேதுக்களுக்கு இரண்டாம் பட்சம் தான்.

மிதுன லக்னத்திற்கு ராகு யோகர் என்ற கருத்து பரவலாக உள்ளது.அனுபவத்திலும் அது சரியாகவே உள்ளது.

லக்ன பாவிகள் சம்பந்தம் பெறாதவரை ராகு,கேதுக்கள் எவரையும் கெடுப்பதில்லை. கடக சிம்ம லக்னத்தினருக்கு இவை 3,6,11 மிடங்களில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை அளிக்கின்றன.

முக்கியமாக,”காரஹோ பாவ நாஸ்தி” எனப்படும்,காரகன்,காரகவீட்டில் இருப்பது அதனை கெடுக்கும் என்பதை செயல்படுத்துவது ராகு,கேதுக்களே ஆகும். ராகு கேதுக்களின் மூலமாகவே இது பெரும்பாலும் நடைபெறுகிறது.

இந்த ஜாதகத்தினை கவனியுங்கள்.

சூரி
புத
சுக்

குரு
ராகு
சனி



செவ்
சந்
கேது


இந்த ஜாதகத்தில் சகோதரகாரகனாகிய செவ்வாய், இளைய சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிடத்தில் உள்ளார். மேலும் செவ்வாய் ஆறாமிடத்திலுள்ள கேதுவைப் பார்க்கிறார். அதாவது கேது தன்னைப் பார்க்கும் செவ்வாயின் பலத்தைப் பெறுகிறார்.

மேற்கண்ட ஜாதகர் தனது செவ்வாய் தசை, கேது புக்தியில் தான் மிகவும் நேசித்த இளைய சகோதரனை விபத்தில் இழந்தார்.கேதுவுக்கு எதிரே விரயத்தில் இருக்கும் ராகு சகோதரனை விரயம் செய்தார்.

எனது நீண்ட கால அனுபவப்படி எப்பொழுதுமே ராகு தசைக்கோ, புக்திக்கோ பலன் சொல்ல வேண்டுமெனில், கேதுவின் பார்வையிலும், கேதுவுக்கு பலன் சொல்ல வேண்டுமெனில் ராகுவின் பார்வையிலும் தான் பலம் சொல்ல வேண்டும்.

மேலும், ஒரு கிரகம் ராகுவின் சாரம் பெற்றிருந்தால், கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ, அந்த ஸ்தான பலனும், அவரின் காரகத்துவம் எதுவோ அதுவே நடக்கும். கேதுவின் சாரம் பெற்றிருந்தால் ராகு எந்த ஸ்தானத்தில் இருக்கிறாரோ அதன் வழியே, அந்த ஸ்தானபலனும்.ராகுவின் காரகத்துவங்களுமே நடக்கும். ராகு கேதுக்கள் ஒரே நேர்கோடுகள் என்பதால் எதிரில் உள்ள ஸ்தானத்தின் நன்மை, தீமைகளையும் செய்யும்.

எதையுமே நேரிடையாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் நமது மூல நூல்களில், 3,11 மிட ராகு,கேதுக்கள் அபாரமான நன்மையை செய்யும், என்ற கருத்தின் உண்மையான அர்த்தமே, 3,11 மிடங்களில் ராகு,கேது இருந்தால் அந்த இடங்களுக்கு மறுமுனையான 5,9 எனும் திரிகோண ஸ்தானத்தில் அதன் இன்னொரு முனை கிரகம் இருக்கும் என்பது தான்.

உண்மையில் 3,11 மிடத்தில் இருக்கும் கிரகம் செய்யும் நன்மையை விட அதன் மறுமுனையான திரிகோண சுப வீட்டில் இருந்து சுபரான இன்னொரு ராகுவோ,கேதுவோதான் நன்மையைச் செய்கிறது என்பதே உண்மை.

பலன்கள் சொல்லப்படும் பொழுது பெரும்பாலும் ராகு,கேதுக்கள் ஒரே கிரகமாகவே கருதப்பட வேண்டும். மிக நுட்பமாகவே இவைகளை பிரித்தறிய வேண்டும்.

பெண்களின் ஜாதகத்தில் ராகு கேதுக்கள் எட்டாமிடம் சம்பந்தப்பட்டு, அல்லது அஷ்டமாதிபதி சம்பந்தப்பட்டிருந்து, அவர்களின் தசையோ புக்தியோ நடைபெறுமானால் அவர்களின் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தக்க பரிகாரங்களையும் உடனடியாகச் செய்ய வேண்டும்.

ஏனெனில், காதல் என்ற பெயரில் கயவர்களிடம் சிக்கி ஏமாந்து கற்பிழக்கச் செய்பவர்கள் ராகு கேதுக்கள். எட்டாமிடத்தில் ராகு கேதுக்கள் இருப்பதாலேயே ஒரு பெண் காதல்வயப்பட மாட்டார். ஆனால் அஷ்டமாதிபதியுடன் சேர்ந்து, சிக்கலான இடங்களில் இருந்தால் பெற்றோர்களுக்கு சிக்கல் தான்.

சில பெண்கள் தனக்கு முற்றிலும் தகுதியற்ற சிறிதும் பொருத்தம் இல்லாத நபர்களைத்தான் மணப்பேன் என்று பெற்றோரிடம் பிடிவாதம் பிடிப்பதும் அவர்களுடன் ஓடிப்போய் வாழ்க்கையைத் தொலைப்பதும் இந்த ராகு,கேதுக்களினால்தான்.

உதாரண ஜாதகத்தைப் பாருங்கள்.



புத
சுக்
குரு
சூ
செவ் ராகு




கேது
சனி


சந்
ராகு தசை ஆரம்பித்ததும் மேற்படி பெண்ணிற்கு காதல் அனுபவங்கள் ஏற்பட்டன. இஞ்சினியரிங் படித்த இந்த பெண் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவரைத் திருமணம் செய்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். பனிரெண்டாமிடமான போகஸ்தானத்தில் இருக்கும் கேது இப்பெண்ணின் மனதை முழுமையாக ஆளுமை செய்கிறார்.

கண்களை மூடிக் கொண்டு இந்தப் பெண் கிணற்றில் விழுவதை யாரால் தடுக்க முடியும்?

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்பொழுது பெண்ணிற்கும்,பையனுக்கும் ராகுதசை,புக்தி நடந்து கொண்டிருந்தாலோ, அல்லது பின்னால் இருவருக்கும் ராகுதசை சேர்ந்து வரும் என்றாலோ திருமணம் செய்யக் கூடாது.

ஒரு குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ராகுதசை அல்லது புக்தி நடந்தால் பிரச்சினைகள் உண்டாகும்.குழந்தைகளில் ஒருவருக்கும் அல்லது அனைத்து குழந்தைகளுக்கும் சேர்த்து குடும்பத்தில் அனைவருக்குமே ராகுதசை,புக்தி நடக்குமானால், தாய்,தந்தை பிரிவு, எல்லாவற்றிலும் தடை, துயரம், தரித்திரம், திருட்டு போதல்,மரணம் போன்ற துர்சம்பவங்கள் நடக்கும்.தகுந்த பரிகாரங்கள் செய்யவில்லை என்றால் சொல்ல முடியாத கஷ்டங்களை ராகு தருவார்.

ராகு,கேதுக்கள் சுப வலிமை பெறாமல் கெடுதல் தரும் நிலையில் இருக்கும் ஜாதகர்கள் ராகு,கேதுக்களின் விசேஷத்தலங்களான

ஸ்ரீகாளஹஸ்தி,திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், சீர்காழி டவுன்கோவில் போன்றவற்றிற்கு தங்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று விசேஷ பரிகாரங்கள் செய்வது நல்லது. பாதிப்பிற்கு தக்கபடி, சிவன் கோவில்களில் ருத்ராபிஷேகம் செய்தும் செவ்வாய்க்கிழமை தோறும் ஸ்ரீதுர்கைக்கு நெய்தீபம் ஏற்றியும் (எலுமிச்சை தீபம் எப்போதுமே ஏற்றக்கூடாது.அது தோஷத்தை அதிகப்படுத்தும்)தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் கெடுதல் தரும் வலிமையைப் பெற்று விட்டால் அந்த ஜாதகரை கடவுள் அன்றி வேறு யாராலும் காப்பாற்ற இயலாது. அதே போல் ராகு,கேதுக்கள் மட்டுமே சுப வலிமை பெற்றிருந்து மற்ற கிரகங்கள் கெட்டிருந்தாலும், ராகு,கேதுக்களின் தசை வந்தவுடன் அனைத்து யோகங்களும் செயல்பட்டு அடிப்படை வசதிகள் பெறப்பட்டு பிறகு அந்த ஜாதகர் யோக வாழ்வே வாழ்வார். 

[ஜூலை 6-12,2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.]

சனி, 3 ஜனவரி, 2015


விதி 3 ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இணைவு பெற்று செயல்படும்.

ஒரே திசையை குறிக்கும் ராசிகள்

மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்று ராசிகளும் கிழக்கு திசையை குறிக்கும்

ரிஷபம், கண்ணி, மகரம் இம்மூன்று ராசிகளும் தெற்கு திசையை குறிக்கும்

மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்று ராசிகளும் மேற்கு திசையை குறிக்கும்

கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்று ராசிகளும் வடக்கு திசையை குறிக்கும்

கிழக்கு ராசிகள் :

மேஷத்திற்கு ஐந்தாமிடம் சிம்மம், ஒன்பதாமிடம் தனுசு.

சிம்மத்திற்கு ஐந்தாமிடம் தனுசு, ஒன்பதாமிடம் மேஷம்.

தனுசுவிற்கு ஐந்தாமிடம் மேஷம், ஒன்பதாமிடம் சிம்மம்.

இப்படி ஒன்றுக்கொன்று திரிகோணமாக (1,5,9 ஆக) அமைகிறது

இதுபோலவே மற்ற திசைகளுக்கு உரிய ராசிகளும் அமையும்.

மேலும் ஒரே திசையில் உள்ள நட்சத்திர அதிபதிகள் ஒன்றாகவே அமைவார்கள்

மேஷத்தின் முதல் நட்சத்திரம் அசுவனி, சிம்மத்தின் முதல் நட்சத்திரம் மகம, தனுசுவின் முதல் நட்சத்திரம் மூலம் - ஆக கிழக்கு ராசிகளில் உள்ள நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரங்கள் கேதுவின் நட்சத்திரங்கள். இரண்டாவது நட்சத்திரங்கள் சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம், மூன்றாவதாக சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இவற்றின் முதல் பாதம் என்று அமைந்திருக்கிறது.

இதுபோலவே மற்ற திசைகளை குறிக்கும் ரசிகளிலும் அமைந்திருக்கும்.

இப்பொழுது விதிக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

அதாவது ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இனைந்து செயல்படும்.

முன்பு காட்டப்பட்ட உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும், சிம்மத்தில் சனியும் இருக்கிறார்கள். தனுசுவில் யாரும் இல்லை

இப்பொழுது சூரியன், சுக்கிரன், சனி இமூவரும் இனைந்து செயல் படுவார்கள்

எப்படி?

கிழக்கு ராசிகளில் முதல் பாதத்தில் சனியும், சூரியன் இரண்டாம் பாதத்திலும், சுக்கிரன் ஒன்பதாம் பாதத்திலும் இருக்கிறார்கள். அதாவது சனி + சூரியன் + சுக்கிரன் என்ற வரிசைப்படி இயங்குவார்கள். (இதற்குரிய பலன் பற்றி பிறகு பார்ப்போம்)

தெற்கு ராசிகளில் ரிஷபத்தில் கிரகம் இல்லை, கண்ணியில் சந்திரன் ராகு, மகரத்தில் கிரகம் இல்லை எனவே தெற்கு ராசிகளில் சந்திரன் + ராகு என்ற வரிசைப்படி இயங்கும்

மேற்கு ராசிகளில் மிதுனத்தில் மட்டும் குரு இருக்கிறார்

வடக்கு ராசிகளில் கடகத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கிரகம் இல்லை, மீனத்தில் புதன் கேது - அதாவது கேதுவும் செவ்வாயும் கேதுவும் நான்காம் பாதத்திலும், புதன் ஏழாம் பாதத்திலும் இருந்து- (செவ்வாய்,கேது) + புதன் என்ற வரிசையில் செயல்படுவார்கள்


மூன்றாம் விதி ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நபுகிறேன்.


நான்காம் விதி அடுத்த பதிவில்...

நன்றி.


அன்புடன்......


User avatar

Joined: Thu May 05, 2011 6:18 pm
Posts: 56
விதி 3 ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இணைவு பெற்று செயல்படும்.

ஒரே திசையை குறிக்கும் ராசிகள்

மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்று ராசிகளும் கிழக்கு திசையை குறிக்கும்

ரிஷபம், கண்ணி, மகரம் இம்மூன்று ராசிகளும் தெற்கு திசையை குறிக்கும்

மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்று ராசிகளும் மேற்கு திசையை குறிக்கும்

கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்று ராசிகளும் வடக்கு திசையை குறிக்கும்

கிழக்கு ராசிகள் :

மேஷத்திற்கு ஐந்தாமிடம் சிம்மம், ஒன்பதாமிடம் தனுசு.

சிம்மத்திற்கு ஐந்தாமிடம் தனுசு, ஒன்பதாமிடம் மேஷம்.

தனுசுவிற்கு ஐந்தாமிடம் மேஷம், ஒன்பதாமிடம் சிம்மம்.

இப்படி ஒன்றுக்கொன்று திரிகோணமாக (1,5,9 ஆக) அமைகிறது

இதுபோலவே மற்ற திசைகளுக்கு உரிய ராசிகளும் அமையும்.

மேலும் ஒரே திசையில் உள்ள நட்சத்திர அதிபதிகள் ஒன்றாகவே அமைவார்கள்

மேஷத்தின் முதல் நட்சத்திரம் அசுவனி, சிம்மத்தின் முதல் நட்சத்திரம் மகம, தனுசுவின் முதல் நட்சத்திரம் மூலம் - ஆக கிழக்கு ராசிகளில் உள்ள நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரங்கள் கேதுவின் நட்சத்திரங்கள். இரண்டாவது நட்சத்திரங்கள் சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம், மூன்றாவதாக சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இவற்றின் முதல் பாதம் என்று அமைந்திருக்கிறது.

இதுபோலவே மற்ற திசைகளை குறிக்கும் ரசிகளிலும் அமைந்திருக்கும்.

இப்பொழுது விதிக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

அதாவது ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இனைந்து செயல்படும்.

முன்பு காட்டப்பட்ட உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும், சிம்மத்தில் சனியும் இருக்கிறார்கள். தனுசுவில் யாரும் இல்லை

இப்பொழுது சூரியன், சுக்கிரன், சனி இமூவரும் இனைந்து செயல் படுவார்கள்

எப்படி?

கிழக்கு ராசிகளில் முதல் பாதத்தில் சனியும், சூரியன் இரண்டாம் பாதத்திலும், சுக்கிரன் ஒன்பதாம் பாதத்திலும் இருக்கிறார்கள். அதாவது சனி + சூரியன் + சுக்கிரன் என்ற வரிசைப்படி இயங்குவார்கள். (இதற்குரிய பலன் பற்றி பிறகு பார்ப்போம்)

தெற்கு ராசிகளில் ரிஷபத்தில் கிரகம் இல்லை, கண்ணியில் சந்திரன் ராகு, மகரத்தில் கிரகம் இல்லை எனவே தெற்கு ராசிகளில் சந்திரன் + ராகு என்ற வரிசைப்படி இயங்கும்

மேற்கு ராசிகளில் மிதுனத்தில் மட்டும் குரு இருக்கிறார்

வடக்கு ராசிகளில் கடகத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கிரகம் இல்லை, மீனத்தில் புதன் கேது - அதாவது கேதுவும் செவ்வாயும் கேதுவும் நான்காம் பாதத்திலும், புதன் ஏழாம் பாதத்திலும் இருந்து- (செவ்வாய்,கேது) + புதன் என்ற வரிசையில் செயல்படுவார்கள்


மூன்றாம் விதி ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நபுகிறேன்.


நான்காம் விதி அடுத்த பதிவில்...

நன்றி.


அன்புடன்......

வெள்ளி, 2 ஜனவரி, 2015


விதி 2 : ஒரே ராசியில் உள்ள கிரகங்களை சேர்க்கை பெற்ற கிரகங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேற்படி உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் சுக்கிரனுடன் இணைவு பெற்றதாக கருத வேண்டும். அதே சமயம் சூரியன் சுக்கிரனோடு ஒரே ராசியில் இணைவு பெற்றிருந்தாலும் சூரியனுடைய பாதிப்பு சுக்கிரனுக்கு முழுமையாக இருக்காது.

சுக்கிரனுடைய பாதிப்புதான் சூரியனுக்கு முழுமையாக இருக்கும்.

காரணம் : சூரியன் சுக்கிரனை நோக்கி நகர்கிறது. சுக்கிரன் சூரியனிலிருந்து விலகிச் செல்கிறது.

கண்ணியில் ராகு சந்திரன் இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இணைவு பெறுகிறது

காரணம் : ராகு ராசி சக்கரத்தில் எதிர் திசையில் சுற்ற்க்கூடியது. எனவே சந்திரன் ராகுவை நோக்கியும், ராகு சந்திரனை நோக்கியும் நகர்வதால் ஒன்றையொன்று இணைகிறது.

மீனத்தில் கேதுவும் புதனும் ஒரே ராசியில் இருந்தாலும் இணைவு பெற்றதாகக் கருத முடியாது.

காரணம் : கேது மகரத்தை நோக்கியும் புதன் மேஷத்தை நோக்கியும் செல்கின்றனர். ஒருவரையருவர் விலகிச் செல்கின்றனர். (ஆனால் இதற்கும் பலன் உண்டு பலன் பற்றி பிறகு பார்ப்போம்.)


அன்புடன்....


வியாழன், 1 ஜனவரி, 2015

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்


இங்கு பிருகு நந்தி நாடி மற்றும் சப்த ரிஷி நாடி ஆகிய ஜோதிட முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்

பிருகு நந்தி நாடி

பிருகு நந்தி நாடியில் கிரகங்களின் காரகதத்துவம், கிரகங்கள் நின்ற ராசியின் காரகதத்துவம் இவை இரண்டின் அடிப்படையிலேயே ஒரு ஜாதகப் பலன் நிர்ணயிக்கப் படுகிறது. கிரகங்களின் ஆதிபத்தியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

பராசரர் முறை(பாரம்பரிய ஜோதிட முறை)யில் உள்ளதுபோல, பிருகு நந்தி நாடியில், கிரகங்களில் இயற்கை சுபர், இயற்கை பாவி என்ற பாகுபாடு இல்லை. நவகிரகங்கள் அனைத்தும் சுபம் அசுபம் இரண்டும் கலந்ததே. அந்தந்த கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்களைப் பொருத்தே அவற்றின் தன்மை வேறுபடுகிறது.

கிரக காரகத்துவங்களில் ஒரு சில விஷயங்களைத் தவிர மற்ற அனைத்தும் பராசரர் முறை(பாரம்பரிய ஜோதிட முறை)யில் உள்ளபடியே எடுத்துக்கொள்ளப் படுகிறது.

உதாரணமாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் வாழ்க்கைத் துணையை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஒருவரே.

ஆனால் நாடி முறையில் ஆணுக்கு சுக்கிரன், பெண்ணுக்கு செவ்வாய் என்று எடுத்துக்கொள்ளப் படுகிறது. இப்படி மாறுபடக்கூடிய விஷயங்களை அவ்வப்போது குறிப்பிடப்படும்.

சப்தரிஷி நாடி

சப்த ரிஷி நாடியில் பிருகு நந்தி நாடியில் உள்ளது போலவே கிரகங்களின் காரகதத்துவம், கிரகங்கள் நின்ற ராசியின் காரகதத்துவம் இவற்றுடன் கிரகங்களின் ஆதிபத்தியங்களையும் எடுத்துக்கொள்ளப் படுகிறது.

பிருகு நந்தி நாடி சப்தரிஷி நாடி இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம், பிருகு நந்தி நாடியில் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. சப்த ரிஷி நாடியில் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.

உதாரணமாக ஒரு பெண்ணின் திருமண யோகத்தைப் பற்றி ஆய்வு செயும்போது பிருகு நந்தி நாடியில் செவ்வாயையும் அதனுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களையும் எடுத்துக்கொள்ளப்படும். 

ஆனால் சப்தரிஷி நாடியில் ஏழாம் அதிபதி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டையும் அவற்றுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களையும் எடுத்துக்கொள்ளப் படும்.

மேற்படி இரண்டு முறைகளுக்கும் பிருகு நந்தி நாடி விதிகளே அடிப்படையானது.

இனி பிருகு நந்தி நாடியின் அடிப்படை விதிகளையும் அவற்றிற்கான விளக்கங்களையும் பற்றி பார்க்கலாம்.


பிருகு நந்தி நாடி விதிகள் :

விதி 1 : நாம் ஆய்வு செய்யக் கூடிய ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில், ஒரே ராசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அந்த கிரகங்களை பாத சார அடிப்படையில் வரிசைப்படுத்தி அந்தந்த ராசியில் குறித்துக் கொள்ள வேண்டும். சில கிரகங்கள் தனித்தும் இருக்கலாம், அவர்கள் நின்ற நட்சத்திர பாதம் என்ன என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமான குறிப்பு : ஒவ்வொரு கிரகமும் அந்தந்த ராசியில் எத்தனையாவது பாதத்தில் உள்ளது என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். ஒரு ராசிக்கு ஒன்பது பாதங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதகத்தைப் பாருங்கள். இது ஒரு ஆண் ஜாதகம்.

Image

மேற்படி ஜாதகத்தில் மீனத்தில் புதனும் கேதுவும் இருக்கிறார்கள், இவர்களில் புதன் ரேவதி 2 லும் (மீனத்தில் 7-ம் பாதத்திலும்), கேது உத்திரட்டாதி 3 லும் (மீனத்தில் 4-ம் பாதத்திலும்) இருக்கிறார்கள். அதாவது மீனத்தில் முதலில் கேதுவும் இரண்டாவதாக புதனும் இருக்கிறார்கள். ஆனால் ஜாதகத்தில் முதலில் புதன் பிறகு கேது என்று இருக்கிறது.

மேஷத்தில் சூரியன் அசுவனி 2 லும் (மேஷத்தில் 2 ம் பாதத்திலும்), சுக்கிரன் கார்த்திகை 1லும் (மேஷத்தில் 9 ம் பாதத்திலும்) இருக்கிறார்கள். அதாவது முதலில் சூரியன் பிறகு சுக்கிரன் இருக்கிறார்கள். ஜாதகத்திலும் சரியாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மிதுனத்தில் குரு திருவாதிரை 1 ல் (மிதுனத்தில் 3 ம் பாதத்தில்) இருக்கிறார்.

கடகத்தில் செவ்வாய் பூசம் 3 ல் (கடகத்தில் 4 ம் பாதத்தில்) இருக்கிறார்.

சிம்மத்தில் சனி மகம 1 ல் (சிம்மத்தில் 1 ம் பாதத்தில்) இருக்கிறார்.

கண்ணியில் சந்திரன் உத்திரம் 2 ம் பாதத்திலும் (கண்ணியில்ல் 1 ம் பாதத்திலும்) ராகு அஸ்தம் 1 ம் பாதத்திலும் (கண்ணியில்ல் 4 ம் பாதத்திலும்) உள்ளார்கள். அதாவது முதலில் சந்திரன் பிறகு ராகு இருக்கிறார்கள். ஜாதகத்திலும் சரியாகவே குறிப்பிடப்பட்டிருகிறது.

இந்த ஜாதகம் கீழ்க்கண்டபடி அமையும்

Image

இரண்டாம் விதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

குறிப்பு : மேற்படி விஷயங்களிலோ இனி வரும் பதிவுகளிலோ சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யவும். எனக்குத் தெரிந்த வரை விளக்கம் தருகிறேன்.

நன்றி. 


அன்புடன்....