ஞாயிறு, 11 ஜனவரி, 2015


இந்தப் பதிவிலிருந்து, இதுவரை நாம் பார்த்த பிருகு நந்தி நாடி விதிகளைப் பயன்படுத்தி ஜாதகப் பலன் அறிந்துகொள்வது பற்றி பார்ப்போம்.


உதாரணம் 1.

Image

இது ஒரு பெண் ஜாதகம்.

மேற்படி உதாரண ஜாதகத்தை விதி 1 ன் படி, கிரகங்களை பாதசார அடிப்படையில் வரிசைப் படுத்திக்கொள்வோம்.

முதலில் ஒவ்வொரு கிரகமும் அந்தந்த ராசியில் கடந்து நிற்கின்ற நட்சத்திர பதங்கள் எத்தனை? என்பதை குரித்துக்கொள்வோம்.

மேஷத்தில் சூரியன் 5 ம் பாதத்தில் (பரணி 1 ல்) இருக்கிறார்.
ரிஷபத்தில் புதன் 2 ம் பாதத்தில் (கிருத்திகை 3 ல்) இருக்கிறார்.
மிதுனத்தில் ராகு 7 ம் பாதத்தில் (புனர் பூசம் 1 ல்) இருக்கிறார்.
கடகத்தில் சந்திரன் 3 ம் பாதத்தில் (பூசம் 2 ல்) இருக்கிறார்.
கண்ணியில் செவ்வாய் 3 ம் பாதத்திலும் (உத்திரம் 4 ல்),
சனி 8 ம் பாதத்திலும் (சித்திரை 1 ல்) இருக்கின்றனர்.

துலாத்தில் குரு 4 ம் பாதத்தில் (சுவாதி 2 ல்) இருக்கிறார்.
தனுசுவில் கேது 7 ம் பாதத்தில் பூராடம் 3 ல்) இருக்கிறார்.
சுக்கிரன் மீனத்தில் முதல் பாதத்தில் ( பூரட்டாதி 4 ல்) இருக்கிறார்.

விதி 2, 3 ன் படி...

கிழக்கு ராசிகளில் உள்ள கிரகங்களை ஒரே ராசியில் இருப்பதாக பாவித்து பாத சார அடிப்படையில் எழுதிக்கொள்வோம்.

கிழக்கு ராசிகளாகிய மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் மேஷத்தில் 5 ம் பாதத்தில் சூரியனும், தனுசுவில் 7 ம் பாதத்தில் கேதுவும் இருக்கிறார்கள். சிம்மத்தில் யாரும் இல்லை.

இந்த அமைப்பை கிழக்கு - சூரியன், கேது. என்று எழுதிக்கொள்வோம்.

அடுத்து தெற்கு ராசிகளில் உள்ள கிரகங்களை ஒரே ராசியில் இருப்பதாக பாவித்து பாத சார அடிப்படையில் எழுதிக்கொள்வோம்.

தெற்கு ராசிகளாகிய ரிஷபம், கண்ணி, மகரம் ஆகிய ராசிகளில் ரிஷபத்தில் 2 ம் பாதத்தில் புதனும், கண்ணியில் 3 ம் பாதத்தில் செவ்வாயும், 8 ம் பாதத்தில் சனியும் இருக்கிறார்கள். மகரத்தில் யாரும் இல்லை.

இந்த அமைப்பை தெற்கு - புதன், செவ்வாய், சனி என்று எழுதிக்கொள்வோம்.

அடுத்து மேற்கு ராசிகளில் உள்ள கிரகங்களை ஒரே ராசியில் இருப்பதாக பாவித்து பாத சார அடிப்படையில் எழுதிக்கொள்வோம்.

மேற்கு ராசிகளாகிய மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளில் மிதுனத்தில் 7 ம் பாதத்தில் ராகுவும், துலாத்தில் 4 ம் பாதத்தில் குருவும், கும்பத்தில் யாரும் இல்லை.

இந்த அமைப்பை மேற்கு - குரு, ராகு என்று எழுதிக்கொள்வோம்.

அடுத்து வடக்கு ராசிகளில் உள்ள கிரகங்களை ஒரே ராசியில் இருப்பதாக பாவித்து பாத சார அடிப்படையில் எழுதிக்கொள்வோம்.

வடக்கு ராசிகளாகிய கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் கடகத்தில் 3 ம் பாதத்தில் சந்திரனும், விருச்சிகத்தில் யாரும் இல்லை. மீனத்தில் முதல் பாதத்தில் சுக்கிரனும், இருக்கிறாகள்.

இந்த அமைப்பை வடக்கு - சுக்கிரன், சந்திரன். என்று எழுதிக்கொள்வோம்.

இதுவரை எடுத்த குறிப்புகளை கீழ்க்கண்டவாறு எழுதிக்கொள்வோம்

கிழக்கு - சூரியன், கேது
தெற்கு - புதன், செவ்வாய், சனி
மேற்கு - குரு, ராகு
வடக்கு - சுக்கிரன், சந்திரன்.

இதை கீழ்கண்ட படத்தில் உள்ளவாறும் அமைத்துக் கொள்ளலாம்.

Image

இனி பலன் எடுப்பது பற்றி பார்ப்போம்.

இது ஒரு பெண்ணின் ஜாதகம் என்பதால் இந்த ஜாதகியை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். 

[குறிப்பு : ஜாதகர் ஆணாக இருந்தால் ஜாதகரை குறிக்கும் கிரகம் “குரு”. ஜாதகர் பெண்ணாக இருந்தால் ஜாதகியை குறிக்கும் கிரகம் “சுக்கிரன்”]

சுக்கிரனுக்கு 5 ல் சந்திரன் இருக்கிறார். சுக்கிரன் சந்திரன் இணைவு. 

சுக்கிரன் சந்திரன் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகை.

இதற்க்கு பலன் தாயும மகளும் ஒருவருக்கு ஒருவர் எதிராக இருப்பார்கள். அல்லது தாய் இந்த பெண்ணுக்காக செய்யக்கூடிய நல்ல விஷயங்கள் இந்தப் பெண்ணுக்கு எதிராக முடியும்.
இந்தப் பெண் தன் வாழ்க்கையில் அவச்சொல்லை சந்திக்க நேரிடும். (சந்திரன் வீண் கெட்டபெயரை ஏற்படுத்திக் கொடுப்பவர்.)

மேற்படி ஜாதகத்தில் குரு சுக்கிரன் இருவரும் பரிவர்த்தனை.

எனவே குரு நின்ற துலாத்தில் சுக்கிரனையும், சுக்கிரன் நின்ற மீனத்தில் குருவையும் மாற்றி வைத்து, அதாவது மேற்கு ராசியில் சுக்கிரன், ராகு என்று வைத்து பலன் பார்க்கும் போது சுக்கிரனை நோக்கி ராகுவும், ராகுவை நோக்கி சுக்கிரனும் நகர்கின்றனர்.

இதற்குப் பலன் இந்தப் பெண்ணின் செயல்பாடுகள் மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கும்.

இந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கையைப் பற்றி :

பெண்ணுக்கு களத்திரக் காரகன் செவ்வாய் என்று முன்னமே பார்த்தோம்.

இந்த செவ்வாயுடன் சேர்த்த கிரகங்கள் புதனும் சனியும். வடக்கு ராசியில் “ புதன் செவ்வாய் சனி “ என்ற வரிசையில் கிரக்கங்கள் அமைந்திருக்கின்றனர்.

அதாவது செவ்வாய் தனது பகை கிரகங்களான புதன் மற்றும் சனி இருவருக்கிடையில் இருப்பதால் செவ்வாய் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார். திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்காது.

புதன் செவ்வாய் சனி இம்மூவரையும் ரிஷபத்தில் வைத்து பார்த்தால் ரிஷபத்திற்கு (புதன் செவ்வாய் சனி இவர்களுக்கு) இரண்டில் உள்ள ராகு திருமண வாழ்க்கையை சீர்குலைக்கும்
(இந்த பெண் விவாகரத்து பெற்றவர்.)

இதே போல இன்னொரு உதாரண ஜாதகத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக