வெள்ளி, 25 ஏப்ரல், 2014

சித்திர ஆதிசங்கரர் -10


                                                                
விந்தை விளைந்தது!அந்த பக்தி மயமான சீடர் கங்கையில் முழுக ஆசாரியர் பார்த்திருப்பாரா?எனவே அக்கரைக்கும் இக்கரைக்குமாக 'குப்'வென்று பெரிய பெரிய தாமரை மலர்கள் முளைத்து ஒரு மலர்ப் பாலமே உருவாகி விட்டது. அந்தத் தாமரை மலர்கள் மீது அடி எடுத்து வைத்தே சநந்தனரும் இக்கரை வந்து சேர்ந்தார். ஆனால் அவரது நினைவு முழுவதும் குருவிடமே இருந்ததால் மலர்ப் பாலம் உண்டானதே அவருக்குத் தெரியாது!எனவே சங்கரர் அவரிடம் "நதியை எப்படிக் கடந்தாய்?"என்று கேட்டபோது அவர் "குருவே!தங்களை நினைத்தால் பிறப்பு- இறப்புக்குத் தொடரான சம்சாரக் கடலே மறைந்து போகுமே!அவ்விதமிருக்க கங்கை மறைந்ததில் அதிசயம் என்ன?"என்றார்
பத்மங்களின் மீது பாதத்தை வைத்து வந்த இவருக்கு "பத்ம பாதர்"என்று புதுப்பெயர் சூட்டினார் நம் பாகவதர். ஒரு நாள் சங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர் புடைசூழ விசுவநாதர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு புலையனும் புலைச்சியும் நம்முடைய ஆசாரியர் போகிற வழியில் குறுக்கே வந்து விட்டார்கள். போதாத குறைக்கு கையில் நான்கு நாய்களை வேறு பிடித்திருக்கிறான்!"போ, போ!விலகிப்போ!எட்டிப்போ"என்று சங்கரரின் சீடர்கள் கூவினர்.
அவன் சிரித்தான்!"அத்வைதம் அத்வைதம் என்று சொல்லிவிட்டு என்னை விலகிப்போகச் சொல்கிறீர்களே, இது பெரிய முரண்பாடு அல்லவா?எல்லாமே ஒரே சத்தியமான கடவுளின் தோற்றம்தான் என்கிறது உங்கள் அத்வைதம். அவ்வாறெனில் உங்களைப் போலவே நாங்களும் அதே சத்தியத்தின் தோற்றம்தான். உடல் நமக்கு வேறு வேறானாலும், உடலுக்குள்ளே இருக்கிற பரமாத்மா ஒன்று தான். இந்த உடம்பைப் பற்றிய எண்ணத்தையே விலக்கி விட்டுப் பரமாத்மாவாக இருக்க வேண்டும் என்று தான் இந்த ஆசிரியர் உபதேசிக்கிறார்.
நன்றி:காஞ்சி பீடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக