வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்
இங்கு பிருகு நந்தி நாடி மற்றும் சப்த ரிஷி நாடி ஆகிய ஜோதிட முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்
பிருகு நந்தி நாடி
பிருகு நந்தி நாடியில் கிரகங்களின் காரகதத்துவம், கிரகங்கள் நின்ற ராசியின் காரகதத்துவம் இவை இரண்டின் அடிப்படையிலேயே ஒரு ஜாதகப் பலன் நிர்ணயிக்கப் படுகிறது. கிரகங்களின் ஆதிபத்தியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
பராசரர் முறை(பாரம்பரிய ஜோதிட முறை)யில் உள்ளதுபோல, பிருகு நந்தி நாடியில், கிரகங்களில் இயற்கை சுபர், இயற்கை பாவி என்ற பாகுபாடு இல்லை. நவகிரகங்கள் அனைத்தும் சுபம் அசுபம் இரண்டும் கலந்ததே. அந்தந்த கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்களைப் பொருத்தே அவற்றின் தன்மை வேறுபடுகிறது.
கிரக காரகத்துவங்களில் ஒரு சில விஷயங்களைத் தவிர மற்ற அனைத்தும் பராசரர் முறை(பாரம்பரிய ஜோதிட முறை)யில் உள்ளபடியே எடுத்துக்கொள்ளப் படுகிறது.
உதாரணமாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் வாழ்க்கைத் துணையை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஒருவரே.
ஆனால் நாடி முறையில் ஆணுக்கு சுக்கிரன், பெண்ணுக்கு செவ்வாய் என்று எடுத்துக்கொள்ளப் படுகிறது. இப்படி மாறுபடக்கூடிய விஷயங்களை அவ்வப்போது குறிப்பிடப்படும்.
சப்தரிஷி நாடி
சப்த ரிஷி நாடியில் பிருகு நந்தி நாடியில் உள்ளது போலவே கிரகங்களின் காரகதத்துவம், கிரகங்கள் நின்ற ராசியின் காரகதத்துவம் இவற்றுடன் கிரகங்களின் ஆதிபத்தியங்களையும் எடுத்துக்கொள்ளப் படுகிறது.
பிருகு நந்தி நாடி சப்தரிஷி நாடி இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம், பிருகு நந்தி நாடியில் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. சப்த ரிஷி நாடியில் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.
உதாரணமாக ஒரு பெண்ணின் திருமண யோகத்தைப் பற்றி ஆய்வு செயும்போது பிருகு நந்தி நாடியில் செவ்வாயையும் அதனுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களையும் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆனால் சப்தரிஷி நாடியில் ஏழாம் அதிபதி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டையும் அவற்றுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களையும் எடுத்துக்கொள்ளப் படும்.
மேற்படி இரண்டு முறைகளுக்கும் பிருகு நந்தி நாடி விதிகளே அடிப்படையானது.
இனி பிருகு நந்தி நாடியின் அடிப்படை விதிகளையும் அவற்றிற்கான விளக்கங்களையும் பற்றி பார்க்கலாம்.
பிருகு நந்தி நாடி விதிகள் :
விதி 1 : நாம் ஆய்வு செய்யக் கூடிய ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில், ஒரே ராசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அந்த கிரகங்களை பாத சார அடிப்படையில் வரிசைப்படுத்தி அந்தந்த ராசியில் குறித்துக் கொள்ள வேண்டும். சில கிரகங்கள் தனித்தும் இருக்கலாம், அவர்கள் நின்ற நட்சத்திர பாதம் என்ன என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமான குறிப்பு : ஒவ்வொரு கிரகமும் அந்தந்த ராசியில் எத்தனையாவது பாதத்தில் உள்ளது என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். ஒரு ராசிக்கு ஒன்பது பாதங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதகத்தைப் பாருங்கள். இது ஒரு ஆண் ஜாதகம்.
மேற்படி ஜாதகத்தில் மீனத்தில் புதனும் கேதுவும் இருக்கிறார்கள், இவர்களில் புதன் ரேவதி 2 லும் (மீனத்தில் 7-ம் பாதத்திலும்), கேது உத்திரட்டாதி 3 லும் (மீனத்தில் 4-ம் பாதத்திலும்) இருக்கிறார்கள். அதாவது மீனத்தில் முதலில் கேதுவும் இரண்டாவதாக புதனும் இருக்கிறார்கள். ஆனால் ஜாதகத்தில் முதலில் புதன் பிறகு கேது என்று இருக்கிறது.
மேஷத்தில் சூரியன் அசுவனி 2 லும் (மேஷத்தில் 2 ம் பாதத்திலும்), சுக்கிரன் கார்த்திகை 1லும் (மேஷத்தில் 9 ம் பாதத்திலும்) இருக்கிறார்கள். அதாவது முதலில் சூரியன் பிறகு சுக்கிரன் இருக்கிறார்கள். ஜாதகத்திலும் சரியாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மிதுனத்தில் குரு திருவாதிரை 1 ல் (மிதுனத்தில் 3 ம் பாதத்தில்) இருக்கிறார்.
கடகத்தில் செவ்வாய் பூசம் 3 ல் (கடகத்தில் 4 ம் பாதத்தில்) இருக்கிறார்.
சிம்மத்தில் சனி மகம 1 ல் (சிம்மத்தில் 1 ம் பாதத்தில்) இருக்கிறார்.
கண்ணியில் சந்திரன் உத்திரம் 2 ம் பாதத்திலும் (கண்ணியில்ல் 1 ம் பாதத்திலும்) ராகு அஸ்தம் 1 ம் பாதத்திலும் (கண்ணியில்ல் 4 ம் பாதத்திலும்) உள்ளார்கள். அதாவது முதலில் சந்திரன் பிறகு ராகு இருக்கிறார்கள். ஜாதகத்திலும் சரியாகவே குறிப்பிடப்பட்டிருகிறது.
இந்த ஜாதகம் கீழ்க்கண்டபடி அமையும்
இரண்டாம் விதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பு : மேற்படி விஷயங்களிலோ இனி வரும் பதிவுகளிலோ சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யவும். எனக்குத் தெரிந்த வரை விளக்கம் தருகிறேன்.
நன்றி.
அன்புடன்....
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக