புதன், 7 மே, 2014

சித்திர ஆதிசங்கரர் -19


                                                                 
  
நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் செய்யும் சிதம்பரத்துக்குச் சென்றார் ஸ்ரீசங்கரர். அவரது குருவுக்குக் குருவான கௌடபாதர் சிதம்பரத்தில்தான் பதஞ்சலியிடமிருந்து வடமொழி இலக்கணம் பயின்றார். பரமகுரு பாடம் கேட்ட இடத்திற்ச் சென்றுஅஞ்சலி செலுத்தினார் நம் ஆச்சாரிய சங்கரர். நடராஜர் ஆலயத்தில் பஞ்சாக்ஷர யந்திரமும் ஸ்தாபித்தார். பஞ்சாட்க்ஷரம் என்பது சிவ பெருமானின் அருளை வருவித்துத்தரும் ஐந்தெழுத்து மந்திரமாகும். அன்னாகர்ஷண யந்திரம் என்பது உணவுவகைகளை சுபீட்சமாகக் கிடைக்கச் செய்வதாகும்.
திருச்சியை அடுத்த திருவானைக்காவுக்கு ஆசாரியர் சென்றபோது அங்குள்ள அகிலாண்டேஸ்வரி மிகவும் உக்கிற சக்தி படைத்திருந்தாள். அந்த உக்கிரத்தைத் தாடங்கம் என்ற இரு காதனிக்குள் இழுத்து அடக்கினார். ஸ்ரீசக்கர வடிவில் அமைந்த இத்தாடகங்களை அகிலாண்டேஸ்வரிக்கே அணிவித்தார். ஆசாரியார் அணிவித்த ஸ்ரீசக்கர தாடங்கத்தை அவ்வப்போது புதுப்பிப்பது உண்டு. இவ்விதம் காஞ்சி மடத்திலுள்ள சங்சராச்சாரிய சுவாமிகள் பரம்பரைய்க புதுப்பித்து அகிலாண்டேஸ்வரிக்கு அணிவித்திருக்கிறார்கள்.
பரந்த பாரதத்தில் ஸ்ரீசங்கரர் பவனிவந்த நகரங்களில் ஒன்று ஜகந்நாதபுரி. கிழக்குக் கடற்கரையிலுள்ள இந்தப் பெறும் புண்ணியம்பதியில் ஒரு மடம் நிறுவி அதில் பத்மபாதரை ஆசாரியராக அமர்த்தினார். இது கோவர்தன பீடம் எனப்படும்.
இதேபோல் மேற்குக் கடற்கரையிலுள்ள மற்றோரு கிருஷ்ண ஸ்தலமான துவாரகையிலும் ஒரு மடம் நிறுவி அதில் ஹஸ்தாமலகரை ஆசாரியராக நியமித்தார். திருச்செந்துர் முருகனின் அருட்பெருமையை வெளிப்படுத்த செந்துர் அடைந்து "சுப்ரமணிய புஜங்க"த்தால் ஆண்டவனைத்துதித்தார். இன்னும் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதத்தை
வைத்துக் கொண்டு இத்துதியை ஓதி நீறணிகிற பலர் நோய் நீங்கப் பெறுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக