புதன், 22 ஏப்ரல், 2015

தமிழனின் வானிலை ஜோதிடம்


அறிவன் என்பவன் மூன்று விதமான மூவகைக் காலங்களையும் அறிபவன்.
அதில் முதல் வகையாக,
இறந்த காலம்நிகழ் காலம்எதிர் காலம் என்பவற்றை அறிந்து,
வினைப்பயனே அவற்றை உண்டாக்குகின்றன
என்பதையும் அறிந்தவன் அறிவன் என்பதைப்
பகுதி 70 இல் கண்டோம்.
திராவிடவாதிகள் வினைப்பயனை ஒப்புக் கொள்ளாதவர்கள்.
ஆனால் தமிழர்கள் வினைப்பயன் வழியே வாழ்க்கை அமைகிறது
என்று சொல்பவர்கள் என்பதை
ஊழ் என்னும் அதிகாரம் கொண்ட திருக்குறள் மூலமும்,
கணியன் பூங்குன்றனாரது புறநானூற்றுப் பாடல் மூலமும்,
சிலப்பதிகாரத்தின் மூலமும் அறிந்தோம்.


இரண்டாவது வகையாகபருவச் சுழற்சியைக் கவனித்துப்
பனியும்வெயிலும்மழையும் வருவதைப்
பழந்தமிழர்கள் கணித்தார்கள் என்பதைப் பகுதி 72 இல் கண்டோம்.
அந்த வகையில் பரிபாடலில் கொடுக்கப்பட்டுள்ள கிரக அமைப்பையும் கண்டோம்.
அதே பாடலில் பாவை நோன்பு செய்த முறையைப் பற்றிய
விவரம் கொடுக்கப்பட்டுள்ளது 
பாவை நோன்பு ஒழுங்காகச் செய்து வந்தால்,
அடுத்த மழைக்காலம் நன்றாக இருக்கும் என்ற
பொது நலமும் பாவை நோன்பில் இருந்தது.


பாவை நோன்பைச் செய்ய இன்னொரு காரணமும் இருந்த்து.
அது நல்ல கணவனைப் பெற வேண்டும் என்பதாகும்.
மார்கழி மாதம் பாவை நோன்பு செய்ய ஆரம்பித்தால்,
தை பிறந்தவுடன் நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்
என்ற நம்பிக்கையில்,
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னதைத்,
தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும்
என்று சொன்னதாகப் புரிந்து கொள்வது
திராவிடவாதிகளுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய பகுத்தறிவு போலிருக்கிறது!


பாவை நோன்பு ஆரம்பிக்கும் மார்கழி மாத்த்தில்
கர்போட்டம் அமையும் என்பது ஜோதிட விதி.
ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்றால்,
அது முதலில் கர்ப்பத்தில் உண்டாகி,
சில மாதங்கள் வளர்ந்து,
பிறகு சரியான காலத்தில் பிறக்க வேண்டும்.
அது போலவே மழையும்.
மழை பொழிவதற்கு ஆறு மாதங்கள் முன்பாகவே
உரிய சூழ்நிலைகள் அமைய வேண்டும். 
அப்படி அமைவது மார்கழி மாதம் தொடங்கி ஆரம்பிக்கிறது.
அந்த அமைப்புகளைக் கர்போட்டம் என்றனர்.
மார்கழி மாத்த்தில் சுறுசுறுப்பாக்க் கர்போட்டத்தைக் கவனிப்பார்கள்.
இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால்,
தமிழ் நிலங்களில்,
தை மாதத்தை விட மார்கழி மாதத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது.
தாங்கள் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளும் மக்களுக்கு,
இந்த விவரங்கள் தெரிந்திருக்கவில்லை.
தெரிந்திருந்தால் மார்கழியில்தான் வருடப் பிறப்பு என்று சொல்லியிருப்பார்களோ?


மார்கழி மாதத்தில் பூராட நக்ஷத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது
கர்போட்டம் நடைபெறும் என்பார்கள்.
அந்த நேரத்தில் பூமியில் நிலவும் சூழ்நிலை,
காற்று மண்டலம்,
மேகக் கூட்டங்களின் தோற்றம்அமைப்பு
மற்றும் விண்வெளிக் கோள்கள் ஆகியவற்றைக் கவனிப்பார்கள்.
அவற்றின் அமைப்பைக் கொண்டு
கர்போட்டம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று சொல்லலாம்.
கர்போட்டத்தை மார்கழி தொடங்கி ஒவ்வொரு நாளும் பார்ப்பார்கள்.
என்றைக்குக் கர்போட்ட அமைப்பு நன்றாக இருக்கிறதோ,
அந்த நாளைக் குறித்துக் கொள்வார்கள்.
அந்த நாளன்று
பூமியானது வானத்தில் எங்கு இருக்கிறதோ,
அதற்கு நேர் எதிர்ப் பக்கம் பூமி வரும்போது
மழை பொழியும்.
குறி சொல்வது போல ஜோதிடர்கள்
இவ்வாறு சொல்லி வந்திருக்கிறார்கள்.
அதை அவர்கள் மனம் போன போக்கில் சொல்லவில்லை.
இயற்கையை ஆராய்ந்த பிறகே சொல்லியிருக்கிறார்கள்.


கர்போட்டத்தில் கிரக அமைப்புகளையும் கவனிப்பார்கள்.
அவற்றுக்கேற்றாற் போல
மழை பொழிய வேண்டிய மாதங்களிலும்,
சில குறிப்பிட்ட கிரக அமைப்புகள்
சாதகமாக இருக வேண்டும்.
இந்த விவரங்களை ஜோதிட நூல்களில் காணலாம்.
ஆனால் சாதாரண மக்களும் கவனித்து அறிந்திருக்கவே
மழை குறித்த ஜோதிடக் குறிப்புகளைச் சங்க நூல்களிலும் காண்கிறோம்.


இங்கு நாம் ஒன்றை அறிய வேண்டும்.
சங்க நூல்கள் புற வாழ்க்கையையும்,
அக வாழ்கையையும் பற்றிச் சொல்வன.
அவை ஜோதிட நூல்கள் அல்ல.
ஆனால் அவற்றில் மக்கள் பேசிக் கொள்ளும்,
அல்லது சாதாரண மக்களும் அறிந்திருக்க்கூடிய
ஜோதிட விவரங்களும் வருகின்றன.
அவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு 
 
அவற்றின் அடிப்படையில் பழந்தமிழனின் ஜோதிடக் கருத்து
இவ்வாறானதாக இருந்த்த என்று குறுக்கி விடக்கூடாது.
சங்க நூல்களில் காணப்ப்டும் ஜோதிடக் கருத்துக்கள் மிகச் சில.
ஆனால் சொல்லப்படாத கருத்துக்கள் பலப்பல இருக்கின்றன.
அவற்றை ஜோதிட நூலக்ளில்தான் தேட வேண்டுமே தவிர,
சங்க இலக்கியங்களில் தேட முடியாது.


சங்க நூல்களில் மழைக் கருத்துக்கள் அதிகம்,
ஏனெனெனில்  மழை என்பது ஒரு மங்கல விஷயம்.
மழையை வாழ்த்தி விட்டே பாடல் ஆரம்பிக்க வேண்டும்
என்பது பாடலுக்கான இலக்கணம்.
அதனால் மழை நன்றாகப் பெய்ததா இல்லையா,
பெய்யவில்லை என்றால் வருத்தமுறுதல்
போன்ற விவரங்களைச் சங்க நூல்களில் பார்க்கலாம்.
வேளாண் தொழிலில் ஈடு பட்டிருந்த மக்களுக்கு
மழை பற்றிய ஞானம் மிகவும் அவசியம்.
அவர்கள் கல்விகேள்வியின் மூலம்
மழை வரவைப் பற்றியும்,
எதைஎப்பொழுது பயிரிடலாம் என்பதைப் பற்றியும் அறிந்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட அறிவு இந்தியாவில் இருந்ததைப் போல
வேறெங்கும் இருந்திருக்கவில்லை.
தமிழ் நூல்கள் தரும் சான்றுகள் மூலம்,
வானிலை அறிவு தமிழ் நாட்டில் பல காலமாகவே
இருந்து வந்திருக்கிறது என்பதும் தெரிகிறது.


உதாரணமாகசுக்கிரன் கிரகம் தென் திசையில் சென்றால்
மழை இருக்காது என்று சொல்லும்
சங்கப் பாடல்கள் பல இருக்கின்றன.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவனித்து வந்திருந்தால்தான்
ஒரு ஜோதிட விதியாக இவ்வாறு சொல்லியிருக்க முடியும்.
சுக்கிரனை மழையுடன் தொடர்பு படுத்தும்
இந்த விவரத்தைத் தரும்
புற நானூறும் பதிற்றுப் பத்தும் எழுதப்பட்டு
குறைந்தது 2000 வருடங்களாவது ஆகி விட்டன.
அதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்
ஆரியப் படையெடுப்பு  நடந்து,
திராவிடர்கள் தமிழ் நாட்டுக்கு வந்தனர் என்றால்,
தமிழ் நாட்டுப் பகுதிகளில்
மழைக் குறைவைக் காட்டும் இந்த விவரத்தை
அதற்குள் கவனித்து ஒரு ஜோதிட விதியாக உருவாக்கி இருக்க முடியாது.


மற்றொரு உதாரணமாக,
மக நக்ஷத்திரத்தில் சனி கிரகம் சஞ்சரிக்கும் போது 
மழை இருக்காதுமக்களுக்குத் துன்பம் ஏற்படும்
என்று சொல்லும் தமிழ்ப் பாடல்களைச் சொல்லலாம்.
ஒரு நக்ஷத்திரத்தில் ஏறக்குறைய ஒரு வருடம் வரை சனி இருக்கும்.
மகத்தில் ஒரு வருடம் வரை சனி கிரகம்
இருக்க்கூடிய சாத்தியம் உண்டு.
இதனால் ஒரு வருடம் முழுவதும்
மழை இல்லாமல்பஞ்சத்தில் உழல வாய்ப்புண்டு.
பருவ மழை வேறு ஒரு இடத்தில் பெய்திருக்கலாம்,
ஆனால் தமிழ் நிலங்களில் பொய்த்திருக்கலாம்.
இது மகத்தில் சனி இருக்கும் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம்.


அது போல கரியவன் (சனி) புகைக்கினும் என்றும்,
மைம்மீன் (சனி) புகையினும் என்று
சனிக் கிரகம் புகை படிந்தாற்போல இருந்தால்
மழை பொய்க்கும் என்றும் தமிழ்ப் பாடல்கள் சொல்கின்றன.
இவை எல்லாம் பல காலம் கவனித்துச் சொல்லப்படுவது.


இதைப் போல இன்னொரு அமைப்பும்
பத்துப் பாட்டில் வருகிறது,
செவ்வாய் நின்ற இடத்தில் சுக்கிரனும் சென்றால்
மழை இருக்காது என்கிறது அந்தப் பாடல் (பதிற்றுப் பத்து-13).
செவ்வாய் இருந்த இடம் எது என்பதை,
செவ்வாய் சஞ்சரிக்கும் நக்ஷத்திரத்தைக் கொண்டு சொல்வார்கள்.


இன்னொரு இடத்தில்,
எந்த நக்ஷத்திரத்தில் இருந்தால் மழை பெய்யுமோ,
அந்த நக்ஷத்திரத்தில் சுக்கிரன் நிற்கிறது
என்று பதிற்றுப் பத்து 24 ஆம் பாடல் சொல்கிறது.
  

இந்த விவரங்களையெல்லாம் இங்கு சொல்ல முக்கியக் காரணம் இருக்கிறது.
  • 1)   தாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் திராவிடவாதிகள்சங்க நூல்கள் காட்டும் இந்தக் கிரக அமைப்புகளை மூட நம்பிக்கைகள் என்று சொல்வார்களாஅப்படியென்றால் அந்த அமைப்புகளை ஆராய்ந்து அறிந்து சொன்ன அறிவன் முட்டாளா?அவற்றைப் பின்பற்றிய பழந்தமிழர்கள் முட்டாள்களாஅல்லது மூட நம்பிக்கையாளர்களா?

  • 2)   தமிழ் நூல்கள் காட்டும் ஜோதிட அறிவைத்தானேதமிழர்கள் கண்ட அறிவாகநாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்திராவிடவாதிகள் சொல்லும் மறுப்புக் கொள்கையேதமிழர் கொள்கை என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
  • 3)   எல்லாவற்றையும் ஆரியத் திணிப்பு என்று சொல்பவர்கள் திராவிடவாதிகள். அறிவன் ஜோதிடமும் ஆரியத் திணிப்பா?வானிலை குறித்த ஜோதிடம் என்பது ஒரு இடத்தைப் பொருத்தது. திணிக்கப்பட்டதாகச் சொன்னால்அந்த ஜோதிடக் கோட்பாடுகளைத் தங்கள் நாட்டில் உள்ளதட்ப வெப்பம்வானிலைக்கு ஏற்றாற் போல மாற்றிக் கொள்ள வேண்டும். அதை ஒருவர் அல்லது ஒரு சிலர் செய்ய முடியாது. வானிலைக் குறிப்புகள் எல்லாம்வழி வழியாக,பரம்பரையாக்க் கவனித்து எழுதி வைத்துத் தான் சொல்ல முடியும்,அப்படித்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். மேலும் அறிவன் என்று ஒரு தனி வகையைத் தொல்காப்பியம் சொல்லியுள்ளதால்இந்த அறிவன் குணம் என்பது இயல்பாகவே மக்களுக்கு எற்படக்கூடியது என்று தெரிகிறது. அதைப் பலரும் வளர்த்துக் கொண்டிருக்கவே,அறிவன் என்னும் தனி வகையைத் தொல்காப்பியம் சொல்லியிருக்கிறது. இப்படி ஒரு பிரிவுவட இந்தியாவில் இருந்த ஆரியவர்த்த்திலோமனு ஸ்ம்ருதியிலோ சொல்லப்படவில்லை.ஆனால் தமிழில் இருந்திருக்கிறது என்பதால்தமிழ் ஜோதிடம் என்பது தமிழ் மண்ணில் உண்டானதாகத்தான் சொல்லமுடியுமே தவிர,திணிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது.  


  • 4)   தமிழனைத் திராவிடன் என்று சொல்லிக் கொள்ளும் மக்கள் சொல்லும் இன்னொரு விவரம் இருக்கிறது. இந்தியாவுக்கு வடமேற்கே,சுமேரிய நாகரிகம்எகிப்திய நாகரிகம் போன்றவை இருந்த இடங்களில் முதலில் தமிழன் இருந்தான் என்று இவர்கள் சொல்கிறார்கள். அங்கு மட்டுமல்லாமல்தமிழன் சிந்து சமவெளிப் பகுதியில் இருந்தான் என்றே சொன்னாலும்அங்கெல்லாம் தமிழன் கண்ட வானிலை ஜோதிடத்துக்கு இடம் இல்லை. ஏனெனில் அந்த இடங்கள்நாமிருக்கும் தமிழ் நாடு போல பருவ மழையை நம்பி இருப்பவை அல்ல. அந்தப் பகுதிகளில் தமிழன் வாழ்ந்திருந்தான் என்றால்நாம் சங்க இலக்கியங்களில் பார்க்கும் மழை ஜோதிடக் குறிப்புகள் அவனுக்குத் தெரிந்திருக்க முடியாது. 3500 ஆண்டுகளுக்கு முன்னால் அவன் இன்றைய தமிழ் நிலத்துக்கு வந்திருந்தான் என்றால்,அதற்குப் பிறகே அவன் இந்த வானிலை ஜோதிடத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் மழையைப் பற்றி ஜோதிடம் சொல்லியிருக்க வேண்டும். அதற்குக் கால அவகாசம் வேண்டும். அதற்கு முன்பே சங்க நூல்களில் அவை வந்துவிட்டன!

  • 5)   மேலும் அறிவனைப் பற்றிச் சொல்லும் தொல்காப்பியம் 3500ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு விட்டது. 3500 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற  இடைச் சங்கத்தில் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் இருந்தது. இப்பொழுது நம்மிடையே இருக்கும் தொல்காப்பியம் கடைச் சங்கத்துக்கான இலக்கணம். 3500ஆண்டுகளுக்கு முன் நிகழந்த கடைசி ஊழிக்கு முன்னால்ஏழேழ் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன. அவற்றுக்கான நிலம்,கருப்பொருள் வேறு. ஊழிக்குப் பிறகு உண்டான கடைச் சங்கத் தொல்காப்பியத்தில் ஐந்திணைகளே இருக்கின்றன. இவை வேறு என்பதால்தற்போது நம்மிடம் உள்ள தொல்காப்பியம் கடை ஊழிக்குப் பிறகு, 3500 ஆண்டுகளுக்குள் உண்டானது என்று தெரிகிறது. இந்தத் தொல்காப்பியத்தில் சொல்லப்படும் மக்கள் வகை ஏழில் ஒன்று அறிவன் வகை. இந்த வகைகள் இவ்வாறு இருந்தன என்று சொல்லும் தொல்காப்பியச் சூத்திரம்அதற்கு முன்பே இந்த வகைகள் இருந்து வந்தன என்பதைச் சொல்வதாக, “என்மனார் புலவர் என்கிறது (பகுதி61). அதனால் அறிவன் என்பவர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தேகடை ஊழிக்கு முன் இருந்து வந்திருக்கிறார்கள். அதற்குப் பின்னும் தொடர்ந்திருக்கிறார்கள். அவர்கள் சொன்ன ஜோதிடம்அதற்கு முன் இருந்த ஜோதிடத்தின் தொடர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அப்படியிருக்கசிந்து சமவெளியிலிருந்தோ,அல்லது சுமேரியஎகிப்து பகுதிகளிலிருந்தோதமிழன் எப்படி வந்திருக்க முடியும்நம்முடைய தொடர்புதென் கடலிலிருந்துதான் வருகிறதே தவிரவடமேற்கு இந்தியாவில் இருந்து அல்ல.

  • 6)   இங்கு இன்னொரு விவரமும் இருக்கிறது. சுமேரியாரோம் போன்ற வடமேற்குப் பகுதிகளில், 2000 ஆண்டுகளுக்கு முன் தான் ஜோதிடம் எழுந்தது. அவர்கள் ஜோதிடத்தில் நக்ஷத்திரங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால்அறிவன் ஜோதிடத்தில் நக்ஷத்திரத்துக்கு முக்கியத்துவம் உண்டு. மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள சங்க நூல்களில் காணப்படும் ஜோதிடக் குறிப்புகளில்கிரகங்கள் சஞ்சரிக்கும் நக்ஷத்திரத்தைப் பொருத்தே பலன் சொன்னார்கள் என்பதைக் காணலாம். இது ஒரு முக்கியக் குறிப்பு ஆகும். தமிழ்ப் புத்தாண்டை நிர்ணயிப்பதில்ராசிமாதம் என்பதை விட மிக முக்கியமானது நக்ஷத்திரம் என்பதை வரும் கட்டுரைகளில் காணலாம்.

நக்ஷத்திரத்தின் மீதுதமிழ் அறிவர்கள் 
அதிகக் கவனம் செலுத்தி வந்தார்கள் 
என்பதைக் காட்டும் ஒரு புறநானூற்றுப் பாடல் இருக்கிறது. 
அறிவன் கணிக்கும் மூன்று வகை ஜோதிடத்தில், 
மூன்றாவது வகையில் அமையும் அந்த விவரங்களை இனி காண்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக