செல்வப் புதல்வன் தன்னை விட்டுப் பிரிந்து சந்நியாசியாக ஆவதை அன்னை அனுமதிக்க மாட்டாள் என்பதாலேயே, இந்த அசாதரணமான நிகழ்ச்சியை சங்கரனே உண்டாக்கி விட்டான்!சங்கரனின் எண்ணத்தை அறியாத ஆர்யாம்பாள் என்ன செய்வாள், பாவம்!தன்னை விட்டுச் சென்றேனும் பிள்ளை உயிரோடு இருந்தால் போதும் என்று கருதினாள். "சரியப்பா!நீ துறவியாவதற்கு அனுமதிக்கிறேன்"என்று கதறிக் கொண்டே கூறினாள்.
எனவே கோவிந்தர் கட்டளையிட்ட வண்ணம் அத்வைதவிதியை உலகினருக்கு பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். பாரத நாட்டில் உல்ள எண்ணில் அடங்காத புண்ணிய க்ஷேத்திரங்களில் முதலிடம் பெறுவது காசி. எல்லா மதங்களையும் சேர்த்த பண்டிதர்களும் வாழ்ந்த இடம் காசிதான். அத்வைதத்தை எதிர்ப்பவர்களுடன் வாதம் செய்து வெல்வதற்க்குக் காசியே ஏற்ற இடம் என்பதால் அங்கு சென்றார் சங்கரர்.
வண்டுகள் மலரை நாடிவந்து மொய்ப்பது போல் நம் சங்கரரைப் பாமரரும் பண்டிதரும் வந்து சூழ்ந்து அடிபணிந்து சீடராயினர். சங்கரர் 'சங்கராச்சாரியார்'ஆகிவிட்டார். இறைவனது திருவடிகளிலேயே அவர் ஆழ்ந்திருந்ததால் "சங்கர பகவத் பாதர்"என்றும் பெயரைப் பெற்றார்.
காசியம்பதியில் கங்கைக் கரையில் இவரது உபதேசமும் கங்கை போல கொந்தளித்து வந்தது. அத்வைதத்தை எதிர்த்த மாற்று மதக்காரர்களும் அவரது உபதேசத்தினால் அழுக்காறு அகன்று தெளிவு பெற்றனர்.
அற்ப ஆயுளே இம் மானுட உலகில் வாழப்போவதாக அல்லவா முன்பு வடக்கு நாதன் கூறியிருந்தார்?தன் உடல் அழிந்தாலும் உபதேசங்கள் அழியலாகாது என்பதால், அவற்றை எழுதி வைக்கலானார் ஸ்ரீசங்கராச்சாரியார்.
நன்றி:காஞ்சி பீடம் |
புதன், 23 ஏப்ரல், 2014
சித்திர ஆதிசங்கரர்-8
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக