திங்கள், 5 மே, 2014

சித்திர ஆதிசங்கரர் -17


                                                          
'ஹஸ்தம்'என்றால் 'கை'. 'ஆமலகம்'என்றால் நெல்லிக்கனி!ஹஸ்தாமலகரை தமது முக்கியமான சீடர்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டார் சங்கர பகவத் பாதர்
பத்மபாதர், சுரேசுவரர், ஹஸ்தாமலகர் ஆகிய முக்கியமான முன்று சீடர்களுடன் வேறுபல பேரறிஞர்களும் அவரிடம் வேதாந்த பாடம் பயின்றனர்.
இந்தச் சீடர்கள் யாவரும் 'கிரி'என்ற ஒரு சீடரைக் குறித்து மிகவும் ஏறாளமாக எள்ளி நகையாடி வந்தனர். அடக்கத்தின் உருவமான AK, குருநாதர் பாடம் நடத்தும் போது வாயே திறக்க மாட்டார். எந்த சந்தேகமும் கேட்க மாட்டார்ஆகையால் அவரை எதுவுமே புரிந்து கொள்ளாத மூடம் என்று மற்றவர்கள் எண்ணி அலட்சியம் செய்தனர். உடல் வணங்கி வேலை செய்து குருவுக்கு கைங்கரியம் செய்ய மட்டுமே கிரிக்குத் தகுதியுண்டு, புத்தியில் அவரது போதனைகளை ஏற்கும் திறன் அவருக்கு இல்லை என்பது இவர்களின் எண்ணம். எல்லாமறிந்த சர்வக்ஞரான சங்கரர் இந்த எண்ணத்தை அறியாமலிருப்பாரா?இவர்களுக்கு நல்லறிவு தர எண்ணினார்.
ஒரு நாள் AK தவிர ஏனைய சீடர்கள் ஏனைய சீடர்கள் பாஷ்யபாடம் கேட்க குழுமிவிட்டனர். இருந்தாலும் ஆசிரியர் பாடம் தொடங்கவில்லை. "AK வரட்டும்"என்று செல்லியபடி காத்துக்கொண்டிருந்தார். "அவனுக்காக இப்படி ஆசிரியர் காலதாமதம் செய்கிறாரே என்று முணுமுணுத்துக் கொண்டனர்.
கடைசியில் கிரியும் வந்தார். வழக்கமாக மலைபோல் மலைத்து மலைத்து நிற்பவர் இன்று ஆனந்தத்தில் நடனமாடிப் பாடிக்கொண்டு வந்தார். அவர் பாடிய எட்டு சுலோகங்களைக்
கேட்டு மற்ற சீடர்கள் அனைவரும் அதிசயத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் அதுவரை கேட்டிராத அந்தச் செய்யுட்களை கிரியே இயற்றியிருக்கிறார்!ஸ்ரீசங்கரபகவத்பாதரைப் போற்றும் அரிய துதி அது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக