சனி, 19 ஏப்ரல், 2014

சித்திர ஆதிசங்கரர் -4




                                            
மூன்றாவது வயதிலேயே அவனுக்கு 'அட்சாரப்பியாசம்'செய்தார்கள். அதாவது படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தார்கள். உடனே அவன் பெரிய பெரிய சாஸ்திரங்களையும் தானாகப் படித்து,ஒரே முறையில் மனப்பாடம் செய்து கொண்டு விட்டான். அவற்றின் கருத்துக்களை தெளிவாகப் புரிந்துகொண்டான்.
சங்கரனுக்கு நான்கு வயதான போது ஒரு துயர சம்பவம் திகழ்ந்தது. சிவ குரு காலமாகிவிட்டார்!
சிவகுருவின் மரணத்தால் ஏற்பட்ட துக்கத்தைச் சிறிது சிறிதாக ஆர்யாம்பாளும். சங்கரனும் ஆற்றிக் கொண்டனர்.
சங்கரனுக்கு ஐந்து வயதாயிற்று. ஆர்யாம்பாள் அவனுக்கு உபநயனம் செய்வித்தாள் - அதாவது பூணூல் கல்யாணம் நடத்தினாள்.
பூணூல் போட்டுக் கொண்டபின் ஒரு சிறுவன் வீட்டைவிட்டு,ஆசிரியரிடம் சென்று அவருடனேயே வசிக்க வேண்டும். இதற்குக் 'குருகுல வாசம்'எனப் பெயர். குருவானவர் சீடனுக்கு வேதங்கள்,அதன் அங்கங்கள்,மற்ற சாஸ்திரங்கள்,காரியங்கள் யாவும் போதிப்பார். மாணவன் அவருக்குப் பணிவிடை செய்து இவற்றைக் கற்க வேண்டும். படிப்பு முடிந்தபின் வீடு திரும்புவான். பூணுல் போட்ட பின் குருகுல வாசம் செய்து வேதம் கற்பவன் பிரம்மச்சாரி எனப்படுவான்
சங்கரன் அற்புத பிரம்மச்சாரியாக விளங்கினான். பிரம்மச்சாரிக்கு கொஞ்சம் கூட அகம்பாவத் திமிர் இருக்கக்கூடாது என்பது விதி. பணிவு இருந்தால்தான் படிப்பு பயன் தரும். அகம்பாவம் இல்லாமல் இருப்பதற்கென்றே பிரம்மச்சாரியை தினமும் வீடு வீடாகக் சென்று பிட்சை வாங்கிவரச் சொல்வார் குரு.
நமது சங்கரனும் இவ்வாறு பிட்சை வாங்கிவந்தான். ஒரு துவாதசி தினத்தன்று பரம ஏழையான ஒருவரின் வீட்டு முன் நின்று பிட்சை கேட்டான். அந்த வீட்டில் உணவுப் பண்டம் எதுவுமே கிடையாது. துவாதசி தினத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதற்காக ஒரே ஒரு நெல்லிக்கணி மட்டும் இருந்தது
நன்றி:காஞ்சி பீடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக