சனி, 26 ஏப்ரல், 2014

சித்திர ஆதிசங்கரர் -11


                                                            
அப்படியிருக்க, உங்கள் உடம்பின் அருகிலிருந்து எங்கள் உடம்பு விலகிப் போக வேண்டும் என்று சொல்வதில் பொருள் இல்லை. உங்கள் உடம்புக்குள் உள்ள ஞான ஒளியிலிருந்து எங்கள் உடம்பிலுள்ள ஞான ஒளி விலக வேண்டும் என்று நீங்கள் கருதினால் அதுவும் அர்த்த மற்றதாகும். ஏனெனில் இந்த ஞான ஒளிகள் அனைத்தும் ஒன்றேதான். தன்னை விட்டே தான் எப்படி விலக முடியும்?என்று இப்படி ஆணித்தரமாகக் கேட்டு விட்டான் அந்தப் புலையன்.
உடனே சத்தியத்தை தலையால் வணங்கும் ஸ்ரீ சங்கரர் இப்பேர்பட்ட ஞான நிலையை அடைந்து பேசுபவர் புலையனாக இருக்கமுடியாது. காசிவிஸ்வநாதரும் விசாலாட்சியுமே தம்மை சோதிக்க வந்துள்ளனர் என்பதை ஞான திருஷ்டியில் உணர்ந்து 'மனீஷா பஞ்சகம்'என்ற ஐந்து சுலோகங்களைப் பாடினார். உடனே புலையன் நின்ற இடத்தில் விஸ்வநாதப் பெருமானே நின்றார்:புலைச்சி விசாலாட்சியானாள். நான்கு நாய்களும் நால்வேதமாயின.
"என் மறு உருவே ஆன சங்கரா!வாய்பேச்சில் மட்டும் வேதாந்தம் கூறாமல்
வாழ்விலேயே c நடத்திக் காட்டுபவன் என்று உலகறியவே இந்த நாடகம் செய்தேன்"என்று கூறி ஆசி வழங்கி மறைந்தார் இறைவன்
சங்கரருக்குப் பதினாறு வயது நிறைகிற சமயம். தொண்டு கிழவரான ஒரு பிராமணர் அவரிடம் வாதம் செய்யவந்தார். சங்கரர் செய்துள்ள பிரம்ம சூத்திர பாஷ்யத்தை ஆட்சேபித்து அந்தக் குடு குடு கிழவர் எதிர் வாதம் ஆரம்பித்தார்.
சங்கரர் தமது கூர்ந்த அறிவுத் திறனால் அந்த எதிர் வாதங்களைத் தவிடு பொடி செய்தார். ஆனால் கிழவனாரும் மதிநுட்பத்தில் சங்கரருக்கு சளைத்தவராக இல்லை. இவர் ஒரு உண்மையை நிலை நாட்டினால், அடுத்த வரியிலேயே அவர் மேலும் பல ஆட்சேபங்களைக் கிளப்பினார்.
இப்படியே வாதம் போய்க்கொண்டிருந்தது. மணிக் கணக்கில் மட்டும் அல்ல. நாட்கணக்கில் ஓடிற்று.
மாமேதையான நமது ஆசாரியாருக்கு சமதையாக இப்படி வாதம் செய்யக் கூடியவர் யாராக இருக்கும் என்று அதிசயித்தார் பத்மபாதராகிவிட்ட சநந்தனர். இந்தக் கிழவர் நிச்சயமாகக் சாமானிய மானுடராக இருக்கமுடியாது நமது குருநாதரைப் போலவே இவரும் ஒர் அவதாரப் புருஷராகத்தான் இருக்கவேண்டும் எனக்கருதி, ஆழ்ந்த பக்தியுடன் அவ்விருவரையும் நோக்கினார்.
அவரது பக்தியின் சக்தியால் உண்மையை மூடியிருந்த திரை விலகியது. வந்திருக்கும் கிழவர் யார் என்று பத்மபாதர் கண்டுகொண்டார். அவர் வேறு யாருமில்லை!பிரம்ம சூத்திரத்தை இயற்றிய சாட்சாத் வியாச மகாமுனிவரே தான் அவர்!அந்த வியாசர் யாரெனில் நாராயணரின் அவதாரமேதான். அவரை அடையாளம் கண்டு கொள்ள பத்மபாதரும் திருமாலின் அம்சம் தான்.
பத்மபாதர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே- சங்கரரே வந்திருக்கும் கிழவரின் வேஷத்தைப் புரிந்து கொண்டார்!மகரிஷே!தங்களிடம் அடியேன் வாதிக்குமாறு செய்யலாமா?அபச்சாரம் செய்துவிட்டேனே!"என்று வியாசரை வணங்கினார்.
வியாசர் அவருடன் நகைத்து "ஐயனே!என் சுய உருவைக் காட்டினால் c உன் வாதத்திறனைக்காட்ட மாட்டாய் என்றே மாறு வேஷம் போட்டேன். c எனது பிரம்ம சூத்திரத்துக்குத் தந்துள்ள விளக்கமே நான் மனமார உவப்பதாகும். அதுவே உண்மை. இந்த உண்மையை c நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இன்றோடு உனக்குப் பதினாறாண்டு நிறைந்தது. இதோடு ஆயுளை முடித்துவிடாதே. உனக்குப் இன்னும் பதினாறாண்டு வாழ்வினைப் பிரம்மாவிடமிருந்து பெற்று வந்துள்ளேன். உன் வாக்கியங்களை நாடு முழுவதும் பரப்புவாயாக எனக் கூறி மறைந்தார் வியாச முனிவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக