வியாழன், 1 மே, 2014

சித்திர ஆதிசங்கரர் -13


                                                      
மண்டனர் இணங்கினார்.சரஸவான் மட்டும் தயங்கினாள். அவள் அறிவுத் தெய்வமாதலால் சங்கரர் சிவபெருமானே என்று புரிந்து கொண்டு விட்டாள். "அவர் தன் கணவரை வென்றுவிடுவார். என் கணவர் தோற்றார் என்று நானே எப்படி செல்ல முடியும்?"என்று தயங்கினாள். எனவே இருவரும் இரு மலர் மாலைகளை அணிந்து கொள்ளச் செய்து, "எந்த மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றதாகக் கொள்ள வேண்டும்"என்றாள்.
காரசாரமான வாதப்பிரதிவாதம் நடந்தது. முடிவில் மண்டனரின் மாலை வாடிற்று:சரஸவானியின் முகமும் வாடிற்று. சரஸவாணியின் முகம் வாடியதற்குக் காரணம்,தனது கணவர் தோறறுவிட்டார் என்பது மட்டுமல்ல. இந்த வாதத்துக்கு முன் விதிக்கப்பட்ட நிபந்தனைதான் காரணம். அந்த நிபந்தனை என்னவெனில், சங்கரர் தோற்றுவிட்டால் அவர் துரவரத்தை நீக்கித் திருமணம் புரிந்து இல்லறம் ஏற்று மண்டனர் சீடராகிவிட வேண்டும். மாறாக மண்டனார் தோற்று விட்டால் இவர் இல்லரத்தைவிட்டுத் துறவியாகி சங்கரரின் சீடராக வேண்டும்.
இப்போது சங்கரர் வென்றதால் மண்டனர் இல்லரத்தைவிட்டு அவருடன் புறப்பட்டு விட்டார். கணவரின் பிரிவைத் தாளாத சரஸவாணி கலங்கினாள். ஆயினும் அவள் அறிவுத் தேவதையின் அவதாரமல்லவா?தன் கணவருடன் கிளம்பிய ஆசாரியரின் முன் சென்று, சுவாமி!கணவன் மனைவி இருவரும் ஈருடல் ஆயினும் ஒரே உயிர் என்ற சாஸ்திரத்தைத் தாங்கள் அறிந்திருப்பீர்களே!இப்போது உயிரில் ஒரு பாதியை மட்டும்தானே தாங்கள் வாதத்தில் வென்றீர்கள்?மற்ற பாதியான என்னுடனும் வாதம் நடத்தி ஜயித்தாலே இவரைத் தாங்கள் வென்றதாக ஆகும்"என்றாள்.
அவள் கூறியதில் இருந்த உண்மையை மதித்த ஆச்சாரியார் அவளுடனும் வாதம்புரிய இணங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக