உதாரணம் 2
இந்த ஜாதகர் ஒரு சிறிய கம்பெனியில் ஸாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றுகிறார். வேறு நல்ல வேலை கிடைக்குமா? என்றும், ஏதாவது தொழில் செய்யலாமா? செய்யலாம் என்றால் என்ன தொழில் செய்யலாம். என்றும் கேட்டிருக்கிறார்.
முதல் கேள்விக்கு பதில் கூறுவது சாத்தியம்.
ஆனால் இரண்டாவது கேள்வியே சரியானதாக இல்லை. பொதுவாக, ஏதாவது தொழில் செய்யலாமா? என்ன தொழில் செய்யலாம் என்று பொத்தாம் பொதுவாக கேட்டிருப்பது சரியல்ல.
நான் (குறிப்பாக) இன்ன தொழில் செய்யலாமா? என்ற கேள்வியே சரியானது.
சரி விஷயத்திற்கு வருவோம்
இவருடைய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக அமைப்பு
கிழக்கு – குரு, கேது
தெற்கு – கிரகங்கள் இல்லை
மேற்கு – சந்திரன் செவ்வாய் ராகு
வடக்கு – சனி, சுக்கிரன், சூரியன் புதன்
தொழில் காரகராகிய சனி, சுக்கிரன் சூரியன் புதன் சேர்க்கை பெற்றிருப்பது (சுக்கிரன் சூரியன் புதன் ஆகிய மூவரும் கம்ப்யூட்டர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பு உள்ளவர்கள்) இவருடைய தொழில் கம்ப்யூட்டர் தொடர்பு உடையது.
ராகுவை மிதுனத்தில் (மேற்கு ராசியில்) வைத்து பார்க்கும்போது சனிக்கு ராகு சந்திரன் செவ்வாய் தொடர்பு கிடைக்கிறது. சனிக்கு சந்திரன் செவ்வாய் இருவரும் பகை. எனவே தொழிலில் இவருக்கு திருப்தி இல்லாத சூழ்நிலை.
சனியை மீனத்தில் வைத்து பார்க்கும்போது குரு கேது தொடர்பு கிடைக்கிறது.
எனவே இவருக்கு தொழிலில் மேன்மை அடையகூடிய யோகம் உண்டு.
இருந்தாலும் தற்போது கோட்சார குரு கோட்சார கேதுவால் பாதிக்கப் பட்டிருக்கிறார். கோட்சார குரு ரிஷபத்தில் கேதுவை தாண்டி வந்தபிறகு தொழில் மேன்மை கிடைக்கும். அதுவரை தற்போது பார்க்கும் வேலையையே தொடர வேண்டும்.
சனிக்கு 12 ல் மிதுனத்தில் சந்திரன் ராகு (செவ்வாய்) இருப்பதும், சனி நீர் ராசியாகிய கடகத்திலும், சந்திரன் ராகு (செவ்வாய்) காற்று ராசியாகிய மிதுனத்தில் இருப்பதும் இவருக்கு அயல் நாட்டு யோகம் இருப்பதை காட்டுகிறது.
இவர் தீவிர முயற்சி எடுத்தால், கோட்சார குரு ரிஷபத்தில் கேதுவை தாண்டி வந்தபிறகு அயல் நாடு செல்லுவார்.
அதுவரை சிரமங்கள் இருந்தாலும் தற்போது பார்க்கும் வேலையையே தொடர வேண்டும்.
தொழில் பற்றி பொத்தாம் பொதுவாக கேட்டிருப்பதால் திட்டமான பதிலை தர முடியாது.
குறிப்பு : பொதுவாக தொழில் நிர்ணயம் என்பது ஜோதிடர்களின் விருப்பத்திற்கு விடாமல், அவரவருக்கு பிடித்தமான, விருப்பமுள்ள தொழில்களில் முன்னுரிமை வரிசைப் படி சிறந்ததை ஜாதக ரீதியாக எந்த தொழில் பலமாக இருக்கிறதோ அந்த தொழிலை தெரிந்து அதை செய்தால் தொழிலில் மேன்மை அடைய முடியும்.
அன்புடன்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக