ஜோதிடம் ஜாதகம் இவைகளை எதிர்ப்பவர்கள் மூட நம்பிக்கை என சாடுபவர்கள் ஒரு குற்ற சாட்டை முன் வைக்கிறார்கள் பிரபஞ்சம் என்பது எல்லை இல்லாதது எங்கும் விரிந்தது கணக்கிட்டு சொல்ல முடியாத அளவிற்கு பிரம்மாண்டமானது அதில் நமது சூரிய குடும்பம் என்பது ஒரு சிறிய பகுதி அந்த சிறிய பகுதியில் பூமி என்பது ஒரு ஆரஞ்சி பழ அளவு தான் ஆரஞ்சி பழத்தின் மேல் சிற்றெறும்பு ஊர்வதை போல ஏன் அதை விட நூறு மடங்கு சிறிய பொருள் போல உள்ளவன் தான் மனிதன் அவனை எங்கோ ஒரு மூலையில் பிரம்மாண்டமாக இயங்கி கொண்டிருக்கும் கிரகங்கள் தேடி வந்து நல்லது கெட்டதை கொடுக்குமா? அப்படி கொடுக்க வேண்டிய அவசியம் தான் அவைகளுக்கு என்ன? அதனால் அவைகள் அடையும் நன்மை அல்லது தீமை தான் என்ன என்று கேட்கிறார்கள்
எந்த விளக்கத்தை சொன்னாலும் ஏற்று கொள்ள மறுக்கும் நாத்திகவாதிகள் மட்டும் இந்த கேள்வியை கேட்ப்பார்கள் என்றால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை காரணம் சுவற்றை நோக்கி பேசப்படும் வார்த்தைகளுக்கு பெருமை இல்லை ஆனால் நம்மை போன்ற ஆத்திகர்களும் இந்த கேள்வியை கேட்கிறார்கள் அல்லது கேட்க்க விரும்புகிறார்கள் அதனால் விளக்கம் சொல்ல வேண்டிய தார்மிக கடமை நமக்குண்டு
சூரிய சக்தியால் தான் பூமியில் உயிர் சலனம் இது வரை தொடர்ந்து வருகிறது என்பது நாம் அறியாதது அல்ல மரம் செடி கொடி மலர் துவங்கி மனிதன் வரையிலும் சூரிய சக்தியை பெறா விட்டால் மரணம் நிச்சயமாகி விடுகிறது ஒரு சிறிய புல் பூண்டுக்கு கூட ஆயிரம் லட்சம் காததூரம் இருக்கின்ற சூரியனின் சக்தியை கிரகித்து கொள்ளும் ஆற்றல இருக்கும் போது மனித உடம்பிற்கு அந்த ஆற்றல் இருக்காதா இருக்க கூடாத என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் வேண்டுமானால் இப்படி சொல்லலாம் சூரிய வெப்பம் பூமியை நோக்கி வருகிறது அது ஊயிர்களின் மேல் விழுகிறது அது தான் சூரிய சக்தியை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ள காரணமாக இருக்கிறதே தவிர ஜீவ சரிரங்கள் சூரிய வெம்மையை ஈர்க்க வில்லை என்று வாதிடலாம்
வெப்பத்தை ஈர்க்கும் சக்தி சரிரங்களுக்கு இல்லை என்றால் சூடானது மேலுடம்போடு நின்ருவிடுமே தவிர உள்ளுக்குள் சென்று உள்ளுறுப்புகளை தாக்கவே தாக்காது ஆனால் நமது உயிர் வாழ்க்கை அனுபவத்தில் சூடும் குளிர்ச்சியும் நம்மை உள்ளும் புறமும் தாக்குவதை நன்றாகவே அறிவோம் சூரிய சக்தியானது எப்படி தங்கு தடை இல்லாமல் பூமியால் ஈர்க்கப் படுகிறதோ அதே போலவே தான் மாற்ற கிரகங்களின் தாக்கங்களும் பூமியின் மீது ஆட்சி செலுத்துகின்றன
மனித உடம்பில் காலை நேரத்தில் சீதளமும் மதிய நேரத்தில் பித்தமும் மாலை நேரத்தில் வாதமும் மேலோங்கி நிற்பதாக இந்திய வைத்திய சாஸ்திரம் சொல்கிறது அதே போலவே ஒவ்வொரு வினாடியும் கூட நமது உடம்பிற்குள் பல ரசாயன மாற்றங்கள் நடந்து வருகிறது இந்த ரசாயன மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கிரக ஆற்றல்களை உள்ளிழுக்க வல்லது உதாரணமாக கம்பீரமான ஆண் மகனை பார்த்து ஒரு பெண் மையல் கொள்ளும்போது அவளுடைய உடம்பு சுக்கிரனின் ஆற்றலை அதிகப்படியாக ஈர்க்கிறது இப்படி தான் எங்கோ இருக்கும் கிரகம் மனிதனை ஆட்டுவிப்பதாக இந்திய ஞானிகள் கருதுகிறார்கள்
பொதுவாக பூமிக்கு வருகின்ற கிரகங்களின் அதிர்வாற்றல் மனிதனின் மூளையை நேரடியாக தாக்குகிறது மூளையிலிருந்து படிப்படியாக உடம்பிற்குள் பரவி நாடி நரம்பெங்கும் நிறைந்து மனிதனின் சிந்தனையை செயலை கட்டுப்படுத்துகிறது
உதாரணமாக ஒருவனுக்கு ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி நடப்பதாக வைத்து கொள்வோம் சனிக்கிரகத்தின் ஆற்றல் அவனது தலையில் துவங்கி பாதம் வரையில் மிக மெதுவாக பரவுகிறது இப்படி பரவுகின்ற நேரம் அந்த மனிதனின் எண்ணத்திலும் செயலிலும் இயல்பான நிலை குறைந்து மாறான நிலை அதிகப்படியாக செயல் படுகிறது அதாவது அவனுடைய உடல் சனிக்கிரகத்தின் தாக்குதலை தாங்க கூடியதாக இருந்தால் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறான் சக்தி குறைவாக இருந்தால் மாட்டிக் கொள்கிறான்
இப்படி மாட்டும் போது தான் பதற்றப்பட்டோ ஆசை வயப்பட்டோ கோபப்பட்டோ மனிதன் சில காரியங்களை செய்து துக்கத்திலும் சோகத்திலும் அகப்பட்டு கொள்கிறான் கிரகங்களின் ஈர்ப்பு என்பது ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டே இருக்கும் சங்கதி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள எந்த மனிதனாலும் ஆகாது நல்லதோ கெட்டதோ கிரகங்கள் தருகின்ற பரிசை மனிதன் பெற்று தான் ஆக வேண்டும்
இது தான் உண்மை நிலை எனும் போது கிரகங்களின் கொடிய பலனை பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொல்வது எந்த வகையில் சரியாகும் பரிகாரங்கள் என்பதே மனிதனையும் மனித மனதையும் ஏமாற்றுகின்ற வேலைதானே என்று சிலர் நினைப்பது தெரிகிறது
எனது அனுபவத்தை பொருத்தவரை பரிகாரங்கள் என்பது பயனுடையதாக இருக்கிறதே தவிர பயனற்று இல்லை அதாவது சரியான முறையில் இந்திய ஞானிகள் அல்லது சித்தர்கள் வகுத்து தந்தப் படி பரிகாரங்களை செய்தால் எப்பொழுதும் வெற்றியை தவிர தோல்வியே இல்லை நமது சித்த புருஷர்கள் ஒரு கிரக தோஷம் என்றால் உடனே பூஜை போடு படையல் செய் என்று சொன்னதில்லை அந்த தோஷங்களுக்கு பண்டைய விஞ்ஞானப் படி வழி காட்டினார்கள்
உதாரணமாக ஏழரை சனி நடக்கின்ற போது திருநள்ளாறு போ காகத்திற்கு எள்ளுஞ்சாதமும் வை என்று மட்டும் சொல்ல வில்லை தலை முதல் கால் வரை சனி ஓரையில் சனிக்கிழமையில் உடம்பு முழுவதும் நல்லெண்ணை பூசி பத்து நிமிடமாவது வெளிக்காற்றில் நின்று குளி என்றும் சொல்கிறார்கள்
இதற்கு காரணம் என்ன? நல்லெண்ணெய் எள்ளிலிருந்து தயாரிக்கப்படுவது தானியங்களில் எள்ளால் மட்டும் தான் சனிகிரகத்தின் ஆற்றலை உள்ளே இழுக்காமல் வெளியில் தள்ள இயலும் அதனால் அந்த எண்ணையை சனிக்கிழமை உடல் முழுவதும் பூசிக் கொண்டு வெட்ட வெளியில் நிற்கும் போது சனிக்கிரகத்தின் ஆற்றலை உள்ளுக்குள் ஈர்க்காத தன்மை வந்தமைகிறது
இது பழங்கால ரசாயன முறை அதே நேரம் நீல நிற மலர்களை உடம்பில் படும்படியாக அணிந்து கொள்ளுமாறும் சொல்லப்படுகிறது இதுவும் சனியின் ஆற்றலை நமது உடம்பு ஈர்க்காமல் தடுக்கிறது அப்படி தடுக்கப் படும்போது ஏழரை சனியின் அல்லது அஷ்டமத்து சனியின் கொடுமை குறைகிறது அதாவது சனியால் நமது புத்தி தடுமாறாமல் தடுக்கப் படுகிறது அதன் பிறகு ஏழரை சனியின் கொடுமை பெரியதாக இருக்காதல்லவா
இப்படி பட்ட விஞ்ஞான பூர்வமான பரிகாரங்கள் நமது முன்னோர்களால் நிறைய சொல்லப் பட்டுருக்கிறது சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பவர்கள் பயந்தவர்களாகவும் குழப்ப வாதிகளாகவும் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது இந்த சந்திரனின் கதிர் வீச்சு கட்டுப் படுத்தப் பட்டு ஒரு மனிதனுக்கு கிடைக்குமானால் அவன் ஆற்றல் மிக்கவனாக மாறி விடுவான் அதற்கு நமது முன்னோர்கள் சொல்லுகின்ற பரிகாரம் என்ன தெரியுமா மிகவும் சுலபமானது சட்டன்று கேட்டால் சிரிக்கவும் கூறியது சுண்டைக்காய் இருக்கிறதே சுண்டைக்காய் அதன் பூவை தினசரி பறித்து சட்டை பையிலோ அல்லது உடம்பில் எந்த பகுதிலோ நெருக்கமாக வைத்துக் கொண்டால் சந்திரகிரகத்தின் வீச்சு தன்மையை அது கட்டுப்படுத்தி விடுமாம்
இது சிரிக்க கூடிய விஷயம் அல்ல சிந்திக்க கூடிய விஷயமும் ஆகும் தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவத்தில் என்னிடத்தில் வருகின்ற நிறைய பேருக்கு சுண்டைக்காய் பூவை இன்னதென்று சொல்லாமல் தாயத்தில் போட்டு கொடுத்திருக்கிறேன் அவர்களும் அதை பெற்ற இரண்டு மூன்று நாட்களில் புதிய தெளிவை அடைந்திருகிறார்கள் அதானால் நமது முன்னோர்கள் கண்டுபிடித்த ஜோதிடமும் பரிகாரமும் ஒருவித விஞ்ஞானமே தவிர ஏமாற்று வேலை அல்ல
இப்படி எளிய சுலபமாக கிடைக்க கூடிய சில அறிய வகை தாவரங்களை முறைப்படி பயன் படுத்தி ஏராளமான நன்மைகளை மனிதன் பெறலாம் ஆனால் மனித திருவிளையாடலால் இன்று பல வகை தாவர இனங்கள் அரிதாக போய்விட்டது அவைகளை கண்டு பிடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவருவதற்குள் அதிகப்படியான செலவு என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது
.
.
.
.
.
.
வாழ்த்துக்கள் .. மிகவும் பயனுள்ள பதிவுகள்.. நன்றி
பதிலளிநீக்கு