ஞாயிறு, 4 ஜனவரி, 2015

சித்த தரிசனம்
இது 90 நாட்கள் தொடர்பயிற்சி...தேவையானவை:
குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை
ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய தீபம் எரியும் கிண்ணம் அதாவது கிளிஞ்சட்டி
தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய் வேண்டாம்).ஒரு காசி சொம்பு,சுத்தமான நீர்.(வீட்டில் நிறைகுடத்திலிருந்து தினமும் தண்ணீர் முதலில் எடுக்கவும்).தினமும் சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும்.இரவு சரியாக மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும்.இரவு மணிக்கு முடித்துவிட வேண்டும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவர்.நந்தீசர்,திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,புலிப்பாணி,காகபுஜீண்டர் என பல ஆயிரம் சித்தர்கள் உள்ளனர்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அந்த சித்தரை-அவர் உருவம் நமக்கு தெரியாதல்லவாஎனவே அவரது பெயரை நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.
ஒம் சிங் ரங் அங் சிங்
இது தான் சித்தர்களை நேரில் வரவைக்கும் மந்திரம்.ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.
ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு மணிக்குள் 10 சதுர அடி உள்ள அறையில் ஒரு விரிப்பு அல்லது பலகையை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்கவும்.அதிலிருந்து 8அடி தூரத்தில் நமது கண்களுக்கு நேராக வருமாறு நெய்தீபம் தாமரைநூலில் எரியவேண்டும்.அந்த தீபத்தின் முன்பக்கம் காசிச்சொம்பில் சுத்தமான நீர் நிரப்ப வேண்டும்.அந்த காசிச்சொம்பின் முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.
இரவு மணியானதும் அந்த தீபத்தைப் பார்த்தவாறு நாம் விரும்பும் சித்தர் பெயரை நினைத்துக்கொண்டு மேலேக் கூறிய மந்திரத்தை உதடு அசையாமல் ஒருமணிநேரம் வரை ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும் ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள் ஜபித்துவர நமது சித்தர் நேரில் வருவார்.அவரை குருவாக ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழவும்.
மணியானதும் காசிச்சொம்பில் உள்ள நீரைப்பருகவும்.படையல் செய்த கனிகளைச் சாப்பிடவும்.இரவில் பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.உணவில் உப்பு,காரம்,புளி குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள் பூமியில் சித்தர்களை தரிசித்துள்ளனர்.இன்றும் தரிசித்து வருகின்றனர்.
ஜாதி,மதம்,மொழி கடந்து யாரும் சித்தர்களை தரிசிக்கலாம்.
18 
வயதுக்கு மேற்பட்ட யாரும் முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள் அருளால்!!!
குறிப்பு: இந்த முயற்சி,சித்தர் சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம் அடிக்கக் கூடாது.
உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும் ,வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில் இரவு 8மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.
--------------------------------
நீங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பழக்கம் இருந்தால்கிரிவலப் பாதையில் அகஸ்திய ஆசிரமம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அகஸ்திய விஜயம் என்ற மாத இதழை விற்பனை செய்கின்றனர். அவர்களின் நிறைய இதழ்கள் வெளியீடுகள் - ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு நல்ல தீனியாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் வாங்கிப் படித்துப் பாருங்கள். 
நீங்கள் நாடி ஜோதிடம் எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களாதமிழ் நாட்டில் இப்போது எத்தனையோ போலிகள் வந்து விட்டார்கள். அகஸ்தியர்வசிஷ்டர் என்று நிறைய நிறைய நாடி ஜோதிட நிலையங்கள் வந்துவிட்டன. ஆனால் உங்களுக்கான நாடி கிடைத்துவிட்டால்உங்கள் பெருவிரல் ரேகை மட்டுமே வைத்து உங்கள் பெயர்,அப்பாஅம்மா பெயர் பிறந்த நட்சத்திரம் வருடம் என்று ஜாதகமே கணித்துவிடுகிறார்கள். இது வரை ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் அதன் பிறகு.... எல்லோரும் ஒரே பார்முலா  தான். யாரவதுநல்ல பக்காவான நாடி ஜோதிடர்கள் உள்ளார்களா என்று நண்பர் வட்டாரத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபோதுதான் எதேச்சையாக ஒரு அகத்திய விஜயம் இதழ் கிடைத்தது.
உங்களுக்கு அகஸ்திய  தரிசனம்  வேண்டுமா?  கீழ்க்கண்ட முறையை பின்பற்றுங்கள் என்று... ... எனக்கு மிகவும் தெரிந்த நண்பர்ஒருவர் இதைச் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு அகஸ்திய தரிசனம் கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. அதைப் பற்றி கூற மறுத்துவிட்டார்.. ஆனால் அவரது ந
டவடிக்கையில் நிறையவே நல்ல மாற்றங்களை உணர முடிகிறது.  விருப்பம் உள்ள அன்பர்கள் பின்பற்றிப் பாருங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக