நண்பரின் மகள் தற்போது தன் கணவனை பிரிந்து வாழ்வதாகவும் மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வது எப்போது? என்று கேட்டிருக்கிறார்.
அவர் தந்துள்ள விவரப்படி அந்தப் பெண்ணின் ஜாதகம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.
இந்த ஜாதகத்தில் பிருகு நந்தி நாடி விதிப்படி பார்த்தால் தோஷங்கள் பெரிதாக எதுவும் இல்லை.
ஆனால் சப்தரிஷி நாடி விதியின் படி பார்க்கும் போது லக்கினபாவகம் கேட்டை 2 ம் பாதத்தில் அமைந்துள்ளது. எனவே 7 ம் பாவம் ரோகினி 4 ம் பாதத்தில் இருக்கும். ரோகினியின் அதிபதி சந்திரன். அதாவது 7 ம் பாவம் அமைந்துள்ள நட்சத்திர அதிபதி சந்திரன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று, சந்திரன் கடகத்தில் குரு நின்ற பூசம் 2 லும், குரு தனுசுவில் சந்திரன் நின்ற பூராடம் 4 லும் மாறி அமர்கின்றனர். சந்திரனை கடகத்தில் வைத்து பார்க்கும்போது சந்திரனுக்கு 9 ல் கேது (மீனம், கடகம் வடக்குராசிகள்) சந்திரனும் குருவும் எதிரெதிராக அமைகின்றனர். இது களத்திர தோஷம. இந்த தா தோஷம குரு சந்திரன் பரிவர்த்தனையால் ஏற்பட்டுள்ளதால் தோஷம் தற்காலிகமானது என்றே சொல்லலாம்.
தற்கால கோட்சார குரு கடக சந்திரனுக்கு 10 ல் இருக்கிறார். கோட்சார குரு ரிஷபத்திற்கு வந்து, ரிஷபத்தில் உள்ள கோட்சார கேதுவை கடந்த பிறகு, கடக சந்திரனுக்கு 11 ல் கேதுவின் தடை இல்லாமல் சஞ்சரிப்பார். அப்போது இந்தப் பெண் அவருடைய கணவனை சேருவார்.
இந்தப் பெண்ணுக்கு தற்கால தடையாகவும், ஜனனகாலப்படியும் கேது இல்வாழ்க்கைக்கு தடடையாக இருக்கிறார். இந்தப் பெண்ணுக்கு திருப்பம்பறம் கோவிலில் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு அந்தக் கோவில் பிரகாரத்திற்குள் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தங்கி இருக்கவேண்டும்.
சுபமே நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக