புதன், 30 ஏப்ரல், 2014

சித்திர ஆதிசங்கரர்-12



                                            
நாடு முழுவதிலும் அத்வைத உண்மையை சங்கரர் பரப்ப வேண்டும் என்று வியாசர் விரும்பியபடியால், அவர் காசியிலிருந்து புறப்பட்டார். இன்று அலகாபாத் என்று சொல்லப்படும் பிரயாகைக்கு விரைந்தார் சங்கரர். காரணம் குமாரிலப்பட்டர் என்ற பெரும் பண்டிதர் மரணத்தருவாயில் இருந்தார். அவர் அத்வைதத்தை ஏற்குமாறு செய்துவிட்டால், அவரைச் சேர்ந்த ஏராளமான சிஷ்ய கோடிகளும் அத்வைதத்தைத் தழுவி விடுவர். அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் கர்ம மீமாம்சகர்கள் என்பார்கள்.
புத்த மதத்தவர்களுக்கு வேதகர்மங்கள் கிடையாது. ஆதியில் அவர்களது கருத்துக்களை வெள்ள எண்ணிய இந்தக் குமாரில பட்டர் பௌத்தகனாக மாறுவேஷம் பூண்டு பௌத்தர்களுடனேயே வசித்தால்தான் அவர்களது கருத்துக்களை ஏற்கலாம். பிறகு அவற்றை எதிர் வாதத்தால் முறிக்கலாம் என்றெண்ணினார். அவ்விதமே பௌத்தராக வேஷம் போட்டு அம் மதக்கொள்கைகள் முழுவதையும் கற்றுக் கொண்டார். பிற்பாடு வேத கர்மங்கள் அவசியம் என்பதை நிலைநாட்டும் போது, இக்கர்மங்களை விலக்கும் புத்த மதத்தை ஆணித்தரமாக கண்டித்தார்.
கடைசியில் ஒருநாள் அவருக்கு வருத்தம் உண்டாயிற்று. 'அடடா!என்னைத் தங்களில் ஒருவனாக எண்ணி அந்தப் பௌத்தர்கள் பேணிக் காத்தனரே!தங்களது மர்மக் கருத்துக்களை
போதித்தனரே! இவர்களிடம் வேஷம் போட்டு வஞ்சனை செய்துவிட்டேனே"என்று பச்சாதாபம் கொண்டார்,"இதற்கு சாஸ்திரம் கூறும் ஒரே பிராயச்சித்தம் 'துஷாக்னிப் பிரவேசம்'தான். அதாவது தன்னைச் சுற்றி உமியை மலையாகக் குவித்துக் கொள்ள வேண்டும். அந்த வெம்மையிலேயே நான் அணுஅணுவாகச் சாகவேண்டும். சத்தியசந்தரான குமாரிலர் இவ்விதம் உயிர்விடுவதை அறிந்த சங்கரர் அவரிடம் விரைந்தார். "மதிப்புக்குரிய குமாரிலரே!புத்த மதத்தைக் கண்டித்துத் தாங்கள் வேத கர்மாக்களை நிலை நாட்டியது சரியே!ஆனால் உயிரற்ற கர்மம்தானாகப் பயனளிக்காது என்பதையும், எல்லாக் கர்மாக்களையும் ஒழுங்கு படுத்தும் பேரறிவான கடவுளே பலன் தருகிறான் என்பதையும் புரிந்து கொள்ளும். அத்வைதம் மறையாத பெரும் ஆனந்தம் என்பதை உய்த்து உணருங்கள்"என்கிறார் சங்கரர். அவரது வாதத்தால் குமாரிலரும் அத்வைத உண்மையை ஏற்றார். உமிக்காந்தலில் உடலைக்கருக்கி உயிரை அத்வைதமாகக் கரைத்தார்
மண்டன மிச்ரர் என்ற ஒரு புகழ் பெற்ற பண்டிதரை வென்றாலே தமது வெற்றி நிலைக்கும் எனக் கண்டார் ஸ்ரீசங்கரர். எனவே மண்டான மிச்ரர் வசித்து வந்த மாஹிஷ்மிதி என்ற நகரத்திற்குச் சென்றார். பண்டித திலகமான மண்டனர் வாழ்ந்த அவ்வூரின் பாமர பெண்டிரும், கூட்டுக் கிளிகளும் கூட கர்ம மீமாம்சை வாசகங்களைக் கோஷித்துக் கொண்டிருப்பது கேட்டு ஆச்சரியப்பட்டார்.
சங்கரர் அவரது வீட்டை அடைந்தபோது, உள்ளே மண்டனர் FF கொடுத்துக் கொண்டிருந்தார். எனவே வாயிற்கதவு சாத்தியிருந்தது. சங்கரர் தமது விசேஷ சக்தியைப் பிரயோகித்து அவரது வீட்டிற்குள் சென்றுவிட்டார். FF கொடுக்கும் போது சங்கரர் வந்ததைக் கண்டு மண்டன மிச்ரர் கோபமாக பேசப்பேச, சங்கரரோ சற்றும் கோபம் இல்லாமல் ஹாஸ்யமாக பதில் சொல்லிக் கொண்டுவந்தார்.
அந்த ஹாஸ்யத்தின் உள்ளே தொனிக்கும் அறிவுத்திறனை வியந்தார் மண்டனார். அவரும் அறிஞராததால், இத்தகைய அறிவாளியை அடித்து விரட்டாமல் வாதம் செய்ய எண்ணினார். சங்கரர் விரும்பியதுமம் இதுதான்!திதி முடிந்தபின் இருவரும் வாதத்திற்கு அமர்ந்தார்கள். தீர்ப்புச் சொல்ல மத்தியஸ்தர் ஒருவரை வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் மண்டன மிச்ரர்
"தங்கள் மனைவி சரஸவாணியே மத்தியஸ்தராக இருக்கலாமே"என்றார் சங்கரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக