செவ்வாய், 18 நவம்பர், 2014

பெயரியல் ஜோதிடம்மறைமுக ஞானங்களைத்தெரிந்துகொள்வதில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் இருந்தது.இளம் வயதில் நான் முதன்முதலில் கற்க முயன்ற  மறைமுக ஞானங்கள் எண் ஜோதிடமும்,பெயர் ஜோதிடமுமாகும்.நான் இளைஞனாக இருந்த காலத்தில்தான் எண் ஜோதிடமும்,பெயர் ஜோதிடமும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்திருந்தது.அக்காலத்தில் தமிழிலோ,பிற இந்திய மொழிகளிலோ எண் ஜோதிடம் பற்றியோ,பெயர் ஜோதிடம் பற்றியோ எழுதப்பட்ட நூல்கள் கிடைப்பது அரிதாக இருந்ததுமேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட ஆங்கில நூல்கள்தான் அக்காலத்தில் அதிகமாக கடைகளில் விற்பனையாகிக்கொண்டிருந்தனஅப்பொழுது எனக்கு ஆங்கில அறிவு குறைவுதான் என்றாலும் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும்அந்த கால சூழ்நிலையில்  நான் மேற்கத்திய தேசத்தவரான கீரோ அவர்கள் எழுதிய எண் ஜோதிட நூல்களைப்படித்திருக்கிறேன்.

மேற்கத்தியவரான கீரோ அவர்கள் எழுதிய நூல்களைத்தான் இந்தியாவை சேர்ந்த எண் ஜோதிடர்கள் அக்காலத்தில் பயன்படுத்தி வந்தார்கள்,தற்காலத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள்இந்தியாவிலுள்ள காசி நகர பண்டிதர்களிடம் தான் கற்றுக்கொண்டதைத்தான்,தன்னுடைய நூல்களில் எழுதியிருப்பதாக கீரோ குறிப்பிடுகிறார்காசிப்பண்டிதர்களிடம் கற்றுக்கொண்டதாக அவர் குறுப்பிடுவதால் ,நம் இந்திய மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் அது சம்பந்தமான நூல்கள் இருக்கலாமென எனக்குத்தோன்றுகிறதுஆனால் அத்தகைய நூலை எங்கே தேடுவது என்று எனக்குத்தெரியவில்லை.

எண் ஜோதிடம்,பெயர் ஜோதிடம் இவைகளைக்கற்றுக்கொள்ள தெளிவான நூல்களோ,வழிகாட்டுதல்களோ கிடைக்காத காரணத்தால்,அவைகளைக்கற்கும் ஆர்வம் எனக்கு குறைந்துபோய்விட்டிருந்ததுஇதனால் நான் இந்திய முறை ஜோதிடக்கலையை கற்கத்தொடங்கிவிட்டேன்ஜோதிடக்கலையில் போதிய அளவிற்கு ஞானம் பெற்ற மன நிறைவு எனக்கு உண்டுஆனால் எண் ஜோதிடம்,பெயர் ஜோதிடம் போன்ற விசயங்களை ஆராய வேண்டுமென்ற எண்ணம் மட்டும் எனக்குள் நெடுங்காலமாக இருந்துகொண்டேயிருந்ததுஇதனால் அதைப்பற்றிய தேடுதல்களும் எனக்குள் இருந்து வந்தன.

தற்காலத்தில் பெயர் ஜோதிடம் ஒரு வகையான தந்திர சாஸ்திரம் போல் பயன்படுத்தப்பட்டு வருவதை அறிய முடிகிறதுஇதை வைத்துக்கொண்டு சிலர் லட்சக்கணக்கில்,கோடிக்கணக்கில் சம்பாதித்தும்விட்டார்கள்இதை ஏன் வெளிப்படையாக வைக்க யாரும் முன்வரவில்லை என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்பெயர் ஜோதிடம் வெளிப்படுவதற்கு வித்திட்டவர்கள் பண்டிட் சேதுராமன் அவர்கள்அவர் எழுதிய நூல்கள் தமிழகம் மட்டுமின்றி வெளினாடுகளிலும் பிரபலமடைந்ததுபெயர் எண்களுக்கும் மந்திர சாஸ்திரத்திற்கும் தொடர்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்பெயர் ஜோதிடத்தை பயன்படுத்தும் முறைகளை வெளிப்படுத்தினாரே தவிர,அதற்குப்பின்னால் மறைந்திருக்கும் ரகசியங்களை அவர் வெளிப்படுத்தவில்லைஅவரைத்தொடர்ந்து பண்டிட் லக்ஷ்மிதாஸ் என்பவரும் தமிழில் பெயர் ஜோதிடம் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார்இவர்களைத்தொடர்ந்து பலர் தமிழில் பெயர் ஜோதிடம் பற்றிய புத்தகம் எழுதியாகிவிட்டதுஆனால் பெரிய அளவில் ரகசியங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஜோதிடத்தில் கிரக காரகத்துவங்களைக்கொண்டு பலன் கூறும் முறை பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது.ஒன்பது கிரகங்களுக்கும் உரிய காரகத்தன்மைகள் பல உள்ளனகாலத்திற்கேற்ப புதிய காரகத்தன்மைகள் அவ்வப்பொழுது கிரகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனஅந்த அடிப்படையில் எண்களையும்,எழுத்துக்களையும் கிரக காரகத்துவத்துடன் இணைத்திருக்கலாம் எனத்தோன்றுகிறதுராசிகள்,நட்சத்திரங்கள்,கிரகங்கள் இவைகளுக்கு எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை ஜோதிட நூல்களில் காணமுடிகிறதுஆனால் அவைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விவரம் எந்த நூல்களிலும் கொடுக்கப்படவில்லை.

மேற்கத்தியவரான கீரோ காசிப்பண்டிதர்களிடம் தான் கற்றுக்கொண்ட எண்ணியல் மற்றும் பெயரியல் சார்ந்த விசயங்களை,தான் பயன்படுத்தும் ஆங்கில மொழியமைப்பிற்கு தகுந்தவாறு மாற்றிக்கொண்டு,அதை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்திப்பார்த்து,தான் பெற்ற அனுபவங்களை நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளார்கீரோ அவர்கள் இந்தியர்களிடம் கற்றுக்கொண்ட எண்ணியல் மற்றும் பெயரியல் கலை இந்தியாவில் வளர்ச்சி பெறவே இல்லை,அதன் மூல நூல்கள் முற்றிலுமாக அழிந்துபோயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறதுகீரோ அவர்கள் எழுதிய நூல்கள்தான் இந்த கலைகளுக்கு மூல நூல்களாக தற்காலத்தில் இருந்து வருகின்றன.தற்காலத்தில் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவரும் எண்ணியல் மற்றும் பெயரியல் கலை கீரோவின் நூல்களை அடியொட்டியே அமைந்துள்ளது.

கீரோ அவர்கள் தான் இந்தியர்களிடம் கற்றுக்கொண்டதாக கூறிக்கொண்டாலும்,அவர் தன் சொந்த கருத்துக்களையும் இணைத்தே நூல்களில் எழுதியிருக்கிறார்குறிப்பாக இந்தியர்கள் யுரேனஸ்,நெப்டியுன் போன்ற கிரகங்களை ஜோதிடத்தில் பயன்படுத்தவில்லை.ஆனால் கீரோ அவர்கள் 4ஆம் எண்ணிற்கு யுரேனஸையும்,7ஆம் எண்ணிற்கு நெப்டியூனையும் ஒதுக்கியுள்ளார்இந்தியர்கள் 4ஆம் எண்ணிற்கு ராகுவையும்,7ஆம் எண்ணிற்கு கேதுவையும் ஒதுக்கியுள்ளனர்ராகு,கேதுக்களைப்பற்றி அதிக விவரம் தெரியாததால் ஒருவேளை கீரோ அவர்கள் அவைகளை  யுரேனஸ்,நெப்டியுன் என எடுத்துக்கொண்டிருக்கலாம்.

தமிழ் மொழி எழுத்துக்களுக்கோ அல்லது வட மொழி எழுத்துக்களுக்கோ உரிய எண் மதிப்பீடுகள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டதால் பெயர் ஜோதிடத்தைப்பொருத்தவரை நாம் ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தவேண்டிய கட்டாய சூழ்      நிலையில் உள்ளோம்எழுத்துக்களுக்கு எவ்வாறு எண் மதிப்பீடு செய்யப்பட்டது என்ற விவரம் கீரோவைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது,அவரும் அந்த ரகசியத்தை வெளியிடவில்லைவட மொழியில் உள்ள மந்திர சாஸ்திர நூல்களில் அதற்குரிய வழிமுறைகள் இருக்கலாம் எனத்தோன்றுகிறதுவட மொழி அறிந்தவர்களால் மட்டுமே அதை ஆராய்ந்து அறிய முடியும்.

எண்ணும் எழுத்தும்

எண் ஜோதிடத்தில்  எழுத்துக்களுக்கு பல்வேறு எண் மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.அவற்றில் சால்டியன் முறையில் கொடுக்கப்பட்டுள்ள எண் மதிப்பீடுகளே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறதுநாமும் இந்நூலில் சால்டியன் முறை எண் மதிப்பீடுகளையே பயன்படுத்தியிருக்கிறோம்அதுதான் நடைமுறைக்கு சரியாக வருகிறது.சால்டியன் முறை எண் மதிப்பீடுகள் கீழே தரப்பட்டுள்ளன 

எழுத்து

A,I,J,Q,Y
B,K,R
C,G,L,S
D,M,T
எண்

1
2
3
4
  
எழுத்து

E,H,N,X
U,V,W
O,Z
F,P
எண்

5
6
7
8

பெயர் கூட்டு எண் கணக்கிடும் முறை

பெயர் ஜோதிடத்தை பொருத்தவரை ஒரு பெயரின் கூட்டு எண்ணைக்கண்டறிய வேண்டுமானால்,எந்த மொழிப்பெயராக இருந்தாலும் அப்பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டுதான் அப்பெயரின் கூட்டு எண்ணை கணக்கிட வேண்டும்.
உதாரணமாக சிவதாசன்ரவி என்னும் பெயருக்கு கூட்டு எண்ணைக்கணக்கிடுவோம்.
SIVADASANRAVI
3161 4 1315 21 61

எழுத்து
எண்
S
3
I
1
V
6
A
1
D
4
A
1
S
3
A
1
N
5
R
2
A
1
V
6
I
1
கூட்டு எண்
35

  
சிவதாசன்ரவி என்ற பெயரின் கூட்டு எண் 35 ஆக வருகிறதுஇதை ஓரிலக்க எண்ணாக மாற்றினால் (3+5=8) 8 வரும்எண் 8சனிக்குரியதாகும்இவ்வாறு கூட்டிவரும் ஓரிலக்க எண்ணிக்கிற்குத்தான் பெரும்பாலான நூல்களில் பலன் கொடுக்கப்பட்டுள்ளதுஆனால் நாம் காணப்போகும் பெயர் ஜோதிட முறையில் பெயர் கூட்டு எண்ணை ஓரிலக்க எண்ணாக மாற்றக்கூடாதுஅதை அப்படியே வைத்துக்கொண்டு பலன் கூறவேண்டும்இங்கே உதாரணமாக எடுத்துக்கொண்ட சிவதாசன்ரவி (SIVADASANRAVI)  என்னும் பெயரின் கூட்டு எண் 35, அதில் எண் 3 குருவிற்குரியதாகும்,எண் 5 புதனுக்குரியதாகும்எனவே எண் 35 ஆனது குரு,புதன் சேர்க்கையைக்குறிக்கும்.குரு,புதன் சேர்க்கை சிறந்த கல்வியைக்கொடுக்கும்பேச்சாற்றல்,எழுத்தாற்றல் இவைகளைக்கொடுக்கும்இந்த பெயரை வைத்துக்கொண்ட பிறகுதான்,நான் எழுத்தாளராகவும்,பேச்சாளராகவும் மாறினேன்.

ஸௌந்தர்ய லஹரியில் பெயர் ஜோதிட ரகசியம்

பெயரின் கூட்டு எண்ணை ஓரிலக்க எண்ணாக மாற்றிக்கொண்டுதான் பலர் பலன் கூறிவந்தனர்.ஆனால் பண்டிட் சேதுராமன் அவர்கள் பெயரின் கூட்டு எண்ணை அப்படியே வைத்துக்கொண்டு பலன் கூறியிருக்கிறார்.அதாவது பெயரின் கூட்டு எண்கள் 10 முதல் 108வரையுள்ள எண்களுக்கு தனித்தனியாகப்பலன் கூறியிருக்கிறார்.இதற்கு மந்திர சாஸ்திரத்தில் வழியிருப்பதாக குறிப்பிடுகிறார்இவர் மந்திர சாஸ்திரமென மறைமுகமாகக்குறிப்பிடுவது ஆதிசங்கரர் அருளிய "ஸௌந்தர்ய லஹரிஎன்னும் நூலைத்தான்.இந்த ஸௌந்தர்ய லஹரியில்தான் பெயர் ஜோதிடத்தின் மர்ம முடிச்சு இருக்கிறது.இதை எதேச்சையாக ஆய்வு செய்தபோது,அதில் மறைந்துள்ள ரகசியங்கள் புரிந்ததுஸௌந்தர்ய லஹரியை ஒரு பரிகார நூலாக காலம் காலமாகப்பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்கிரக தோஷ பரிகாரம்,கிரக சேர்க்கைப்பரிகாரம்இதில் தான் கூறப்பட்டுள்ளது என்பதை அண்மையில்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கியஒரு தொகுப்புஅதில் ஈசன் அம்பிகையின் புகழை பாடுவதாகஸ்லோகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதிசங்கரர் கைலாயம் சென்று பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார், அப்போது ஈஸ்வரன் அவரிடம்  ஒரு சுவடி கட்டை கொடுத்தார். சுவடியில் அம்பாளை பற்றிய நூறு ஸ்லோகங்கள் இருந்தன.  ஸ்தோத்ர சுவடியை பெற்று கொண்ட ஆதிசங்கரரை நந்திகேஸ்வரர் வழிமறித்து அவர் கையில் இருந்த சுவடியை பிடித்து இழுத்தார்.  ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை நந்திகேஸ்வரர் தன்வச படுத்திக்கொண்டார்.இழந்த ஐம்பத்தொன்பது ஸ்லோகங்களையும் கையில் இருக்கும் நாற்பத்தி ஒரு ஸ்லோகங்களை சேர்த்து 100 ஸ்லோகங்களாக பூர்த்திசெய்ய வேண்டும் என்பது அம்பாளின் விருப்பமாக இருந்ததால், ஆதிசங்கரர் அம்பிகையை கேசம் முதலாக பாதம் வரை வர்ணித்து பாடி 100ஸ்லோகங்களையும் பூர்த்தி செய்தார்.

ஸௌந்தர்ய லஹரியில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் பரிகார பலன்களை கூறியிருக்கிறார்கள்.அந்த பரிகார பலன்களை படித்துப்பார்த்தால்,அவை பிருகு-நந்தி நாடியில் கூறப்படும் கிரக சேர்க்கைப்பலன்களை ஒத்திருக்கின்றனஎனவே ஜாதகத்தில் கிரக சேர்க்கையால் உண்டாகும் தோஷங்களுக்குஸௌந்தர்ய லஹரியில் உள்ள ஸ்லோகங்களை பரிகாரத்திற்க்காக பாராயணம் செய்யலாம்.இந்த ஸ்லோகங்கள் எல்லாம் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளதால் சிலருக்கு அவைகளை உச்சரிப்பது கடினமாக இருக்கலாம்அத்தகைய சிரமம் உடையவர்கள் தங்கள் பெயரை குறிப்பிட்ட ஸ்லோக எண்ணுக்கு மாற்றி வைத்துக்கொண்டால்,அவர் அந்த கிரக சேர்க்கையால் உண்டாகும் தோஷங்களிலிருந்து விடுபடலாம்உதரணமாக ஒருவருக்கு,அவருடைய ஜாதகத்தில் சனி,கேது சேர்க்கை இருப்பதாக வைத்துக்கொள்வோம்.அந்த ஜாதகருக்கு சரியான தொழிலோ,உத்யோகமோ அமையாது,அப்படியே அமைந்தாலும் அது நீண்ட காலம் நிலைத்திருக்காது.இதற்கு பரிகாரமாக,ஸௌந்தர்ய லஹரியில் உள்ள 78 ஆவது ஸ்லோகத்தை  தொடர்ந்து பாராயணம் செய்துவந்தால் அவர் அந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.அல்லது அவர் தன் பெயரின் கூட்டு எண் 78 வருமாறு அமைத்துக்கொண்டால் சனி,கேது சேர்க்கையால் உண்டாகும் தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

ஒருவருடைய பெயர் கூட்டு எண் எந்த கிரக சேர்க்கையைக்குறிப்பிடுகிறதோஅந்த கிரக சேர்க்கைப்பலன்களை ஒருவர் தன் வாழ்நாளில் தொடர்ச்சியாக அனுபவித்து வருவதை  காண முடிகிறது.இந்த பலன்களுக்கும் ஒருவர் பிறந்த தேதிக்கும் சம்பந்தமில்லை என்பதையும் அறிய முடிகிறது.ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட யோகம் இல்லையென்றாலும் தகுந்த பெயர் அமைப்பு மூலம் அந்த யோகத்தை அடைய முடியும் என்பதை ஆய்வில் அறிய முடிகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக