புதன், 5 நவம்பர், 2014

எண்ணியல் ஜோதிடம் – நேரம்


நாம் மணி , நிமிஷத்தைக் கொண்டு , எண்ணியல் ஜோதிடம் அறிவது எப்படி என்று பார்ப்போம்!



மணி, நிமிடம் என்பதில் மணியை விட்டு விட்டு , நிமிடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு , கூட்டுத் தொகை 1 -ல் வந்தால் அதாவது , 1 , 10 , 19 , 28 , 37 , 46 , 55 என்ற நிமிடமாக வந்த அதற்கு கிருத்திகை , உத்திரம் , உத்திராடம் என்ற சூரியனுக்கு உரிய நட்சத்திரங்களாகும்.


மணி, நிமிடம் என்பதில் மணியை விட்டு விட்டு , நிமிடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு , கூட்டுத் தொகை 2 –ல் வந்தால் அதாவது 2 , 11 , 20 , 29 , 38 , 47 , 56 என்ற நிமிடமாக வந்தால் அது ரோகிணி – அஸ்தம் – திருவோணம் என்கிற 
சந்திரனின்  நட்சத்திரங்களுக்கு உரியது. 




மணி, நிமிடம் என்பதில் மணியை விட்டு விட்டு , நிமிடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு , கூட்டுத் தொகை - ல் வந்தால் அதாவது 3 , 12 , 21 , 30 , 39 , 48 , 57 என்ற நிமிடமாக வந்தால் அது செவ்வாயின் நட்சத்திரங்களான மிருக சீரிடம் , சித்திரை , அவிட்டம் எனக் கருதவேண்டும்.


இவ்வாறே   4- ல் வந்தால் அதாவது 4 , 13, 22 , 31 , 40 , 49 , 58 ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை , சுவாதி , சதயம் எனவும் கருத வேண்டும்.


 குரு – 5 – ல் வந்தால் – 5 , 14 ,23, 32 , 41 , 50, 59 - புனர் பூசம் – விசாகம் – பூரட்டாதி நட்சத்திரம்.


சனி – 6 – 6 , 15, 24, 33,42,51,60 – பூசம், அனுஷம் , உத்திரட்டாதி


புதன் – 7 – 16 , 25 , 34 , 43 , 52 – ஆயில்யம் – கேட்டை – ரேவதி.


கேது – அசுவினி – மகம் – மூலம் – 8 – 17 , 26 , 35 , 44 , 53


சுக்கிரன் – பரணி – பூராடம் – பூரம் எனக் கருதவும். 9 , 18, 27,36,45,54. நிமிடங்கள்.


உதாரணம் : 9.44 am.


மூன்று நட்சத்திரங்களின் மொத்த பாதங்கள் = 3 X 4 =  12 = 60 minutes = 1 hour.


ஒரு பாதத்திற்கு 5  நிமிடங்கள் வரும்.


9.44 am = இதில் 44 min = அசுவினி = 20 min, மகம் = 20 min ; இரண்டு நட்சத்திரங்களுக்கான நேரம் போக அடுத்து வருவது மூலம். மூலத்தில் முதலாம் பாதம் ( தனுசு லக்கினம் ) என அறிய வேண்டும்.


ஜோதிடம் பார்க்க வந்தவருக்கு வந்த நேரம் கொண்டு அல்லது சொல்ல ஆரம்பிக்கும் நேரம் கொண்டு கிரக நட்சத்திர பாத நிலை அறிந்து மற்ற விடயங்களைக் கணித்து பலன்களை சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக