விதி 3 ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இணைவு பெற்று செயல்படும்.
ஒரே திசையை குறிக்கும் ராசிகள்
மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்று ராசிகளும் கிழக்கு திசையை குறிக்கும்
ரிஷபம், கண்ணி, மகரம் இம்மூன்று ராசிகளும் தெற்கு திசையை குறிக்கும்
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்று ராசிகளும் மேற்கு திசையை குறிக்கும்
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்று ராசிகளும் வடக்கு திசையை குறிக்கும்
கிழக்கு ராசிகள் :
மேஷத்திற்கு ஐந்தாமிடம் சிம்மம், ஒன்பதாமிடம் தனுசு.
சிம்மத்திற்கு ஐந்தாமிடம் தனுசு, ஒன்பதாமிடம் மேஷம்.
தனுசுவிற்கு ஐந்தாமிடம் மேஷம், ஒன்பதாமிடம் சிம்மம்.
இப்படி ஒன்றுக்கொன்று திரிகோணமாக (1,5,9 ஆக) அமைகிறது
இதுபோலவே மற்ற திசைகளுக்கு உரிய ராசிகளும் அமையும்.
மேலும் ஒரே திசையில் உள்ள நட்சத்திர அதிபதிகள் ஒன்றாகவே அமைவார்கள்
மேஷத்தின் முதல் நட்சத்திரம் அசுவனி, சிம்மத்தின் முதல் நட்சத்திரம் மகம, தனுசுவின் முதல் நட்சத்திரம் மூலம் - ஆக கிழக்கு ராசிகளில் உள்ள நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரங்கள் கேதுவின் நட்சத்திரங்கள். இரண்டாவது நட்சத்திரங்கள் சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம், மூன்றாவதாக சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இவற்றின் முதல் பாதம் என்று அமைந்திருக்கிறது.
இதுபோலவே மற்ற திசைகளை குறிக்கும் ரசிகளிலும் அமைந்திருக்கும்.
இப்பொழுது விதிக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.
அதாவது ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இனைந்து செயல்படும்.
முன்பு காட்டப்பட்ட உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும், சிம்மத்தில் சனியும் இருக்கிறார்கள். தனுசுவில் யாரும் இல்லை
இப்பொழுது சூரியன், சுக்கிரன், சனி இமூவரும் இனைந்து செயல் படுவார்கள்
எப்படி?
கிழக்கு ராசிகளில் முதல் பாதத்தில் சனியும், சூரியன் இரண்டாம் பாதத்திலும், சுக்கிரன் ஒன்பதாம் பாதத்திலும் இருக்கிறார்கள். அதாவது சனி + சூரியன் + சுக்கிரன் என்ற வரிசைப்படி இயங்குவார்கள். (இதற்குரிய பலன் பற்றி பிறகு பார்ப்போம்)
தெற்கு ராசிகளில் ரிஷபத்தில் கிரகம் இல்லை, கண்ணியில் சந்திரன் ராகு, மகரத்தில் கிரகம் இல்லை எனவே தெற்கு ராசிகளில் சந்திரன் + ராகு என்ற வரிசைப்படி இயங்கும்
மேற்கு ராசிகளில் மிதுனத்தில் மட்டும் குரு இருக்கிறார்
வடக்கு ராசிகளில் கடகத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கிரகம் இல்லை, மீனத்தில் புதன் கேது - அதாவது கேதுவும் செவ்வாயும் கேதுவும் நான்காம் பாதத்திலும், புதன் ஏழாம் பாதத்திலும் இருந்து- (செவ்வாய்,கேது) + புதன் என்ற வரிசையில் செயல்படுவார்கள்
மூன்றாம் விதி ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நபுகிறேன்.
நான்காம் விதி அடுத்த பதிவில்...
நன்றி.
அன்புடன்......
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக