வியாழன், 10 ஏப்ரல், 2014

லக்னம், ராசி கணிப்பது



ஒரு ஜாதகத்தின் (Horoscope) இரு கண்கள் என்று லக்னம் மற்றும் ராசியை சொல்லலாம். இந்த கணிதம் இல்லை எனில் ஜாதகம் இல்லை (Horoscope) என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பிறந்த குழந்தை ஜாதகத்தை (birth chart) இங்கு உதாரணமாக கொள்வோம்.
1. ஒரு குழந்தை எந்த ஊரில் பிறந்ததோ அந்த ஊரில் அன்றைய தின சூரிய உதயம் என்ன வென்று குறித்துகொள்ளவேண்டும் . ஒரு ஊரின் சூரிய உதயம் அந்த ஊரின் அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை கொண்டு உதய நேரம் முடிவு செய்யப்படுகிறது. எப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் கடிகார நேரம் வித்யாசப்படுகிறதோ அதுபோல் சூரிய உதய நேரமும் வித்தியாசப்படும். கடிகாரநேரம் க்ரீன்விச் நேரப்படி அட்சரேகை தீர்க்கரேகை கணிததுடன் முடிவு செய்யப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் latitude மற்றும் longitude என்று சொல்லுவார்கள். ஆக ஒரு ஜாதகத்தை துல்லியமாக கணிக்க   பிறந்த ஊரின் சூரிய உதய நேரம் தேவை. இதை ஜோதிடத்தில் சூரிய உதயாதி நாழிகை என்று சொல்கிறார்கள் . ஒரு நாழிகை என்றால் என்ன என்று பழகியே ஆகவேண்டிய கட்டாயம் இப்போது . கீழ்க்கண்ட விபரங்கள் உங்களுக்கு உதவும்.
1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்
ஆக இந்த முறையில்தான் முற்காலத்தில் தமிழ் முறையில் நேரங்கள் குறிக்கப்பட்டன.
செயல்பாடு : 1    (சூரிய உதய நாழிகை – உதயாதி நாழிகை )
ஒரு குழந்தை வியாழகிழமை சென்னையில் பிறக்கிறது. மிக சரியாக காலை 8;18 மணிக்கு பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆக அந்த குழந்தை ஜாதகத்தை கணிக்க கீழ்க்கண்ட முறை கணிதமாக கொள்ளப்படுகிறது.
சென்னையில் அன்றைய தினம் வியாழகிழமை சூரிய உதயம் :  6:30 (சூரிய உதயாதி நாழிகை ) (இந்த  சூரிய உதய நேரம் அனைத்து பஞ்சாங்கங்களிலும் அட்ச ரேகை, தீர்க்க ரேகை கணிதப்படி குறிப்பிட பட்டு இருக்கும். தமிழ் ஜோதிடத்தில் ஒரு நாள் என்பது அன்றைய சூரிய உதய நேரத்தில் இருந்து மறுநாள் சூரிய உதய நேரம் வரை என்று அர்த்தம்.
குழந்தை பிறந்த நேரம் காலை: 8:20
ஆக மறுநாள் வெள்ளி கிழமை சூரிய உதய நேரம் : 6;35 (ஒவ்வொரு நாளுக்கும் சூரிய உதயநேரம் சில நிமிடங்கள் மாறுபடும் )
இப்போது குழந்தை பிறந்த நேரத்தில் இருந்து மறுநாள் சூரிய உதயம் வரை கணக்கிட்டால் 22 மணி 15 நிமிடங்கள். ஆக இந்த மணி நேரத்தை நாழிகையில் கணிகிடும்போது (2 1/2 நாழிகை = 1 மணி)  55 நாழிகை 62 வினாடிகள்.
ஆக வியாழகிழமை 55 நாழிகை 62 வினாடி என்பது குழந்தை பிறந்த நேரம்.
———————————————
செயல்பாடு : 2    (அட்சாம்சம் மற்றும் தீர்காம்சம்)
ஒரு ஜாதகத்தின் 12 ராசிகளை (zodiac) பூமியின் அட்சாம்ச பாகை (நில நேர்க்கோடு -latitude degree) கொண்டு 12 சம பாகைகளாக பிரிகின்றனர். அதாவது ஒரு ராசி என்பது 30 டிகிரி . (பூமி = 360 டிகிரி ). ஒரு ஊரின் நேரம் பூமியில் உள்ள தேசாந்தரப்பாகை என்ற நில நிரைக்கோடு (Longitude)  மற்றும் (latitude) கணித கணக்கீட்டின்படி ஒவ்வொரு பிரதேசத்திற்கும் மாறுபடும்.
ஆக இந்த அட்சாம்ச கணக்கீடுகளை வைத்தே ராசிகளின் காலத்தினை கணக்கிட வேண்டும் . அதாவது மெட்ராஸ் எந்த பாகையில் உள்ளது குழந்தை பிறந்த ஊர் எந்த பாகை என்று கண்டறிய வேண்டும். அதை வைத்து தான் லக்னம் கணக்கிட முடியும். இது ஊருக்கு ஊர் சில வினாடிகளோ சில நிமிடமோ மாறுபடும்.
ஆக ஒரு குழந்தை பிறந்தது எந்த ஊரின் பாகையோ அந்த பாகைக்கு உண்டான ராசியின் பாகையை (360/12 என்றால் மேஷம முதல் 30 டிகிரியாக 12 ராசிக்கும் ) சூரிய உதய நேரம் முதல் ஆரம்பித்து குழந்தை பிறந்த நேரம் வரை கூட்டினால் லக்னம் கிடைக்கும்.
—————
 செயல்பாடு : 3  (ராசி இருப்பில் உதய லக்னம் )
பொதுவாக பஞ்சாங்கங்களில் (Almanac) ராசி இருப்பு என்ற பகுதியில் சூரிய உதயகால ராசி இருப்பு என்று கொடுத்திருப்பார்கள் ஒரு ஊரின் சூரிய உதயமானது ஒவ்வொரு மாதத்தின் ஒவ்வொரு தேதியும் ஒரு சில நிமிடங்கள் குறைந்து கொண்டே வரும். அதாவது சித்திரை மாதம் ஆரம்பித்து உதய காலம் குறைந்து கொண்டே வரும். ஆக வித்தியாசப்படும் ஒவ்வொரு நாள் சூரிய உதய நேரத்தினை கழிதுக்கொண்டே வந்தால் மீத நாழிகை உதய லக்ன சேஷம் எனப்படும் (சேஷம் என்றால் கழிவு ) இன்றைய மதுரை சூரிய உதயம் 5;10 என்றால் நாளை 5;03.ஆக சூரிய உதய லக்ன சேஷம் : 0:7 வினாடி . இவ்வாறு கழித்துக்கொண்டே போகவேண்டும்.  அப்படி கழித்துக்கொண்டு போகும்போது மிஞ்சும் நாழிகை மற்றும் வினாடிதான் உதய லக்னமாகும். ஒவ்வொரு பஞ்சாங்கங்களிலும் ராசி இருப்பு பகுதியில் இதை பார்க்கலாம்.
 ——————
செயல்பாடு:  4  பிறந்த லக்னம் அறிதல். ( ஜனன லக்னம் அல்லது ஜன்ம லக்னம் )
மேலே சொன்ன உதய லக்ன கணிதம் முடிந்தபின் ஜனனமான நாழிகை வினாடிகள் வரை சேர்த்துக்கொண்டே செல்லும்போது எந்த ராசியில் கால நாழிகை வினாடி அமைகிறதோ அதுவே ஜன்ம லக்னம் அல்லது ஜனன லக்னம் என்று சொல்கிறார்கள்.
——————-
செயல்பாடு: 5 நவாம்ச லக்னம் அறிதல் 
ஒன்பதில் ஒரு பங்கு தான் நவாம்சம். அதாவது ஜென்ம லக்னத்தில் இருந்து 1/9 விகிதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக