மூன்று மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன் முக வாட்டத்துடனும் உடல் சோர்வுடனும் ஒரு இளைஞன் என்னை காண வந்தான் அவனது தந்தையார் ஓரளவு வசதி பெற்றவர் சொந்தமாக குடியாத்தத்தில் ஜவுளிக் கடை வைத்திருக்கிறார் அவருக்கு இந்த இளைஞனும் மற்றொரு பெண்ணும் தான் குழந்தைகள் இவனும் நன்றாக படித்தவன் படித்து முடித்து விட்டு நல்ல வேலை கிடைத்து அமெரிக்கா சென்றான் அங்கே பொருளாதார வீழ்ச்சி நடந்த போது இவனது வேலையும் போய் தாய் நாடு திரும்பி விட்டான்
அதன் பிறகு பல இடங்களுக்கு சென்று வேலை தேடியிருக்கிறான் ஏராளமான நேர்முக தேர்வுகளை சந்தித்தும் இருக்கிறான் ஒன்றும் பயனில்லை கடிதம் எழுதுகிறோம் தொலைபேசியில் அழைக்கிறோம் மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்று சொன்னார்களே தவிர ஒரு நிறுவனத்தார் கூட அவனை வேலைக்கு அழைக்க வில்லை
ஆயிரம் தான் வீட்டில் வசதி இருந்தாலும் நல்ல வேலையில் இருந்தவனுக்கு தீடிர் என வேலை போய் நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடந்தால் மனம் என்ன பாடு படும் தனது சோகத்தை வேதனையை பகிர்ந்து கொள்ளக் கூட ஆளில்லாமல் அவதிப் பட்டிருக்கிறான் தனக்கு தானே சமதானம் தேடி தோற்று போயிருக்கிறான்
அவனது தந்தையார் வேலை கிடைக்காவிட்டால் என்ன கடல் மாதிரி கடை இருக்கிறதே வந்து கல்லா பெட்டியில் உட்க்கார் நீ நாலு பேருக்கு சம்பளம் கொடு என்று ஆறுதலும் சொல்லி பார்த்திருக்கிறார் அவன் மனதில் அமெரிக்க வேலை அலுவலக சூழல் ஆழமாக பதிந்து விட்டதே தவிர வியாபாரம் செய்ய மனம் போக வில்லை
இந்த நிலையில் தனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றிருக்கிறான் அவரும் ஜாதகத்தை ஆழமாக பார்த்து விட்டு தம்பி உன் ஜாதகம் கால சர்ப தோஷம் கொண்டது எனவே உன் வாழ்க்கையில் எந்த கிரகமும் உனக்கு நன்மை செய்யாது வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிப்பது தான் உன் தலை விதி உன் தகப்பனார் அழைக்கிறார் என்பதற்காக வியாபாரம் செய்ய நீ போனாலும் நஷ்டம் தான் ஏற்படும் அதனால் இருக்கும் சொத்தை வைத்து கொண்டு அமைதியாக வாழ முயற்சி செய் என்று சொல்லியிருக்கிறார்
கல்லை சுமந்தவன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் ஆகி விட்டது தனது வாழ்க்கையே அவ்வளவு தான் இனி கதிமோட்சம் என்பது இல்லவே இல்லை என்ற முடிவிற்கு வந்து விட்டான் யாருக்கும் உபயோகம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதை விட வாழாமல இருப்பதே மேல் என்று நினைத்திருக்கிறான்
இந்த நிலையில் என்னை பற்றி யாரோ சொல்ல நேரடியாக வந்து விட்டான் அவன் ஜாதகத்தை அலசி ஆராய்ந்ததில் கால சர்ப தோஷம் இருப்பது தெளிவாக தெரிந்தது ஆனால் அதற்க்காக இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த ஜோதிடரின் கூற்று படி இவனுக்கு எந்த கிரகமும் நன்மை செய்யாது என்றால் இவன் வசதியான குடும்பத்தில் பிறந்தது எப்படி? நல்ல கல்வியை கற்றது எப்படி? கற்றதோடு மட்டும் அல்ல சிறந்த வேலையில் அமர்ந்ததும் எப்படி? வேலை போனது கெட்ட நேரம் என்றால் வேலை வாங்கி கொடுத்தது நல்ல நேரம் தானே அப்படி இருக்க எந்த கிரகமும் இவனுக்கு ஒத்துழைக்காது என்பது எந்த வகையில் சரி என்று எனக்கு தோன்ற வில்லை
இந்த கால சர்ப தோஷத்தை பார்த்து நிறைய பேர் அஞ்சி நடுங்குகிறார்கள் செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி எத்தனையோ திருமணங்கள் தடை படுவது போல இந்த தோஷத்தையும் காரணம் காட்டி பலரது வாழ்க்கை பந்தாடப் படுகிறது உண்மையில் கால சர்ப தோஷம் என்றால் என்ன? அதை கண்டு ஏன் இவ்வளவு நடுங்க வேண்டும்? அது கெடுதியை மட்டும் தான் செய்யுமா? என்று சிலர் யோசிக்க கூடும்
வேறு சிலரோ கால சர்ப தோஷத்தில் சர்ப்ப என்ற வார்த்தை வருவதால் இது எதோ பாம்பு சம்பந்தப் பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள் இந்த தோஷத்திற்கும் நம்மோடு வாழுகின்ற பாம்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன் ராகு கேது என்பது நிழல் கிரகங்கள் மட்டும் அல்ல இரண்டாக துண்டுப் பட்ட பாம்பின் வடிவத்தோடு இருப்பதாகவும் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதனால் தான் ராகு கேது சம்பந்தப் பட்ட தோஷம் என்பதனால் கால சர்ப தோஷம் என்ற பெயர் இதற்கு வந்தது
பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஜனன லக்கினம் ஜனன ராசி உட்பட அனைத்து கிரகங்களும் ராகு கேதுகளுக்கு நடுவில் அகப்பட்டு கொண்டால் அந்த ஜாதகத்தை கால சர்ப தோஷ ஜாதகம் என்கிறார்கள் இந்த அமைப்பில் மற்ற கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றியிருந்தாலும் கூட அவைகள் நன்மையை தராது மேலும் அந்த கிரகங்களின் உடுமஹா தசை தசா புத்தி நடக்கும் காலம் கூட கேடுடையதாகவே அமையும் என்று பரவலாக நம்பப் படுகிறது
ஆனால் இந்த நம்பிக்கை ஜோதிட ஆய்வு படியும் அனுபவப் படியும் முழுமையான உண்மை இல்லை என்பதே எனது கருத்தாகும் சமத்கார சிந்தாமணி,தேவ கேரளம்,பிருகத் ஜாதகம்,சாராவளி கிரந்தம் ஜாதக அலங்காரம் ஆகிய பழமையான ஜோதிட நூல்கள் ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன் பிறகு அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று சொல்கின்றன
இந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் இவைகள் தான் உண்மை மற்றவைகள் எதற்கும் உதவாதது என்று நான் சொல்ல வரவில்லை எந்த விசயமாக இருந்தாலும் அது புத்தகங்களில் எழுதப்பட்டு இருப்பதனால் மட்டும் உணமையாகி விடாது அந்த கருத்துக்கள் நமது வாழ்விலோ அல்லது நம்மை சார்ந்தவர்கள் வாழ்விலோ எந்த அளவு சரியாக நடந்துள்ளது என்பதை அனுபவத்தில் ஆராய வேண்டும்
கால சர்ப தோஷமுடைய நிறைய ஜாதகங்களை நான் ஆராய்ந்து இருக்கிறேன் அவர்கள் வாழ்க்கையையும் பல வருடமாக கவனித்தும் வருகிறேன் பழமையான நூல்கள் சொல்லுகிறப்படி சில காலங்கள் அவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பது என்னவோ உண்மை தான் ஆனால் மீதமுள்ள காலத்தில் பல வெற்றிகளையும் சந்தோசங்களையும் அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்
கடவுளின் படைப்பில் துன்பம் மட்டுமே ஒருவனை தொடர்ச்சியாக தொடர்வது இல்லை பல நேரங்களில் வெற்றியும் இன்பமும் சந்திக்க வேண்டிய நிலையும் வருகிறது அதே போலவே இன்பம் மட்டுமே ஒருவனது முழு வாழ்வாக ஆகி விடாது
இங்கிலாந்து மகாராணி மனதிலும் சோகம் உண்டு தெருவோரத்தில் வாழ்பவனும் ஆனந்தம் அடைவதுண்டு எனவே தேவை இல்லாமல் கால சர்ப தோஷத்தை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை அதற்காக வாழ்வை இழக்க வேண்டிய தேவையும் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக