திங்கள், 21 ஏப்ரல், 2014

சித்திர ஆதிசங்கரர்-6


                                          
அன்பே உருவான சங்கரன், "அம்மா நான் எல்லா உறவுகளையும் விட்டு துறவியானாலும் கூட, உன் உயிர் பிரிகிற சமயத்தில் உன்னிடம் வந்து சேருவேன்!நானே உனக்கு அந்திமக்கிரியை செய்து பிள்ளை என்ற கடமையை நிறைவேற்றுவேன்"என்று உணர்ச்சியுடன் கூறினான்.
முதலையிடமிருந்து விடுபட்ட சங்கரனை வீட்டுக்கு வருமாறு அழைத்தாள் அன்னை. ஆனால் சங்கரனோ, "உலகில் உள்ள அன்னையர் அனைவரும் எனது அன்னையரே!ஆண்கள் அனைவரும் எனது சகோதர்களே!பெண்கள் அனைவரும் எனது சகோதரிகளே!இந்த உலகில் உள்ள இல்லங்கள் அனைத்தும் எனது இல்லங்களே!என்று கூறிவிட்டு புதிய துறவி உருவம் பெறுவதற்காக காலடியை விட்டுப் புறப்பட்டான்.
காலடியைவிட்டு, பெற்றெடுத்து வளர்த்த அன்புத்தாயைவிட்டு, இல்லத்தையும் விட்டுக் காலடி நோக நடந்து கொண்டேயிருந்தான் சங்கரன். "ஆபத் சந்நியாசம்"என்கிற முறையில் பூர்ணாநதிக்குள் அவன் தனக்குத்தானே துறவற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு சந்நியாசியாகி விட்டான். ஆனாலும் இப்போது ஆபத்து நீங்கிவிட்டதால் உத்தம சந்நியாசியான ஒரு குருவிடமிருந்து துறவறம் வாங்கிக் கொள்வதே வேத மதம் கூறும் முறையெனக் கருதினான். இவ்வாறு தனக்கு சந்நியாச உபதேசம் தரவேண்டிய குரு யார், அவர் எங்கே இருக்கிறார் என்பதேல்லாம் சிவ அவதாரமான சங்கரனுக்குத் தெரியும். குருவைத் தேடி சாதாரன பாலன் போல் காதம் காதமாகக் கால் தேய நடந்து செல்கிறான். நர்மதைக் கரையை இறுதியில் அடைகிறான்
நன்றி:காஞ்சி பீடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக