புதன், 21 ஜனவரி, 2015

கைரேகை சாஸ்திர ரேகைகள்.1: ஆயுள் ரேகை
2: 
புத்தி ரேகை
3: 
இதய ரேகை
4:
சுக்கிரனின் வட்டப்பாதை
5
சூரிய ரேகை
6: 
புதன் ரேகை
7: 
விதி ரேகை
ஆண்களுக்கு வலக்கை ரேகையையும் பெண்களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ஆய்வின்படிஇரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும்,வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும்இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக்கையில் உள்ள ரேகைகளும்மேடுகளும் பலவீனமாக இருக்கஅவரது வலக்கையில் உள்ள ரேகைகளும்மேடுகளும் பலமாக இருந்தால்அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்துஅதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்துநல்ல நிலைமையை அடைவார் எனக் கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும்மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார். ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்கஇடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால்1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும். அதாவது ஆண்களுக்கு வலக் கை ரேகையையும்பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.
கைரேகை மேடுகள் 
மேடுகளின் படி விரல்களையும் குருவிரல் (ஆட்காட்டி விரல்),சனி விரல் (நடு விரல்), சூரிய விரல்(மோதிர விரல்), புதன் விரல் (சுட்டு விரல்என்கிறார்கள். ஆனால் கட்டை விரலை சுக்கிரவிரல் என்று கூறவில்லை. இனி ரேகைகளை பார்ப்போம்...

விதி ரேகை

உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச்  செல்லும். இதுவே விதி ரேகை அல்லது தொழில் ரேகை ஆகும். இது நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது. சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது..! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும்பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறிதீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்லது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில்பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள்,புத்திஇருதய ரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால்இவர்களுக்கு நல்ல தேகஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் நல்ல தொழில் விருத்தியும் ஏற்படஇடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.

ஆயுள் ரேகை
முக்கியமானது..! சிலரது கைகளில் தடிமனாகவும்ஆழமாகவும்சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும்மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும்மெல்லியதாகவும்நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகைநல்ல தேக பலத்தையும்ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறுசிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும்ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால்,இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாகவும் சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால்நோய்  எதிர்ப்புச் சக்தி குறைவாகவும் இருக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால்இவர்கள் தன்னடக்கம்,கட்டுப்பாடுலட்சிய உணர்வுஉயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால்இவர்கள்உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவு
ம்அடக்கமில்லாதவர்களாகவும்சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால்இவர்கள் நல்ல உழைப்புஉற்சாகம்,அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர்.
புத்தி ரேகை
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி,உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு அல்லது சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை ஆகும். இது ஓரளவு அழுத்தமாகவும்,தெளிவாகவும் மெல்லியதாகவும் இருந்து தீவுபுள்ளிஉடைதல்போன்ற குறைபாடுகள் இல்லாது அமைந்தால் இவர்கள் புத்திசாலியாகவும் அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும்,  நேர்மையாகவும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால்இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும்அது வேலை செய்யும் திறனையும்நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது..!
புத்திரேகையானது ஆயுள் ரேகையுடன் இணைந்து உற்பத்தியாகாமல் அல்லது ஆயுள் ரேகையுடன் ரேகை இணைப்பு எதுவுமில்லாமல் தனித்து ஆயுள்இருதய ரேகைகளுக்கு மத்தியில் உற்பத்தியாகும் புத்திரேகைஅவ்விதம் ரேகை அமைந்தவன் புத்தியின் பலத்தையும் சுதந்திரப் போக்கையும் தன்னிச்சையான பிடிவாத குணத்தையும் காட்டும்.
ஆயுள் ரேகையோடு புத்திரேகையானது இணைந்து உற்பத்தியாகி இருந்தால் தாய்தந்தைமனைவிபிள்ளைகுடும்பமென்று பிரிக்க முடியாத பாசப்பிணைப்பு இருக்கும்.
ஆயுள் ரேகையுடன் இணைந்த உற்பத்தியாகாத புத்தி ரேகையைக் கொண்டவர் எப்போதும் தனித்து நிற்பதில்தனித்து வாழ்வதில் பிரியம் காட்டுவார்.


புதன் ரேகை
இதனைப் ஆரோக்கிய ரேகை என்றும் கூறுவர். இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகைஆயுள் ரேகைஇருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும்இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால்,இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும்அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும்புதன் மேடு பலவீனமாக இருந்தாலும் இந்த ரேகை பலமாக இருந்தால் புதன்மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகைதெளிவாகவும்மெல்லியதாகவும்ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவுபிளவுவெட்டுக்குறிசங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இது அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம்சொல்வன்மை கலை,வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.
இருதய ரேகை
இது புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில்முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்அல்லது கிரகமேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகைஇருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து,உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும்இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும்இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ரேகை மூலம் அன்புபாசம்,காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சூரிய ரேகை
விதி ரேகைக்கு இணையாகமோதிர விரலின் கீழே இருக்கும். இது புகழையும்,இகழையும் குறிப்பிட்டுக் காட்டும்

பிற முக்கிய ரேகைகள்...
சுக்கிர ரேகை
மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் கீழிலிருந்துசுண்டு விரலை நோக்கி உள்ளங்கையின் மேல்நோக்கி ஓடுகிறதுதொடர்ச்சியான உடல்நல பிரச்சினைகள்வியாபார புத்திசாலித்தனம்அல்லது தொடர்பு கொள்வதில் திறமை ஆகியவற்றைக்  குறிப்பிட்டுக்காட்டும்.
சுக்கிரனின் வட்டப்பாதை
இது சுண்டு விரலுக்கும்மோதிர விரலுக்கும் இடையில் தொடங்கிமோதிர விரல் மற்றும் நடுவிரல்களுக்கு கீழே ஒரு கீற்று போல ஓடிநடுவிரலுக்கும்,சுட்டு விரலுக்கும் இடையில் முடிகிறதுஇது உணர்வுப்பூர்வமான அறிவு மற்றும் திறமையாக கையாள்வதற்கான திறமை ஆகியவற்றோடு தொடர்புபட்டது.
அப்போலோ ரேகை
இது ஓர் அதிருஷ்ட வாழ்க்கையைக் குறிக்கிறதுஇது மணிக்கட்டில் இருக்கும் சந்தர மேட்டில் இருந்துமோதிர விரலுக்கு (அப்போலோ விரலுக்கு) இடையில்பயணிக்கிறது.
வட்ட ரேகை
இது ஆயுள் ரேகையைக் கடந்து 'x' வடிவத்தை உருவாக்குகிறது. இது மிகவும் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கைரேகை பார்க்க வருபவருக்கு கவலையை உண்டாக்கும் என்பதால்கைரேகை பார்ப்பவர்கள்பொதுவாக இந்த ரேகையைக் குறிப்பிட்டு கூறுவதில்லை. வட்ட ரேகையின் பொதுவான குறியீடுகள்பிற ரேகைகளால் 'M' என்று உருவாக்கப்பட்டிருக்கும்.
நட்பு ரேகைகள்
குறுகிய கிடைமட்ட ரேகைகள்இது உள்ளங்கையின் மோதும் விளிம்பில் இதய ரேகைக்கும்சுண்டு விரலின் கீழ் பகுதிக்கும் இடையில் காணப்படும்நெருங்கிய உறவுகள்சிலநேரங்களில் - ஆனால் எப்போதும் கிடையாது - காதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டும் என்று நம்பப்படுகிறது.
பயண ரேகைகள்
கிடைமட்ட ரேகைகளான இவை உள்ளங்கையின் புடைத்த விளிம்பில் மணிக்கட்டிற்கும்இதய ரேகைக்கும் இடையில் காணப்படுகிறதுஒவ்வொரு ரேகையும் அந்த நபரால் மேற்கொள்ளப்படும் ஒரு பயணத்தைக் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது - இந்த ரேகை நீண்டிருந்தால்அந்த நபருக்கு மிகவும் முக்கியமான பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.
பிற குறியீடுகள்.
நட்சத்திரங்கள்வெட்டுகள்முக்கோணங்கள்சதுரங்கள்திரிசூலங்கள்மற்றும் வளையங்கள் ஆகியவை உட்பட ஒவ்வொரு விரல்களின் கீழேயும் இவை இருக்கின்றனஉள்ளங்களையில் இவை இருக்கும் இடம் மற்றும் பிற ரேகைகளின் குறுக்கீடு இல்லாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டு இவற்றின் அர்த்தங்களும் பாதிப்புகளும் கணிக்கப்படும்.
ஒரு செல்வந்தனின் கைரேகையின் அம்சங்கள் எவை..?.
"ராகு மேடுமற்றும் கேது மேடு என்பவை எங்கே ?" 
ஆரம்ப காலங்களில் ராகு கேது தவிந்த மற்றைய ஏழு கிரகங்களே இருந்தன என்று சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன.இதிலிருந்து சாயா கிரகங்களான ராகு மற்றும் கேது என்பவை காலப்போக்கிலேயே தோன்றியுள்ளன எனவும் கைரேகைக்கலை எவ்வளவு பழமையானது என்றும் அறியலாம்..!
ராகு- கேதுவுக்கு தனி நாள்கிழமை ஒதுக்கவில்லை என்றாலும்,ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்..! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம்...! ராகுவும்கேதுவும் தனியான கிரகங்கள் இல்லை. கிரகங்களின் நிழல் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்அதேநேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள். 
இந்த படத்தில் காட்டியுள்ள நெப்டியூன் மேட்டை பற்றியும் யுரேனஸ்  மேடு எங்கே? என்றும் என்னிடம் கேட்காதீர்கள்...! இதைப்பற்றி நானே குழம்பிப் போயிருக்கிறேன்...!"
விக்கிபீடியா"வில் இதுபற்றிய மேலதிக விபரங்கள் உள்ளன...


ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?
1. 1
மிடம் .லக்னம். இது ஜாதகரை பற்றி அறிய. பிரச்சனைக்கு உரிய தீர்வு என்னஅது எப்போது?

2. 2
மிடம். பணவரவினங்களை பற்றி அறியகண்ணை பற்றி அறியவாக்கு,புதியன வருதல்,
    
புதிய நபர் வருகை பற்றி,ஷேர் மார்க்கெட்இளைய சகோதரத்தின் இடமாற்றம்.
    
குழந்தையின் தொழில் வெற்றி,தந்தையின் நோய்,செருப்பு,கண்,பண இருப்பு,
    
விலை மதிப்புமிக்க பொருள்ஜாதகரது குடும்பம்வருமானம்வரவேண்டிய பணம் முதலியன

3. 3
மிடம்.  சகோதரம்,தைரியம்வீரியம்\வீரம்,வெற்றிஅண்டை வீடுகள்,குறு தூரப் பயணம்,
     
மெயில\போன் செய்திகள்தகவல் தொடர்புவீடு விற்பனைவேலைக்காரர்கள்,செய்திகள்,
    
பேரம் பேசுதல்,பாகப்பிரிவினை செய்தல்ஆரம்ப கல்வித் தடைநிருபர்கள்,புரோக்கர்கள் பற்றி

4. 4
மிடம் தாய்சுகம்குழந்தைக்கு வைத்தியம் செய்வதுவீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள்,
  
வீடு வாசல் ,மாடு,கன்றுகல்லறை,இரகசிய வாழ்க்கையை பற்றிகற்பு பற்றி,தோட்டம்கட்டிடங்கள்,
  
விவசாயம்ஆரம்பக் கல்வி,வியாபாரம்நீர் ஊற்றுக்கள்திருடி வைத்திருக்கும் பொருட்கள்,
  
புதையல் பற்றி.

5. 5
மிடம் குழந்தையைப்பற்றிகுழந்தை உண்டாஎப்போது,எத்தனைகுழந்தை உற்பத்தி திறன்பாதிப்பு,
    
குழந்தைக்கு தொந்தரவுபாட்டன்,பாட்டி,பூர்வ ஜென்ம புண்யம்மனம்,எண்ணம்வம்சா வழி,காதலைப்பற்றி
    
சந்தோஷம் பற்றிஅதீர்ஷ்டம்,இஷ்ட தெய்வம்,சிற்றின்பம்மந்திர உச்சாடனம்,உபாசனைஇஷ்ட தெய்வம்,
    
கற்பழிப்பு,வழிபாடு,ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம் முதலியன

6. 6
மிடம் கடனை பற்றி,நோய்யை பற்றியோ,வழக்கு பற்றிஜீரணம்ஊழியர்,சிறுதொழில்,
    
சிறிய வருமானம் தரும் தொழில்,வெற்றிக்கான தடைகஞ்சத்தனம்,மிகப்பேராசை,
    
திருட்டு பற்றிஜெயில்மூத்த சகோதர பிரச்சினைவளர்ப்புப் பிராணிகள்,வீட்டு மிருகங்கள்
    
பற்றி அறிய

7. 7
மிடம் திருமணம் திருமண வாழ்க்கை , மனைவிசட்டப்படியான அங்கீகாரம்சமூகப் பழக்க வழக்கம்நண்பர்கள்,
    
ஆயுளுக்குத் தொந்தரவுதிருடனைப் பற்றிவேலையாட்களின் பணம்பொது ஜனத் தொடர்பு,
    
அபராதம்ஒரு பொருள் திரும்பக் கிடைத்தல் பற்றி,வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும்
    
இரகசிய விரோதிகளால் ஏற்படும் தொந்தரவு பற்றிகாணாமல் போனது எப்போது கிடைக்கும்


8. 
ஆயுள்பற்றிகாணாமல் போனது பற்றிஅவமானம் பற்றி,கண்டம் பற்றி,இயற்கையான மரணம்,கெட்ட பயம்,வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவுவட்டி கட்டுதல்,திடீர் அதிஷ்டம்உயில்தடை,கெட்ட செயல்வரதட்சணை,சீர்மாங்கல்யம்காணாமல் போனது எப்போது கிடைக்கும் எப்போது கிடைக்கும்,ஆப்ரேஷன் பற்றிகர்பப்பை பற்றி,வரவேண்டிய பணம்மரணம்.

9. 
தந்தை,மத ஆச்சாரம்,குல வழக்கம்,குருவை பற்றி,உடனே பலன்  தரும் தெய்வம்மதத்தின் மீதானபற்று,
   
மறுஉலக தொடர்புபெரியவர்கள்தூரத்து செய்திகள்,திருமண மண்டபம்,கலாச்சார விருப்பம்,
 
நீண்ட தூரப் பயணம்தொழில் விரயம்தெய்வ வழிப்பாட்டு இடம்,தம்பியின் மனைவி,பணம் புரட்டுதல்,ஜபம்,உயர் கல்வி ,வெளிநாட்டுப் பயணம்,

10. 
தொழில்,ஜீவனம் ,புகழ்,கௌரவம்,சமூக அந்தஸ்த்து,கர்மம்,கருமாதி,இறுதிச்சடங்கு,
     
புனித வழிபாடு,குழந்தையின் நோய்,மூத்த சகோதரத்தின் விரயம்,தத்துக் குழந்தைகள்,தீர்ப்பு,மரணம் அடைந்தவர்களை பற்றி.

11. 
லாபம்,மூத்த சகோதரம்,எதீர்பார்த்தது நன்மையில் முடியுமா?,நண்பர்கள்,ஆசைகள்,முழுமையாக எதீர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசனை. உதவி கிடைக்குமிடம்
வெற்றி,மருமகன்,மருமகள்,நீர்ப் பாசன வசதிகளுடன்கூடிய விவசாய நிலங்கள்.
 
அரசு மன்றங்கள்\குழுக்கள் (சட்ட சபை,ஊராட்சி,நகராட்சி),நிரந்தர நட்பு\நண்பர்கள்,திட்டங்கள்
வரவேண்டிய பணம் கிடைக்கும் நேரம் முதலியன.

12. 
செலவு\விரையம்மருத்துவம்நஷ்டம் முதலியவை பற்றி முக்தியடைதல் மோட்சம் கிடைத்தல் பற்றி.
சென்ற பிறவி ரகசியம்
நான் பிறக்கிறோம்....

எங்கிருந்து வந்தோம் தெரியாது

எங்கே போக போகபோகிறோம் அதுவும் தெரியாது.  இடை பட்ட காலத்தில் இது ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் நடிகர்கள்.

யார் பெத்த பொண்ணுக்கோ கணவராக,  யாரோ ஒருவருக்கு மனைவியாக,  பிறக்கும் பிள்ளைகளுக்கு தகப்பனாகபெற்ற தாய் தந்தையருக்கு மகனாக. மாமனாகமச்சானாகசகோதரனாக,சகோதரியாக  இப்படி பல வேடங்களை போடுகிறோம்.

நாடகம் முடிந்ததும் போகிறோம்.  இந்த ரகசியம் அறிந்தது பிரம்மா என்கிறார்கள். அந்த ரகசியத்தை முன் பிறவி என்கிறோம்.

கன்னி தீவு கதை மாதிரி கண்டுபிடிக்க முடியாத ரகசியம் ... முன் பிறவி ரகசியம் என்பதே. அது ஏழு கடல் தாண்டிஏழு மலை தாண்டிஅக்கினி நீருற்றை கடந்தது சென்றால்..கிளியின் உடம்புக்குள் இருக்கும் மந்த்திரவாதி உயிர் மாதிரிபல்வேறு மர்மங்கள் நிறைந்தது முன் பிறவி ரகசியம்.

இதை அகத்தியர் தீர்த்து வைகைக்காமல் இல்லை.  தன் காலத்திலேயே ஓலை சுவடிகளில் இதை பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார்.

இப்போது பிறவி எடுத்திருக்கும் மனிதர்களில் யாருக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் இருக்கிறதோஅவர்களுக்கு மட்டுமே ஓலைகளில் எழுத பட்டு இருக்கிறது. 

இது உண்மையே. 

ஆனால் இதை ஒரு தொழிலாக கொண்டு  பலர் செய்யும்  தகிடு தித்தங்களை பற்றியும்இதை வைத்தே ஏமாற்றி பிழைப்பவர்களை பற்றியும் தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன். 

பொதுவாக ஜோதிட சாஸ்த்திரத்தில் கர்ம வினை கிரகம் என்கிற ராகு கேது முக்கியமானவர்கள்.  இதற்கு அடுத்த படியாக  குரு முக்கியமானவர். முதலில் ராகு கேது.

இருப்பது ஒன்பது கிரகங்கள்.  இதில்  ராகு கேது தவிர்த்துஏனைய ஏழு கிரகங்களும் பிராமணசத்திரியவைசியசூத்திர கிரகங்கள் என்று சொல்லபடுகிறது. 

என்றாலும் இந்த ஏழு கிரகங்களும் தேவர்களே. மீதம் இருக்கும் ராகுவும் கேதுவும் அரக்கர் இனத்தை சேர்ந்தவர்கள்.  இரக்க குணம் குறைந்தவர்கள்துர்சிந்தனை நிறைந்தவர்கள்.
இவர்கள் 1 . 7 இல் இருந்தால் நாக தோஷம் என்றும்,  5 . 9 இல் இருந்தால் பிரம்மகத்தி தோஷம் என்றும் சொல்ல படுகிறது.
அதாவது முன் பிறவியில் பாம்பு புற்றை உடைத்து,  பாம்புகளை அடித்து கொன்ற பாவம் இந்த பிறவியில் நாக தோஷமாக வருகிறது என்பார்கள்.  இந்த நாக தோஷம் என்பது ஜோடி பாம்புகளை கொன்றவர்களுக்கும்ஜோடி பாம்புகளில் ஒன்றைகொன்றவர்களுக்கும் வருகிறது.
அதனால் தான் திருமண வாழ்க்கை அமைய தடை,  மீறி அமையும் வாழ்க்கையில்  குழப்பம்கணவன் மனைவிக்கு இடையே  கருத்து வேறுபாடுகள்,  பிரிவினை,விவகாரத்துகளையும் தந்து விடுகிறது.
அதே சமயம் 5 . 9 இல் இருக்கும் பொது பிரம்மகத்தி தோஷம் என்று சொல்ல பட்டாலும்,  புத்திர சோகத்தை தருகிறது.  காரணம் குட்டி பாம்புகளை கொன்ற குற்றம்.
இப்பிறவில் குழந்தை பிறப்பில் தாமதம்பிறந்த பிள்ளைகளால் கவலைபெற்றோரை மதிக்காத துர்குணம் கொண்ட பிள்ளைகள்பிறந்த பிள்ளைகள் அகால மரணம் என்று புத்திர சோகத்தில் ஆழ்த்துகிறது.
சரி.... அடுத்த தகவலுக்கு வருவோம்.
என்னதான் ரேகை கொண்டு சொன்னாலும்,  ஜாதகம் கொண்டுதான் பலன் சொல்லபடுகிறது.   ஜோதிட சாஸ்த்திரத்தில் குருவும்சூரியனும் சிவனை குறிக்கும் கிரகங்கள்.
இந்த சூரியனோடும்குருவோடும் சனியோ,  ராகுவோகேதுவோ பிறப்பு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால்,  அது ஒரு வகையான பிரம்மகத்தி தோஷம்.
அதாவது... முன் பிறவியில் சிவன் சொத்தை அழித்தவர்கள்,சிவனடியார்களை  வதைத்தவர்கள்,  சிவ நிந்தனை செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் இந்த பிறவியில் பல துன்பங்களை சந்திக்க வேண்டி வருமாம்.
மேலும் இந்த பிறவி தொடர்பாக ஒரு தகவலும் உண்டு.
உதாரணமாக பரணி  நட்சத்திரத்தில் ஒருவர் பிறப்பதாக வைத்து கொள்வோம்.   அவரின் ஆரம்ப திசை சுக்கிர திசையாக அமையும்.  சுக்கிர திசை என்பது ௨௦ வருடம் கொண்டது.
ஆனால் அவர் பிறக்கும் போது இருப்பு  திசையாக  5 வருடம் 6வருடம் அல்லது 10 வருடம்  என்று குறைந்த அளவே தசையாக வருகிறது.
காரணம் என்ன?
முன் பிறவியில் பெற்ற ஜென்மாவில் அவரின் இறுதி காலத்தில் சுக்கிர திசை நடப்பில் இருந்த போது தான் இறந்து போனார். சுக்கிர திசையின் மொத்த வருடமான 20 வருடத்தில்,  இறக்கும் போது இருந்த மீதம் என்னவோஅதையே  இப்பிறவில் மீதமுள்ள திசையாக கொண்டு பிறந்த்திருப்பார் என்பது ஜோதிட ரகசியம்.
நாடி ஜோதிட பிரகாரம் குரு தான் அந்த ஜாதகரை குறிக்கும் கிரகம்.  இப்போது அவர் ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறாரோஅதற்கு முதல் வீட்டில்  சென்ற பிறவியில் குரு இருந்திருப்பார்.  மற்ற கிரகங்கள் மாறாது.
ஒருவர் சென்ற பிறவியில் எந்த குலத்தில் பிறந்தார் என்பதைஇப்போதைய சந்திரன் இருக்கும் இடத்திற்கு ம் இடமே சொல்லும்.
ஒருவர் மீன ராசியில் பிறந்தால்,  அவர் ராசி படி ம் இடமாக கடகம் வருகிறது,  அந்த வீட்டற்கு உரிய கிரகம் சந்திரன் வருகிறார்.
சந்திரன்  கடல் கடந்த வாணிபத்தை குறிப்பவர்.   அதாவது வியாபாரம் செய்யும் குடும்பம்.   ஆக ஜாதகர் வைசிய குலத்தில் பிறந்திருப்பார்.
அந்த வகையில் கீழ்காணும் வகையில் அட்டவணை அமையும். இது நாடி ஜோதிட விதி.
நீங்கள் பிறந்த ராசிக்கு ம் இடமாக .......
மேஷம்,  தனுசு  - சத்திரிய குலம்.   அதாவது அரச வம்சம்ஜமீன் பரம்பரைஅரச நிர்வாக அதிகாரிகள் போன்ற குலத்தில் பிறந்தவர்.
ரிசபம்கடகம்கும்பம்மீனம்வைசிய குலம்.  அதாவது... வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்.
மிதுனம்சிம்மம்விருச்சிகம்மகரம்  பிராமண குலம்.  அதாவது கோவில் பூஜை  மற்றும் புரோகிதம் செய்யும் குலத்தில் பிறந்தவர்.
கன்னி துலாம்  சூத்திர குலம்.
இங்கே சொல்லப்படும் சூத்திர குலம் என்பதுஉழைப்பாளிகள் குடும்பத்தில் பிறந்தவர் என்பதும்.  அவரின் தாய் தந்தையர் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் என்பதும் புலனாகிறது.
அடுத்த பதிவில்... நாடி ஜோதிட தில்லு  முல்லுகள் பற்றியும்அதன் உண்மையான ரகசியம் பற்றியும் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக