ஒரு ஜாதகம் கணிக்க ஐந்து விஷயங்கள் தேவை.
௧. குழந்தை பிறந்த துல்லியமான நேரம்
௨.ஆணா / பெண்ணா என்ற விபரம்
௩. பிறந்த ஊர்
௪. பிறந்த தேதி.
௫. அன்றைய வருட வாக்கிய அல்லது திருக்கணித பஞ்சாங்கம் (Almanac)
இவை இருந்தால் மட்டுமே ஒரு ஜாதகத்தை கணிக்க இயலும். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் சில வித்யாசங்கள் உண்டு.
அதாவது ஒரு ஜாதகம் வாக்கிய பஞ்சாங்க படி (முன்னோர்கள் ஞான திருஷ்டியால் எந்த உபகரண உதவியும் இல்லாமல எழுதியது )கணித்த ஜாதகத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கம் (ராஷ்ட்ரிய பஞ்சாங்க சேவை சங்கம் ) என்ற அரசுத்துறை கணித்த தொலை நோக்கி கருவிகள் மற்றும் நவீன விண்வெளி ஆராய்ச்சி துறை உதவியுடன் கணிக்கப்பட்டது.)மூலம் கணித்த ஜாதகதிற்கும் ஒரு பத்து அல்லது இருபது நாள் திசை புக்தி விபரங்கள் வித்தியாசப்படும்.
உதாரணம் செய்திதாள்களில் சனி பெயர்ச்சி, குருபெயர்ச்சி போன்றவை ஒரு சாரர் சொல்லும் பெயர்ச்சி தினமும் மற்றொரு சாரர் சொல்லும் பெயர்ச்சி தினமும் குறைந்தது மூன்று மாத வித்தியாசத்துடன் இருக்கும் .
ஆக நமக்கு தேவையான கணிதத்திற்கு உகந்த பஞ்சாங்கம் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக