ஞாயிறு, 4 ஜனவரி, 2015


விதி 4 : ஒரு கிரகம் நின்ற ராசிக்கு எதிர் திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும் (3,7,11 - ல் உள்ள கிரகன்களோடு இணைவு பெறும்)

உதாரணமாக முதல் பதிவில் உள்ள உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறார்கள்.

மேஷம் கிழக்கு ராசி. கிழக்குக்கு எதிர் திசை மேற்கு. மேற்கு ராசிகள் மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை ஆகும்.

மிதுனத்தில் குரு இருக்கிறார். துலாத்திலும் கும்பத்திலும் கிரகங்கள் ஏதும் இல்லை. எனவே சூரியன் சுக்கிரன் இருவரும் குருவுடன் இணைவு பெற்று செயல் படுவார்கள்.

வடக்கு ராசிகளாகிய கடகத்தில் செவ்வாயும், மீனத்தில் புதன் கேது இருவரும் இருக்கிறார்கள்.விருச்சிகத்தில் யாரும் இல்லை.

வடக்குக்கு எதிர் திசையாகிய தெற்கு ராசிகளாகிய ரிஷபத்திலும் மகரத்திலும் கிரகங்கள் இல்லை. கண்ணியில் மட்டும் சந்திரன் ராகு இருவரும் இருக்கிறார்கள்.

எனவே செவ்வாய், புதன் கேது மூவரும் சந்திரன் ராகு வுடன் இணைவு பெற்று செயல் படுவார்கள்.

விதி 5 : கிரகம் நின்ற ராசிக்கு முன் பின் ராசிகளில் உள்ள கிரகங்களோடும் இணைவு பெற்று செயல்படும். அதாவது 2, 12 - ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும்.

கடகத்தில் உள்ள செவ்வாய், மிதுனத்தில் உள்ள குரு, சிம்மத்தில் உள்ள சனி இருவரோடும் இனைந்து செயல் படுவார்.

சிம்மத்தில் உள்ள சனி, கடகத்தில் உள்ள செவ்வாய், கண்ணியில் உள்ள சந்திரன் ரகு உடன் இணைந்து செயல் படுவார்.

குறிப்பு: இதுவரை நாம் பார்த்த 5 விதிகளின் சுருக்கம்.

1. கிரகங்களை பாதசார அடிப்படையில் வரிசைப் படுத்திக் கொள்ளவேண்டும்

2. ஒரே ராசியில் உள்ள கிரகங்கள் இனைந்து செயல்படும்.

3. ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இணைவுபெற்று செயல்படும்.
அதாவது ஒரு கிரகம் தனக்கு 5,9 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும்

4. எதிர் திசை ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்.
அதாவது 3,7,11 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்

5. முன்பின் ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும் 
அதாவது 2,12 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்.

சிறப்பு குறிப்பு: 

1) ஒரு கிரகத்தோடு சேர்ந்து நின்ற கிரகங்களும், 5,9 ல் உள்ள கிரகங்களும் சேர்ந்து செயல்படும்போது 100 சதவீதம் பாதிப்பை தரும். (பாதிப்பு என்பது நல்லவிதமாகவும் இருக்கலாம், தீய விதமாகவும் இருக்கலாம். நன்மை தீமையை நிர்ணயம் செவது பற்றி பிறகு பார்க்கலாம்)

2) 7 மிடத்து கிரகம் 80 சதவீதமும் 3,11 மிட கிரகங்கள் 50 சதவீதமும் செயல்படும்

3) 2 மிடத்து கிரகம் 100 சதவீதமும் 12 மிடத்து கிரகம் 40சதவீதமும் செயல் படும்


மேலும் சில சிறப்பு விதிகளை அடுத்தடுத்த பதிவுகளில்....


நன்றி


அன்புடன்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக