Athiyanga Bhaktha Sevasramam.
Paramer kavu,
Kedamangalam, Paravur, Kerala. 683513
Kedamangalam, Paravur, Kerala. 683513
ஓம்...அஸ்ய ஸ்ரீ தந்த்ர தேவதாய சுபமங்களாய
சகல சாஸ்த்ர வசீகர்னாய
ஸ்ரீஸ்ரீ பிருகிருதி தேவமயே...
அபிசார ப்ரயோக ரக்ஷ பூஜாவிதானம்.
ஜோதிட தர்மபடி அஞ்ஞான தோஷங்களால் மனிதனுக்கு ரோகம், மாரனம், காரிய தடை, பிரிவுகள் மனகுழப்பம் ஏற்படும் போது அது அபிசார தோஷங்களால் ஏற்படுகிறது என்பது முன்னோர் வாக்கு.
அபிசார தோஷம் என்பது செய்வினை எனப்படும் பூத ப்ரேத பைசாச பிரயோகம் என்றும் மருந்து வைத்தல் எனப்படும் ம்ருத ஔஷத ப்ரயோகம் என்றும், ஏவல் எனப்படும் கனிக ப்ரயோகம் என்றும் சொல்லப்படுகிறது.
அபிசார பிரயோகம் எந்த விதத்தில் இருந்தாலும் அதை தடுக்கவும் நிவாரணம் பெறவும் தந்த்ரீக சாஸ்திரத்தின் அதர்வண தேவதா ஸ்ரீ ஸ்ரீ கார்த்யாயணி லக்ன பீட பூஜை சிறந்த பலனை தரும். பிரம்ம யட்சிணி உபகர்மமான ஸ்ரீகார்த்யாயிணி லக்ன பீடபூஜை செய்ய அபிசார ப்ரயோகத்தால் பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் அவர் வீட்டிலேயே பூஜை முறைகளை பின்பற்ற வேண்டும். இதனால் எத்தகைய அபிசார பிர்யோக மாக இருந்தாலும் முழுமையாக நீங்கி விடும்.
இது ஒரு தாந்த்ரீக பூஜை என்பதால் அவரவரே செய்ய வேண்டுமே தவிர பரிசாரகரோ, வேதியரோ, ப்ரோகிதரோ, சாதகரோ செய்யகூடாது. பாதிக்கப்பட்டவரின் ஸ்பிண்ட உறவுமுறை உள்ளவராக் இருக்கவேண்டும். அதாவது தாய் வழியில் மூன்று தலைமுறைக்குள்ளும் தந்தை வழியில் ஐந்து தலைமுறைக்குள்ளும் இருப்பவர்கள் வழிபாடுகளை செய்யலாம்.
பூஜைகளை மூன்று கட்டமாக செய்ய வேண்டும்
1. பிரதிஷ்டா பூஜை
2. பிராண பூஜை
3. பரிசார பூஜை.
பிரதிஷ்டா பூஜை ஒரு நாள் செய்யக்கூடியது. பிராண பூஜை தொடர்ந்து 18 நாட்கள் செய்யக்கூடியது. பரிசார பூஜை பலன் தெரியும் வரை தொடர்ந்து வாரம் ஒருமுறை செய்யக்கூடியது.
தாந்த்ரீக பூஜைகள் அனைத்தும் தெய்வ சக்தியை யந்த்ர ,சக்ர,அட்சர ரூபத்தில் ஆவாகனம் செய்து வழிபடுவதாகும். பஞ்ச கல்ப சாஸ்திர முறைபடி கார்த்யாணி பிரம்ம களம் அமைக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் தாங்களாகவே களம் அமைத்து பூஜை செய்யலாம்.
அல்லது ஆசிரமங்களில் கிடைக்கும் தயாரிக்கப்பட்ட களம் வைத்து பூஜிக்கலாம். வீட்டில் களம் அமைக்கும் போது பூச்சிகள் ஏற்படுவது வெடிப்புகள் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் இருப்பதால் அடிக்கடி களத்தை மாற்ற வேண்டும்.
களம் அமைக்கும் முறை.
மஞ்சள் சந்தனம் தசாங்கம் ஆகியவற்றை சம அளவு (50 கிராம் அளவு) எடுத்து தண்ணீர் விட்டு மாவு பதத்திற்கு குழைத்துக்கொள்ளவும். அதில் ஜவ்வாது கோஷ்டம் அதிவிடயம் ரச செந்தூரம் அயசெந்தூரம் பச்சை கற்பூரம் அச்சரகந்தம் தலா 10 கிராம் சேர்த்து மீண்டும் குழைக்கவும்.குழைத்த கலவையை வட்டவடிவமாக தட்டி தர்ப்பைகுச்சியால் கார்த்யாயணி யந்திரத்தை வரையவும்.யந்திரத்தின் 16 மூலைகளிலும் மஞ்சள் குங்குமம் வைக்கவும். யந்திரத்தின் ஒவ்வொரு முக்கோணத்திலும் பாற்குரண்டி வேரின் மத்திய பாகத்தில் வந்தாமூலிகையால் காப்புகட்டி அஷ்டாக சூரணம் பூசி வைக்கவும்.யந்த்ரத்தின் நடுவில் 2X2 அங்குல அளவில் செம்பு தகடு ஒன்றில் 2வது யந்திரத்தை எழுதவும். தகட்டின் நான்கு பகுதிகளிலும் ஒரே அளவில் தர்ப்பையை வைத்து அதன் மீது சதுரவடிவான தகடு அல்லது வாழை அல்லது பாக்கு மட்டையை போட்டு மூடவும்.
மீதமுள்ள மஞ்சள் கலவையை எடுத்து
ஓம் ஸ்ரீ யதீம்ச வசீகரி கார்த்யாயணி ம்ஹா மாயே
சர்வ தோஷ நிவாரணி சகல ரோக நிவர்தினி
அசுர மர்தினீ அப்சார சம்ஹாரிணி
சர்வ சாதகம் ஜயம் விஜயீம் பவது என்ற மந்திரம் 5 முறைகள் சொல்லி அரைவட்ட வடிவில் திரட்டவும். திரட்டிய கலவையின் உள்ளே நேர்வாளை வேரில் கத்தியால் திரி சூலம் வரைந்து வைத்து மூடி அதன் மீது செஞ்சந்தனம் பூசி முகப்பில் மஞ்சள் கும்குமம் வைக்கவும். இது லக்ன பீடம் எனப்படும் அதன் நான்கு மூலைகளிலும் ஒரேஅளவிலான சந்திர காந்த கல் அல்லது நதிநீரில் கிடைக்கும் கூழாங்கல் மீது கஸ்தூரிகறுப்பு..சிவனார் அமிர்தம்...அரகஜா...அனுபூத பற்பம் ஆகியவற்றை சம அளவு கலந்து பதனம் செய்து வைக்கவும்.
தயாரிக்கப்பட்ட களபீடம் கிடைக்குமிடம்.
ஸ்ரீஸ்ரீ சைன்யபகவதி பிரதிஷ்டா பீடம்
கடவில் காவு பகவதி கோவில்
செழுங்கலூர். தொடுபுழா. கேரளா.
கள பீடத்தின் விலை. உடையாதது (un breakable) ரூ. 35000
சாதாரணமானது ரூ. 21000
அஷ்டாங்க பீடம் ரூ. 55000
அஷ்டாங்க பீடம் குறிப்பிட்ட ஒருவருக்கென்று இல்லாமல் குறிப்பிட்ட பாதிப்புக்கென்றில்லாமல் குடும்பத்திலுள்ள யாருக்கு வேண்டுமானாலும் மாற்றி பயன்படுத்தலாம்.
பூஜமுறைகள்.
களத்தை சுத்தமான இடத்தில் வைத்து அதன் இடப்புறம் சிறிய தாமிர பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் வைக்கவும்.வலதுபுறம் நல்லெண்ணை.விளக்கெண்னை.இலுப்பை எண்ணை கலந்த எண்ணை விட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும். தனியாக பூர்ணாஹுதி பொருட்களில் இருக்கும் மூலிகை கலவையை எடுத்து வைத்துக்கொள்ளவும். (தயாரிக்கப்பட்ட களம் வாங்கினால் அதோடு கொடுக்கப்படும்)
முதல் நாள்.
ஒரு வெற்றிலையில் சிறிது நீர் எடுத்து கள பீடத்தை சுற்றி நான்கு மூலைகளிலும் நீர் விடவும். ஒரு தட்டி சிறிது நெய்வைத்து அதன்மீது சிறிது மஞ்சள் வைத்து அதன்மீது கற்பூரம் வைத்து பீடத்திற்கு தீபாராதனை காட்டவும். கற்பூரம் எரிந்து முடிந்தவுடன்
ஓம்...ஸ்ரீம்...க்லீம்....மஹா மாயே திரியம்பஹே
மங்களாதரே கார்த்யாயணி
ஸ்வயம் சக்தி ரூபம் சக்ராம்ச ஆவாகன கரிஷ்யே...என்று மூன்று முறைகள் சொல்லி கும்குமத்தால் அர்சிக்கவும்.
அடுத்த நாள் முதல் தொடர்ந்து 18 நாட்கள்
தினமும் பீடத்தின்முன்பு தாமிர பாத்திரத்தில் நீர் வைத்து முதல் நாளை போலவே மூன்று எண்ணை கூட்டி தீபம் ஏற்றி
ஓம்...ஸ்ரீம் யதி வதீம்ச வசீகரி
ஓம் ஸ்ரீம் க்லீம் யம் ப்ராண போதினீ வசி வசி வசி
ஓம் ஸ்ரீம் அஷ்ட ப்ரதன சக்தி
அகண்ட லோக சித்தி வசி வசி வசி
ஓம் ஸ்ரீம் ஆரோக்ய ப்ரதாயணி
ஸர்வ ஆமய நிவாரணி வசி வசி வசி
ஓம் ஸ்ரீம் ப்ராண சக்தி ஆத்ம சக்தி ஜீவ சக்தி
யோக சக்தி ஸ்வயம் சித்தம் வசி வசி வசி என்று சொல்லி ஒவ்வொரு முறை வசிவசிவசி என்று முடிக்கும் போது பூர்ணாகுதி மூலிகையை பீடத்தை சுற்றி
லக்ன பீடத்தின் மீது போடவும்.
9 முறைகள் இவ்வாறு செய்தபின் பூஜையில் வைக்கப்பட்ட தண்ணீரை பாதிக்கப்பட்டவருக்கு குடிக்க கொடுத்து. அர்ச்சனை செய்த மூலிகையை உச்சந்தலையில் சிறிது வைக்கவும்.
18 நாட்கள் முடிந்த பிறகு பாதிக்கபட்டவர் எந்த நாளில் பிறந்தாரோ வாராவாரம் அந்த நாளில் பூஜை செய்து வரவும்.
அஷ்டாங்க பீடம் வைத்திருப்பவர்கள் பண்ட சுத்தி ப்ராண சுத்தி ஸ்தல சுத்தி செய்தபின் (பீடத்துடன் பூஜை முறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.) வேறு ஒருவருக்கு செய்ய வேண்டும்.
ஸ்ரீரஸ்து சுபமஸ்து.
லோக ஷேமம் வஹாம்யஹம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக