ஞாயிறு, 19 அக்டோபர், 2014


Numerology: Place of living எண்கணிதம்: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்! பகுதி 2 Numerology: Place of living எண்கணிதம்: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்! பகுதி 2 சென்ற பாடத்தின் தொடர்ச்சி இது! 13.10.2014 நீங்கள் பிறந்த ஊரின் எண்ணும், உங்களுடைய பிறந்த எண்ணும் ஒன்றாக இல்லை என்றால், நீங்கள் பிறந்த ஊரே உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். பிறந்த ஊரின் மேல் அபிமானம் அல்லது காதல் இருப்பது இயற்கையானது! அடிக்கடி அல்லது எப்போது வேண்டுமென்றாலும் சென்று வரலாம். வயதான காலத்தில், அங்கேயே சென்று தங்கி (செட்டிலாகி) நம் காதலைக் கொண்டு செலுத்தலாம். அதாவது பணி ஓய்வு காலத்தில் அதைச் செய்யலாம். ஆனால் பொருளீட்ட வேண்டிய காலத்தில், அதாவது வயது 21ற்கு மேல் 60 வயதுவரை எண் கணிதப்படி ஒத்துவரும் ஊரில் நாம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது நமக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதற்கு எண் கணிதம் ஒரு மாற்று வழியையும் தந்துள்ளது. அதாவது பிறந்த எண் ஒரு ஊருடன் சரிவராதவர்களுக்கு இரண்டாவது சாஸ்சாக வேறு சில எண்களையும் தந்துள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் ஒன்றாம் எண்ணிற்கு உரியவரா? இரண்டாவது சாய்ஸாக 4, 8 மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும் 6 மற்றும் 7ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது! நீங்கள் இரண்டாம் எண்ணிற்கு உரியவரா? இரண்டாவது சாய்ஸாக 7, 8 மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும் 5ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர் சரிப்பட்டுவராது! நீங்கள் மூன்றாம் எண்ணிற்கு உரியவரா? இரண்டாவது சாய்ஸாக 5, 6, 7 மற்றும் 9. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும் 4 அல்லது 8ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது! நீங்கள் நான்காம் எண்ணிற்கு உரியவரா? இரண்டாவது சாய்ஸாக 1 மற்றும் 6 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும் 3 அல்லது 5ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது! நீங்கள் ஐந்தாம் எண்காரரா? இரண்டாவது சாய்ஸாக எதையும் தேட வேண்டாம். உங்களுக்கு எல்லா ஊர்களுமே சரிப்பட்டுவரும். ஆனாலும் 2 அல்லது 4ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்களைத் தவிர்ப்பது நல்லது! நீங்கள் ஆறாம் எண்காரரா? இரண்டாவது சாய்ஸாக 3, 4, மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும் 1 அல்லது 8ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது! நீங்கள் ஏழாம் எண்காரரா? இரண்டாவது சாய்ஸாக 2 அல்லது 3. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும் 1 அல்லது 9ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது! நீங்கள் எட்டாம் எண்காரரா? இரண்டாவது சாய்ஸாக 1, 2 & 4 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும் 3 அல்லது 6ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது! நீங்கள் ஒன்பதாம் எண்காரரா? இரண்டாவது சாய்ஸாக 1, 2, 3, அல்லதுr 6. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும் 7ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது! Each number has a numerological vibration. ------------------------------------------------------------ இளையராஜாவை எடுத்துக்கொள்வோம். அவருடைய பிறந்த தேதி: 2.6.1943 ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Ilaiyaraaja அவருடைய இயற்பெயர்: ஞானதேசிகன் (Gnanadesikan) மாற்றி வைத்துக்கொண்ட பெயர்: Ilaiyaraaja GNANADESIKAN = 3+5+1+5+1+4+5+3+1+2+1+5 = 36 = 9 ILAIYARAAJA = 1+2+1+1+1+1+2+1+1+1+1 = 13 = 4 இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 5ஆம் எண் மட்டுமே ஒத்துவராது. மற்ற எண்கள் எல்லாம் ராசியானதே! அவருக்குப் பிறந்த ஊர், வசிக்கும் ஊர், வீட்டில் வைத்த பெயர், அவர் மாற்றி வைத்துக்கொண்ட பெயர் என்று அனைத்துமே வசப்பட்டுள்ளது! அதாவது ராசியாக உள்ளது! ஜாதகத்தில் அவருக்கு மகா புருஷ யோகம் உள்ளது. அதனால் அவருக்கு எல்லாமும் வசப்படுகிறது. எண்ணற்ற ரசிகர்களையும் தன் வசப்படுத்தி வைத்துள்ளார் --------------------------------------------------------- எண்கணிதத்தைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது? ஜோதிடம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை! மருத்துவத்தில் Allopathy, Homeopathy, Ayurveda, Acupuncture போன்று பல பிரிவுகள் இருப்பதைப்போல, பல சிகிச்சைமுறைகள் இருப்பதைப்போல ஜோதிடத்தில் பல பிரிவுகளில் இந்த எண் கணிதமும் ஒன்று. விருப்பமென்றால் எடுத்துக்கொள்ளலாம். அல்லது நம் வகுப்பறை ஜோதிடத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக