வியாழன், 8 ஜனவரி, 2015


இந்த பதிவில் பாப கர்த்தாரி யோகம் பற்றி மேலும் பார்ப்போம்.


கீழ்க்கண்ட உதாரணத்தைப் பாருங்கள்

Image

மேற்படி உதாரணத்தில் துலாத்தில் சனி சுக்கிரன் கேது ஆகிய மூவரும்,அதாவது சனி சித்திரை 4 லும், சுக்கிரன் சுவாதி 3 லும், கேது விசாகம் 2 லும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

இந்த அமைப்பு நமது பராசரர் முறைப்படி பார்த்தால் இரண்டு இயற்கை பாவிகளுக்கு இடையில் சுக்கிரன் இருப்பதால் சுக்கிரன் பாப கர்த்தாரி யோகத்தில் இருப்பதாகக் கூறப்படும்.

ஆனால் நமது நாடி விதிப்படி சனி கேது இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகை, ஆனால் சுக்கிரனுக்கு சனி கேது இருவரும் நட்பு. எனவே இந்த அமைப்பு பாப கர்த்தாரி யோகம் ஆகாது. அதே சமயத்தில் சுப கர்த்தாரி யோகமாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. கிரக சேர்க்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு பலன் அறியவேண்டும்.

அடுத்து வரும் உதாரணத்தையும் பாருங்கள்.

Image

மேற்படி உதாரணத்தில் துலாத்தில் சனி சுக்கிரன் ராகு ஆகிய மூவரும்,அதாவது சனி சித்திரை 4 லும், சுக்கிரன் சுவாதி 3 லும், ராகு விசாகம் 2 லும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

இந்த அமைப்பு நமது பராசரர் முறைப்படி பார்த்தால் இரண்டு இயற்கை பாவிகளுக்கு இடையில் சுக்கிரன் இருப்பதால் சுக்கிரன் பாப கர்த்தாரி யோகத்தில் இருப்பதாகக் கூறப்படும்.

ஆனால் நமது நாடி விதிப்படி சனி ராகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் நட்பு, அதே சமயத்தில் சுக்கிரனுக்கு சனி ராகு இருவரும் நட்பு. எனவே இந்த அமைப்பு பாப கர்த்தாரி யோகம் ஆகாது. அதே சமயத்தில் சுப கர்த்தாரி யோகமாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. கிரக சேர்க்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு பலன் அறியவேண்டும்.

அடுத்த உதாரணத்தைப் பாருங்கள் 

Image

கடகத்தில் சுக்கிரன் சந்திரன் புதன் ஆகிய மூவரும், அதாவது சுக்கிரன் பூசம் 1 லும், சந்திரன் ஆயில்யம் 1 லும் புதன் ஆயில்யம் 4 லும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

இந்த அமைப்பு நமது பராசரர் முறையில் இரண்டு இயற்கை சுபர்களுக்கு மத்தியில் சந்திரன் இருப்பதால் சந்திரனுக்கு சுப கர்த்தாரி யோகம் உள்ளதாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஆனால் நாடி விதிப்படி சந்திரனுக்கு புதன் சுக்கிரன் இருவருமே பகை, இரண்டு பகை கிரகங்களுக்கு மத்தியில் சந்திரன் இருப்பதால் சந்திரன் பாப கர்த்தாரி யோகத்தில் இருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாப கர்த்தாரி யோகம் இன்னும் தொடரும்.

அன்புடன்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக