சனி, 10 ஜனவரி, 2015


இந்தப் பதிவிலிருந்து பிருகு நந்தி நாடி முறையில் பலன் அறியும் வழிகளை பற்றி எழுதுவதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

பலன் அறியும் வழிகளை தெரிந்து கொள்வதற்கு முன் பாப கர்த்தாரி யோகம் பற்றி மேலும் சில விளக்கங்களை பார்த்துவிட்டு பிறகு பலன் அறியும் வழிகளைப் பற்றி பார்ப்போம்.

கீழ்க்கண்ட உதாரணத்தைப் பாருங்கள்

Image

மேற்படி உதாரணத்தில் ரிஷபத்தில் சுக்கிரன் கார்த்திகை 3 லும், சந்திரன் ரோகினி 2 லும், மிதுனத்தில் புதன் திருவாதிரை 2 லும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

இந்த அமைப்பும் சந்திரனுக்கு பாப கர்த்தாரி யோகமே. 

அடுத்து கீழ்க்கண்ட இன்னொரு உதாரணத்தையும் பாருங்கள் 

Image

மேற்படி உதாரணத்தில் ரிஷபத்தில் ரோகினி 2 ல் சந்திரனும், கண்ணியில் உத்திரம் 3 ல் புதனும், மகரத்தில் அவிட்டம் 1 ல் சுக்கிரனும் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இந்த அமைப்பும் சந்திரனுக்கு பாப கர்த்தாரி யோகமே.

கரணம் ரிஷபம், கண்ணி, மகரம் இம்மூன்றும் ஒரே திசையை (தெற்கு) குறிக்கும் ராசிகள். இம்மூன்று ராசிகளிலும் உள்ள நட்சத்திரங்கள் சூரியனின் நட்சத்திரங்களின் கடைசி 3 பாதங்கள், சந்திரனின் நட்சத்திரங்களின் 4 பாதங்கள், செவ்வாயின் நட்சத்திரங்களின் முதல் இரண்டு பாதங்கள் இருக்கும்.

இந்த அடிப்படியில் முதலில் புதனும், அடுத்து சந்திரனும், அதற்கடுத்து சுக்கிரனும் இருப்பார்கள். எனவே சந்திரன் தனது பகை கிரகங்களான புதன் சுக்கிரன் இடையில் இருப்பதால் சந்திரனுக்கு பாபகர்த்தாரி யோகமே.

அடுத்து வரும் உதாரணத்தையும் பாருங்கள்

Image

ரிஷபத்தில் கார்த்திகை 2 ல் சுக்கிரனும், ரோகினி 1 ல் சந்திரனும், மிருகசீரிடம் 2 ல் புதனும், கண்ணியில் அஸ்தம் 4 ல் செவ்வாயும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

இந்த அமைப்பில் சந்திரன் பாப கர்த்தாரி யோகத்திலிருந்து விடுபடுகிறார்.

காரணம் ரிஷபமும் கண்ணியும் ஒரே திசையை குறிக்கும் ராசிகள் என்பதால் முதலில் சுக்கிரன், அடுத்து சந்திரன், மூன்றாவதாக செவ்வாய், நான்காவதாக புதன் என்ற வரிசையில் அமைவார்கள். எனவே சந்திரன், செவ்வாய் சுக்கிரன் இருவரின் இடையில் இருப்பார்.செவ்வாய் சந்திரன் நட்பு எனவே சந்திரன் பாப கர்த்தாரி யோகத்திலிருந்து விடுபடுகிறார்.

அடுத்தப் பதிவிலிருந்து கண்டிப்பாக பலன்கள் அறியும் வழிகளை பார்ப்போம்.

அன்புடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக